‘இரண்டாம் திருமணம்’ பற்றி மனம் திறந்த மீனா

‘இரண்டாம் திருமணம்’ பற்றி மனம் திறந்த மீனா

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கடந்த சில நாட்களாக மீனா மறுமணம் செய்து கொள்ளப் போவதாக செய்திகள் வலம் வருகின்றன.

அவரது கணவரின் நண்பரே அவரது வருங்கால மாப்பிள்ளை என்று தகவல்கள் கூறுகின்றன.

இந்த வதந்திகளுக்கு மீனா கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

கணவரின் மறைவு வேதனையில் இருந்து இன்னும் மீளவில்லை என்று அவர் கூறினார். தனியுரிமையை மதிக்கும்படி அனைவரையும் அவர் வலியுறுத்தினார்.

மீனாவுடைய இந்த பதிவுக்கு நெட்டிசன்கள் ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.

உடல் உறுப்புகளை தானம் செய்கிறேன்.; நடிகை மீனா உருக்கமான பதிவு

‘இந்தியன் 2’ படத்தின் முக்கியமான காட்சியை படமாக்கும் இயக்குனர் ஷங்கர்

‘இந்தியன் 2’ படத்தின் முக்கியமான காட்சியை படமாக்கும் இயக்குனர் ஷங்கர்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

‘இந்தியன் 2’ படத்தின் அடுத்த ஷெட்யூல் டிசம்பர் 5 ஆம் தேதி சென்னை விமான நிலையத்தில் நடக்க இருப்பதாக சொல்லப்படுகிறது.

2023 ஆம் ஆண்டின் முதல் காலாண்டிற்குள் படத்தின் படப்பிடிப்பை முடிக்க தயாரிப்பாளர்கள் திட்டமிட்டுள்ளனர் .

“அனைத்து ஷங்கர் படங்களைப் போலவே, இதுவும் ஏராளமான விஷுவல் காட்சிகளை கொண்டுள்ளது.

எந்திரன், 2.0 போன்று VFX இதில் அதிகம் இல்லாவிட்டாலும் ஆக்ஷன் காட்சிகள் மற்றும் பாடல்களுக்கு சிறந்த எஃப்பேக்ட்ஸ் கொடுக்கப்பட இருக்கிறது .

நாடு முழுவதும் தசரா அல்லது 2023 தீபாவளிக்கு படம் வெளியாக உள்ளது.

‘இந்தியன் 2’ படத்தில் கமலுடன் இணைந்த ரஜினியின் ‘தர்பார்’ பட நடிகர்

ஒரு பாடலுக்கு 15 கோடி செலவு செய்த ‘RC 15’ படக்குழு..!

ஒரு பாடலுக்கு 15 கோடி செலவு செய்த ‘RC 15’ படக்குழு..!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

மெகா பவர் ஸ்டார் ராம் சரண் தற்போது இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் ‘RC 15’ படத்தில் நடித்து வருகிறார்.

இப்படத்தில் ராம் சரண், கியாரா அத்வானி, அஞ்சலி, எஸ்.ஜே.சூர்யா, சுனில், ஸ்ரீகாந்த், ஜெயராம், நவீன் சந்திரா மற்றும் பலர் நடித்துள்ளனர்.

இப்படக்குழு நியூசிலாந்து சென்றது முக்கியமான காட்சிகள் மற்றும் பாடல் காட்சிகளை அழகான இடங்களில் படமாக்கத் திட்டமிட்டிருந்திருக்கிறார்கள்.

இந்தப் பாடலுக்காக தயாரிப்பாளர்கள் கிட்டத்தட்ட 15 கோடி ரூபாய் செலவழித்ததாகச் சொல்லப்படுகிறது.

இந்நிலையில், இப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளதாக படக்குழு தெரிவித்துள்ளது.

மேலும், ராம் சரண் அங்கு எடுக்கப்பட்ட புகைப்படங்களை தான் சமுக வலைத்தளத்தில் பகிர்ந்துள்ளார்.

‘RC 15’ movie team spent 15 crores to one particular song

விஜய்யின் ‘தளபதி 67’ பூஜையுடன் இந்த தேதியில் ஆரம்பமாகிறதா ?

விஜய்யின் ‘தளபதி 67’ பூஜையுடன் இந்த தேதியில் ஆரம்பமாகிறதா ?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

‘தளபதி 67’ படத்தில் லோகேஷ் கனகராஜ் இரண்டாவது முறையாக விஜய்யை இயக்கப் போகிறார் என்ற செய்தி நமக்கு தெரிந்ததே .

சுமார் 240 கோடி பட்ஜெட்டில் இப்படம் ஆரம்பிக்கபட உள்ளதாக சொல்லப்படுகிறது.

தற்போது இந்த படத்தின் பூஜை டிசம்பர் 5 ஆம் தேதி சிறப்பு ப்ரோமோ வீடியோவுடன் நடக்க இருக்கிறது .

இந்த சுவாரசியமான செய்தி தளபதி ரசிகர்கள் அனைவரையும் உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது.

முன்னாள் முதல்வர் பயோபிக் படத்தில் மக்கள் செல்வன் விஜய்சேதுபதி

முன்னாள் முதல்வர் பயோபிக் படத்தில் மக்கள் செல்வன் விஜய்சேதுபதி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

2013 முதல் 2018 வரை கர்நாடக மாநில முதல்வராக இருந்தவர் சித்தராமையா.

இவர் காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவர்,

இவரது வாழ்க்கையை (BIOPIC) திரைப்படம் எடுக்கவிருக்கின்றனர்.

பான் இந்தியா படபாக உருவாகும் இந்த படத்தை கர்நாடக முன்னாள் அமைச்சர் சிவராஜ் இப்படத்தை தயாரிக்கவிருக்கிறாராம்.

இந்த நிலையில் சித்தராமையா கேரக்டரில் விஜய் சேதுபதியை நடிக்க வைக்கத் அமைச்சர் முயற்சித்து வருவதாக தகவல்கள் வந்துள்ளன.

சித்தராமையா

Vijay Sethupathi will be in Ex CM Siddaramaiahs biopic

கமல் விஜய் அஜித் சூர்யா படங்களை தயாரித்த முரளிதரன் காலமானார்

கமல் விஜய் அஜித் சூர்யா படங்களை தயாரித்த முரளிதரன் காலமானார்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கமல், விஜய், அஜித், சூர்யா படங்களை தயாரித்த முரளிதரன் காலமானார்.

இதனையடுத்து திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தின் சார்பில் இரங்கல் அறிக்கை வெளியிட்டுள்ளது.

அதில்…

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தின் தலைவர் என் ராமசாமி தலைமையில் நிர்வாகிகள் அறிக்கை வெளியிட்டுள்ளார்கள் அதில் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தில் பொருளாளராக சிறப்பாக செயலற்றியதை அடுத்து தேர்தலில் தலைவராக வெற்றி பெற்று சிறப்பாக பணியாற்றிய எல் எம் எம் என்று எல்லோராலும் பிரியமாக அழைக்க பட்டு வந்த லட்சுமி மூவி மேக்கர்ஸ் நிறுவனத்தின் பங்குதாரருமான கே. முரளிதரன் அவர்கள் இன்று டிசம்பர் 1 கும்பகோணம் அருகே நாச்சியார் கோயிலில் காலமாகிவிட்டார் என்ற செய்தி கேட்டு திரையுலகமே அதிர்ச்சிக் குள்ளாகியுள்ளது.

அவர் கமலஹாசன், விஜயகாந்த், பிரபு, கார்த்திக், சரத்குமார், விஜய், அஜித், சூர்யா ஆகியோரது படங்களான அன்பே சிவம், வீரம் வெளஞ்ச மண்ணு, மிஸ்டர்.மெட்ராஸ் கோகுலத்தில் சீதை, அரண்மனை காவலன், வேலுச்சாமி, ப்ரியமுடன், பகவதி, உன்னிடத்தில் என்னை கொடுத்தேன், உன்னை நினைத்து ஆகிய மிகப்பெரிய வெற்றி படங்களை தயாரித்தவர் என்பது குறிப்பிடதக்கது.

அவரது மறைவு திரையுலகத்திற்கு மிகப்பெரிய இழப்பாகும், அவரை இழந்து வாடும் குடும்பத்தாருக்கும் நண்பர்களுக்கும் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்கிறோம்.

அவரது ஆன்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனை வேண்டி கொள்கிறோம் என்று அந்த அறிக்கையில் தெரிவித்து உள்ளனர்.

கூடுதல் தகவல்..

லக்‌ஷ்மி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பாளர்களில் ஒருவரான கே.முரளிதரன் 65 இன்று மாரடைப்பால் காலமானார். கும்பகோணம் நாச்சியார் கோயிலுக்கு மனைவியுடன் சாமி தரிசனம் செய்ய சென்றிருந்தார்.

படிகட்டில் மயங்கி விழுந்த அவரை உடனடியாக ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவர் இறந்ததாக டாக்டர்கள் அறிவித்தனர். இவர் தமிழ் தயாரிப்பாளர்கள் சங்க தலைவராகவும் பதவி வகித்தவர். இவரது மனைவி பெயர் உத்ரா முரளிதரன், மற்றும் கோகுல், ஶ்ரீவத்சன் என இரண்டு மகன்கள் உள்ளனர்.

Lakshmi Movie Makers

Selvaragavan, dhanush #pudhupettai,
Kamal #AnbeSivam,
Vijay #bhagavathi, #priyamudan,
silambarasan #Silambattam,
Karthik #UnnidathilEnnaiKoduthen,
Sarathkumar #veluchami,
Ajithkumar #unnaithedi,
Ahathiyan, Karthik #GokulaththilSeethai
Bharathiraja #KangalaalKaidhusei ,
Fazil #OruNaalOruKanavu,
Jayamravi # #Dass,
Prabhu #Mr.Madras,
Vijayakanth #VeeramVilanjaMannu,
Prabhudeva #UllamKollaiPoguthae,
Suriya #UnnaiNinaithu

இப்படி 27 படங்களை சூப்பர் ஹிட் படமாகவும், பிரமாண்ட படைப்பாகவும் கொடுத்த நிறுவனம் லக்‌ஷ்மி மூவி மேக்கர்ஸ். ரஜினி தவிர பிரபல நடிகர்கள் அனைவரும் இந்த நிறுவனத்தில் நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Producers council condolence message for Producer Muralidharan

More Articles
Follows