‘யூகி’ படத்தில் மீண்டும் ‘பரியேறும் பெருமாள்’ ஜோடி.; நட்டி & நரேனுடன் கூட்டணி

‘யூகி’ படத்தில் மீண்டும் ‘பரியேறும் பெருமாள்’ ஜோடி.; நட்டி & நரேனுடன் கூட்டணி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கதிர், நரேன் மற்றும் நட்டி நடிக்கும் ‘யூகி’ படத்தின் டைட்டில் மோஷன் போஸ்டர், 2021 ஆகஸ்ட் 13 அன்று, தயாரிப்பாளர்களால் வெளியிடப்பட்டது.

அறிமுக இயக்குனர் ஜாக் ஹாரிஸ் இயக்கும் ‘யூகி’ படத்தின் மோஷன் போஸ்டர் வெளியிடப்பட்டது.

Forensic மற்றும் Kala போன்ற வெற்றிப்படங்களை தந்த Juvis Productions நிறுவனம் UAN Film House மற்றும் AAAR Productions நிறுவனங்களுடன் இணைந்து இப்படத்தினை தயாரிக்கிறது.

‘யூகி’ படத்தில் கதிர், நரேன், நட்டி, பவித்ரா லட்சுமி, கயல் ஆனந்தி மற்றும் ஆத்மியா ராஜன் ஆகியோர் முதன்மை பாத்திரங்களில் நடிக்கிறார்கள்.

ஏற்கெனவே ‘பரியேறும் பெருமாள்’ படத்தில் கதிர் & ஆனந்தி இணைந்து நடித்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

அறிமுக இயக்குனர் ஜாக் ஹாரிஸ் ‘யூகி’ படத்தினை இயக்குகிறார்.

தென்னிந்திய நடசத்திர நடிகர்களான, பிரதாப் போத்தன், ஜான் விஜய், முனீஷ் காந்த், சினில் சைனுதீன், வினோதினி, அஞ்சலி ராவ் மற்றும் பிந்து சஞ்சீவ் ஆகியோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.

பாக்கியராஜ் ராமலிங்கம் திரைக்கதை எழுதுகிறார், புஷ்பராஜ் சந்தோஷ் ஒளிப்பதிவு செய்கிறார்.

இந்த பாடல்களுக்கு ரஞ்சின் ராஜ் இசையமைக்க, டான் வின்சென்ட் பின்னணி இசையமைக்கிறார்.

இதே தயாரிப்பு நிறுவனம் தயாரித்து, ஜாக் ஹாரிஸ் இயக்கிய மலையாளப் படத்தில் ‘ஜகமே தந்திரம்’ நட்சத்திரம் ஜோஜு ஜார்ஜ், நரேன் மற்றும் ஷர்புதீன் நடித்திருந்தனர்.

பன்மொழிகளில் தயாராகும் இப்படம் கோவிட் பொது முடக்க காலத்தில், அனைத்து முன்னெச்சரிக்கைகளையும் முறையாக கடைப்பிடித்து, சென்னை மற்றும் பாண்டிச்சேரி பகுதிகளில் படமாக்கப்பட்டது.

Yuki starring Kathir Narain and Natty has been unveiled by the makers on the 13th of August 2021

‘காற்றிலே…’ பாடலுக்கு கை கொடுத்த பாடகர் உன்னிகிருஷ்ணன் & நடிகை சொர்ணமால்யா

‘காற்றிலே…’ பாடலுக்கு கை கொடுத்த பாடகர் உன்னிகிருஷ்ணன் & நடிகை சொர்ணமால்யா

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

வெளிநாடுகளைப் போல இங்கேயும் சுதந்திரப் பாடல்கள், ஆல்பங்கள் வெளிவர ஆரம்பித்துள்ளன.

ஹாலிவுட் திரையுலகில் திரை நுழைவிற்கான ஒரு முன்னோட்டமாக குறும்படங்களும் ஆல்பங்களும் இருப்பது போல் இங்கேயும் அந்தப் போக்கு தொடங்கியுள்ளது.

அந்த வகையில் தனது திறமைக்கு ஒரு முன்னோட்டமாக பிரகலாத் ராகவேந்திரன் இசையமைத்துள்ள தனிப் பாடல்தான் ‘காற்றிலே’.

ஒரு பாடகராக இவர் பல இசையமைப்பாளர்களிடம் பாடியிருக்கிறார்.
இப்போது
பாடகரிலிருந்து இசையமைப்பாளராக
மாறியிருக்கிறார்.

அது மட்டுமல்லாமல் குறும்படங்கள், வெப் சீரிஸ், விளம்பரங்கள் போன்றவற்றிற்கு இசையமைத்துவருகிறார்.

அவரது ‘காற்றிலே’ தனிப்பாடலை முகுந்தன் ராமன் எழுதியிருக்கிறார். பிரதீப் குமார் பாடி இருக்கிறார்.

இப்பாடல் ரீதிகௌளை ராகத்தை ஆதாரமாகக் கொண்டு இனிய காதல் கீதமாக உருவாகியுள்ளது.

இது மியூசிக் மேஜிக் நிறுவன ஸ்டுடியோவில் ஒலிப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

இதற்கு முன் இவரது இசையில் உன்னிகிருஷ்ணன் ‘கலர் கனவே’ என்ற பாடல் பாடிவெளியாகி இருக்கிறது .

உன்னி கிருஷ்ணன் தன் மகள் உத்ராவுடன் அப்பா மகள் பாசத்தைப் பற்றிய பாடலான ‘என் மகளே’ என்கிற பாடலும் வெளியாகி பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.

அடுத்தடுத்து பாடல்கள் வெளிவர உள்ளன.

இந்தக் ‘காற்றிலே’
பாடல் 13ஆம் தேதி உலக மக்கள் செவிகளுக்கு விருந்தாக வெளியாகி உள்ளது.

‘காற்றிலே’தனிப்பாடலின் லிரி கல் வீடியோவைப் பாடகர் உன்னிகிருஷ்ணனும் நடிகை சொர்ணமால்யாவும் சமூக ஊடகங்களில் வெளியிட்டுள்ளனர்.

இந்த பாடலைக் கேட்டு ரசித்துப் பாராட்டி இசையமைப்பாளர் பிரகலாத் ராகவேந்திரனை வாழ்த்தியுள்ளனர்.

காற்றிலே தனிப்பாடல் இப்போது காற்று மண்டலத்தில் கலந்து அலையடிக்க ஆரம்பித்துள்ளது.

Unni Krishnan and Sornamalya joins for independent song

கைது செய்வது கனவில்தான் நடக்கும்.; சவால் விட்ட மீரா மிதுனை கைது செய்த சைபர் க்ரைம் போலீஸ்

கைது செய்வது கனவில்தான் நடக்கும்.; சவால் விட்ட மீரா மிதுனை கைது செய்த சைபர் க்ரைம் போலீஸ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

சர்ச்சைக்குரிய கருத்துக்களை பேசி தன்னை எப்போதும் சமூக வலைத் தளங்களில் பேச வைப்பவர் நடிகை மீரா மிதுன்.

சமீபத்தில் தலித் இன மக்களைப்பற்றி இழிவாக பேசியிருந்தார்.

எனவே மீரா மீது 7 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு அவருக்கு சம்மன் அனுப்பப்பட்டு உள்ளது.

எனவே இதுதொடர்பாக மீரா மிதுன் விரைவில் கைது செய்யப்படலாம் என கூறப்பட்டது.

இதனையடுத்து ஒரு வீடியோ வெளியிட்டார் மீரா.

அதில்..

‛‛நான் ஒட்டுமொத்த பட்டியல் இன மக்களை பற்றி தவறாக பேசவில்லை. என்னை தொந்தரவு செய்தவர்களை பற்றி மட்டும்தான் பேசினேன்.

என்னை கைது செய்ய வேண்டும் என சிலர் சொல்கிறார்கள். தாராளமாக கைது செய்யுங்கள்.

ஏன் காந்தி, நேரு சிறைக்கு போகலையா..? என்னை கைது செய்ய ஒரு சூழல் எனக்கு வராது. என்னை கைது செய்ய வேண்டும் என்றால் அது கனவில் தான் நடக்கும். தொடர்ந்து முயற்சி செய்து கொண்டே இருங்கள்” என போலீசுக்கு சவால் விடும் வகையில் பேசியிருந்தார்.

இந்த நிலையில் கேரளாவில் நடிகை மீரா மிதுனை சென்னை சைபர் க்ரைம் போலீசார் கைது செய்துள்ளனர்.

Actress Meera Mithun arrested in Kerala by Chennai cyber crime police.

#MeeraMitun

கொல்கத்தாவில் வளரும் ‘கோப்ரா’..; விரைவில் வரும் விக்ரம்.!

கொல்கத்தாவில் வளரும் ‘கோப்ரா’..; விரைவில் வரும் விக்ரம்.!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

விக்ரம் நடிப்பில் லலித் குமார் தயாரிப்பில் உருவாகி வரும் திரைப்படம் ‘கோப்ரா’.

இந்த படத்தை ‘டிமாண்டி காலனி’ & ’இமைக்கா நொடிகள்’ ஆகிய வெற்றிப் படங்களை இயக்கிய அஜய் ஞானமுத்து இயக்கி வருகிறார்.

ஏ.ஆர் ரஹ்மான் இசையமைத்து வருகிறார்.

விக்ரமிற்கு ஜோடியாக ’கேஜிஎஃப்’ புகழ் ஸ்ரீநிதி ஷெட்டி நடிக்கிறார். வில்லனாக கிரிக்கெட் வீரர் இர்பான் பதான் நடித்து வருகிறார்.

இதில் விக்ரம் பல்வேறு கெட்டப்புகளில் நடிப்பதால் இப்படத்தின் மீதான எதிர்பார்ப்புகள் எகிறியுள்ளது. மேலும் படத்தின் டீசர் வெளியாகி ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்றது.

இதன் படப்பிடிப்பு சென்னை, ரஷ்யா உள்ளிட்ட பல்வேறு இடங்களில் நடைபெற்ற நிலையில் ஆகஸ்ட் 15-ம் தேதி முதல் ’கோப்ரா’ பட இறுதிக்கட்ட படப்பிடிப்பை கொல்கத்தாவில் தொடங்குகின்றனர்.

இதற்காக, அஜய் ஞானமுத்து உள்ளிட்ட படக்குழுவினர் அங்கு சென்று உள்ளனர்.

விரைவில் விக்ரமும் கொல்கத்தா சென்று அங்கு படப்பிடிப்பில் பங்கேற்கிறார்.

Chiyaan Vikram’s cobra shoot updates

யோகிபாபுக்காக ‘வீரப்பனின் கஜானா’-வை ஆகஸ்ட் 14ல் திறக்கும் ஜிவி பிரகாஷ்

யோகிபாபுக்காக ‘வீரப்பனின் கஜானா’-வை ஆகஸ்ட் 14ல் திறக்கும் ஜிவி பிரகாஷ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ஃபோர் ஸ்கொயர்ஸ் ஸ்டுடியோஸ் பிரபாதீஸ் ஷாம்ஸ் தயாரித்துள்ள படம் , ‘வீரப்பனின் கஜானா’.

பிரபாதீஸ் ஷாம்ஸ், ‘ராட்சசி’ திரைப்பட இயக்குநர் கவுதம் ராஜ் இணைந்து எழுதியுள்ள கதையை புதுமுக இயக்குநர் யாசின் என்பவர் இயக்கியுள்ளார்.

காட்டின் பெருமையை சொல்ல ஃபேன்டஸி, காமெடி த்ரில்லர் கலந்து சொல்ல வரும் திரைப்படம் தானாம் ‘வீரப்பனின் கஜானா’.

யோகிபாபு, மொட்டை ராஜேந்திரன், ராஜேஷ், தேவா, பூஜா, ஜீவிதா உள்ளிட்டோர் நடித்து வருகின்றனர்.

இவர்களுடன் குரங்கு, புலி, யானை என குழந்தைகளை கவரும் நிறைய சுவாரசியங்கள் நிறைந்திருக்கும் என்கின்றனர் படக்குழுவினர்.

இந்த நிலையில் இப்பட பர்ஸ்ட் லுக் போஸ்டரை நாளை ஆகஸ்ட் 14ஆம் தேதி மாலை 6 மணிக்கு நடிகர் ஜிவி. பிரகாஷ் வெளியிடவுள்ளதாக படக்குழுவினர் சற்றுமுன் அறிவித்துள்ளனர்.

Yogi babu in Veerappanin Gajana first look will be released by GV Prakash

இயக்குநர் பாலாவுக்கு மீண்டு(ம்) கை கொடுக்கும் ‘நந்தா & நாச்சியார்’

இயக்குநர் பாலாவுக்கு மீண்டு(ம்) கை கொடுக்கும் ‘நந்தா & நாச்சியார்’

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ரீமேக் படங்களை இயக்காத பாலாவை தனக்காக தன் மகனுக்காக ‘வர்மா’ படத்தை இயக்க வைத்தவர் விக்ரம்.

முழுப்படமும் ரெடியாகி இறுதியாக படமே சரியில்லை என தயாரிப்பாளர் சொல்ல படமே ரிலீசாகவில்லை. (ஓடிடி ரிலீஸ் வேறு கதை).

அதன்பிறகு பாலா படமே இயக்கவில்லை.

இந்த நிலையில் இயக்குநர் பாலா ஒரு புதிய படத்தை இயக்க அதை ஜோதிகா மற்றும் சூர்யா இணைந்து தயாரிக்கப் போகிறார்கள்.

இந்த தகவல் சில மாதங்களாக பேசப்பட்டாலும் தற்போது உறுதியாகியுள்ளதாம்.

இந்த புதிய படத்தில் ஹீரோவாக அதர்வா நடிக்கப் போவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

ஏற்கனவே பாலா இயக்கத்தில் உருவான ‘பரதேசி’ படத்தில் அதர்வா நடித்துள்ளார்.

அதுபோல் பாலா இயக்கிய நந்தா & பிதாமகன் படங்களில் சூர்யாவும் ‘நாச்சியார்’ படத்தில் ஜோதிகாவும் நடித்துள்ளனர் என்பது தங்களுக்கு நினைவிருக்கலாம்.

Suriya and Jyothika joins for Bala’s film

More Articles
Follows