சிம்பு கிட்ட மனிதநேயத்தை எதிர்பார்ப்பது தவறு.. சிம்பு மீதும் வழக்கு போடனும்..; பால் முகவர்கள் சங்கம் புகார்

சிம்பு கிட்ட மனிதநேயத்தை எதிர்பார்ப்பது தவறு.. சிம்பு மீதும் வழக்கு போடனும்..; பால் முகவர்கள் சங்கம் புகார்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

சென்னை, தேனாம்பேட்டை பகுதியில் நடைபாதையில் வசித்து வரும் ஆதரவற்ற மாற்றுத்திறனாளியான முனுசாமி (வயது-70) அவர்கள் கடந்த சில தினங்களுக்கு முன் அப்பகுதியில் உள்ள இளங்கோ – பிரார்த்தனா சாலை சந்திப்பில் சாலையை கடக்க சாலையில் தவழ்ந்தபடி வரும் போது அவ்வழியே வேக வேகமாக வரும் வாகனங்களை நிறுத்தி அவர் பாதுகாப்பாக சாலையை கடக்க உதவி செய்யாமல் வாகன ஓட்டிகளும், பாதசாரிகளும் கண்டும் காணாமல் போய்க் கொண்டிருந்தது மிகுந்த மனவலியை தந்தது.

இந்த நிலையில் அவ்வழியே வரும் அடையாளம் தெரியாத டொயோட்டா இன்னோவா கார் ஒன்று சாலையை தவழ்ந்தபடி கடந்து கொண்டிருந்த மாற்றுத்திறனாளி முனுசாமி மீது ஏற்றி இறக்கி விட்டு நிற்காமல் வேகமாக செல்லும் சிசிடிவி காட்சி பதை பதைக்க செய்கிறது.

அதனைத் தொடர்ந்து அங்கிருந்தவர்கள் அளித்த புகார் மற்றும் அருகில் உள்ள சிசிடிவி காட்சி அடிப்படையில் வழக்குப்பதிவு செய்து காவல்துறையினர் நடத்திய விசாரணையில் அது நடிகர் சிம்புவின் கார் என்பதும் தெரிய வந்திருக்கிறது.

தற்போது கார் ஓட்டுநர் செல்வம் என்பவர் மீது வழக்குப் பதிவு செய்துள்ள காவல்துறையினர் நடிகர் சிம்பு மீதும் வழக்குப்பதிவு செய்ய வேண்டும் என தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்கம் சார்பில் வலியுறுத்தி கேட்டுக் கொள்கிறோம்.

சாலையை கடக்க அந்த மாற்றுத்திறனாளி தவழ்ந்தபடி வருவதை அவ்வழியே சென்ற நபர்களில் எவர் ஒருவரேனும் அவர் பாதுகாப்பாக சாலையை கடக்க உதவி செய்திருந்தாலோ அல்லது நடிகர் சிம்புவின் கார் ஓட்டுநர் சற்று நிதானித்து நின்று அவர் சாலையை கடந்த பின்னர் சென்றிருந்தாலோ முனுசாமி இந்நேரம் உயிரோடு இருந்திருப்பார்.

இது போன்ற மனிததன்மையற்ற, பொறுப்பற்ற மனிதர்களால் பல நேரங்களில் மனிதநேயம் கூட மரித்து தான் போகிறது.

சட்டம் என்பது எவ்வளவு தான் கடுமையாக இருந்தாலும் தனியொரு மனிதனாக இவ்வுலகில் மாறாத வரை மாற்றங்கள் என்பது சாத்தியமில்லை.

அதே நேரம் மற்றவர்களுக்கு முன் மாதிரியாக இருக்க வேண்டிய நடிகர் சிம்பு போன்ற திரையுலக பிரபலத்தின் செயல்பாடே இப்படி இருக்கிறது என்றால் அவர்களை பின்பற்றும் ரசிகர்களின் நிலை எந்த அளவிற்கு இருக்கும் என்பதை புரிந்து கொள்ள முடிகிறது..? “பீப் பாடல்” எழுதி அதற்கு மிகப்பெரிய அளவில் பிரச்சினை எழுந்த போது கூட அதற்காக வருந்தாமல் அது போல இன்னும் 150 பாடல்கள் இருக்கிறது என கூறியவர், தனது “பட கட்அவுட்டுகளுக்கு அண்டா அண்டாவாக பாலாபிஷேகம்” செய்ய சொன்னவரிடம் இருந்து மனிதநேயத்தை எதிர்பார்ப்பது என்பது மிகப்பெரிய தவறு தான் என்பதை இந்நிகழ்வு உறுதி செய்கிறது.

ஊருக்கு உபதேசம் செய்யும் திரையுலக நட்சத்திரங்கள் இனியேனும் ரசிகர்களுக்கு மட்டுமல்ல அனைவருக்கும் முன் மாதிரியாக இருக்க முயற்சி செய்ய வேண்டும் என தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்கம் சார்பில் வலியுறுத்தி கேட்டுக் கொள்கிறோம்.

இணைப்பு :- *சிசிடிவி காட்சி பதிவு*

நன்றி

சு.ஆ.பொன்னுசாமி
(நிறுவனத் தலைவர்)
தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்கம்.
அலைபேசி :- 9600131725
WhatsApp :- 9566121277
24.03.2022 / காலை 8.43மணி

Milk vendor association condemns STR

சிம்பு கார் மோதி மாற்றுத்திறனாளி முதியவர் மரணம்.; டி.ஆர் உடனிருந்தார்.. போலீசார் விசாரணை

சிம்பு கார் மோதி மாற்றுத்திறனாளி முதியவர் மரணம்.; டி.ஆர் உடனிருந்தார்.. போலீசார் விசாரணை

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கடந்த வெள்ளிக்கிழமை சென்னை தேனாம்பேட்டை அருகே முனுசாமி என்ற மாற்றுத்திறனாளி பிச்சைக்காரர் ஒருவர் சாலையை கடக்க முயன்றார்.

அங்கு வந்த நடிகர் சிலம்பரசனின் கார் அந்த முதியவர் மீது மோதியது.

இதில் படுகாயம் அடைந்த அவரை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்.

ஆனால், மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார்.

இதனையடுத்து போலீசார் விசாரணை மேற்கொண்டதில், விபத்து ஏற்படுத்திய கார் நடிகர் சிலம்பரசனின் கார் என்பது உறுதியானது.

டிரைவர் செல்வம் என்பவர் அந்த காரை ஓட்டி வந்துள்ளார். காரின் பின் சீட்டில் இயக்குநரும், நடிகருமான டி.ராஜேந்தர் காரில் இருந்துள்ளார்.

ஆனால், இந்த விபத்திற்கும், டி.ராஜேந்தருக்கும் சம்பந்தம் இல்லை என போலீசார் தெரிவித்துள்ளனர்.

இதனையடுத்து டிரைவர் கைது செய்த போலீசார் அவரை ஜாமீனில் விடுவித்தனர்.

தற்போது இது குறித்த CCTV காட்சிகள் வெளியாகி சமூகவலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.

Simbu’s car involved in freak accident

‘அந்தகன்’ வந்ததும் பிரசாந்துக்கு டும் டும் டும்..; பெண் பார்த்து வைத்துள்ள தியாகராஜன்

‘அந்தகன்’ வந்ததும் பிரசாந்துக்கு டும் டும் டும்..; பெண் பார்த்து வைத்துள்ள தியாகராஜன்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

டாப் ஸ்டார் பிரசாந்த் நடிப்பில் உருவாகியுள்ள ‘அந்தகன்’ எஎன்ற படத்தை அவரின் தந்தை தியாகராஜன் தயாரித்து இயக்கியுள்ளார்.

இந்த படம் கடந்த 2018 ஆம் ஆண்டு, இயக்குனர் ஸ்ரீராம் ராகவன் இயக்கிய ‘அந்தாதூன்’ என்ற ஹிந்தி படத்தின் ரீமேக்காகும்.

இந்த தமிழ் பதிப்பில் நடிகர் பிரசாந்த் உடன் நடிகர் கார்த்திக், சிம்ரன், ஊர்வசி, யோகி பாபு, பிரியா ஆனந்த் மற்றும் கே எஸ் ரவிக்குமார் ஆகியோர் நடித்துள்ளனர்.

ஒளிப்பதிவாளராக ரவியாதவ், கலை இயக்குநராக செந்தில் ராகவன் ஆகியோர் பணிபுரிய சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார்.

இந்த படத்தின் திரையரங்க வெளியீட்டு உரிமையை கலைப்புலி தாணு கைப்பற்றியுள்ளார்.

நீண்ட நாட்களுக்கு பிறகு பிரசாந்த் நடித்துள்ள படம் வெளியாக உள்ளதால் ‘அந்தகன்’ படத்தின் மீது எதிர்பார்ப்பு அதிகமாகியுள்ளது.

இந்த நிலையில் பிரசாந்திடம் நான் பேசியபோது…

‘அந்தகன்’ ரிலீசுக்கு பிறகு உடனடியாக திருமணம் நடைபெற உள்ளதாமே

பெண் யார் என்று கேட்டபோது…?

உங்களுக்கு சொல்லாமல் இருப்பேனா.? கண்டிப்பா சொல்றேன்.. வெய்ட் பண்ணுங்க ராஜேஷ் ப்ரோ..” என்று பதிலளித்தார்.

Director Thyagarajan talks about Prashanth marriage

நடிகர் விஜய்க்கு 72 வயது ரசிகை எழுதிய உருக்கமான ‘3 வருட’ கடிதம்

நடிகர் விஜய்க்கு 72 வயது ரசிகை எழுதிய உருக்கமான ‘3 வருட’ கடிதம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

நாமக்கல் மாவட்டம் மோகனூரை சேர்ந்தவர் சரஸ்வதி. இவருக்கு தற்போது 72 வயதாகிறது.

கடந்த 40 ஆண்டுகளுக்கு முன்பு இலங்கையில் இருந்து தமிழகம் வந்துள்ளார்.

சரஸ்வதிக்கு, திருமணம் ஆகி மூன்று மகன்கள் உள்ளனர்.

இவரின் கணவர் இறந்துவிட்டதால் கடந்த 15 ஆண்டுகளாக மோகனூரில் உள்ள வாடகை வீட்டில் தனிமையில் வசித்து வருகிறார்.

தற்போது மகன்களின் முழுமையான உதவி இல்லாமல் வறுமையில் வாடி வருகிறார் சரஸ்வதி.

இந்த சூழலில் மூத்த பேரன் சதீஷ்குமார் பாட்டியை பார்க்க வந்துள்ளார்.

அப்போது நடிகர் விஜய்யிடம் உதவி கேட்டு பாட்டி எழுதிய கடிதம் அவரது கண்ணில் பட்டிருக்கிறது.

3 ஆண்டுகளுக்கு முன்பு, தான் எழுதிய கடிதத்தை விஜய்யின் முகவரி தெரியாததால் இன்று வரை அனுப்பாமல் தன்னிடமே பத்திரமாக வைத்திருக்கிறாராம் சரஸ்வதி.

இவரது பேரன் அந்த கடிதத்தை இணையத்தில் பகிர்ந்துள்ளார்.

நடிகர் விஜய்க்கு சரஸ்வதி எழுதிய இந்த கடிதம் இணையதளத்தில் பலராலும் பகிரப்பட்டு வருகிறது.

இந்த கடிதம், விஜய் கவனத்திற்கு போகுமா.? என்பதை காத்திருந்து பார்ப்போம்.

Aged woman writes a letter to Beast actor Vijay

விஜய்ஸ்ரீ தொடங்கி வைத்தார்.; இன்று மீண்டும் இணைந்த பாக்யராஜ் & ஐஸ்வர்யா ஜோடி

விஜய்ஸ்ரீ தொடங்கி வைத்தார்.; இன்று மீண்டும் இணைந்த பாக்யராஜ் & ஐஸ்வர்யா ஜோடி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ஓரிரு மாதங்களுக்கு முன் மோகன் – குஷ்பூ ஜோடி இணையும் ‘ஹரா’ பட அறிவிப்பை வெளியிட்டார் இயக்குனர் விஜய்ஸ்ரீ ஜி.

இந்த ஜோடி தமிழில் இணைவது முதன்முறை என்றாலும் 33 வருடங்களுக்கு முன்பு 1988ல் வெளியான ‘ஆத்ம கதா’ என்ற தெலுங்கு படத்தில் இணைந்து நடித்து இருந்தனர்.

தற்போது தமிழில் அது போல 30 வருடங்களுக்கு பிறகு பாக்யராஜ் – ஐஸ்வர்யா ஜோடி இணைந்து நடிக்கின்றனர்.

அதன் விவரம் வருமாறு…

Olympia Movies சார்பில் தயாரிப்பாளர் S.அம்பேத் குமார் பல வித்தியாசமான படைப்புகளை தயாரித்து வருகிறார்.

அவரது அடுத்த தயாரிப்பாக உருவாகும் “Production No.4” படத்தினை கணேஷ் K பாபு இயக்குகிறார். ரொமான்ஸ், காமெடி, உணர்வுபூர்வமான தருணங்கள் நிறைந்த இந்த பொழுதுபோக்கு திரைப்படத்தின் படப்பிடிப்பு, மார்ச் முதல் வாரத்தில் தொடங்கி பரபரப்பாக நடந்து வருகிறது.

பிரபல முன்னணி நடிகர்கள் மற்றும் பெரு நட்சத்திர நடிகர்கள் இணைந்து நடிப்பதால், படத்தின் மீது ஏற்கனவே எதிர்பார்ப்பு உருவாக்கியுள்ள நிலையில், சமீபத்திய அறிவிப்பு படத்திற்கு மேலும் பலம் கூட்டியுள்ளது.

ஆம், எவர்கிரீன் ஆன் ஸ்கிரீன் ஜோடியான K பாக்யராஜ் மற்றும் ஐஸ்வர்யா ஆகியோர் இப்படத்தில் கவின் பெற்றோராக நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளனர்.

இவர்கள் இருவரும் ‘ராசுக்குட்டி’ (1992) என்ற பிளாக்பஸ்டர் திரைப்படத்தில் முதன்மை வேடங்களில் நடித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

30 வருடங்களுக்கு பிறகு மீண்டும் இவர்கள் இந்த படத்தில் ஜோடியாக நடிக்கிறார்கள்.

‘முதல் நீ முடிவும் நீ’ படப்புகழ் ஹரிஷ், ‘வாழ்’ படப்புகழ் பிரதீப் ஆண்டனி மற்றும் பல முக்கிய நட்சத்திர நடிகர்கள் இப்படத்தில் நடிக்கின்றனர்.

எழில் அரசு K (ஒளிப்பதிவு), ஜென் மார்ட்டின் (இசை), கதிரேஷ் அழகேசன் (எடிட்டிங்), சண்முக ராஜ் (கலை), சுகிர்தா பாலன் (ஆடை வடிவமைப்பு), APV மாறன் (நிர்வாகத் தயாரிப்பாளர்), அருணாச்சலம் சிவலிங்கம் (ஒலி வடிவமைப்பு) ஆகியோர் முக்கிய தொழில்நுட்பக் கலைஞர்களாக பணியாற்றுகின்றனர்.

Bhagyaraj and Aishwarya joins for a new film

முதல்வர் முக ஸ்டாலினை பாராட்டிய சூப்பர் ஸ்டார் ரஜினி.; ஏன் தெரியுமா.?

முதல்வர் முக ஸ்டாலினை பாராட்டிய சூப்பர் ஸ்டார் ரஜினி.; ஏன் தெரியுமா.?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எழுதியுள்ள அவரது சுயசரிதையான ‘உங்களில் ஒருவன்’ (முதல் பாகம்) நூல் வெளியீட்டு விழா கடந்த மாதம் பிப்ரவரி 28ல் நடைபெற்றது.

இந்த சுயசரிதை நூலில், மு.க.ஸ்டாலின் அவரது பள்ளி- கல்லூரி காலங்கள், இளமை பருவம், ஆரம்ப நிலை அரசியல், திருமண வாழ்க்கை, மிசா போராட்டம் என 1976ஆம் ஆண்டு வரை உள்ள 23 ஆண்டு கால நினைவுகளை பதிவு செய்துள்ளார்.

சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் நடைபெற்ற இந்த விழாவில் ராகுல் காந்தி கலந்து கொண்டு புத்தகத்தை வெளியிட்டார்.

கோபாலபுரம் இல்லம் போன்று வடிவமைக்கப்பட்ட வீட்டில் இருந்து புத்தகத்தை எடுத்து ராகுல் காந்தி வெளியிட, திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் நூலைப் பெற்றுக் கொண்டார்.

இந்த விழாவில், கேரள முதலமைச்சர் பினராயி விஜயன், ஜம்மு – காஷ்மீர் முன்னாள் முதலமைச்சர் உமர் அப்துல்லா, பீகார் மாநில எதிர்க்கட்சித் தலைவர் தேஜஸ்வி யாதவ், கவிஞர் வைரமுத்து, நடிகர் சத்யராஜ், அமைச்சர்கள், முக்கிய பிரமுகர்கள், திமுக தொண்டர்கள் உள்ளிட்ட ஆயிரக்கணக்கானோர் கலந்துக் கொண்டனர்.

‘பூம்புகார் பதிப்பகம்’ இந்த நூலை வெளியிட்டது.

இந்த நிலையில் இந்த புத்தகத்தை நடிகர் ரஜினிகாந்த் படித்து இன்று மார்ச் 23ல் பாராட்டியுள்ளார்.

இதனை குறிப்பிட்டு ரஜினிக்கு தன் ட்விட்டர் பக்கத்தில் நன்றி தெரிவித்துள்ளார் முதல்வர் ஸ்டாலின்.

அந்த பதிவில்…

‘உங்களில் ஒருவன்’ படித்துவிட்டு, தொலைபேசியில் பாராட்டிய நண்பர் ‘சூப்பர் ஸ்டார்’ ரஜினிகாந்த் அவர்களுக்கு நன்றி!

உங்களது வாழ்த்தின் ஒவ்வொரு சொல்லும் எனக்கு மகிழ்ச்சியை மட்டுமல்ல; இன்னும் இன்னும் இந்த நாட்டு மக்களுக்காக உழைத்துக் கொண்டே இருக்க வேண்டும் என்ற ஊக்கத்தை அளிக்கிறது!..

என பதிவிட்டுள்ளார்.

Rajinikanth wishes to Tamil Nadu CM Mk Stalin

More Articles
Follows