தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்து மக்கள் நீதி மய்யம் வேட்பாளர்கள் & அதன் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரம் செய்து வருகிறார் கமல்ஹாசன்.
அவர் ஒவ்வொரு மேடையில் பேசியவைகளில் சில….
“நான் உதயநிதி தயாரித்த படத்தில் நடித்து அதுக்கு சம்பளம் வாங்கி இருக்கேன்.
அப்போதும் அது முறையான பணம் தானா? என்று பார்த்தே வாங்கினேன். அதுக்கு வரி கட்டியிருக்கிறேன்.
உதயநிதி கூட படம் பண்ணிவிட்டாரே, இவர் நேர்மையானவர் இல்லை என்று சொன்னால் நான் எப்படி சரி என்பேன்.?
ஆனால், உதயநிதி நேர்மையானவர் இல்லை என்பது என் வாதம்… நான் நேர்மையானவர் என்பது என் வாழ்க்கை” என பேசினார் கமல்
“கமலுக்கு பணம் எங்கிருந்து வருகிறது. ஒருவேளை பாஜக தருகிறதோ? என கேட்கிறாங்க..
ஜிஎஸ்டி முறையை கொண்டு வந்த நாள் முதல் பாஜகவை எதிர்த்துக் கொண்டிருக்கிறேன்.
நான் பாஜகவின் பி டீம் என்பதாக திமுக பொய் பரப்புகிறது… நான் மகாத்மா காந்திக்கு மட்டுமே பி டீம்” என்று பேசினார் கமல்ஹாசன்.
ஆனால் ஓரிரு தினங்களுக்கு முன் பாஜக வை ஆதரித்து நடிகர் ராதாரவி பேசும்போது… “திமுகவின் பி-டீம் கமல்” என பிரச்சாரம் செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த செய்தியை நம் www.filmistreet.com இணையதளத்தில் பார்த்தோம்.
இதோ அந்த லிங்க்…
கமல் ஒரு சோம்பேறி.. அவர் திமுக-வின் B Team.. அவரால் எம்ஜிஆர் ஆக முடியாது..; ராதாரவி கடும் தாக்கு
கமல் ஒரு சோம்பேறி.. அவர் திமுக-வின் B Team.. அவரால் எம்ஜிஆர் ஆக முடியாது..; ராதாரவி கடும் தாக்கு
My party is not BJP’s or DMK’s B team ?