தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா நடிக்கும் புதிய படத்தின் அறிவிப்பை படக்குழு அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது. ‘லேடி சூப்பர் ஸ்டார் 75’ என தற்காலிகமாக பெயரிடப்பட்டுள்ள இந்தத் திரைப்படத்தினை இயக்குநர் ஷங்கரின் முன்னாள் உதவியாளரான நீலேஷ் கிருஷ்ணா எழுதி இயக்குகிறார்.
மேலும் நாட் ஸ்டுடியோஸ் மற்றும் ட்ரைடென்ட் ஆர்ட்ஸ் உடன் இணைந்து ஜீ ஸ்டுடியோஸ் தயாரிக்கிறது.
ஃபேமிலி என்டர்டெய்னர் படமான இது அனைத்து தரப்பு பார்வையாளர்களையும் ஈர்க்கும் வகையில் இருக்கும்.
இப்படத்தில் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா, ஜெய், சத்யராஜ், கே.எஸ்.ரவிக்குமார், ரெடின் கிங்ஸ்லி, அச்யுத் குமார் என ஒரு பெரிய நட்சத்திர பட்டாளமே உள்ளது.
குமாரி சச்சு, ரேணுகா, கார்த்திக் குமார், சுரேஷ் சக்கரவர்த்தி, மற்றும் பலரும் நடித்துள்ளனர்.
இப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பை, படக்குழுவினர் சென்னையில் நடத்தி முடித்து விட்டனர்.
மேலும் அடுத்தக்கட்ட படப்பிடிப்பானது திருச்சியிலும், சென்னையின் சில பகுதிகளிலும் நடைபெறவுள்ளது.
இன்னும் பெயரிடப்படாத இந்த படமானது இதுவரை நயன்தாரா சோலோ ஹீரோயினாக நடித்தப் படங்களிலேயே அதிக பட்ஜெட்டில் உருவாகி வருவது குறிப்பிடத்தக்கது.
(இயக்குனது ஷங்கர் படங்கள் என்றாலே பிரம்மாண்டம் தான்.. அவரின் உதவியாளர் இயக்கும் படம் என்றால் அதுவும் பிரமாண்ட படமாக தானே இருக்கும்..)
*படத்தின் தொழில்நுட்பக்குழு விவரம்:*
ஒளிப்பதிவு: சத்யன் சூரியன் ISC,
இசை: தமன் எஸ்,
கலை: ஜி. துரைராஜ், படத்தொகுப்பு: பிரவீன் ஆண்டனி,
வசனம்: அருள் சக்தி முருகன்,
கிரியேட்டிவ் புரொடியூசர்: சஞ்ஜய் ராகவன்,
நிர்வாகத் தயாரிப்பாளர்: லிண்டா அலெக்சாண்டர், பப்ளிசிட்டி டிசைன்: வெங்கி,
மக்கள் தொடர்பு: சுரேஷ் சந்திரா-ரேகா டி’ஒன்.
Nayanthara 75 shooting and artist update