நெஞ்சமுண்டு நேர்மையுண்டு..’ எனும் ‘நாற்காலி’ பட பாடலை தமிழக முதல்வர் வெளியிட்டார்.!

நெஞ்சமுண்டு நேர்மையுண்டு..’ எனும் ‘நாற்காலி’ பட பாடலை தமிழக முதல்வர் வெளியிட்டார்.!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. எடப்பாடி கே பழனிசாமி அவர்கள் இன்று முகாம் அலுவலகத்தில் முன்னாள் முதலமைச்சர் பாரத ரத்னா புரட்சித் தலைவர் டாக்டர் எம்.ஜி.ஆர் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு நடிகர் திரு அமீர் அவர்களின் நடிப்பில் உருவாகும் ‘நாற்காலி’ திரைப்படத்தின் பாடலான “நெஞ்சமுண்டு நேர்மையுண்டு” என்ற எம்.ஜி.ஆரின் முதல் தனிப்பாடல் ஒலி குறுந்தகட்டினை வெளியிட மாண்புமிகு செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் திரு. கடம்பூர் ராஜு அவர்கள் பெற்றுக்கொண்டார்கள்.

Naarkaali – MGR Song | Ameer | SPB | Vidyasagar | V Z Dhorai | Moon Pictures

Song Link: https://youtu.be/Xj9aju_o7IE

MGR song from Naarkali film released by CM Edappadi Palanisamy

செல்வராகவன் இயக்கத்தில் தனுஷ் ஜோடியாக தமன்னா..?

செல்வராகவன் இயக்கத்தில் தனுஷ் ஜோடியாக தமன்னா..?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கார்த்திக் நரேன் இயக்கத்தில் டி43 படத்தில் நடித்து வருகிறார் தனுஷ்.

சத்யஜோதி தயாரிக்கும் இந்த படத்தில் தனுஷிற்கு ஜோடியாக மாளவிகா மோகனன் நடிக்கவுள்ளார்.

இதனையடுத்து செல்வராகவன் படத்தில் நடித்து வருகிறார் தனுஷ்.

இப்படத்திற்கு ‘நானே வருவேன்’ என தலைப்பு வைத்து பர்ஸ்ட் லுக்கை வெளியிட்டனர்.

தாணு தயாரிக்கும் இந்த படத்திற்கு யுவன் இசையமைக்கிறார்.

ஒரு த்ரில்லர் படமாக உருவாக உள்ள இந்த படத்தில் இரண்டு நாயகிகள் நடிக்கவுள்ளனர்.

அதில் ஒரு நாயகியாக தமன்னா நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகிவுள்ளது.

இதற்கு முன்பே படிக்காதவன், வேங்கை படத்தில் இருவரும் இணைந்து நடித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Dhanush and Tamannah team up for Naane Varuven

பாலிவுட்டில் உருவாகும் ‘காந்தி டாக்ஸ்’..; கமலுக்கு பிறகு விஜய் சேதுபதியின் வித்தியாச முயற்சி!

பாலிவுட்டில் உருவாகும் ‘காந்தி டாக்ஸ்’..; கமலுக்கு பிறகு விஜய் சேதுபதியின் வித்தியாச முயற்சி!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Gandhi Talksதமிழ் திரையுலகின் மிகப் பெரிய நட்சத்திரமும், பிரலபலமான முகங்களில் ஒருவருமான விஜய் சேதுபதி, இயக்குநர் கிஷோர் பாண்டுரங் பலேகரின் ‘காந்தி டாக்ஸ்’ திரைப்படத்தின் மூலம் தனது தடத்தை பாலிவுட்டில் பதிவு செய்யத் தயாராக இருக்கிறார்.

கிட்டத்தட்ட 33 ஆண்டுகளுக்குப் பிறகு, இந்தியத் திரையுலகில் தயாராகப்போகும் மவுனத் திரைப்படம் இது.

இந்தப் படத்தைப் பற்றி பேசியிருக்கும் இயக்குநர், 19 வருடங்களாக இந்தச் சவாலான கதையை தயார் செய்தது குறித்தும், தனது கனவை ‘காந்தி டாக்ஸ்’ மூலம் நனவாக்கியது குறித்தும் பகிர்ந்துள்ளார்.

1987ஆம் ஆண்டு, கமல்ஹாசன் நடிப்பில் உருவான ‘புஷ்பக விமானா’ என்கிற திரைப்படமே பாலிவுட்டில் கடைசியாக உருவான மவுனப் படம்.

இந்தப் படத்தில் ஏன் விஜய் சேதுபதியை நடிக்க வைக்க முடிவெடுத்தேன் என்று பேசியிருக்கும் இயக்குநர் கிஷோர், “இந்தப் படம் உணர்ச்சி ரீதியாக என் இதயத்துக்கு நெருக்கமான படம். ஒரு நடிகரும் அந்த யோசனை மற்றும் அதே உணர்ச்சிகளோடு தன்னை தொடர்புபடுத்திக் கொள்ளும்போது அது இயக்குநருக்குக் கிடைக்கும் வரம். எனக்கு விஜய் சேதுபதி அப்படி ஒரு நடிகர் தான்.

தனது நடிப்பின் மூலம் சவாலான ஒரு கதைக்கு உரிய நடிப்பைத் தரக் கூடியவர். அவர் இந்தத் திரைக்கதையைப் படித்தவுடனேயே, படம் குறித்த எனது பார்வையை, அணுகுமுறையை முழுவதுமாகப் புரிந்து கொண்டார்.

ஒவ்வொரு இயக்குநரும் தங்கள் நடிகர்களிடமிருந்து குறிப்பிட்ட சில குணாதிசயங்களை எதிர்பார்க்கிறார்.

இந்தப் படத்தில் நாயகனாக நடிக்க பாலிவுட்டில் நடிகர்களைத் தேடிக் கொண்டிருந்த அதே நேரத்தில் மற்ற மொழித் திரைத் துறைகளிலும் தேடினேன். அப்போதுதான் விஜய் சேதுபதி பற்றி தெரிய வந்தது.

அவரது நடிப்புத் திறன், ஸ்டைல், குரலில் இருக்கும் ஆற்றல் எல்லாம் வியக்கவைத்தது. அவரைப் பார்த்தவுடன் தான் என் கதையின் நாயகன் கிடைத்து விட்டான் என்பதை உணர்ந்தேன். அவர், அவரது தொழிலில் அற்புதத் திறமையாளர் என்பது மட்டுமல்ல, மிகவும் எளிமையான, பிரச்சாரம் செய்யாத ஒரு நட்சத்திரம். தனது படங்களுக்காக எந்தவிதமான எல்லைக்கும் செல்லக் கூடியவர். அவரோட பணியாற்றுவதில், எனது கனவுப் படத்தை எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அவ்வளவு சீக்கிரம் ஆரம்பிப்பதில் உற்சாகமாக இருக்கிறேன்” என்று கூறியுள்ளார்.

நடிகர் விஜய் சேதுபதி ஏற்கனவே சில முன்னணி பாலிவுட் படைப்புகளில் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாக பாலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

அந்தாதுன் இயக்குநர் ஸ்ரீராம் ராகவன் இயக்கும் அடுத்த படம், சந்தோஷ் சிவன் இயக்கும் ‘மும்பைக்கர்’, ஷாஹித் கபூர் நடிப்பில் உருவாகு வெப் சீரிஸ் என வரிசையாக அவர் நடிக்கவுள்ளார். மேலும் தமிழில் அவர் வில்லனாக நடித்த விக்ரம் வேதா திரைப்படமும் இந்தியில் ரீமேக் செய்யப்படவுள்ளது.

திவய் தமிஜா க்ரியேட்டிவ் ப்ரொடியூஸராக பணியாற்றும் ‘காந்தி டாக்ஸ் திரைப்படத்தை மூவி மில் எண்டர்டெய்ன்மெண்ட் தயாரிக்கிறது.

Actor Vijay Sethupathi’s next is a Pan Indian film titled GANDHI TALKS

பிக்பாஸ் சீசன் 4 வின்னர் ஆரி..; பரிசு தொகை எவ்வளவு? ரன்னர்கள் யார்.? கமல் கொடுத்த கிப்ஃட் என்ன.?

பிக்பாஸ் சீசன் 4 வின்னர் ஆரி..; பரிசு தொகை எவ்வளவு? ரன்னர்கள் யார்.? கமல் கொடுத்த கிப்ஃட் என்ன.?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சி இன்று ஜனவரி 17ஆம் தேதி 105வது நாட்களை அதாவது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது.

தற்போது ஆரி, ரியோ, பாலாஜி, சோம், ரம்யா ஆகிய 5 பேர் ஃபைனலிஸ்ட்டாக பிக்பாஸ் வீட்டுக்குள் உள்ளனர்.

இன்று வெகு விமரிசையாக பிக்பாஸ் நிகழ்ச்சியின் கிராண்ட் ஃபினாலே நடைபெற்று வருகிறது.

அதன்படி ஆரி அர்ஜூனன் தான் அதிக வாக்குகளை பெற்றுள்ளார்.

இந்த ஐவரில் 5வது இடம் பெற்றார் சோம் சேகர்.

எனவே முதலில் பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேறினார். அவரை கடந்த முறை வின்னரான முகின் வீட்டிற்குள் சென்று அழைத்து வந்தார்.

அடுத்ததாக 4வது இடம் பிடித்த ரம்யா பாண்டியன் வெளியேறினார்.

அவரை பிக்பாஸ் வீட்டிற்குள் சென்று அழைத்து வந்தார் கவின்.

இதன்பின் பிக்பாஸ் வீட்டிற்குள் சென்றவர் நடிகை ஷெரின்.

இவர் 3வது இடம் பெற்ற ரியோவை, (ரன்னர்2) பிக்பாஸ் வீட்டிற்குள் இருந்து வெளியேற்றினார்.

அதிக ஓட்டுக்கள் பெற்ற ஆரியை, ‘பிக்பாஸ் சீசன் 4’ டைட்டில் வின்னராக கமல்ஹாசன் அறிவித்தார். அவருக்கு 16 கோடியே 50 லட்சத்துக்கும் அதிகமான ஓட்டுகள் கிடைத்துள்ளது என அறிவித்தனர்.

ஆரிக்கு ரூ.50 லட்சம் பரிசுத் தொகை வழங்கப்பட்டது.

இந்த போட்டியாளர்களில் கண்ணியமாகவும் நேர்மையாகவும் விளையாடியவர் ஆரி தான் என ரசிகர்கள் தங்கள் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

இதன் பின்னர் பாலாஜிக்கு இரண்டாம் இடம் கிடைத்தது. அவருக்கு 6 கோடியே 16 லட்சத்துக்கும் அதிகமான ஓட்டுகள் கிடைத்தன.

மேலும் பிக்பாஸ் பைனல் போட்டியாளர்களுக்கு தன் சார்பாக கிப்ஃட் கொடுத்துள்ளார் கமல்ஹாசன்.

அதன் விவரம்….

KamalHaasan gives gifts to finalists

To Rio – Tent
To Bala – dumbbell
To Ramya – Organic seeds
To Aari – Pen & diary
To Som – Cojon (Drum)

Aari Arjunan won Bigg Boss Season 4 Title Winner

மீண்டும் சர்ஜரி.. ரெஸ்ட் தேவை..; புதிய விசையுடன் தொடர்வேன்… – கமல்ஹாசன்

மீண்டும் சர்ஜரி.. ரெஸ்ட் தேவை..; புதிய விசையுடன் தொடர்வேன்… – கமல்ஹாசன்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

காலில் சிறு அறுவை சிகிச்சை மேற்கொள்ள வேண்டியுள்ளதால், சில நாட்களுக்கு ஓய்வு தேவை என கமல்ஹாசன் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

இது தொடர்பான கமல்ஹாசன் அறிக்கையில்…

“தமிழகத்தை தலை நிமிரச் செய்த ‘சீரமைப்போம் தமிழகத்தை’ எனும் முதல் கட்ட தேர்தல் பிரசாரத்தைப் பூர்த்தி செய்திருக்கிறேன்.

ஐந்து பாகங்களாக ஐந்தாயிரம் கிலோ மீட்டர்கள் பயணித்து தமிழ் மக்களைச் சந்தித்திருக்கிறேன்.

மாற்றத்துக்கான மக்கள் எழுச்சியைக் கண்ணாரக் கண்டு திரும்பியிருக்கிறேன். அதுபோலவே கொரோனா பொது முடக்கத்தின்போது தொடங்கிய ‘பிக்பாஸ் – சீசன் 4’ தொலைக்காட்சி நிகழ்ச்சியையும் வெற்றிகரமாக முடித்திருக்கிறேன்.

இதுவும் மக்களுடனான பயணம்தான். நான்கரை கோடி தமிழர்களோடு வாராவாரம் உரையாடியதும் உறவாடியதும் மகிழ்ச்சியூட்டுகிறது.

சில ஆண்டுகளுக்கு முன்பு ஏற்பட்ட விபத்தில் காலில் ஓர் அறுவைச் சிகிச்சை செய்திருந்தேன். அதன் தொடர்ச்சியாக இன்னொரு சர்ஜரி செய்ய வேண்டி இருந்தது.

அதுவரை ஓய்வு தேவை என மருத்துவர்கள் அறிவுறுத்தி இருந்தார்கள். அதை மீறித்தான் சினிமா வேலைகளும் அரசியல் வேலைகளும் தொடர்ந்தன. பிரச்சாரத்தைத் தொடங்கும்போதே காலில் நல்ல வலி இருந்தது. அதற்கு மக்களின் அன்பே மருந்தாக அமைந்தது.

இப்போது சிறிய ஓய்வு கிடைத்திருக்கிறது. ஆகவே, காலில் ஒரு சிறு அறுவைச் சிகிச்சை மேற்கொள்ள இருக்கிறேன். சில நாட்கள் ஓய்வுக்குப் பின் மீண்டும் என் பணிகளைப் புதிய விசையுடன் தொடர்வேன்.

மக்களை நேரில் சந்திக்க இயலாது எனும் மனக்குறையைத் தொழில் நுட்பத்தின் வாயிலாகப் போக்கிக்கொள்ளலாம்.

இந்த மருத்துவ விடுப்பில் உங்களோடு இணையம் வழியாகவும் வீடியோக்கள் வழியாகவும் பேசுவேன்.

மாற்றத்துக்கான நம் உரையாடல் இடையூறின்றி நிகழும். எண் மண்ணுக்கும் மொழிக்கும் மக்களுக்கும் சிறு துன்பம் என்றாலும் என் குரல் எங்கும் எப்போதும் எதிரொலித்தபடிதான் இருக்கும். இப்போதும் இது தொடரும்.” என அறிக்கையில் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.

Kamalhassan statement about his health and surgery

திமுக-வில் இணையும் ரஜினி மக்கள் மன்றத்தினர்..; விரக்தியால் விலகல்.? சரியும் ரஜினி சாம்ராஜ்யம்..?

திமுக-வில் இணையும் ரஜினி மக்கள் மன்றத்தினர்..; விரக்தியால் விலகல்.? சரியும் ரஜினி சாம்ராஜ்யம்..?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

25 ஆண்டுகளாக பல யூகங்கள் வந்தாலும் 2017 டிசம்பர் 31ல் தான் தன் அரசியல் பிரவேசத்தை அறிவித்தார் ரஜினிகாந்த்.

2020 ஆண்டுகளில் அரசியல் அறிக்கைகள் வெளியிட்டு பரபரப்பை உருவாக்கினார் ரஜினி.

கட்சிப் பணிகளையும் மும்முரமாக தொடங்கினார்.

ஆனால் கடந்த டிசம்பர் மாதம் 29ஆம் தேதி தன் உடல்நிலை காரணத்தால் அரசியலில் இருந்து பின்வாங்குவதாக அறிவித்தார்.

இதனால் ரஜினிகாந்த் அரசியலுக்கு வர வேண்டும் என ரஜினி மக்கள் மன்றத்தினர் போராட்டங்களை நடத்தி வந்தனர்.

ஆனால் ரஜினி தனது முடிவை மாற்றுவதாக அறிக்கை வெளியிட்டார்.

இது போன்று போராட்டங்களை நடத்தி, தன்னை வேதனைக்குள்ளாக்க வேண்டாம் எனவும் கேட்டுக் கொண்டார் ரஜினி.

இந்த நிலையில் தூத்துக்குடி மாவட்ட ரஜினி மக்கள் மன்ற செயலாளர் ஏ.ஜே.ஸ்டாலின் சென்னை அண்ணா அறிவாலயத்தில் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்தார்.

அவருடன் ராமநாதபுரம் மாவட்ட செயலாளர் செந்தில், தேனி மாவட்ட செயலாளர் ஆர்.கணேசன், கிருஷ்ணகிரி மாவட்ட செயலாளர் ஆகியோரும் திமுகவில் இணைந்தனர்.

இவர்கள் அனைவரும் 25 ஆண்டுகளுக்கு மேலாக ரஜினி ரசிகர் மன்றம் & மக்கள் மன்றத்தில் இருந்தவர்கள்.

மேலும் ரஜினியின் அரசியல் பிரவேசத்திலும் உடனிருந்தவர்களாம்.

இவர்களை தொடர்ந்து நிறைய பேர் திமுகவில் இணையவிருக்கிறார்கள் என கூறப்படுகிறது.

Rajini Makkal Mandram members joining in DMK party

More Articles
Follows