‘தலைவர்’ என்னும் நபர் அரசியலை கவனிக்கிறார்..; நல்லவர்களுக்காக காத்திருக்கிறோம்… – கமல்ஹாசன்

Kamal Haasan (2)தேர்தல் பிரச்சாரம் மற்றும் பிக்பாஸ் ஷோ என பிசியாக இருந்த கமல்ஹாசன் அண்மையில் காலில் அறுவை சிகிச்சை செய்து ஓய்வில் இருந்தார்.

கடந்த சனிக்கிழமையன்று தன் நண்பர் நடிகர் ரஜினிகாந்தை அவரது இல்லத்தில் சந்தித்து பேசினார்.

பின்னர் ஞாயிறன்று செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது அவர் பேசியதாவது.. ‘‘தலைவர்’ என சொல்லப்படும் நபர் நாள் தவறாது அரசியலை கவனித்துக் கொண்டிருக்கிறார். அதனால் வாய்ப்பு இருக்கிறது.

என் பின்னால் வாருங்கள் என்று சொல்லவில்லை. வாருங்கள் பணியாற்றுவோம்’ என மறைமுகமாக ரஜினியைக் குறிப்பிட்டு பேசினார்.

“மக்களுக்கு நல்லது செய்ய நினைப்பவர்கள் யாரும் எங்களுடன் வரலாம். சீமான், சரத்குமார் விரும்பினால் எங்கள் அணிக்கு வரலாம்.

நல்லவர்களுக்காக மக்கள் நீதி மய்யத்தின் கதவுகள் எப்போதும் திறந்தே இருக்கும் ” என மநீம தலைவர் கமல்ஹாசன் பேசினார்.

MNM leader Kamal haasan hopes to lead a third front for polls

Overall Rating : Not available

Latest Post