ராஜூ முருகனின் ஜிப்ஸி-யை பார்த்தார் திமுக தலைவர் ஸ்டாலின்

ராஜூ முருகனின் ஜிப்ஸி-யை பார்த்தார் திமுக தலைவர் ஸ்டாலின்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

MK stalin with gypsy teamராஜூ முருகன் இயக்கத்தில் ஜீவா நடித்துள்ள படம் ஜிப்ஸி.

நீண்ட இழுபறிக்குப் பின்னர் வரும் மார்ச் 6’ஆம் தேதி திரைக்கு வரவுள்ளது.

சென்சார் கமிட்டியால் நீக்கப்பட்ட காட்சியொன்றினையும் படக்குழு வெளியிட்டது.

Gypsy – Moviebuff Sneak Peek (Censor Cut – 01)

இந்த நிலையில் இப்பட சிறப்புக் காட்சியை திமுக தலைவர் ஸ்டாலின் பார்த்துள்ளார்.

இவருடன் துரைமுருகன், திண்டுக்கல் ஐ.பெரியசாமி, ஏ.வ.வேலு ஆகியோரும் பார்த்துள்ளனர்.

BREAKING இந்தியன் 2 விபத்து; போலீஸ் விசாரணையில் கமல் என்ன சொன்னார்..?

BREAKING இந்தியன் 2 விபத்து; போலீஸ் விசாரணையில் கமல் என்ன சொன்னார்..?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Actor Kamal Haasanகடந்த மாதம் பிப்ரவரி 19-ஆம் தேதி ‘இந்தியன்2’ படப்பிடிப்பு தளத்தில் கிரேன் அறுந்து விழுந்து 3 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

10 பேர் காயமடைந்தனர்.

இதுதொடர்பாக 4 பிரிவுகளின் கீழ் கமல், ஷங்கர், லைகா உள்ளிட்டோர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

இந்த விவகாரம் தொடர்பாக கிரேன் ஆபரேட்டரை போலீசார் கைது செய்தனர்.

இந்த விபத்து குறித்து ஏற்கெனவே ஷங்கரிடம் மத்திய குற்றப்பிரிவு போலீசார் விசாரணை நடத்தியுள்ளனர்.

ஸ்டாலினுக்கு கமல் சொன்ன பிறந்தநாள் வாழ்த்திலும் உள்குத்து..?

இந்த நிலையில் இன்று மத்திய குற்றப்பிரிவு அலுவலகத்தில் நடிகர் கமல்ஹாசன் இன்று ஆஜரானார். அவரிடம் விபத்து தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த நடிகர் கமல்ஹாசன், “நடந்த விபத்தில் அடிபடாமல் தப்பித்தவர்களில் நானும் ஒருவன்.

அங்கு நடந்த விவரங்களை நான் காவல்துறையிடம் கூறியுள்ளேன்.

இழந்த 3 சகோதரர்களுக்கு நான் செய்யும் கடமையாக இதை பார்க்கிறேன்.

இனி இதுபோன்று விபத்துகள் நடைபெறாமல் இருக்க நடந்த கலந்துரையாடலாகவே இதை நான் பார்க்கிறேன்.

இனி இது போன்று விபத்துகள் நடக்காமல் இருக்க காவல்துறையின் ஆலோசனையையும் நாங்கள் கேட்டுக் கொள்கிறோம்.

எங்கள் திரைத்துறை சார்ந்தவர்கள் விரைவில் சந்தித்து பேசவுள்ளோம். அது குறித்த தகவல்களையும் ஊடகங்களுக்கு தெரிவிக்கிறோம்” எனத் கமல் பேசினார்

நம்பிக்கை வைத்த விஜய் அண்ணாவுக்கு நன்றி.. – லோகேஷ் கனகராஜ்

நம்பிக்கை வைத்த விஜய் அண்ணாவுக்கு நன்றி.. – லோகேஷ் கனகராஜ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Vijay Lokesh Kanagarajவிஜய் & விஜய்சேதுபதி இணைந்துள்ள மாஸ்டர் படத்தை இயக்கியுள்ளார் லோகேஷ் கனகராஜ்.

இதில் அர்ஜுன் தாஸ், மாளவிகா மோகனன், ஆண்ட்ரியா, கவுரி கி‌ஷன், வி.ஜே.ரம்யா, ஸ்ரீமன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

சத்யன் சூரியன் ஒளிப்பதிவு செய்துள்ள இந்த படத்துக்கு அனிருத் இசையமைத்து வருகிறார்.

Master movie stills

இப்பட சூட்டிங் முடிவடைந்துள்ளது. ஏப்ரல் 9ஆம் தேதி படம் வெளியாகும் எனத் தெரிகிறது-

இந்த நிலையில் இதுகுறித்து இயக்குனர் லோகேஷ் கனகராஜ் டுவிட்டரில் பதிவிட்டுள்ளதாவது:

“தொடர்ந்து 129 நாட்கள் இடைவெளியின்றி நடைபெற்று வந்த மாஸ்டர் படப்பிடிப்பு நிறைவடைந்தது. இந்த பயணம் என் மனதுக்கு நெருக்கமானது.

என் மீதும், எனது குழுவினர் மீதும் நம்பிக்கை வைத்த விஜய் அண்ணாவிற்கு நன்றி. என்னுடைய இயக்குனர்கள் குழு இன்றி இத்தகைய கடினமான பணியை செய்திருக்க முடியாது. அவர்களை எண்ணி பெருமிதம் கொள்கிறேன்” என பதிவிட்டுள்ளார்.

ரஜினியின் ரியல் லைஃப் ஸ்டைலில் ஹீரோவாகிறார் கால்டாக்ஸி கெவின்.!

ரஜினியின் ரியல் லைஃப் ஸ்டைலில் ஹீரோவாகிறார் கால்டாக்ஸி கெவின்.!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Actor Kevinபேருந்து கண்டக்டராக இருந்து சினிமாவின் முன்னணி நடிகராக உயர்ந்த ரஜினிகாந்த், நம்பிக்கையும், ஆர்வமும் இருந்தால்
போதும், யார் வேண்டுமானாலும் சினிமாத்துறையில் ஜெயிக்கலாம் என்பதை நிரூபித்து காட்டினார். அவர் வழியில் பலர்
சினிமா துறையில் வெற்றி பெற்றிருக்கும் நிலையில், கெவின் என்பவரும் ரஜினி பாணியில் சினிமாவில்
ஹீரோவாகியிருக்கிறார்.

‘கடத்தல் காரன்’ படம் மூலம் ஹீரோவாக அறிமுகமாகும் கெவின், கால்டாக்ஸி டிரைவராக பணியாற்றிக்
கொண்டிருந்தாலும், சினிமா மீது உள்ள ஆர்வத்தினாலும், நடிப்பின் மீது உள்ள காதலாலும், சினிமாவில் ஹீரோவாக
வேண்டும் என்ற தனது லட்சியத்தோடு பல்வேறு முயற்சிகளில் ஈடுபட்டு வந்தவர், தற்போது தமிழ் சினிமாவில் ஹீரோவாக
அறிமுகமாகிறார்.

மலையாளத்தில் மூன்று படங்களுக்கு திரைக்கதை எழுதியிருக்கும் எஸ்.குமார், கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கும்
இப்படம், ஆக்‌ஷன் கலந்த காமெடி கலாட்டாவாக உருவாகியிருக்கிறது.

திருடுவதை குலத்தொழிலாக வைத்திருக்கும் ஒரு கிராமத்தை தனது கட்டுப்பாட்டில் வைத்திருப்பவரின் கட்டுப்பாட்டுக்கு ஊர்
மக்கள் அடிபணிந்து வாழ்கிறார்கள். எந்த பொருளை யார் திருடினாலும், அதை சரிசமமாக பங்கிட்டு கொள்ள வேண்டும்
மற்றும் வெளியாட்கள் கிராமத்திற்குள் நுழைந்தால், அவர்களால் அந்த கிராமத்தை விட்டு வெளியேற முடியாது உள்ளிட்ட
பல கட்டுப்பாடுகள் அந்த கிராமத்தில் இருக்கின்றன. அப்படிப்பட்ட கிராமத்தை சேர்ந்த சில திருடர்கள், திருமண வீட்டில்
திருடும் போது, ஹீரோயினான மணமகளை தூக்கிச் சென்றுவிடுவதோடு, மணமகளின் நகைகளை பங்கிட்டுக் கொண்டவர்கள்,
மணமகளை எப்படி பங்கிட்டு கொள்வது என்று யோசிக்க, மணமகனின் காதலரான ஹீரோ மணமகளை, அந்த திருட்டு
கிராமத்தில் இருந்து காப்பாற்ற முடிவு செய்து அந்த கிராமத்தில் பெண் வேடத்தில் நுழைகிறார்.

ஹீரோயினை காப்பாற்ற தான் ஹீரோ திருட்டு கிராமத்திற்குள் நுழைந்தாலும், அவர் அந்த கிராமத்திற்குள் நுழைந்ததற்கு
வேறு ஒரு காரணமும் இருக்கிறது, அது என்ன காரணம் என்பது தான் படத்தின் மிகப்பெரிய ட்விஸ்ட். இப்படி படம்
முழுவதும் ரசிகர்கள் எதிர்ப்பார்க்க முடியாத ட்விஸ்ட்டுகள் வருவதோடு, யூகிக்க முடியாத அளவுக்கு திரைக்கதை
அமைத்திருக்கிறார் இயக்குநர் எஸ்.குமார்.

இப்படத்தில் ஹீரோவாக நடிக்கும் கெவின், தனது முதல் படத்திலேயே பெண் வேடம் போட்டு அசத்தியிருப்பதோடு, ஆக்‌ஷன்
காட்சிகளில் டூப் இல்லாமல் நடித்திருக்கிறார்.

குறிப்பாக சேசிங் காட்சிகளில், அவரே ஜீப் ஓட்டுவதோடு, சில சாகசங்களை
ரொம்ப சாதாரணமாக செய்திருக்கிறார். எப்படி சார் இப்படி, என்று கேட்டால், எல்லாம் சினிமா மீது இருக்கும் ஆர்வம் தான்
சார்.

9ம் வகுப்பு படித்துவிட்டு கால்டாக்ஸி டிரைவராக வாழ்க்கையை தொடங்கினேன். இருந்தாலும் எதாவது சாதிக்க
வேண்டும், சமூகத்தில் நானும் ஒரு பிரபலாக இருக்க வேண்டும், என்று நினைத்தேன். அதற்காக சினிமாவில் நடிப்பு துறையை
தேர்வு செய்து, நடிகராக வேண்டும் என்று பல வருடங்களாக முயற்சி செய்தேன்.

அந்த முயற்சிக்கு இயக்குநர் எஸ்.குமார்
மூலம் வெற்றி கிடைத்திருக்கிறது. வாய்ப்பு கிடைத்தாலும், அந்த வாய்ப்பை தக்க வைத்துக் கொள்ள வேண்டும், என்று
இப்படத்தில் பல ரிஸ்க்குகளை எடுத்திருக்கிறேன். அதனால், எனக்கு ரசிகர்களிடம் இருந்து பாராட்டு கிடைக்கும் என்ற
நம்பிக்கையும் இருக்கிறது, என்று பதில் அளித்தார்.

கெவினுக்கு ஜோடியாக நடித்திருக்கும் ரேணு செளந்தருக்கு தமிழ் சினிமாவில் இது தான் முதல் படம் என்றாலும்,
மலையாளத்தில் பல படங்களில் நடித்திருக்கிறார். இவர்களுடன் ருக்மணி பாபு என்ற நடிகர் முக்கியமான கதாப்பாத்திரத்தில்
நடித்திருக்கிறார்.

இவர் ‘நான் ராஜாவாகப் போகிறேன்’, ‘பத்து என்றதுக்குள்ள’, ‘டகால்டி’ உள்ளிட்ட சுமார் 80
படங்களில் நடித்திருக்கிறார். இப்படத்தில் இரண்டாவது ஹீரோ என்று சொல்லும் அளவுக்கு இவரடைய வேடம்
முக்கியத்துவம் வாய்ந்ததாக உள்ளது. பாபு ரபீக் உள்ளிட்ட பலர் இப்படத்தில் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்திருக்கிறார்கள்.

எப் 3 பிலிம்ஸ் (F3 Films) சார்பில் ஃபிரயா, ஃபெனி, பெலிக்ஸ் (Fraya, Fane, Felix) ஆகியோர் இணைந்து
தயாரிக்கும் இப்படத்திற்கு எஸ்.ஸ்ரீராம் ஒளிப்பதிவு செய்திருக்கிறார்.

எல்.வி.கணேஷ் மற்றும் ஜுபின் இசையமைக்க,
ஆர்.சுதர்ஷன் படத்தொகுப்பு செய்கிறார். மணிபாரதி கலையை நிர்மாணிக்க, ரன் ரவி ஆக்‌ஷன் காட்சிகளை
வடிவமைத்திருக்கிறார்.

முத்துவிஜயன், கெளசல்யன் ஆகியோர் பாடல்கள் எழுத, கூல் ஜெயந்த் மற்றும் இம்தியாஷ் நடனம்
அமைத்திருக்கிறார்கள்.

கூடல்நகர், கம்பம், தேனி, குமுளி உள்ளிட்ட பகுதிகளில் படமாக்கப்பட்டிருக்கும் ‘கடத்தல் காரன்’ படப்பிடிப்பு முடிவடைந்து
பின்னணி வேலைகள் நடைபெற்று வருகிறது.

விரைவில் இசை வெளியீட்டை நடத்தி அதை தொடர்ந்து படத்தின் ரிலீஸ்
தேதியை அறிவிக்க படக்குழு முடிவு செய்துள்ளது.

இறுதி கட்ட பணிகளில் அருண் விஜய்யின் “சினம்” !

இறுதி கட்ட பணிகளில் அருண் விஜய்யின் “சினம்” !

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Arun Vijay in sinamவேகத்திற்கும், சுறுசுறுப்பிற்கும் கடும் உழைப்பின் வழியே, புதிய இலக்கணம் வகுத்திருக்கிறது “சினம்” படக்குழு. அருண் விஜய் நடிப்பில் GNR குமரவேலன் இயக்க சமீபத்தில் ஆரம்பிக்கப்பட்ட “சினம்” படம் தொடர் படப்பிடிப்பில் ஈடுபட்டு திரையுலகமே ஆச்சயப்படும் வேகத்தில் மொத்த படப்பிடிப்பையும் முடித்திருக்கிறது. இறுதிகட்ட படப்பிடிப்பு சென்னையில் மிகப்பெரும் பொருட்செலவில் உருவாக்கப்பட்ட பிரமாண்ட அரங்கில், ஆக்ரோஷமான சண்டைக்காட்சியை எடுத்து முடித்துள்ளது படக்குழு. தற்போது போஸ்ட் புரடக்‌ஷன் பணிகளை துவக்கவுள்ளது “சினம்” படக்குழு.

இது குறித்து இயக்குநர் GNR குமரவேலன் கூறியதாவது…

நடிகர் அருண் விஜய்யின் ஒத்துழைப்பு இல்லையெனில் இது எதுவுமே சாத்தியமாகியிருக்காது. அவர் தற்போது தொடர் வெற்றிகளுடன், ஒரே கட்டமாக பல படங்களில் நடித்து வருகிறார். அவரது சமீபத்து வெளியீடான “மாஃபியா” படத்தின் வெளியீட்டு பணிகளுக்கும் அவர் நேரம் ஒதுக்க வேண்டியிருந்தது. ஆனால் இத்தனை இடையராத பணிகளுக்கு மத்தியிலும் இப்படத்திற்கு நேரம் ஒதுக்கி, சரியான நேரத்தில் படப்பிடிப்பை முடிக்க பெரும் ஆதரவாக இருந்தார். எங்கள் அனைவருக்கும் ஆச்சர்யம் தந்தது என்னவெனில் இத்தனை படங்களில் நடித்தாலும் அவர் தனது கதாப்பாத்திரத்திற்கு தரும் உழைப்பு, அர்ப்பணிப்பு பிரமிப்பை தந்தது. ஒரு ஆக்‌ஷன் காட்சியை எடுத்துக்கொண்டிரும்போது அவருக்கு அடிபட்டு ரத்தம் கொட்ட ஆரம்பித்துவிட்டது. ஆனால் கொஞ்சம் கூட அதனை பொருட்படுத்தாமல் உடனே தயாராகி அந்த காட்சியில் நடித்து முடித்தார். நம்பிக்கை மற்றும் உழைப்பின் வழியாக அவர் இன்று அடைந்திருக்கும் இடம் மிகப்பெரிது. அதற்கு முற்றிலும் தகுதியானவர் அவர். படப்பிடிப்பை இத்தனை சீக்கிரம் முடிக்க, கடினமாக உழைத்த எனது படக்குழுவிற்கு இந்நேரத்தில் நன்றி சொல்லிக்கொள்கிறேன். படப்பிடிப்பு முடிந்த நிலையில் தற்போது போஸ்ட் புரடக்‌ஷன் பணிகள் துவங்கவுள்ளது. இந்த மாத இறுதியில் படத்தின் டீஸரை வெளியிட திட்டமிட்டுள்ளோம்.

இப்படத்தில் அருண் விஜய் காவல் அதிகாரி பாத்திரத்தில் நாயகனாக நடிக்க, பாலக் லால்வானி நாயகியாக நடிக்கிறார். காளிவெங்கட் ஒரு முக்கிய பாத்திரத்தில் நடிக்கிறார்.

Movie Slides Pvt Ltd சார்பில் R.விஜய குமார் இப்படத்தை தயாரிக்கிறார். தேசிய விருது பெற்ற இயக்குநர் GNR குமரவேலன் “சினம்” படத்தை எழுதி இயக்குகிறார். “சகா, நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஒடு ராஜா”படப்புகழ் ஷபீர் இப்படத்திற்கு இசையமைக்கிறார். கோபிநாத் ஒளிப்பதிவு செய்ய ராஜா முகம்மது படத்தொகுப்பு செய்கிறார். மைக்கேல் கலை இயக்கம் செய்ய சில்வா சண்டைப்பயிற்சி இயக்குநராக பணியாற்றுகிறார். மதன் கார்கி, பிரியன் ஏக்நாத் பாடல்கள் எழுத பவன் வடிவமைப்பை மேற்கொள்கிறார்.

“பெல் பாட்டம்” படத்தில் மூன்றாவது முறையாக இணையும் வெற்றிக் கூட்டணி !

“பெல் பாட்டம்” படத்தில் மூன்றாவது முறையாக இணையும் வெற்றிக் கூட்டணி !

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Krishna in bell bottomநடிகர் கிருஷ்ணா மற்றும் இயக்குநர் சத்யசிவா இணைந்து “கழுகு, கழுகு 2” என தொடர்ந்து இரு வெற்றிபடங்களை தந்துள்ளனர். தற்போது மூன்றாம் முறையாக இக்கூட்டணி ஒரு புதிய படத்திற்காக இணைகிறது. இப்படத்திற்கு “பெல் பாட்டம்” என பெயரிடப்பட்டுள்ளது. இதே பெயரில் கன்னடத்தில் வெளியாகி 20 கோடி ரூபாயை வசூலித்து பெரு வெற்றிபெற்ற படத்தின் தமிழ்ப்பதிப்பாக இப்படம் உருவாகிறது. இதன் இந்தி பதிப்பில் பாலிவுட் பேரரசனாக உலாவரும் அக்‌ஷய் குமார் நாயகனாக நடிக்கிறார் என்பது குறிப்பிடதக்கது.

“பெல்பாட்டம்” முந்தைய கால ரெட்ரோ பின்களத்தில் நடக்கும் நடப்பதாக கதை அமைக்கப்பட்டுள்ளது. போலீஸாக ஆசைப்பட்டு, சூழ்நிலைகளின் இடர்பாட்டால் முடியாமல்போய், தனியார் துப்பறிவாளனாக, குற்றங்களை கண்டுபிடிப்பவராக, திவாகர் எனும் பாத்திரத்தில் கிருஷ்ணா நடிக்கிறார். கைவிடப்பட்ட குற்ற வழக்கு ஒன்றை விசாரிக்க அந்த வழக்கு பல எதிர்பராத சிக்கல்களையும், திருப்பங்களையும் கொண்டு வருகிறது. இவை அத்தனையையும் மீறி அந்த வழக்கின் மர்மத்தை ஆராய்ந்து கண்டுபிடிப்பது தான் இப்படத்தின் கதை. ஆனால் அது அவ்வளவு எளிதாக நடந்தேறுவதில்லை அவர் சந்திக்கும் விவகாரமான, வித்தியாசமான மனிதர்கள், அவர் மனதை இளக்கி காதலில் விழச்செய்யும், சட்டத்திற்கு புறம்பாக சரக்கு விற்கும் குஷ்மா, இந்த பாத்திரங்கள் எல்லாம் அந்த வழக்கை விசாரிப்பதை பன்மடங்கு கடினமாக்குகிறார்கள்.

தமிழ் சினிமாவில் வெகு நாகரீகமான படங்கள் மூலம் ஒரு தனிச்சிறப்பான இடத்தை கிருஷ்ணா பெற்றிருக்கிறார். இயக்குநர் மணிரத்னம் இயக்கத்தில் வெளியான அஞ்சலி படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி, சந்தோஷ் சிவன் இயக்கத்தில் டெரரிஸ்ட் படத்தில் மிக வித்தியாசமான பாத்திரத்தில் நடித்து, நாயகனாக காமெடி ஹாராரன “யாமிருக்க பயமேன்” படத்தில் கலக்கி, சொல்லப்படாத மனிதர்களின் கதையை சொல்லிய “கழுகு” என அவர் தொடர்ந்து வித்தியாசமான கதைகளங்கள் கொண்ட, தரமான படங்களில் நடித்து, தொடர் வெற்றிகள் தந்து, தயாரிப்பாளர்கள் மற்றும் விநியோகஸ்தரக்ளின் நம்பிக்கை நாயகனாக திகழ்கிறார். தற்போது முற்றிலும் மாறுபட்ட, ரெட்ரோ கால துப்பறிவாளனாக “பெல்பாட்டம்” படத்தில் நடிக்கிறார். “குற்றம் 23, மகாமுனி” படங்களில் வித்தியாசமான கதாப்பாத்திரங்கள் மூலம் ரசிகர்கள் மனதை வென்ற மஹிமா நம்பியார் இப்படத்தில் நாயகியாக நடிக்கிறார். காமெடி நடிகர் சரவணன் உட்பட தமிழ் சினிமாவின் திறமை மிகு நடிகர்கள் பலரும் இப்படத்தில் நடிக்கிறார்கள்.

தனது தனிச்சிறப்பான பாடல்கள் மட்டுமில்லாமல் பின்னணி இசை மூலமும் ரசிகர்களை கவர்ந்து வரும் இசையமைப்பாளர் சாம் CS இப்படத்திற்கு இசையமைக்கிறார். “பியார் பிரேமா காதல், கரம் மசாலா, டிக்கெட்” படங்கள் மூலம் புகழ்பெற்ற ராஜா பட்டாசார்ஜி இப்படத்தில் ஒளிப்பதிவு செய்கிறார். “வழக்கு எண் 18/9, தனி ஒருவன், 1945, டோரா, கழுகு 2” புகழ் கோபி கிருஷ்ணா இப்படத்திற்கு படத்தொகுப்பு செய்கிறார்.

NH Hari Silver Screens நிறுவனம் சார்பில் H. சார்லஸ் இம்மானுவேல் “பெல் பாட்டம்” படத்தை தயாரிக்கிறார். புதிதாக துவங்கப்பட்டுள்ள NH Hari Silver Screens நிறுவனம் மாறுபட்ட கதைகளங்களை கொண்ட, தரமான படங்களை தயாரிப்பதை குறிக்கோளாக கொண்டு இயங்கி வருகிறது. இந்நிறுவனத்தின் முதல் தயாரிப்பான “தீதும் நன்றும்” விரைவில் திரையரங்கில் வெளியாகவுள்ளது. இயக்குநர் சத்யசிவா தற்போது நடிகர் ராணாவை நாயகனாக வைத்து இயக்கியுள்ள “1945” படமும் பெரும் எதிர்பார்ப்பிர்கிடையில் விரைவில் வெளியாகவுள்ளது.

More Articles
Follows