மீண்டும் போலீசாக நட்ராஜ் & ரவிமரியா..; கொழுக்கு மொழுக்கு நடிகைகளுடன் கூட்டணி

மீண்டும் போலீசாக நட்ராஜ் & ரவிமரியா..; கொழுக்கு மொழுக்கு நடிகைகளுடன் கூட்டணி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

எஸ்.ஜே.எஸ். பிரண்ட்ஸ் டாக்கீஸ் நிறுவனத்தின் சார்பில் சாய் சரவணன் தயாரிக்கும் படத்தில் நட்டி நடராஜ் காவல்துறை அதிகாரியாக நடிக்கிறார்.

பெயரிடப்படாத புதிய படத்தை தயாரிக்கிறார் சாய்சரவணன். இவர் பல படங்களில் தயாரிப்பு நிர்வாகியாக பணியாற்றியவர் இந்தப்படத்தை தயாரிப்பதின் மூலம் புதிய தயாரிப்பாளராக அறிமுகமாகிறார்.

இந்தப் படத்தை பல படங்களில் ஒளிப்பதிவாளராக பணியாற்றிய கே.பி.தனசேகர் இயக்கி தமிழ்த்திரையுலகிற்கு புதிய இயக்குனராக அறிமுகமாகிறார். முக்கிய வேடத்தில் ராம்கி நடிக்கிறார்.

முன்னணி கதாநாயகிகளில் ஒருவரை நாயகியாக நடிக்க வைக்க ஏற்பாடுகள் நடந்துவருகிறது. மற்றும் இந்தப் படத்தில் மனோபாலா ரவிமரியா மொட்டை ராஜேந்திரன் ஜார்ஜ் சஞ்சனா சிங், அஸ்மிதா ரேகா சுரேஷ் மற்றும் பலர் நடிக்கின்றனர்,

ஏற்கெனவே கர்ணன் படத்தில் நட்டியும் ஜெயில் படத்தில் ரவி மரியாவும் போலீஸ் அதிகாரிகளாக நடித்து மிரட்டியிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தப் படத்தின் பாடல் காட்சிகள் அனைத்தும் அந்தமானில் படமாக கப்படவிருக்கின்றது மிகுந்த பொருட்செலவில் உருவாகும் இந்தப் படத்தின் படப்பிடிப்புகள் அந்தமான் ஊட்டியை அடுத்துள்ள கூடலூர் தேவாலா பந்தலூர் போன்ற பகுதிகளில் நடந்து வருகிறது.

ஓளிப்பதிவு இயக்குனராக- தேவராஜ் பணியாற்றுகிறார். இசையை சத்திய தேவ் அமைக்கிறார். வசனத்தை கீர்த்தி வாசன் எழுதியிருக்கிறார். பாடல்கள் : மக கவி, வெள்ளத்துரை.

தயாரிப்பு மேற்பார்வை: பி.அவினாஷ்

தயாரிப்பு: சாய் சரவணன்

கதை திரைக்கதை டைரக் ஷன் கே.பி. தனசேகர்

Natty plays cop in his next film

அதிரடியான Common Man..; யூடிப் சாதனையால் சந்தோஷத்தில் சசிகுமார்

அதிரடியான Common Man..; யூடிப் சாதனையால் சந்தோஷத்தில் சசிகுமார்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

சசிகுமார் நடிப்பில் அண்மையில் ஓடிடியில் வெளியான உடன்பிறப்பே படம் நல்ல பாராட்டுக்களைப் பெற்றது.

ஆனால் அதன்பின்னர் வெளியான ராஜவம்சம் படம் மோசமான விமர்சனங்களை பெற்றது.

இந்த நிலையில் சசிகுமாரின் அடுத்த படமான “Common Man” படத்தின் டீசர் யூடியூப் தளத்தில் இதுவரை சுமார் 10ம் லட்சம் பார்வையாளர்களால் பார்க்கப்பட்டுள்ளது.

இப்படம் சத்ய சிவா இயக்கத்தில் உருவாகி வருகிறது. ஜிப்ரான் இப்படத்திற்கு இசையமைக்கவிருக்கிறார்.

ஒளிப்பதிவு ராஜா. ஆர்ட் டைரக்டர் உதயகுமார். படத்தொகுப்பு ஸ்ரீகாந்த்.

இப்படத்தை செந்தூர் பிலிம் இண்டர்நேஷ்னல் சார்பாக TD ராஜா மற்றும் DR சஞ்சய் குமார் தயாரித்து வருகிறார்கள்.

இந்த 2022 ஆம் வருடத்தில் படம் திரைக்கு வரும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

படத்தின் டைட்டில் டீசரில் வெட்டு, ரத்தம் என எதார்த்தமான சினிமா என்றில்லாமல் த்ரில்லர் படமாக தெரிவதால், படத்தின் மீது எதிர்பார்ப்பு எகிறியுள்ளது எனலாம்.

Sasi kumar’s Common Man teaser hits 1M views in youtube

ரஞ்சித்துக்கு விடுதலைச் சிறுத்தைகள் துணையுண்டு… – திருமாவளவன்

ரஞ்சித்துக்கு விடுதலைச் சிறுத்தைகள் துணையுண்டு… – திருமாவளவன்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

பா.இரஞ்சித் தனது நீலம் பண்பாட்டு மையம் சார்பில் பல்வேறு பண்பாட்டு நிகழ்வுகளை ஒருங்கிணைத்து வருகிறார். அவற்றுள் மிக முக்கியமான ஒன்று “மார்கழியில் மக்களிசை” ஆகும்.

ஆண்டுதோறும் மார்கழி மாதத்தில் சென்னையில் நடைபெற்று வந்த இந்நிகழ்வு, இந்த ஆண்டு கோவை, மதுரை, சென்னை ஆகிய பெருநகரங்களில் நடைபெற்றது. கோவை மற்றும் மதுரையில் ஒரு நாளும், சென்னையில் 8 நாட்களும் மிகவும் கோலாகலமான எளிய உழைக்கும் மக்களின் இசைத்திருவிழாவாக இது நடைபெற்று முடிந்திருக்கிறது.

முத்தாய்ப்பாக கடந்த டிசம்பர் 31-ஆம் தேதி “தி கேஸ்ட்லெஸ் கலெக்டிவ்” குழுவினரின் இசை நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் விசிக தலைவர் முனைவர் தொல்.திருமாவளவன் MP, திமுக பாராளுமன்ற உறுப்பினர் கனிமொழி கருணாநிதி, திரைப்பட இயக்குநர் வெற்றிமாறன், பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழகத் தலைவர் ஆம்ஸ்ட்ராங், மாநிலங்களவை உறுப்பினர் டிகேஎஸ் இளங்கோவன், சட்டமன்ற உறுப்பினர் கிருஷ்ணசாமி ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டனர்.

நிகழ்வில் பேசிய கனிமொழி MP, “இந்த மேடையில் இசைக்கப்படும் இசை அடக்கமறு என்பதை பறைசாற்றும் வகையில் இருக்கிறது. இரஞ்சித் மற்றும் குழுவினருக்கு எனது வாழ்த்துக்கள்” என்றார்.

தொல். திருமாவளவன் MP பேசியதாவது…

“சகோதரன் பா.இரஞ்சித் பண்பாட்டுதளத்தில் மிக நுட்பமாக தனது செயல்பாடுகளை முன்னெடுத்து வருகிறார் . நீலம் பண்பாட்டு மையம் நிகழ்த்திவரும் இசைவடிவம் எதிர்ப்பின் இசைவடிவமல்ல இதுவே ஆதி இசைவடிவம் , இதுவே இந்த மண்ணின் இசை. எங்கோ ஓர் பெயர் தெரியாத ஊர்களில் பாடிக்கொண்டு அறியப்படாத கலைஞர்களாக வாழ்ந்து வந்தவர்களை அழைத்து வந்து இப்படிப்பட்ட ஒரு மேடையை அமைத்து அவர்களுக்கான அங்கீகாரத்தையும், நலிந்த கலைஞர்களுக்கு பொருளுதவியையும் அளித்துவரும் இயக்குனர் இரஞ்சித்தை பாராட்டுகிறேன்.

இயக்குனர் பா. இரஞ்சித் பண்பாட்டு தளத்தில் முன்னெடுக்கும் அனைத்து முயற்சிகளுக்கும் விடுதலை சிறுத்தைகள் கட்சி துணை நிற்கும்” என்று பேசினார்.

VCK leader Thirumavalavan supports director Pa Ranjith

ரஜினியை மிரட்டிய வில்லன் பெயரை படத்தலைப்பாக்கிய விஷால்-சூர்யா

ரஜினியை மிரட்டிய வில்லன் பெயரை படத்தலைப்பாக்கிய விஷால்-சூர்யா

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

விஷால் நடிப்பில் உருவாகியுள்ள ”வீரமே வாகை சூடும்” இந்த மாதம் 26ஆம் தேதி திரைக்கு வருகிறது. இதனைத் தொடர்ந்து விஷாலின் அடுத்த படமான “லத்தி” படத்தின் பணிகளும் வேகமாக நடந்து வருகிறது.

இந்த நிலையில், 2022 ஆங்கில புத்தாண்டான இன்று விஷால் தனது அடுத்த படத்தின் டைட்டிலை வெளியிட்டுள்ளார். AAA பட இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் இப்படத்தை இயக்குகிறார்.

இதற்கு முன்பு திரிஷா இல்லனா நயன்தாரா, அன்பானவன் அசராதவன் அடங்காதவன் போன்ற படங்களை இயக்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

எனிமி படத்தின் தயாரிப்பாளர் எஸ் வினோத் குமார் இப்படத்தை தயாரிக்கவிருக்கிறார். படத்திற்கு “மார்க் ஆண்டனி” என்று டைட்டில் வைத்துள்ளனர்.

ரஜினி நடித்து அவருக்கே பிடித்த படங்களில் ஒன்றான சூப்பர் ஹிட் அடித்த “பாட்ஷா” படத்தில் வில்லன் ரகுவரனின் கேரக்டர் பெயர் தான் மார்க் ஆண்டனி. இந்த கேரக்டரும் இந்த கேரக்டருக்கான தேவாவின் பின்னணி இசையும் பெரியளவில் இப்போது வரை பேசப்பட்டு வருகிறது.

விஷாலின் இந்த படம், தமிழ், ஹிந்தி, தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னடம் என ஐந்து மொழிகளில் மிகவும் பிரம்மாண்டமாக தயாராக இருக்கிறது. பான் இந்தியா படம் என்றும் போஸ்டரில் குறிப்பிட்டுள்ளார்கள்.

வரும் பிப்ரவரி மாதம் முதல் இப்படத்தின் பட வேலைகள் துவங்கவிருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

விஷால் கையில் துப்பாக்கியோடு தோன்றுவதால் இதுவும் ஒரு கேங்க்ஸ்டர் படமாக இருக்கும் என்கிறனர் பலர்.

இப்படத்தில் எஸ் ஜே சூர்யா முக்கியமான கேரக்டரில் நடிக்கிறார்.

மார்க் ஆண்டனி பற்றி கூடுதல் தகவல்..

ரோமானிய அரசியல்வாதியும் ஜெனரலும் மார்க் ஆண்டனி (83-30 பி.சி.), அல்லது மார்கஸ் அன்டோனியஸ், ஜூலியஸ் சீசரின் கூட்டாளியாகவும், அவரது வாரிசான ஆக்டேவியனின் முக்கிய போட்டியாளராகவும் இருந்தார் மார்க் ஆண்டனி.

Director Adhik has roped in Vishal and SJSuryah to play the protagonist and the antagonist in his new film

‘தில் ஹே கிரே’ படத்தை அடுத்து சுசி கணேசன் இயக்கும் படம்

‘தில் ஹே கிரே’ படத்தை அடுத்து சுசி கணேசன் இயக்கும் படம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கோலிவுட், பாலிவுட் என்று கலக்கிவரும் இயக்குநர் சுசி கணேசன் 2022 ம் ஆண்டு மீண்டும் தமிழில் படம் இயக்குகிறார்.

தற்போது இந்தியில் ‘தில் ஹே கிரே’ படத்தை இயக்கி முடித்துள்ள இயக்குநர் சுசிகணேசன் தமிழில் இயக்கும் படத்தை அறிவித்துள்ளார். படத்துக்கு ‘வஞ்சம் தீர்த்தாயடா’ என்று டைட்டில் வைத்துள்ளார்.

1980 களில் மதுரையில் நடக்கும் நிஜ சம்பவங்களின் பின்னணியை கொண்ட இந்தப் படம் ஆக்‌ஷன் டிராமாவாக உருவாகவுள்ளது. முழுக்க முழுக்க உண்மை சம்பவத்தை மையமாக வைத்து எழுதப்பட்ட இதன் திரைக்கதை ரசிகர்களுக்கு புதுவித அனுபவத்தை கொடுக்கவுள்ளது.

இந்தப் படத்தை சுசிகணேசனின் 4 V எண்டர்டெயின்மென்ட் பிரம்மாண்டமாக தயாரிக்கவுள்ளது. இந்தியில் இரண்டு படங்கள் தயாரித்துள்ள சுசிகணேசன் இந்தி தயாரிப்பாளர் சங்கத்தில் உறுப்பினராக உள்ளார்.

அத்துடன் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்திலும் உறுப்பினராக அங்கம் வகிக்கிறார். இவருடைய கம்பெனியின் முதல் படைப்பாக ‘வஞ்சம் தீர்த்தாயடா’ வெளிவரவுள்ளது.

இந்தப் படத்தில் பணியாற்றவுள்ள நடிகர், நடிகைகள் மற்றும் தொழில் நுட்ப கலைஞர்கள் பற்றிய முழுமையான விபரங்கள் பொங்கல் திருநாளில் வெளிவரவுள்ளளது. இந்தப் படம் தமிழ் சினிமா ரசிகர்கள் காணாத புதுமையான முயற்சிகளோடு வெளிவரவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Director Susi Ganesan’s next film announcement is here

EXCLUSIVE எந்தா சாரே.. இங்ஙன கொந்து களைஞ்சல்லோ… ‘வேலன்-மீண்டும்’ குழுவினருக்கு வேண்டுகோள்

EXCLUSIVE எந்தா சாரே.. இங்ஙன கொந்து களைஞ்சல்லோ… ‘வேலன்-மீண்டும்’ குழுவினருக்கு வேண்டுகோள்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கடந்தாண்டு 2021 கடந்த வாரம் டிசம்பர் 31ஆம் தேதி கிட்டத்தட்ட ஒரு டஜன் தமிழ் படங்கள் ரிலீசானது.

இதில் கவின் இயக்கத்தில் முகேன் நடித்த படம் ‘வேலன்’ மற்றும் ஷரவண சுப்பையா இயக்கி நடித்த படம் கதிரவனின் ‘மீண்டும்’ ஆகிய படங்களும் உண்டு.

இந்த இரு படங்களிலும் மலையாளம் மொழி அதிகளவில் பேசப்பட்டது.

வேலன் படத்தில் தம்பி ராமையா மலையாளம் மொழி பேசுபவராக நடித்திருந்தார். அவருக்கு வேண்டுமென்றால் அது மலையாளமாக தெரிந்திருக்கலாம். ஆனால் படத்தை பார்க்கும் ரசிகர்கள் தான் பாவம்.

ஏற்கெனவே தம்பி ராமையா தன் ஓவர் ஆக்ட்டிங்கால் கத்தி கத்தி பேசுவார். தன் காட்சியில் தன்னுடைய ஆதிக்கம் அதிகளவில் இருக்க வேண்டும என விரும்புவார்.

அதுவும் வேலன் படத்தில் கத்தி கத்தி தமிழ் பேசி சில இடங்களில் மலையாளத்தை திணித்து பேசி நம்மை வெறுப்பேற்றி விட்டார்.

அதுபோல் மீண்டும் படத்தில் ஷரவண சுப்பையா, கதிரவன் மற்றும் அனகா ஆகியோர் மலையாளம் பேசுவதாக நினைத்து கடுப்பேற்றி விட்டார்கள்.

உதாரணத்திற்கு… நிங்கள் எந்தா விஜாரிச்சு… என்ற மலையாள வாக்கியத்திற்கு நீங்க என்ன நினைச்சீங்க? நீங்க என்ன யோசிச்சீங்க.? என்று தமிழில் அர்த்தம் உண்டு.

ஆனால் தம்பி ராமையா மற்றும் ஷரவண சுப்பையா பேசும்போது…

நீ என்ன யோசிச்சு.. என்று பேசுகின்றனர். அதாவது இது மலையாளம் என அவர்களாவே நினைத்து மலையாளம் பேசி அந்த மொழியை கொன்றுவிட்டார்கள்.

இது படம் பார்க்கும் ரசிகர்களுக்கு எரிச்சலையே தருகிறது. இதனால் படத்தை ரசிக்க முடியவில்லை என்பது பெரும் வருத்தம்.

ஒருவேளை கதைப்படி மலையாளம் பேசும் வார்த்தைகள் வந்தால் சம்பந்தபட்டவர்களுக்கு மலையாளம் டப்பிங் கொடுத்துவிடலாம். அப்போது தமிழில் சப்டைட்டில் கொடுத்துவிடலாம்.

மைக்கேல் மதன காமராஜன் படத்தில் கமல்ஹாசன் பேசும்போது அவ்வளவு அழகாக பாலக்காட்டு மலையாளத்தை தமிழுடன் கலந்து அழகாக பேசுவார்.

அதுதான் நடிப்புக்கான ஓர் அர்ப்பணிப்பு. அதை கற்றுக் கொள்ளுங்கள் கலைஞர்களே…

அதுபோல் மலையாள நடிகர்கள் மோகன்லால் மம்முட்டி துல்கர் சல்மான் பஹத்பாசில் பிருத்விராஜ் உள்ளிட்ட நடிகர்கள் தமிழ் படங்களில் நடிக்கும்போது அவ்வளவு அழகாக தமிழ் பேசுகிறார்கள். அது நமக்கு கேட்கவும் பார்க்கவும் நன்றாக உள்ளது.

மலையாள கலைஞர்கள் நம் தமிழ் மொழிக்கு கொடுக்கும் மரியாதையை நாமும் மற்ற மொழிக்கும் அதன் கலைஞர்களுக்கும் கொடுக்க வேண்டாமா.?

Common man request to Meendum and Velan movie team

More Articles
Follows