தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
நடிகரும் இயக்குனருமான சீமான் தற்போது நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளராக உள்ளார்.
அந்த கட்சி தொடர்பான பணிகளில் அதிக ஆர்வம் காட்டி வருகிறார். தினம் தினம் போராட்டங்கள் நடத்தி அறிக்கைகள், பேட்டிகளை கொடுத்து வருகிறார்.
இவரின் புகைப்படங்கள், பேட்டிகள் தொடர்பான வால் போஸ்டர்களை நாம் அடிக்கடி தெருக்களில் பார்க்கலாம்.
இந்நிலையில் இன்று தமிழகத்தின் முக்கிய பகுதிகளில் யார் இவர்கள்..? என்ற போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன.
அதில் சீமானை சுற்றி முகமூடி அணிந்த பல பெண்கள் உள்ளிட்ட மர்ம நபர்கள் உள்ளனர்.
மேலும் எங்களை அடக்க நினைப்பது அதிகாரமா? ஆணவமா? என்ற வாசகமும் அதில் இடம் பெற்றுள்ளது.
இந்த போஸ்டர் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
விஜய் மில்டன் தயாரிப்பில் பாலாஜி சக்திவேல் இயக்கும் ஒரு படத்திற்கு யார் இவர்கள்? என பெயரிட்டு இருந்தனர்.
அதில் கடுகு படப்புகழ் சுபிக்ஷா நாயகியாக நடிக்க, ஜாவேத் ரியாஸ் இசையமைத்து வருகிறார்.
ஒருவேளை இந்த படத்துக்கும் அந்த போஸ்டருக்கும் தொடர்பு இருக்குமோ? என ரசிகர்கள் குழப்பத்தில் உள்ளனர்.
Naam Tamilar Seemans Yaar Ivargal poster goes viral