தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
சமீபத்தில் சாதி கொடுமையால் பள்ளி மாணவர் அவரது தங்கை இருவரும் தாக்கப்பட்டனர்.
இந்த சம்பவம் சக மாணவர்களிடையே தமிழக மக்களிடையே பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
‘சாதிகள் இல்லையடி பாப்பா..’ என்று பாடம் படிக்கும் மாணவர்களே இப்படி சாதி என்னும் தீயில் சாதி வெறியில் திரிவதா? என பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
இந்த நிலையில் இந்த சம்பவம் குறித்து திரைப்பட நடிகர் எம் எஸ் பாஸ்கர் ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார்.
அந்த கவிதை அறிக்கையில்…
“வேற்றுமை கூடாது என்பதற்காகத்தானே மாணவ மாணவியர்க்கு சீருடை….
மாணவனை மாணவர்களே கொடுமையாக தாக்குவது எவ்வகையில் நியாயம்…
சின்னதுரை படிக்கக்கூடாதா…
சிறந்து விளங்கக்கூடாதா…
பிஞ்சு மனங்களில் நஞ்சா….
சிரத்தில் அறிவை இழந்து கரத்தில் அரிவாளை ஏந்துவதா….
சாதி இரண்டொழிய வேறில்லை என்று ஔவை மூதாட்டி எழுதியது பொய்யா….
கற்காலத்தில் சாதி இல்லை…
தற்காலத்தில் மனிதநேயமே இல்லை….
எங்கே போகிறது என் நாடு…..
என்ன சொல்வது என்றே புரியவில்லை..
நாங்குநேரி மாணவன் மீதும் அவரது சகோதரி மீதும் நடந்த தாக்குதலை கனத்த இதயத்தோடு வன்மையாக கண்டிக்கிறேன்….
இச்சம்பவத்தால் அதிர்ச்சியில் உயிரிழந்தவருக்கு என் கண்ணீர் அஞ்சலியை காணிக்கையாக்குகிறேன்.
தவறு செய்தவர்கள் யாராயினும் அவர்கள் தண்டிக்கப்பட வேண்டியவர்கள் என்பதில் மாற்றுக்கருத்துக்கு இடமில்லை!
இனி வரும் காலத்தில் இவ்வாறு நிகழா வண்ணம் சட்டம் தன் கடமையை கடுமையாக செய்ய வேண்டும் என்பதே என் வேண்டுகோள்….
சின்னதுரையும் அவரது சகோதரியும் விரைவில் நலம் பெற பிரார்த்திக்கிறேன்.
– வேதனையுடன் எம்.எஸ்.பாஸ்கர்.
MS Baskar emotional statement about Students caste issue