தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
கேடி. குஞ்சுமோன் தயாரிப்பில் கோகுல் கிருஷ்ணா இயக்கத்தில் உருவாகும் படம் ‘ஜென்டில்மேன் 2’.
ஆஸ்கர் விருது வென்ற கீரவாணி இசையமைக்கும் இந்த படத்தின் துவக்க விழா இன்று சென்னையில் நடைபெற்றது.
இந்த விழாவில் இசையமைப்பாளர் கீரவாணி பேசும்போது,*
“தமிழ்நாட்டுக்கும் எனக்கும் நிறைய சம்பந்தம் உண்டு. என் தந்தை இங்கே சென்னையில் பணி செய்தபோது என் தாயின் கருவில் உருவானவன் நான். ஆனால் திடீரென பணி மாற்றம் காரணமாக ஹைதராபாத்திற்கு சென்றபோது அங்கே பிறந்தேன்.
அந்த வகையில் என்னுடையது தெலுங்கு உடலில் தமிழ் ஆன்மா என்பேன். 22 வருடமாக சென்னையில் தான் இருந்தேன். அதன்பிறகு தெலுங்கு படங்களுக்கு எல்லாம் அங்கே தான் பணியாற்ற வேண்டும் என்கிற ஒரு நிர்பந்தம் இருந்ததால் தொழில் நிமித்தம் காரணமாக ஹைதராபாத்திற்கு மாறினேன். மீண்டும் என்னை தமிழுக்கு அழைத்து வந்த குஞ்சுமோன் சாருக்கு நன்றி.
குஞ்சுமோனை பார்க்கும்போது ஒரு போலீஸ் அதிகாரி தோரணை இருக்கும். அப்படி ஒரு போலீஸ் அதிகாரி ‘யூ ஆர் அண்டர் அரெஸ்ட்’ என சொல்வது போல என்னை அவர் அரெஸ்ட் பண்ணி விட்டார். அவரது இதயச்சிறையில் ஒரு கைதியாக நான் எப்போதும் இருப்பேன்.
எனக்கு மிகவும் பிடித்த தமிழ் கவிஞர்கள் கண்ணதாசன், வாலி, வைரமுத்து இவர்கள் மூவர் எழுதிய பாடல்களையும் ஒவ்வொரு சந்தர்ப்பத்தில் கேட்கும்போது நமக்கு எனர்ஜி கிடைக்கும்.
இப்போதும் வானமே எல்லை படத்தின் பாடலைக் கேட்டால் மன அழுத்தம் ஓடிப்போய் விடுகிறது. அப்படி நான் பூஜிக்கும் பாடல்களை எழுதிய பாடலாசிரியரே மீண்டும் என் படத்திற்கு பாடல் எழுதுவதை ஒரு ஆசிர்வாதமாக நினைக்கிறேன்.
நூறு சதவீதம் அர்ப்பணிப்புடன் எந்தவித சமரசமும் செய்து கொள்ளாமல் இந்த படத்திற்கு என்ன செய்ய வேண்டுமோ அதை நிச்சயமாக கொடுப்பேன்” என்றார்.
இப்படத்தில் கதாநாயகனாக சேத்தன் சீனு நடிக்கிறார். கதாநாயகியாக நயன்தாரா சக்கரவர்த்தி மற்றும் முக்கிய வேடங்களில் சுதா ராணி, பிரியா லால், சுமன், ஸ்ரீ ரஞ்சனி, சித்தாரா, சத்ய பிரியா, காளி வெங்கட், முனீஸ் ராஜா, படவா கோபி, பிரேம்குமார் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர்.
*தொழில்நுட்ப கலைஞர்கள் விபரம்*
இயக்கம் ; ஏ.கோகுல் கிருஷ்ணா
இசை ; எம்.எம் கீரவாணி
பாடல்கள் ; கவிப்பேரரசு வைரமுத்து
ஒளிப்பதிவு ; அஜயன் வின்சென்ட்
படத்தொகுப்பு ; சதீஷ் சூர்யா
கலை ; தோட்டா தரணி
சண்டை பயிற்சி ; தினேஷ் கார்த்திக்
சவுண்ட் டிசைனர் ; தபஸ் நாயக்
ஆடை வடிவமைப்பு ; பூர்ணிமா ராமசாமி
தயாரிப்பு வடிவமைப்பாளர் : CK. அஜய்குமார்
மக்கள் தொடர்பு ; ஜான்சன்
MM Keeravaani emotional speech about his cinema journey