அஜித்தால் டார்ச்சர்.. தற்கொலை செய்ய போறேன்..; பிரதமர்-முதல்வருக்கு மீரா மிதுன் ட்வீட்

அஜித்தால் டார்ச்சர்.. தற்கொலை செய்ய போறேன்..; பிரதமர்-முதல்வருக்கு மீரா மிதுன் ட்வீட்

meera mithun (2)மாடலிங் செய்துக் கொண்டே நடிகையானவர் மீரா மிதுன்.

சூர்யாவின் ‘தானா சேர்ந்த கூட்டம்’ படத்தில் கலையரசனின் மனைவியாக நடித்திருந்தார்.

கமல் நடத்திய ‘பிக் பாஸ்’ நிகழ்ச்சியிலும் கலந்துக் கொண்டவர் இவர்.

விஜய் – சங்கீதா, சூர்யா – ஜோதிகாவை பற்றி அசிங்கமாக பேசி பரபரப்பை ஏற்படுத்தி பாரதிராஜாவை ஆவேசப்பட வைத்தவர்.

இந்நிலையில் தற்போது தான் தற்கொலை செய்துக் கொள்ளப் போவதாக சர்ச்சைக்குரிய கருத்தை கூறியுள்ளார்.

மாடலிங் செய்த போது தான் பணிபுரிந்த அஜித் ரவியின் நிறுவனம் தற்போது தன்னை துன்புறுத்தி வருவதாக குறிப்பிட்டுள்ளார்.

தன் ட்விட்டரில் மீரா மிதுன்…

“மூன்று ஆண்டுகளுக்கு முன்பு நான் அஜித் ரவியின் அமைப்பை விட்டு விலகினேன். அங்கே இருந்த போது, அழகிப் பட்டம் வென்றேன்.

அஜித் ரவி செய்த அநீதியால் அந்த அமைப்பை விட்டு விலகினேன்.

தன் அதிகாரம் மற்றும் பணத்தை வைத்து எனக்கு பிரச்சனைகள் கொடுத்து வருகிறார்.

என் படங்கள் & ப்ராஜெக்டுகள் ரிலீஸாவதை தடுக்கிறார், என் குடும்பத்திலும் பிரச்சனை செய்கிறார்.

இவை அனைத்துக்கும் ஆதாரங்கள் கொடுத்தும் யாருமே நடவடிக்கை எடுக்கவில்லை.

மன உளைச்சலில் இருக்கிறேன். எனக்கு வாழ வழியில்லை. தற்கொலை தான் ஒரே வழி.

என் தற்கொலைக்கு அஜித் ரவி மட்டும் தான் காரணம். இது தற்கொலை அல்ல கொலை.

சுஷாந்த் சிங் ராஜ்புத் போன்று நான் இறந்த பிறகு அஜித் ரவி தண்டிக்கப்பட வேண்டும். ” என மீரா மிதுன் பதிவிட்டுள்ளார்.

தான் தற்கொலை செய்யப்போவதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கும், பிரதமர் மோடிக்கும் இந்த கடிதம் எழுதியிருக்கிறார் என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது.

Meera mithun writes suicide letter to CM and PM

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *