ஒரு நாள் முதல்வராக மறுத்த ரஜினி நிரந்தர முதல்வராகிறார்..?

Rajinikanth became Chief Minister in his upcoming movie Naarkaliசில வருடங்களுக்கு முன் ஷங்கர் இயக்கத்தில் வெளியான படம் முதல்வன்.

இந்த படத்தின் கதையை முதலில் ரஜினிக்காகத்தான் எழுதினார் ஷங்கர். ஆனால் அவர் நடிக்க மறுக்கவே பின்னர் தான் அர்ஜீன் நடித்தார்.

அந்த படத்தில் ஒரு நாள் முதல்வராக அர்ஜீன் நடித்திருந்தார் என்பது தங்களுக்கு நினைவிருக்கலாம்.

இந்நிலையில் புதிதாக உருவாகவுள்ள ஒரு புதிய படத்தில் மக்களால் தேர்ந்தெடுக்கப்படும் முதல்வராக ரஜினி நடிக்கவிருக்கிறாராம்.

பேட்ட படத்தை முடித்துவிட்டு ஏஆர். முருகதாஸ் இயக்கத்தில் நடிக்கவுள்ளார் ரஜினிகாந்த்.

இப்படத்தின் கதைப்படி சாதாரண மனிதராக இருக்கும் ஒருவர், அரசியலில் குதித்து படிப்படியாக முன்னேறி முதல்வர் நாற்காலியைப் பிடிக்கிறாராம்.

மக்களும் அவரின் ஆட்சியை விரும்பி அவரை நிரந்தர முதல்வராக ஆக்குவதாக கதைக்களம் அமைக்கப்பட்டுள்ளதாம்.

எனவே படத்திற்கு நாற்காலி என்று தலைப்பிடப்பட உள்ளதாக கூறப்படுகிறது.

இருந்தபோதிலும் இந்த தலைப்பு வெளியாகிவிட்டதால் இதைவிட சிறந்த ஒரு தலைப்பை தேடி வருகிறதாம் படக்குழு.

ஒருவேளை கிடைக்காத பட்சத்தில் இதையே கூட தலைப்பாக வைக்க வாய்ப்புள்ளதாகவும் சொல்லப்படுகிறது.

இதன் சூட்டிங் பிப்ரவரி இறுதியில் தொடங்கப்படும் எனத் தெரிகிறது.

Rajinikanth became Chief Minister in his upcoming movie Naarkali

Overall Rating : Not available

Related News

ரஜினிகாந்த் நடிப்பில் உருவான ‘பேட்ட’ திரைப்படம்…
...Read More

Latest Post