நட்புனா என்னானு தெரியுமா பட இசை விழாவுக்கு வந்து பரிசை அள்ளுங்க

நட்புனா என்னானு தெரியுமா பட இசை விழாவுக்கு வந்து பரிசை அள்ளுங்க

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Natpuna Ennanu Theriyuma stills‘நட்புனா என்னானு தெரியுமா’ வீடியோ சிங்கிள் ட்ராக் வெளியீட்டு விழாவிற்கு வாங்க.. பரிசுகளோடு போங்க!

லிப்ரா புரொடக்சன்ஸ் ரவீந்திரன் சந்திரசேகரன் மற்றும் வனிதா பிக்சர்ஸ் இணைந்து தயாரித்துள்ள படம் ‘நட்புனா என்னானு தெரியுமா’..

விஜய் டிவி புகழ் ‘கவின்’ நாயகனாக நடிக்க, ரம்யா நம்பீசன் நாயகியாக நடித்துள்ளார். சிவா அரவிந்த் இயக்கியுள்ள இந்தப்படத்திற்கு தரண் இசையமைத்துள்ளார்.

இந்தப்படத்தின் வீடியோ சிங்கிள் ட்ராக் வெளியீட்டு விழா வரும் நவ-12ஆம் தேதி சென்னை வடபழனியில் உள்ள விஜயா போரம் மாலில் மாலை 5மணி அளவில் நடைபெற இருக்கிறது. இந்த விழாவில் என்ன ஸ்பெஷல் என்றால் ரசிகர்களும் இந்த நிகழ்வில் திரளாக கலந்து கொள்ளலாம்.

‘நட்புனா என்னானு தெரியுமா’ படக்குழுவினருடன் சேர்ந்து அங்கு நடைபெறும் விளையாட்டு போட்டிகளில் கலந்துகொண்டு வெற்றிபெற்று பல அற்புதமான பரிசுகளையும் அள்ளிச்செல்லலாம்..

பரிசுப்பொருட்கள் விபரம்

• 32 கிராம் தங்க காசுகள்
• 6 நாட்கள் சிங்கப்பூர், மலேசியா சுற்றுப்பயணம் (விமானம், சாப்பாடு வசதி உட்பட) – 2 நபர்களுக்கு
• சாம்சங் s8 போன்
• சோனி ஹோம் தியேட்டர் 4100
• சோனி டிவி 4k (50 இன்ச்)
• பிளேஸ்டேஷன் – 4 (4 ஜாய்ஸ்டிக்குகளுடன்)
• டெல் i5 மாடல் 7567 (8gb ram 1 TB hard disk, etc..)

உங்கள் நண்பர்களையும் குடும்பத்தினரையும் அழைத்து வாருங்கள். நிகழ்ச்சியில் கலந்துகொண்டு எஞ்சாய் பண்ணுங்கள்.

உலகநாயகன் உதயமான நாள்: பத்மஸ்ரீ கமல் பிறந்தநாள் ஸ்பெஷல்

உலகநாயகன் உதயமான நாள்: பத்மஸ்ரீ கமல் பிறந்தநாள் ஸ்பெஷல்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

viswaroopam 2 posterஒரு காலத்தில் காதல் மன்னன் என அழைக்கப்பட்ட கமல்ஹாசனை இன்று உலக சினிமா போற்றும் உலகநாயகனாக உயர்ந்து நிற்கிறார்.

தனது 4 வயதிலேயே தன் திரைப்பயணத்தை தொடங்கிய இவர் இன்றும் அதே உற்சாகத்தோடு புதுமைகளை செய்து வருகிறார்.

இந்திய ரசிகர்களால் இவர் கலைக்கடவுளாக பார்க்கப்படுகிறார். இன்று அவர் தன் 63வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார்.

எனவே அவரைப் பற்றிய சில சுவையான குறிப்புகளை இங்கே தொகுத்துள்ளோம்….

இவர் திருவல்லிக்கேணி இந்து மேல்நிலைப்பள்ளியில் படித்தவர். ஃபிலிம் இன்ஸ்ட்டியூட்டில் படிக்க வில்லையே என்ற ஏக்கம் இவருக்கு உண்டாம்.

ஆனால் இவரிடம் நடிப்பு பயில ஆயிரக்கணக்கான நடிகர்கள் காத்து இருப்பது வேறுகதை.

நான்கு குழந்தைகளில் கடைக்குட்டியாகப் பிறந்தவர் கமல். படிப்பைத் தவிர்த்து கலைகளில் அதிகம் ஆர்வம் இருந்ததால் அதில் சிறுவயதிலேயே ஈடுபட்டார். பின்னர் தனது கலைப் பயணத்தை தொடர்ந்தார்.

எம்.ஜி.ஆருக்கு ‘நான் ஏன் பிறந்தேன்’ படத்திலும், ஜெயலலிதாவுக்கு ‘அன்பு தங்கை’ படத்திலும், சிவாஜிக்கு சவாலே சமாளி படத்திலும் நடன இயக்குனராக பணியாற்றியுள்ளார்.

உலகநாயகன் கதாநாயகனாக நடித்த முதல் படம் மாணவன் (1970)

தமிழ் சினிமாவில் முதன்முதலில் முத்தக் காட்சியில் நடித்தவர் என்ற பெருமையும் இவருக்கே உண்டு. படம்: சட்டம் என் கையில்.

நடிப்பைத் தவிர, பல படங்களில் பாடல்கள் எழுதியும் இருக்கிறார் பாடியும் இருக்கிறார். மற்ற நடிகர்களின் படங்களுக்கும் இவர் பாடியிருக்கிறார். இதுவரை கிட்டதட்ட 62 பாடல்களை பாடியுள்ளாராம்.

பாலசந்தர், பாரதிராஜா, பாலுமகேந்திரா ஆகியோரின் இயக்கத்தில் நடித்திருந்தாலும் மகேந்திரனின் இயக்கத்தில் நடிக்கவில்லை.

கமல் குடும்பத்தைச் சேர்ந்த அவரது அண்ணன் சாருஹாசனும், அவரது மகள் சுஹாசினியும் (அண்ணன் மகள்), ஆக மூன்று பேருமே தேசிய விருதை வென்றவர்கள்.

கமலின் தந்தையின் உடல் தகனத்துக்காக மயானத்தில் வைக்கப்பட்டிருக்கிறது. சாருஹாசன், சந்திரஹாசன், கமலஹாசன் ஆகிய மூவரும் சிதையின் அருகில் நிற்கிறார்கள்.

அப்போது அருகில் இருந்த ஆர்.சி.சக்தி, ஸ்டண்ட் மாஸ்டர் கிருபா ஆகியோரை அழைத்து, என் தந்தையை நேசித்த நீங்கள் என்றும் என் சகோதரர்களே’ என்று கூறி அவர்களையும் கொள்ளி வைக்க சொன்னார் கமல்.

பிரான்ஸ் நாட்டின் உயரிய விருதான செவாலியர் விருதை நடிகர் திலகம் சிவாஜி கணேசன் 20 ஆண்டுகளுக்கு முன்பு பெற்றார்.

அதன் பின்னர் தமிழகத்தில் இருந்து பெற்ற ஒரே நடிகர் கமல்ஹாசன். இவ்விருதை பிரான்ஸ் அரசாங்கம் ஆகஸ்ட் 21, 2016 அன்று அறிவித்தது.

திரைத்துறை மட்டுமில்லாமல், இதிகாசங்களில் இருந்து, நவீன இலக்கியங்கள் வரை அனைத்தையும் அறிந்தவர்.

கமல்ஹாசன் முறையாக பரதநாட்டியம் கற்றவர் என்பதால் பல படங்களுக்கு நடனக் கலைஞராகவும் பணியாற்றியுள்ளார்.

ரஜினியும் நானும் இயக்குனர் சிகரம் கே.பாலசந்தரின் மாணவர்கள் என்று அடிக்கடி கூறுவார்.

அதே சமயம் கபில்தேவ், இம்ரான்கான் மாதிரி எங்களிடையே ஆரோக்கியமான போட்டி எப்போதும் இருக்கும் என்பார்.

சினிமாவின் ஒரே காலக்கட்டத்தில் இரு பெரும் துருவங்களாக இருந்தாலும், இவர்களும் இருவரும் நட்பு பாராட்டி வருவது எல்லா தலைமுறை நடிகர்களுக்கும் ஆச்சரியம்தான்.

நடிப்பு, நடனம் என்று இல்லாமல் இயக்கம், தயாரிப்பாளர் என பல அவதாரங்களை எடுத்துள்ளவர் கமல்.

kamal Rajini-Picture

தமிழ் இலக்கியத்தில் மீது இவருக்கு காதல் இருந்ததால் ‘மையம்’ என்ற பத்திரிகையை நடத்தி வருகிறார். இந்த இதழை இவரது நற்பணி மன்றம் தற்போது இயக்கி வருகிறது.

பல மொழிகளில் ஏறக்குறைய 70 பாடல்கள் பாடியுள்ளார். இவர் நடித்த 6 திரைப்படங்கள் ஆஸ்கருக்கு பரிந்துரைக்கப்பட்டன.

இவர் 10 வேடங்களில் நடித்த ‘தசாவதாரம்’ திரைப்படம் உலகம் முழுவதும் வெற்றிகரமாக ஓடி வசூலைக் குவித்தது. ‘நந்தி’ உட்பட 4 விருதுகளையும் பெற்றுத் தந்தது.

மேலும் தனது ரசிகர் மன்றம் மூலமாக சமூக பணிகளில் ஈடுப்பட்டு வருகிறார். ரசிகர்களையும் ஈடுப்படுத்தி வருகிறார். சமுதாயப் பிரச்சனைகளை, தனது புத்தகமான ‘தேடித் தீர்ப்போம் வா’ என்ற தலைப்பில் இவர் சேகரித்து வருவது குறிப்பிடத்தக்கது.

‘ஹ்ருதயராகம் 2010’ என்ற திட்டத்தின் தூதராக இருந்த அவர், எய்ட்ஸ் நோயினால் பாதிக்கப்பட்டோருக்கு உதவுவதற்காக ஒரு அனாதை இல்லத்தை அமைத்துள்ளார். புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிதி திரட்டி உதவி அளித்தும் வருகிறார்.

அவ்வை சண்முகி என்ற படத்தில் முழு பெண் வேடமிட்டு நடித்தார். சிறுவயதில், அவ்வை டி.கே.எஸ்.சகோதரர்களின் நாடகக் குழுவில் இருந்தார.

தன் குருவின் மேல் கொண்ட பக்தியினாலும், தனது படத்துக்கு ‘அவ்வை சண்முகி’ என்று பெயர் வைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

1978ஆம் ஆண்டில் வாணி கணபதியை மணமுடித்த கமல் பத்து ஆண்டுகளுக்கு பின்னர் விவாகரத்து செய்தார்.

பின்னர் நடிகை சரிகாவை மணமுடித்தார். இந்த தம்பதிகளுக்கு பிறந்த ஸ்ருதிஹாசன் மற்றும் அக்ஷரா ஆகிய இருவரும் இப்போது நடிகைகளாக உருவெடுத்துள்ளனர். பின்னர் சரிகாவும் கமலிடம் இருந்து விவாகரத்து பெற்று விட்டார்.

அதன்பின்னர் நடிகை கௌதமியுடன் 12 ஆண்டுகள் திருமணம் செய்யாமல் வாழ்ந்து வந்தார். தற்போது அவரையும் பிரிந்து விட்டார்.

 

kamal stills

திரையுலகில் 50 வருடங்களாக நடித்து வந்தாலும் சமூகம் சார்ந்த அரசு விழிப்புணர்வு விளம்பரங்களில் மட்டுமே நடித்து வந்தார்.

ஆனால் முதன்முறையாக ஒரு தனியார் ஜவுளி நிறுவனத்தின் விளம்பரத்தில் இந்தாண்டு நடித்தார்.

மேலும் விஜய் டிவி நடத்திய பிக்பாஸ் டிவியில் நடுவராக பணியாற்றினார்.

இந்த நிகழ்ச்சி தமிழ்நாட்டில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்த கமல் ஒருவர் மட்டுமே காரணம்.

இதுநாள் வரை உலகநாயகனாக அறியப்பட்ட கமல், இந்தாண்டு 2017 முதல் ட்விட்டர் நாயகனாகவும் புகழ் பெற்றார்.

அதில் தமிழக அரசியல்வாதிகளை கடுமையாக சாடினார். இதனையடுத்து பல எதிர்ப்புகள் உருவாகவே தன் அரசியல் ஆர்வத்தை வெளிப்படுத்தினார்.

அதன்முதற்கட்டமாக சில தினங்களுக்கு முன் தன் ரசிகர்களை சந்தித்து பேசினார்.

அதன்படி தன் அரசியல் வருகையை உறுதியும் செய்துவிட்டார்.

இன்று பிறந்தநாளில் கமல் தன் ரசிகர்களை இணைக்க ஒரு புதிய மொபைல் செயலிலை அறிமுகப்படுத்துகிறார்.

விரைவில் தன் அரசியல் கட்சி பற்றிய அறிவிப்பை வெளியிட உள்ளார்.

உலகநாயகன் அரசியல் அரங்கிலும் நாயகனாக உயர வாழ்த்துகிறோம்.

கமல்ஹாசன் பெற்ற விருதுகளில் சில…

தனது முதல் படமான ‘களத்தூர் கண்ணம்மா’ படத்திற்காக சிறந்த குழந்தை நட்சத்திரத்துக்கான தேசிய விருதைப் பெற்றவர்.

மூன்றாம்பிறை, நாயகன், இந்தியன் போன்ற படங்களுக்காக இந்திய அரசின் சிறந்த நடிகருக்கான தேசிய விருதுகளை பெற்றுள்ளார்.

1990ஆம் ஆண்டில் இந்திய அரசின் மிக உயரிய விருதான பத்மஸ்ரீ விருதைப் பெற்றார்.

20 முறை ஃபிலிம்பேர் விருதுகளை பெற்றுள்ளார்.

பத்ம ஸ்ரீ செவாலியே கமல்ஹாசன் அவர்களை ஃப்லிமி ஸ்ட்ரீட் சார்பாக வாழ்த்துகிறோம்.

சுசீந்திரன் என் குரு; அவருக்காக எந்த வேடத்திலும் நடிப்பேன்: விக்ராந்த்

சுசீந்திரன் என் குரு; அவருக்காக எந்த வேடத்திலும் நடிப்பேன்: விக்ராந்த்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Vikranth talks about Suseenthiran and Nenjil Thunivirundhal movieபாண்டிய நாடு போல் நெஞ்சில் துணிவிருந்தால் எனக்கு மிக பெரிய திருப்பு முனையாக இருக்கும் – விக்ராந்த்

வணக்கம் ‘நெஞ்சில் துணிவிருந்தால்’ சுசீந்திரன் சார் படத்தில் ‘பாண்டிய நாட்டிற்கு பிறகு எனக்கு நடிக்க கிடைத்த ஒரு நல்ல வாய்ப்பு. சந்திப், சூரி அண்ணன், ஹரிஷ் உத்தமன் போன்ற மொத்த குழுவுடன் சேர்ந்து நடிப்பதில் மிகுந்த சந்தோஷம்.

இது சமூக அக்கறை மற்றும் இரண்டு நண்பர்களுக்கு இடையில் ஏற்படும் நட்பை மையமாக கொண்ட படம். ‘பாண்டிய நாடு’ எனக்கு சினிமாவில் ஒரு அடையாளத்தை ஏற்படுத்தி கொடுத்த படம்.

அதுபோல் அனைவருக்கும் இந்த படத்தில் அழுத்தமான உணர்சிப்புர்வமான கதாப்பாத்திரம் அமைந்துள்ளது. அவரவருக்கு ஏற்ற அழுத்தமான கதாப்பாத்திரத்தை அமைத்து உள்ளார் இயக்குநர்.

சுசீந்திரன் சார் பாண்டிய நாட்டிற்கு பிறகு என்னை அழைத்தார் நான் சென்றேன் அவர் கூறியது போல் நடித்தேன். சுசீந்திரன் சாரை பொறுத்த வரை சொல்லவே வேண்டாம் எனக்கு ‘பாண்டிய நாடு’ ஒரு முகவரி அளித்தது.

அதுபோல் அவர் என்னை திருப்பி அழைத்ததே மிகுந்த சந்தோஷம். அவர் என்னை மிகப்பெரிய இடத்தில் அமர வைக்க வேண்டும் என நினைக்கிறார். அவர் என் சகோதரர் ஆவர் அவருக்கு நான் மிக கடமைபட்டுள்ளேன்.

சொல்லப்போனால் அவர்தான் எனக்கு குரு அவர் என்னை கௌரவ வேடத்தில் நடிக்க சொன்னாலும் நான் நடிக்க தயார். சுசீந்திரன் சார் என்னிடம் எல்லா படத்திலும் ஒரே மாதிரி இருக்க இந்த படத்தில் கொஞ்சம் வித்தியாசமா பண்ணலாம் முதலில் சாதுவா காட்டலாம் என்று கண்ணாடிலாம் கொடுத்தாங்க. அதிகமா சிரிச்ச மாதிரி இருக்கணும் என்றார்.

தொண்டன் போன்ற படங்களில் கோவக்காரனை போல் இருக்கும் அதுபோல இல்லாமல் இந்தப்படமும் அடுத்து வரும் வெண்ணிலா கபடி குழுவாக இருக்கட்டும் இரண்டிலும் நகைச்சுவையான விஷயம் இருக்கணும்னு முயற்சி செய்து உள்ளோம்.

பாண்டிய நாடு படத்தில் சூரி அண்ணாவுடன் நான் ஏற்கனவே பணியாற்றி உள்ளேன் இந்த படத்தில் இருபத்தி ஐந்து நாட்கள் வைசாக்-ல் ஒன்றாக மிகுந்த சந்தோசமாக இருந்தோம்.

சூரி அண்ணா எனக்கு நீண்ட நாள் பழக்கம் அப்போது எப்படி இருந்தாரோ இப்போதும் அப்படியே உள்ளார்.

சந்தீப் இந்த படத்தில் இருந்து தான் பழக்கம் நல்ல நட்பு ரீதியா பழகினார். பாடல் காட்சிகளில் ஒருவருக்கொருவர் ஒத்துழைப்பு கொடுத்துக்கொள்வோம்.

மெஹரின் தெலுங்கில் மூன்று படங்கள் இந்த ஆண்டு வெளிவந்து உள்ளது அது சூப்பர் ஹிட் படமாகவும் அமைந்து உள்ளது. அது போல் இந்த படமும் ஹிட் ஆக அமைந்து அவர்கள் தமிழிலும் மிக பெரிய கதாநாயகியாக வர கடவுளை வேண்டிக்கொள்கின்றேன்.

ஹரிஷ் உத்தமன் அண்ணன் பாண்டிய நாடு படத்தில் என்னுடன் முதல் முறையாக நடித்தார் எங்கள் எல்லாருக்கும் அந்த படம் திருப்பு முனையாக இருந்தது அவருடன் மீண்டும் பணியாற்றியதில் மிகுந்த சந்தோஷம்.

இது ஒரு குழு என்று இல்லாமல் நெருங்கிய நண்பர்களாக சேர்ந்து பணியாற்றிய படம் அதன் வெளிபாடு திரையில் தெரியும். நடுவில் படம் அமையவில்லை என்ற விரக்தியில் அதிக எடை கூடிவிட்டேன் இப்பொழுது அதனை குறைக்க ஓட ஆரம்பித்தேன். இப்போதும் காலை எழுந்தவுடன் அது தொடர்கிறது.

சுசீந்திரன் சார் இந்த படம் ஆரம்பத்திலேயே சொல்லியது அடுத்து வெண்ணிலா கபடி குழு-2 பண்ணுகிறோம் முதல் பகுதியில் விஷ்ணு இறந்து விடுவார் அவருக்கு பதில் நீ. மற்ற நடிகர்களெல்லாம் அவர்களே தான்.

படத்தை செல்வசேகரன் சார் இயக்குகிறார். வெண்ணிலா கபடி குழு 2-காக கபடி முறையாக கற்று வருகிறேன் இந்த ஆண்டு இறுதி அல்லது அடுத்த ஆண்டு ஆரம்பத்தில் வெளியாகும்.

வெண்ணிலா கபடி குழு முதல் பகுதி 1980-ல் நடக்கும் கதை அக்கதையை பொறுத்த வரை சுசீந்தரன் சாரின் தந்தை தான் நிறுவனர். வெண்ணிலா கபடி குழு இரண்டாம் பாகம் முதலாம் பாகத்திற்கு இணையாக இருக்க வேண்டும் என்ற பொறுப்பு எனக்கு அதிகமாக இருக்கிறது.

கவண், தொண்டன், கெத்து, நெஞ்சில் துணிவிருந்தால் போன்ற மல்டி-ஹீரோ சப்ஜெட் படங்களில் நடித்து கதாநாயகனுக்கு முக்கியத்துவம் வாய்ந்த படத்தில் நடிக்க எதிர் பார்த்து இருந்த நேரத்தில் வெண்ணிலா கபடி குழு படத்தில் நடிப்பது மகிழ்ச்சி.

பாண்டிய நாடு படம் பார்த்துவிட்டு என்னை பாலா சார் தொலைபேசியில் தொடர்புகொண்டு இதே போன்று நடிப்பு திறமையை தொடர வேண்டும் என்று உக்குவித்தார்.

மேலும் இன்னும் சில இயக்குனர்கள் பாராட்டினார்கள் அது எனக்கு ஊக்குவிப்பதாக இருந்தது. அனைவரும் என்னை கவனிக்கிறார்கள் என்ற எண்ணமே என்னை மேலும் உக்குவிக்கிறது.

இனி வரும் படங்களில் கதாநாயகனுக்கு முக்கியத்துவம் வாய்ந்த படங்களில் நடிப்பேன். என்று விக்ராந்த் கூறினார்.

Vikranth talks about Suseenthiran and Nenjil Thunivirundhal movie

nenjil top advt

முருகதாஸ் படத்தில் இப்படியொரு கேரக்டரில் நடிக்கிறாரா விஜய்..?

முருகதாஸ் படத்தில் இப்படியொரு கேரக்டரில் நடிக்கிறாரா விஜய்..?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Vijay doing different role in AR Muragadoss movieகடந்த சில வருடங்களுக்கு முன்பு வரை விஜய் மீது வைக்கப்பட்ட பெரும் குற்றச்சாட்டு இதுதான்.

அதாவது இவர் கெட்டப்பையே மாற்ற மாற்றார். எப்போதும் போலவே இருப்பார் என்பதுதான்.

ஆனால் அண்மைக்காலமாக தன் கெட்டப்பில் சிறிய அளவில் மாற்றம் செய்து நடித்து வருகிறார்.

தெறி, மெர்சல் ஆகிய படங்களை இதற்கு உதாரணமாக சொல்லலாம்.

இந்நிலையில் அடுத்து நடிக்கவுள்ள ஏஆர். முருகதாஸ் படத்தில் விஜய் ஊனமுற்றவராக நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது.

இந்த தகவல் உண்மைதானா? என்பது விரைவில் தெரியவரும்.

Vijay doing different role in AR Muragadoss movie

விஜயகாந்த்-விஜய் வரிசையில் இணைந்தார் நயன்தாரா

விஜயகாந்த்-விஜய் வரிசையில் இணைந்தார் நயன்தாரா

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Nayanthara starrer Aram movie news updatesதமிழ் சினிமாவில் போலீஸ், ரவுடி, அரசியல்வாதி, டாக்டர், வக்கீல் என பல வேடங்களை நடிகர்களும், நடிகைகளும் ஏற்றுள்ளனர்.

ஆனால் கலெக்டர் வேடங்களை ஒரு சில நடிகர்கள் மட்டுமே ஏற்றுள்ளனர்.

தமிழ் செல்வன் படத்தில் விஜயகாந்த், மதுர படத்தில் விஜய் ஆகியோர் இந்த கேரக்டரில் நடித்திருந்தனர்.

தற்போது நயன்தாராவும் இந்த வேடத்தை ஏற்றுள்ளார்.

இந்த வேடத்தில் அவர் நடித்துள்ள அறம் படம் வருகிற நவம்பர் 10ஆம் தேதி வெளியாகிறது. அது பற்றிய விவரம் வருமாறு…

பெண் சமத்துவம் என்பதை வெறும் பேச்சில் மட்டுமே கொண்டுள்ள பல துறைகள் இருக்கும் இக்காலத்தில், அதனை நடைமுறையிலும் செயலாக்கிக்கொண்டிருக்கிறது தமிழ் சினிமா துறை.

மிக வலுவான முதன்மை கதாபாத்திரத்தில் நயன்தாரா நடித்து நவம்பர் 10 ஆம் தேதி வெளியாகவுள்ள ‘அறம்’ படத்தை கோபி நைனார் இயக்கியுள்ளார். இது ஒரு சமுதாய பிரச்சனைகளை பற்றி பேசும் படமாகும்.

இப்படத்தை தயாரித்துள்ள KJR ஸ்டுடியோஸ், பிரம்மாண்ட விளம்பர யுக்திகளை கையாளவுள்ளனர். ஒரு பெரிய மாஸ் ஹீரோவின் பட ரிலீசுக்கு இணையாக இப்படத்திற்கு மிகப்பெரிய பேனர்கள் தமிழகமெங்கும் பல திரையரங்கங்களில் எழுப்பப்படவுள்ளன.

‘அறம்’ படத்திற்கான எதிர்பார்ப்பு பல மடங்கு கூடியுள்ளது. நயன்தாரா அவர்களின் பெரிய மார்க்கெட் வேல்யூவிற்கு ஈடான விளம்பர யுக்திகளை கையாள்வதே சரி” என்கிறார் ‘KJR ஸ்டுடியோஸ்’ ராஜேஷ் J கொட்டப்படி.

தென்னிந்திய சினிமாவில் பெண் கதாபாத்திரத்தை மையமாக வைத்து எடுக்கப்படும் படங்களில் இது ஒரு மிக முக்கிய படமாக கருதப்படுகிறது.

KJR ஸ்டுடியோஸும் ‘Trident Arts’ ரவீந்திரன் அவர்களும் இணைந்து இப்படத்திற்கான மேலும் பல பிரம்மாண்ட விளம்பர யுக்திகளை திட்டமிட்டு வருகின்றனர். சமீபத்தைய வெற்றி படங்களில் பல படங்களை வெளியிட்டது ‘Trident Arts’ ரவீந்திரன் அவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

ஓம் பிரகாஷின் ஒளிப்பதிவில்,ஆண்டனியின் படத்தொகுப்பில், ஜிப்ரானின் இசையில் ‘அறம்’ உருவாகியுள்ளது.

Nayanthara starrer Aram movie news updates

மகள் திருமண வரவேற்பில் ரசிகர்களை சிலிர்க்க வைத்த சீயான் விக்ரம்

மகள் திருமண வரவேற்பில் ரசிகர்களை சிலிர்க்க வைத்த சீயான் விக்ரம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

vikram daughter receptionதிமுகவின் தலைவர் கருணாநிதியின் மகன் மு க முத்துவின் மகள் வயிற்று பேரனும், கெவின் கேர் நிறுவனத்தலைவர் சி கே ரங்கநாதன் அவர்களின் மகன் மனு ரஞ்சித்திற்கும் நடிகர் விக்ரம் மகள் அக்‌ஷிதாவிற்கும் சில தினங்களுக்கு முன் திருமணம் நடைபெற்றது.

இதனைத்தொடர்ந்து புதுச்சேரி அருகேயுள்ள பட்டானூரில் அமைந்திருக்கும் சங்கமித்ரா திருமண மண்டபத்தில் வரவேற்பு நடைபெற்றது.

இதில் தொழிலதிபர்கள், அரசியல் கட்சி பிரபலங்கள் உள்ளிட்ட பலரும் கலந்துக் கொண்டனர்.

இந்த பிரபலங்களுடன் தென்னிந்தியாவைச் சேர்ந்த 3000க்கும் அதிகமான விக்ரமின் ரசிகர்களும் கலந்து கொண்டுள்ளனர்.

விழாவுக்கு வந்திருந்த ரசிகர்கள் மேடையேறி மணமக்களை ஆசிர்வதிக்க அனுமதிக்கப்பட்டனர்.

பொதுவாக இதுபோன்ற நிகழ்ச்சிகளில் ரசிகர்களை அவ்வளவாக அனுமதிப்பதில்லை.

ஆனால் தங்கள் அபிமான நடிகர் விக்ரம் செய்த செயல் தங்களை மெய் சிலிர்க்க வைத்தாக ரசிகர்கள் தெரிவித்தனர்.

மேலும் ரசிகர்களின் வேண்டுகோளுக்கு ஓ பட்டர்ஃப்ளை பாடலை மேடையில் பாடினார் சீயான் விக்ரம்.

vikram daughter reception 2

More Articles
Follows