மகேஷ்பாபு படத்தில் பர்ஹான் அக்தரை பாடவைத்த தேவி ஸ்ரீபிரசாத்

மகேஷ்பாபு படத்தில் பர்ஹான் அக்தரை பாடவைத்த தேவி ஸ்ரீபிரசாத்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Music composer Devi Sri Prasad brings Farhan Akhtar to Tollywood

பாலிவுட்டின் முன்னணி இயக்குனர், தயாரிப்பாளர், திரைக்கதையாசிரியர், பாடகர், இசையமைப்பாளர், நடிகர் என பன்முகத்திறமைக் கொண்டவர் பர்ஹான் அக்தர்.

இவர் முதன் முதலில் தென்னிந்திய மொழியில் தயாரான ‘பரத் அனே நேனு’ என்ற திரைப்படத்தில் பின்னணி பாடியிருக்கிறார்.

இவரை பாடவைத்து அனுபவம் குறித்து இசையமைப்பாளர் தேவி ஸ்ரீபிரசாத்திடம் கேட்டபோது,…
‘பர்ஹான் அக்தரை மூன்று ஆண்டுகளுக்கு முன் ஒரு விருது வழங்கும் விழாவில் சந்தித்தேன்.

அப்போது அவர் என்னுடைய இசையில் வெளியான ஹிந்தி பாடல்களைப் பற்றி பேசினார்.

அதே போல் நானும் ‘ராக் ஆன்’ என்ற படத்தில் அவர் பாடிய பாடல் என்னை மிகவும் கவர்ந்த பாடல் என்றும், உங்களது குரல் எனக்கு மிகவும் பிடிக்கும் என்று சொன்னேன்.

அத்துடன் நீங்கள் ஏன் தென்னிந்திய மொழிகளில் பாடக்கூடாது? என்று கேட்டேன்.

அதற்கு அவர் எனக்கு விருப்பம் இருந்தாலும் எனக்கு தென்னிந்திய மொழிகளான தெலுங்கோ, தமிழோ சுத்தமாக தெரியாதே..? என்று பதிலளித்தார்.

அத்துடன் உங்களுக்கு என்னுடைய குரலினிமை மீது நம்பிக்கை இருந்தால் நான் முயற்சி செய்கிறேன். நன்றாக இருந்தால் வைத்துக் கொள்ளுங்கள். இல்லையென்றால் நீக்கிவிடுங்கள் என்றார்.

அப்போது நான் அவருக்கு மொழி உச்சரிப்பு ஆகியவற்றை நான் பார்த்துக் கொள்கிறேன். உங்களுடைய குரலுக்கு ஏற்ற வகையில் பாடல்கள் அமைந்தால் நீங்கள் தான் பாடவேண்டும் என்று கேட்டுக் கொண்டேன். அதற்கு சரியென்று ஒப்புக்கொண்டார்.

முதலில் சுகுமார் இயக்கத்தில் மகேஷ் பாபு நடிப்பில் தயாரான ‘1 நேநோக்கடுனே’ (1 Nenokkadine) என்ற படத்தில் இடம்பெற்ற ‘Who are you..’ என்ற பாடலைத்தான் பர்ஹான் அக்தர் பாடுவதாகயிருந்தது.

ஆனால் போதிய கால அவகாசம் இல்லாததால் அவரால் பாட இயலவில்லை. அதனையடுத்து தற்போது மகேஷ் பாபு நடிப்பில் ‘பாரத் அனே நேனு’ என்ற படத்தில் இடம்பெற்ற ‘I Dont Know…’ எனத் தொடங்கும் பாடலை பர்ஹான் பாடினால் நன்றாக இருக்கும் என்று எண்ணி, அவரைத் தொடர்பு கொண்டேன்.

இந்த பாடலுக்கான மெட்டை நான் உருவாக்கும் போதே இந்த பாடலை பர்ஹான் பாடினால் நன்றாக இருக்கும் என்று உறுதியாக நம்பினேன்.

அவரைத் தொடர்பு கொண்ட போது, மகிழ்ச்சியுடன் ஒப்புக்கொண்டு பாடுகிறேன் என்றார். இருந்தாலும் அவர் தெலுங்கு மொழி உச்சரிப்பைப் பற்றி கவலைப்பட்டுக் கொண்டேயிருந்தார். ஆனால் மும்பையில் இந்த பாடலை பதிவு செய்யும் போது அற்புதமாக பாடிக்கொடுத்தார்.

இந்த பாடலை கேட்டவர்கள் அனைவருக்கும் இன்ப அதிர்ச்சி. பர்ஹான் அக்தர் எப்படி தெலுங்கு மொழியை கச்சிதமாக உச்சரித்து இனிமையாக பாடியிருக்கிறார் என்று ஆச்சரியப்பட்டனர்.

இதுவே இந்த பாடலுக்கு மிகப்பெரிய வெற்றியைக் கொடுத்திருக்கிறது. கடந்த வாரம் இந்த பாடல் இணையத்தில் வெளியானது.

வெளியான சில மணி நேரங்களிலேயே மில்லியன் கணக்கில் வரவேற்பையும் பெற்றிருக்கிறது. இந்த பாடலின் வெற்றிக்கு உதவிய நாயகன் மகேஷ் பாபு, இயக்குநர் கொரட்லா சிவா, தயாரிப்பாளர் என அனைத்து தரப்பினருக்கும் நான் நன்றித் தெரிவித்துக் கொள்கிறேன்.

பர்ஹான் அக்தருடனான இந்த இசைப்பயணம் மேலும் தொடரும்’ என்றார்.

இதற்கு முன்பே பாலிவுட் பாடகர்களான மில்கா சிங், அப்பச்சே இந்தியன், அட்னன் ஷமி, பாபா செகல் உள்ளிட்ட பல இசை கலைஞர்களை தென்னிந்திய மொழிகளில் பாட வைத்து, இங்கு அறிமுகப்படுத்திய பெருமையை தேவி ஸ்ரீபிரசாத்தையே சேரும் என்பது குறிப்பிடத்தக்கது.

Music composer Devi Sri Prasad brings Farhan Akhtar to Tollywood

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் வீட்டு வசதி கூட்டுறவு சங்க தேர்தல் தகவல்கள்

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் வீட்டு வசதி கூட்டுறவு சங்க தேர்தல் தகவல்கள்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

TN Producer Council Veetu vasadhi vaariyam election result updatesதமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் வீட்டு வசதி கூட்டுறவு சங்கம். இந்த சங்கமானது தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர் நலனுக்காக ஆரம்பிக்கப்பட்டது.

பாபுகணேஷ் அந்த சங்கத்தின் தலைவராக பொறுப்பில் இருந்தபோது, தயாரிப்பாளர் சங்கத்தில் விஷால் பொறுப்பேற்றவுடன் அதிரடியாக இந்த சங்கத்தை நீக்கினார்.

அந்த இடத்தையும் பறிமுதல் செய்துக் கொண்டார்.

அண்ணாசாலையிலுள்ள தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் வீட்டு வசதி கூட்டுறவு சங்கம் கட்டிடம் மீது வழக்கு நிலுவையில் உள்ளதால், தயாரிப்பாளர் விடியல் ராஜு தன் சொந்த இடத்தை கடந்த 1 வருடம் காலமாக தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் வீட்டு வசதி கூட்டுறவு சங்கம் நடைபெற தற்காலிகமாக அனுமதித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த சங்கத்தில் இதுவரை ஐந்தாண்டுக்கு ஒரு முறை அரசாங்கத்தால் தேர்தல் நடத்தப்பட்டு வந்தது, அதன்படி தற்போது சங்கத்திற்கு தேர்தல் அறிவிக்கப்பட்டு அதில் போட்டியிட்ட 11 பேரும் போட்டியின்றி தயாரிப்பாளர் விடியல் ராஜு தலைமையில் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.

அந்த 11 பேர் கொண்ட நிர்வாகக்குழு உறுப்பினர்கள் விவரம் இதோ

TN Producer Council Veetu vasadhi vaariyam election result updates

election list

டெட்பூல்-2 ஹாலிவுட் படத்தில் ரஜினியின் காலா பன்ச் டயலாக்

டெட்பூல்-2 ஹாலிவுட் படத்தில் ரஜினியின் காலா பன்ச் டயலாக்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Rajinis Kaala punch dialogue used in DeadPool 2 hollywood movieஹாலிவுட் நடிகர் ரேயான் ரெனால்ட்ஸ் சூப்பர் ஹீரோவாக நடித்துள்ள படம் டெட்பூல் 2.

இவருடன் ஜாஸ் பெர்லின், மொனோரா பச்சிரின், ஜுலியா டென்னி சன் உள்ளிட்டோரும் நடித்துள்ளனர்.

இதன் முதல் பாகம் கடந்த 2016ல் உலகமெங்கும் வெளியாகி அனைத்து தரப்பினரையும் கவர்ந்தது.

தற்போது இதன் 2ஆம் பாகம் வருகிற மே மாதம் 18-ந் தேதி ரிலீசாகவுள்ளது.

இந்த படத்தின் தமிழ் டப்பிங் டீசர் சமீபத்தில் வெளியானது.

இதில் ஹீரோ ரேயான் ரெய்னால்ட்ஸ் பேசும்போது ரஜினியின் காலா பனச் டயலாக்கை பேசியுள்ளார்.

“வேங்கையின் மகன் ஒத்தையில் நிக்கிறேன்னு ஒரு ஜோர்ல சொல்லிட்டேன்.. எல்லாம் மொத்தமா வந்துட்டானுக” என்று பேசுகிறார்.

இது தமிழ் சினிமா ரசிகர்களை மிகவும் கவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Rajinis Kaala punch dialogue used in DeadPool 2 hollywood movie

காவிரி நீர் வேணுமின்னா ஐபிஎல் பாக்காதீங்க; ஜேம்ஸ் வசந்தன் ஐடியா

காவிரி நீர் வேணுமின்னா ஐபிஎல் பாக்காதீங்க; ஜேம்ஸ் வசந்தன் ஐடியா

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Avoid IPL CSK match to get Cauvery water says James Vasanthanசுப்ரமணியபுரம் படத்தில் இடம் பெற்ற கண்களால் இரண்டால் என்ற பாட்டை யாராலும் மறக்க முடியாது.

இந்த பாட்டுக்கு இசையமைத்தவர் ஜேம்ஸ் வசந்தன்.

இவர் தொலைக்காட்சிகளில் பல்வேறு நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறார்.

தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் காவிரி விவகாரம் தொடர்பாக ஒரு ஐடியா ஒன்றை பதிவிட்டுள்ளார்.

நம் விவசாயத்திற்காக நம் உணவிற்காக நாம் இதை நிச்சயலாம். அப்படி நீங்கள் நினைத்தால் இதை மேற்கொண்டு படியுங்கள்.

அவர் பதிவிட்டுள்ளதாவது….

‘காவிரிப் பிரச்சனையில் நம் ஒற்றுமையை, எதிர்ப்புகளை பல விதங்களில், பல வழிகளில் காட்டிவருகிறோம். நான் ஒன்று சொல்கிறேன். சிலருக்கு சங்கடமாக இருக்கலாம். சிந்தித்து தீர்மானியுங்கள்.

2018 April 10-ம் தேதி CSK-வின் முதல் மேட்ச் 50,000 கொள்ளளவு கொண்ட சேப்பாக்கம் ஸ்டேடியத்தில் நடக்கவுள்ளது. அன்று ஸ்டேடியம் காலியாகத் தெரிந்தால் சர்வதேச கவனத்தை ஈர்க்கலாம்.

இந்தப் போட்டியை உலகம் முழுக்க டி.வி.யில் காண்பவர்களுக்குக் காரணம் தெரியவரும். நம் போராட்ட நோக்கம்

ஒரே நாளில் எல்லா இடங்களுக்கும் காசு செலவில்லாமல், ஒரு சின்ன தியாகத்தால், சென்று சேர்ந்துவிடும்.

ஒவ்வொரு வருடமும் ஜூன் மாதம் 12-ம் தேதி மேட்டூர் அணை திறக்கப்படும். இன்னும் 2 மாதங்களே இருக்கின்றன. இருக்கிற அரசியல் சூழ்நிலையில் திறக்கப்படுமா, இந்தப் பிரச்சனை சுமுகமாக தீருமா, சுயநல அரசியல்வாதிப் பேய்கள் இதைத் தீர்க்கவிடுவார்களா என்பதெல்லாம் கேள்விக்குறியாகிப் போனபின்பு, இது மக்கள் பிரச்சனை, நம் பிரச்சனையாகி விட்டது.

நாம்தான் இதைக் கையிலெடுத்துப் போராடி, அவர்களை இதற்கு தீர்வுகாண சிந்திக்க வேண்டும்.

இந்த ஒரே ஒரு போட்டியை ஸ்டேடியத்துக்குச் சென்று காணாமல் இந்த வாழ்வுப் போராட்டத்தை வலுப்படுத்துவோம் என்றுதான்

ஆலோசனை சொல்கிறேன். இது ஏதோ விவசாயிகளின் பிரச்சனை என நினைத்துவிடவேண்டாம். நம் அன்றாட வாழ்வின் உணவுப் பிரச்சனை. உணவு உற்பத்தியைப் பாதிக்கிறப் பிரச்சனை.

அரிசி சாதத்தை நம்பி வாழ்ந்து கொண்டிருக்கிற தமிழ்நாட்டின் தலையாயப் பிரச்சனை!. இது தமிழர்களின் பிரச்சனை என்று இந்தத் தமிழ்நாட்டில் வாழ்ந்துகொண்டிருக்கிற பிறமொழியினர் தவறாகப் புரிந்துகொள்ள வேண்டாம்.

நீங்களும் இதில் ஒத்துழைக்க வேண்டும். இது மொழிப்பிரச்சனை அல்ல.. வாழ்வுப் பிரச்சனை! உங்கள் உணவையும் சேர்த்துத் தயாரிக்கிற அந்த விளைநிலங்களின் உயிர்ப்பிரச்சனை!

போதிய நீர் இல்லாமல் இது உணவு உற்பத்தியைப் பாதிக்கும். வாழ்வாதாரத்தையும், கூடவே ஒட்டுமொத்த பொருளாதாரத்தையும் பாதிக்கும்.. உங்கள் தொழில்கள் உட்பட!

அந்த ஒரு நாள் ஸ்டேடியத்திற்கு செல்லவேண்டாம் என்பதுதான் வேண்டுகோள். வீட்டில் அமர்ந்து பாருங்கள்.

ஒரு 50,000 பேர் மட்டுமே செய்வது இந்தத் தியாகம். ஆனால் 7 கோடி பேருக்கு உதவும் என்பதை மறந்துவிடாதீர்கள்.

இதனால் மற்ற யாருக்கும் எந்தத் தொல்லையோ, நஷ்டமோ இல்லை என்பதையும் நினைவூட்டுகிறேன். நமது நட்சத்திர வீரர்களுக்கு அவர்களுடைய ஊதியத் தொகையில் எந்த பாதிப்போ, தொலைக்காட்சி வருமானத்திற்கோ, CSK-க்கு இழிவோ (மாறாக, அவர்களும் இதை மனதார ஆதரிப்பார்கள்) எதுவும் கிடையாது.

ஒட்டுமொத்த இந்தியாவின், மத்திய அரசின், உலக அரங்கின், நீதியரசர்களின் கவனத்தையும் இந்த ஒரே நாளில் ஈர்க்கலாம் என்கிறார் ஜேம்ஸ் வசந்தன்.

Avoid IPL CSK match to get Cauvery water says James Vasanthan

Breaking: மத்திய அரசின் எடுபிடிதான் தமிழக அரசு : கமல் கடும் தாக்கு

Breaking: மத்திய அரசின் எடுபிடிதான் தமிழக அரசு : கமல் கடும் தாக்கு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

TN Govt is working for Central Govt not for Peoples says Kamalhassanஇன்று திருச்சியில் நடக்கும் பொதுக்கூட்டத்தில் கலந்துக் கொள்ளவிருக்கிறார் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன்.

அதற்கு முன் தற்போது சற்றுமுன் செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.

அவர் பேசியதாவது….

காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது மத்திய அரசின் கடமை.

அதிமுக அரசு ஒரு போலியான உண்ணாவிரதத்தை நேற்று மேற்கொண்டது. அதனால் எதுவும் நடக்கப்போவதில்லை.

மாநில உரிமைகளுக்கு மதிப்பளிக்காமல் மத்திய அரசுக்கு எடுபிடி வேலை பார்த்து வருகிறது.

இன்று நடக்கும் எங்கள் பொதுக்கூட்டம் காவிரி பிரச்சனை குறித்து விவாதிக்கும் என்று பேசினார் கமல்ஹாசன்.

TN Govt is working for Central Govt not for Peoples says Kamalhassan

சமூக போராளி டிராபிக் ராமசாமியின் வாரிசாக நடிகர் விஜய்.?

சமூக போராளி டிராபிக் ராமசாமியின் வாரிசாக நடிகர் விஜய்.?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Actor Vijay connected with Traffic Ramasamy life historyதனி ஒருவன் நினைத்தால் எதையும் தைரியமாக எதிர்த்து போராடலாம் என வாழ்ந்து காட்டி வருபவர் 80 வயது இளைஞர் டிராபிக் ராமசாமி.

அண்மையில் இவரது பிறந்தநாள் கொண்டாடப்பட்டது.

ஜெயலலிதா உள்ளிட்ட பல அரசியல்வாதிகளை கலங்கடித்தவர் இவர்.

பெரும் அரசியல் போராட்டங்கள் நிறைந்த இவரின் வாழ்க்கையை டிராபிக் ராமசாமி என்ற பெயரில் படமாக எடுத்து வருகின்றனர்.

விக்கி என்பவர் இயக்கி வரும் இப்படத்தில் டிராபிக் ராமசாமியாக விஜய் தந்தை எஸ்.ஏ சந்திரசேகர் நடித்து வருகிறார்.

இவருடன் விஜய்சேதுபதி, ரோஹினி, சீமான், பிரகாஷ் ராஜ், குஷ்பு, விஜய் ஆண்டனி, எஸ்.வி சேகர் உள்ளிட்ட பல பிரபலங்களும் நடித்து வருகின்றனர்.

இந்த படம் குறித்து டிராபிக் ராமசாமியின் உதவியாளர் பாத்திமா செய்தியாளர்களிடம் பேசும்போது…

இந்த படத்தின் க்ளைமாக்ஸில் டிராபிக் ராமசாமி தன் அரசியல் வாரிசாக விஜய்யை கை காட்டுகிறார் என்றும், விஜய்யின் அரசியல் விளம்பரத்திற்காக டிராபிக் ராமசாமியின் புகழை பயன்படுத்திக்கொள்வதாக் குற்றம்சாட்டினார்.

ஆனால் பாத்திமாவின் இந்த கருத்தை நிஜ டிராபிக் ராமசாமியும் படக்குழுவினரும் மறுத்துள்ளனர்.

Actor Vijay connected with Traffic Ramasamy life history

More Articles
Follows