ஜிப்ஸியை முடித்துவிட்டு ‘யானை டாக்டரரை இயக்கும் ராஜுமுருகன்

ஜிப்ஸியை முடித்துவிட்டு ‘யானை டாக்டரரை இயக்கும் ராஜுமுருகன்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

raju muruganதேசிய விருதை பெற்ற ஜோக்கர் படத்தை இயக்கியவர் ராஜுமுருகன். இந்த படத்தை ‘ட்ரீம் வாரியர்ஸ்’ நிறுவனம் தயாரித்து இருந்தது.

இந்த நிலையில் இதே கூட்டணி மீண்டும் இணைகிறது.

எழுத்தாளர் ஜெயமோகன் எழுதியுள்ள, ‘யானை டாக்டர்’ சிறுகதையை, படமாக்க இருக்கிறார்களாம்.

கால்நடை மருத்துவரான, வைத்தியநாதன் கிருஷ்ணமூர்த்தி, தன் வாழ்நாள் முழுக்க, யானைகள் பற்றிய விழிப்புணர்வை பொதுமக்களிடம் ஏற்படுத்தி வந்தார். அவர் தற்போது உயிருடன் இல்லை. கடந்த 2002ம் ஆண்டு மறைந்தார்.

இவரின் வாழ்க்கையைத்தான் படமாக்கவுள்ளனர்.

தற்போது ஜீவா நடிப்பில் உருவாகியுள்ள ஜிப்ஸி என்ற படத்தை இயக்கியுள்ளார் ராஜுமுருகன். அந்த படம் வெளியானவுடன் யானை டாக்டரை இயக்குவார் எனத் தெரிகிறது.

ஜெயலலிதாவின் படத்தில் எம்ஜிஆர் & கருணாநிதி யார்.?

ஜெயலலிதாவின் படத்தில் எம்ஜிஆர் & கருணாநிதி யார்.?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

jayalalithaமறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றை பல இயக்குனர்கள் படமாக எடுத்து வருகின்றனர்.

தலைவா பட இயக்குனர் விஜய் ‘தலைவி’ என்ற பெயரில் ஜெயலலிதாவின் வாழ்க்கையை படமாக்கி வருகிறார்.

இதில் ஜெயலலிதா கதாபாத்திரத்தில் கங்கனா ரணாவத் நடிக்க உள்ளார். அவர் இதற்கான கடும் பயிற்சிகளில் ஈடுபட்டு வருகிறார். டான்ஸ் மாஸ்டர் காயத்ரி ரகுராமிடம் நடன பயின்று வருகிறார்.

எம்ஜிஆர் கேரக்டரில் அரவிந்த்சாமி நடிக்கவுள்ளாராம்.

கருணாநிதி கேரக்டரில் நடிக்க பிரகாஷ்ராஜிடம் பேசி வருகிறார்களாம். அவரின் பதிலுக்காக படக்குழு காத்திருக்கிறது.

ஏற்கெனவே மணிரத்னம் இயக்கிய ‘இருவர்’ படத்தில் எம்ஜிஆர் கேரக்டரில் மோகன்லால் மற்றும் கருணாநிதி கேரக்டரில் பிரகாஷ் ராஜ் நடித்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

மக்களை காப்பாற்ற வரும் ரட்சகனாக சரவணன் ஸ்டோர்ஸ் ஓனர்

மக்களை காப்பாற்ற வரும் ரட்சகனாக சரவணன் ஸ்டோர்ஸ் ஓனர்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

saravanan arulஎந்த ஒரு பண்டிகை காலம் என்றாலும் டிவி.க்களில் விளம்பரங்கள் அதிகம் வருவதை பார்த்திருப்போம். அதிலும் சென்னையிலுள்ள சரவணா ஸ்டோர்ஸ் விளம்பரங்கள் அடிக்கடி வருவதை பார்த்திருப்போம்.

முன்பெல்லாம் சினிமா நட்சத்திரங்களுக்கு கோடி கோடியாக கொட்டி கொடுத்த இதன் ஓனர் சரவணன் அருள் தற்போது அவரே ஆடல் பாடல் என அசத்தலாக விளம்பரங்களில் வருகிறார்.

இந்த நிலையில் இவர் ஒரு சினிமாவில் நடிக்கவுள்ளார் என்பதை பார்த்தோம்.

ஜேடி ஜெர்ரி என்பவர் இப்படத்தை இயக்கவுள்ளதாக கூறப்படுகிறது.

இது ஒரு பேன்டசி படம் என்றும், பூமியில் வசிக்கும் மக்களை, வேற்று கிரகத்தில் இருந்து வந்து காப்பாற்றும் ரட்சகனாக அவர் நடிக்கவுள்ளாராம்.

நாயகி யார்? என்பதுதான் இதுவரை சஸ்பென்சாக உள்ளது. பல முன்னணி நடிகைகளிடம் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது.

நடிக்க வரமாட்டுறாரு.; செம லாஸ்… சிம்பு மீது ஞானவேல்ராஜா புகார்

நடிக்க வரமாட்டுறாரு.; செம லாஸ்… சிம்பு மீது ஞானவேல்ராஜா புகார்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

 Gnanavel Raja complaint against Simbu on his call sheet issueநடிகர் சிம்பு மீது புகார் கொடுக்காத தயாரிப்பாளர்களை எண்ணிவிடலாம் போல. தினம் அவர் மீது புகார்கள் வருகின்றன.

பரபரப்பாக அறிவிக்கப்பட்ட மாநாடு படத்தை சிம்புவின் கால்ஷீட் சொதப்பலால் அவரை படத்தில் இருந்து நீக்கினார் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி.

இந்த நிலையில் கன்னட படமான மப்டி படத்தின் ரீமேக்கில் சிம்பு, கௌதம் கார்த்திக் இருவரும் நடித்து வருகின்றனர். இப்படத்தை ஞானவேல்ராஜா தயாரித்து வருகிறார்.

கன்னட படத்தை இயக்கிய நார்தன் தான் தமிழிலும் இந்த படத்தை இயக்கினார். சிம்பு சிவ ராஜ்குமார் கதாபாத்திரத்திலும், கௌதம் கார்த்திக் ஸ்ரீமுரளி கதாபாத்திரத்திலும் நடித்து வந்தனர்.

இப்பட ஷூட்டிங்கிற்கும் சிம்பு செல்லாமல் இருந்துள்ளார்.

அப்படியே வந்தாலும் பாதிநாள் தான் சூட்டிங்கில் இருப்பாராம்.

தற்போது சிம்புவின் பிரச்சினையால் இந்த படமும் கைவிடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் இப்படம் தொடர்பான அனைத்து விஷயங்களையும் இணைத்து புகார் கடிதமாகத் தயாரிப்பாளர் சங்கத்தில் அளித்துள்ளார் ஞானவேல் ராஜா.

Gnanavel Raja complaint against Simbu on his call sheet issue

ரஜினி வருவார்; அவருடன் நிற்பேன்; ‘ராங்கா’ பேசிய ராதாரவி பல்டி

ரஜினி வருவார்; அவருடன் நிற்பேன்; ‘ராங்கா’ பேசிய ராதாரவி பல்டி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

I will stand with Rajini in his Political party says Radharaviதன்னை பற்றிய பேச்சு எப்போதும் மீடியாவில் இருக்க வேண்டும் என்பதற்காக எதையாவது சர்ச்சையாக பேசுவார் ராதாரவி.

பல மேடைகளில் அரசியல்வாதி முதல் சினிமா நட்சத்திரங்கள் வரை பலரையும் கிண்டலடிப்பார்.

ரஜினியை பல மேடைகளிலும் கிண்டலடித்து பேசியிருக்கிறார்.

இந்த நிலையில் ரஜினியை புகழ்ந்து பேசியிருக்கிறார்.

முன்னாள் மேயரும், ரஜினியின் தீவிர ஆதரவாளருமான கராத்தே தியாகராஜனின் பிறந்த நாள் விழாவில் அதிமுக பிரமுகர் நடிகர் ராதாரவி கலந்துக் கொண்டு பேசினார்.

ரஜினி அரசியலுக்கு வருவார் என்று கராத்தே தியாகராஜன் சொல்லிக்கொண்டே இருக்கிறார். நானும் அதை நம்பிச் சொல்கிறேன்.

அவர் வந்தால் நான் பின்னால் இருப்பேன். ரஜினி சடக்கென்று பேசி ஒரு முடிவை எடுக்கமாட்டார். யோசிச்சுத்தான் எடுப்பார். ஆனால் இந்த முறை முடிவெடுப்பார்.

ரஜினி எப்படி வெல்வார்கள் என்று கேட்டார்கள்.? ஜெயிப்போம் அவ்வளவுதான். ஏனென்றால் பவர் இருக்கவேண்டும். மனிதாபிமானம் இருக்கவேண்டும். எதிர்க்கிற சக்தி வேண்டும். இது எல்லாம் இருந்தால் வெற்றி நிச்சயம்.

இவை எல்லாம் இணைந்துள்ளது. ஏனென்றால் வலுவான சக்தி ஒன்று சேரும்போது வலுவற்ற சக்தி தோற்கும்.” என பேசினார் ராதாரவி.

I will stand with Rajini in his Political party says Radharavi

எஜுகேஷன் சிஸ்டம் சரியில்ல; மாத்தனும்.. லதா ரஜினி அதிரடி

எஜுகேஷன் சிஸ்டம் சரியில்ல; மாத்தனும்.. லதா ரஜினி அதிரடி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

We must Change Education system says Latha Rajinikanthசென்னை அபிராமபுரத்தில் மழலையர் பள்ளியை லதா ரஜினிகாந்த் தொடங்கி வைத்தார்.

இதன்பின் செய்தியாளர்கள் பேசும்போது கல்வி முறை குறித்து பேசினார்.

அப்போது… 5 மற்றும் 8ஆம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு அறிவிப்பு குறித்து கேள்வி எழுப்பினர்.

அதற்கு அவர், ‘தேர்வு முறை மட்டுமல்ல, கல்வி முறையே முற்றிலும் மாற்றப்பட வேண்டும். தேர்வுகள் மூலம் குழந்தைகளின் திறனை அளவிட முடியாது. கல்வியாளர்களுடன் கலந்துரையாட வேண்டும்’ என லதா ரஜினி பதிலளித்தார்.

We must Change Education system says Latha Rajinikanth

More Articles
Follows