மணிரத்னத்தின் ‘பொன்னியின் செல்வன்’ இரண்டாம் பாகத்தின் புதிய அப்டேட்..!

மணிரத்னத்தின் ‘பொன்னியின் செல்வன்’ இரண்டாம் பாகத்தின் புதிய அப்டேட்..!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

மணிரத்னத்தின் பிரம்மாண்டமான படம் ‘பொன்னியின் செல்வன் 1’ திரைப்படம் செப்டம்பர் 30ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகியது.

இப்படம் பாக்ஸ் ஆபிஸில் ரூ.500 கோடிக்கு மேல் வசூல் செய்தது.

இந்நிலையில், ‘பொன்னியின் செல்வன் 2’ படத்தின் இரண்டாம் பாகத்திற்கான தயாரிப்பு பணிகள் அக்டோபரில் தொடங்கியது.

படத்தின் இரண்டாம் பாகத்தில் இருக்கும் முக்கியமான காட்சிகள் சிலவற்றை மீண்டும் எடுக்க இயக்குனர் முடிவு செய்துள்ளதாக புதிய தகவல்கள் வெளியாகியுள்ளது.

மேலும், இதன் படப்பிடிப்பு 7 முதல் 10 நாட்கள் வரை நடைபெறும் என்றும் கூறப்படுகிறது.

படத்தின் இரண்டாம் பாகம் ஏப்ரல் 28, 2023 அன்று வெளியாகும் என இயக்குனர் மணிரத்னம் தெரிவித்துள்ளார்.

Mani Ratnam’s Ponnyin’s Selvan second part new update

Karma is Boomerang.; ரஜினிக்கு கொடுத்த பிரச்சினை ‘வாரிசு’ தயாரிப்பாளருக்கே வந்துடுச்சே

Karma is Boomerang.; ரஜினிக்கு கொடுத்த பிரச்சினை ‘வாரிசு’ தயாரிப்பாளருக்கே வந்துடுச்சே

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தெலுங்கு திரையுலகில் ரஜினி, கமல், விஜய், சூர்யா, கார்த்தி, விஷால் ஆகியோரது படங்களுக்கு அதிக வரவேற்பு உள்ளது.

எனவே ஆந்திரா மற்றும் தெலுங்கானாவில் அதிக எண்ணிக்கையில் தியேட்டரில் இவர்களின் படத்தை வெளியிடுவது வழக்கம்.

இந்த நிலையில் இன்று நடைபெற்ற தெலுங்கு தயாரிப்பாளர்கள் ஆலோசனைக் கூட்டத்தில் வருகிற பொங்கல் சமயத்தில் (தெலுங்கு சங்கராந்தி பண்டிகை) தெலுங்கு படங்களுக்கு மட்டுமே முன்னுரிமை கொடுக்க வேண்டும் எனவும் தமிழ் படங்களுக்கு முன்னுரிமை அளிக்கக்கூடாது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

விஜய் நடிக்கும் ‘வாரிசு’ படத்தை தெலுங்கு தயாரிப்பாளர் தில்ராஜூ என்பவர் தான் தயாரித்து இருக்கிறார்.

இதனால் விஜய் படத்தை அதிக தியேட்டர்களில் வெளியிட முடியாமல் தவித்து வருகிறாராம் தில்ராஜு. மேலும் நிறைய தெலுங்கு படங்களும் சங்கராந்தி பண்டிகையை குறிவைத்து தயாரித்து வருகிறார்களாம்.

2019 ஆம் ஆண்டில் ரஜினி நடித்த ‘பேட்ட’ படத்தை சங்கராந்தி சமயத்தில் வெளியிடும்போது இதே மறுப்பு ஆலோசனையை தான் தெரிவித்தாராம் தில் ராஜூ.

தற்போது விஜய்யின் ‘வாரிசு’ மூலம் அவருக்கு அதே பிரச்சனை திரும்பி வந்துள்ளது.

ஓ.. இதை தான் கர்மா என்பார்களோ.??

Varisu facing release issue at Andhra and Telugana states

முதன் முறையாக டபுள் ரோலில் ஹன்சிகா.; இயக்குனருடன் காளிகாம்பாள் தரிசனம்

முதன் முறையாக டபுள் ரோலில் ஹன்சிகா.; இயக்குனருடன் காளிகாம்பாள் தரிசனம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கதாநாயகியை மையமாக வைத்து இயக்குனர் ஆர்.கண்ணன் இயக்கும் படத்தின் படப்பிடிப்பு கடந்த மாதம் துவங்கியது. இதில் ஹன்சிகா நாயகியாக நடிக்கிறார்.

முதன் முறையாக இரட்டை வேடத்தில் ஹன்சிகா நடிக்கிறார். இது எமோஷனல், ஹாரரை அடிப்படையாக கொண்ட காமெடி த்ரில்லராக இருக்கும்.

இயக்குனர் ஆர்.கண்ணன் தனது மசாலா பிக்ஸ் பேனரில் புரொடக்ஷன் நம்பர் 10 ஆக இப்படத்தை இயக்கி தயாரித்து வருகிறார்.

படத்தின் கதை கருவை எழுத்தாளர் மா.தொல்காப்பியன் எழுதியுள்ளார். தயாரிப்பாளர் ஜி.தனஞ்செயன் முழு நீள திரைக்கதையாக பல சுவாரசியமான கூறுகளுடன் உருவாக்கி வசனம் எழுதியுள்ளார்.

பாடலாசிரியர் ஸ்ரீனி செல்வராஜ், மூவரும் இந்த திரைக்கதையை ஆலோசித்து 6 மாதங்களுக்கும் மேலாக உழைத்து, ஆர்.கண்ணனிடம் பைண்ட் ஸ்கிரிப்டை வழங்கியுள்ளனர். அவர், இன்று முதல் சென்னையில் படமாக்கும் பணியில் இறங்கியிருக்கிறார்.

ஹன்சிகாவுடன் மெட்ரோ சிரிஷ், மயில்சாமி, தலைவாசல் விஜய், பிரிஜிதா, பவன், என பிரபல நடிகர்கள் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். இப்படத்தின் படப்பிடிப்பு இடைவிடாமல் நடத்தப்பட்டு 3 மாதங்களில் முடிவடையும் என்று தெரிவித்துள்ளார்கள்.

தொழில்நுட்ப வல்லுநர்கள் பட்டியல்:

இயக்குனர் : ஆர்.கண்ணன் ஒளிப்பதிவு : பாலசுப்ரமணியம் சண்டைப் பயிற்சி : ஸ்டண்ட் சில்வா
மக்கள் தொடர்பு : ஜான்சன்

Hansika in a double role for the first time

மீண்டும் ஸ்கூல் லைஃப் போலாமா.? ‘மாநகரம்’ பட குழந்தை நட்சத்திரம் நாயகனாகிறார்.!

மீண்டும் ஸ்கூல் லைஃப் போலாமா.? ‘மாநகரம்’ பட குழந்தை நட்சத்திரம் நாயகனாகிறார்.!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Gopuram Studios சார்பில் K.பாபு ரெட்டி & G.சதீஷ்குமார் தயாரிப்பில் இயக்குநர் வாலி மோகன் தாஸ் இயக்கத்தில் புதுமுகங்களின் நடிப்பில் தற்போதைய காலகட்ட பள்ளி வாழ்க்கையை சொல்லும் திரைப்படமாக உருவாகியுள்ள படம் “ரங்கோலி”.

இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை இயக்குநர் லோகேஷ் கனகராஜ், நடிகர் அருண் விஜய், இயக்குநர் வெங்கட் பிரபு, நடிகர் அதர்வா, இசையமைப்பாளர் ஜீவி பிரகாஷ், நடிகர் சதீஷ் நடிகை வாணி போஜன், நவீன் சந்த்ரா, கார்த்திக் ரத்னம் ஆகியோர் இணைந்து வெளியிட்டனர்.

ஸ்கூல் படிக்கும் மாணவர்களின் வாழ்க்கையை, அவர்களது குடும்பங்களை சுற்றிய கதைகளை நம் தமிழ் சினிமா சொல்வதே இல்லை.

இப்படம் அந்த ஏக்கத்தை போக்கும் வகையில் ஒரு அருமையான குடும்பப்படமாக இப்போதைய பள்ளி மாணவர்களின் வாழ்க்கையை சொல்லும் படமாக இப்படம் உருவாகியுள்ளது.

குடும்பத்தினரின் வற்புறுத்தலால் ஒரு பள்ளியில் இருந்து வேறொரு உயர்தர பள்ளிக்கு மாற்றலாகும் மாணவனின் வாழ்வில் நடக்கும் சம்பவங்களே இப்படம்.

பள்ளி மாணவர்கள் ஒன்றாக கூடி நிற்கும் இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் பலரது பள்ளி ஞாபகங்களை கிளறுவதோடு, அனைவரிடத்திலும் பெரும் எதிர்பார்ப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

மாநகரம், தெய்வத்திருமகள் படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்த ஹமரேஷ், இப்படத்தில் நாயகனாக அறிமுகாமகிறார்.

பிரார்த்தனா, சாய் ஶ்ரீ, அக்‌ஷயா ஆகியோர் இப்படத்தில் முதன்மை பாத்திரங்களில் நடித்துள்ளனர். ஆடுகளம் முருகதாஸ் முக்கிய பாத்திரமொன்றில் நடித்துள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு சென்னை மற்றும் கடப்பா ஆகிய இடங்களில் நடைபெற்றுள்ளது.

Gopuram Studios சார்பில் K.பாபு ரெட்டி & G.சதீஷ்குமார் தயாரிக்கும் இப்படத்தினை அறிமுக இயக்குநர் வாலி மோகன் தாஸ் இயக்கியுள்ளார்.

சுந்தரமூர்த்தி KS இசையமைத்துள்ளார். I.மருதநாயகம் ஒளிப்பதிவு செய்துள்ளார். G.சத்யநாராயணன் எடிட்டிங் செய்துள்ளார்.

தற்போது இப்படத்தின் இறுதிகட்ட பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. படத்தின் டிரெய்லர் மற்றும் இசை வெளியீடு குறித்த அறிவிப்புகள் விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும்.

சின்ன படங்களே சினிமாவை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்லும் – அருள்தாஸ்

சின்ன படங்களே சினிமாவை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்லும் – அருள்தாஸ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

சரவணன் இயக்கத்தில் தர்ஷன் மகிமா இணைந்துள்ள படம் ‘நாடு’.

இந்தப் படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பில் நடிகர் அருள்தாஸ் பேசும்போது…

“கமர்சியல் படங்கள் நிறைய வருகின்றன. ஆனாலும் சிறிய படங்கள்தான் சினிமாவை ஒவ்வொரு காலகட்டத்திலும் அடுத்த கட்டத்திற்கு அழைத்து செல்கின்றன. இந்தப்படமும் அப்படி ஒரு இடத்தை பெறும். தங்கள் முதல் படமாக இந்த படத்தை தயாரித்த தயாரிப்பாளர்கள் உண்மையில் அதிர்ஷ்டசாலிகள் என்றே சொல்வேன்.

இது தமிழ்நாட்டுக்கு மட்டுமல்ல உலகம் முழுமைக்குமான ஒரு படம்.. நாயகன் தர்ஷன் மிகுந்த அர்ப்பணிப்புடன் உழைப்பை கொடுத்துள்ளார்.. நிச்சயம் அவருக்கு வெற்றி படமாக இது அமையும்.. அதேசமயம் வளர்ந்த பின்பு அவர் மாறிவிடக்கூடாது” என்று பேசினார்.

விக்ரம் – சூர்யாவுக்கு பிறகு தர்ஷனை பார்க்கிறேன்.; சிங்கம்புலி புகழாரம்

விக்ரம் – சூர்யாவுக்கு பிறகு தர்ஷனை பார்க்கிறேன்.; சிங்கம்புலி புகழாரம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

சரவணன் இயக்கத்தில் தர்ஷன் மகிமா இணைந்துள்ள படம் ‘நாடு’.

இந்தப் படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பில் நடிகர் சிங்கம்புலி பேசும்போது…

“கொல்லிமலை பகுதியில் உள்ள எல்லா ஊர்களுக்கும் நாடு என்று முடியும்படி தான் பெயர் வைத்திருப்பார்கள். இந்த படத்தின் இயக்குனர் சரவணனை ஏ.ஆர்.முருகதாஸிடம் உதவியாளராக பணியாற்றியபோது இருந்தே தெரியும். அவர் இயக்கிய எங்கேயும் எப்போதும் படம் பார்த்துவிட்டு இவருடன் ஒரு படத்திலாவது பணியாற்ற வேண்டும் என்று நினைத்தேன்.

அதன்படி இந்த வாய்ப்பு கிடைத்தபோது நான் படப்பிடிப்புக்கு சென்ற முதல்நாளே, இந்த படத்தில் நான் நடிக்க வரவில்லை.. உங்களுடன் இணைந்து சேவை செய்ய வந்திருக்கிறேன் என்று கூறினேன். அந்த அளவிற்கு அவரது சமூக அக்கறை எனக்கு பிடிக்கும்.

ஒளிப்பதிவாளர் சக்தியின் முழு திறமையை யாரும் பார்த்ததில்லை. இந்தப்படத்தில் பார்ப்பீர்கள். படப்பிடிப்பு சமயத்தில் அவருக்கென தனியாக கோழிக்குழம்பு ஸ்பெஷலாக தயாராகும்.. அதை சாப்பிடுவதற்கு ஒரு போட்டியே நடக்கும். படத்தின் நாயகன் தர்ஷன் இந்த படத்தின் படப்பிடிப்பு நடந்த பல இடங்களில் ஒரு பெண்ணை தன் தோளில் தூக்கிக்கொண்டு உயரமான இடங்களுக்கு ஓடுவார்.

காரணம் படப்பிடிப்பு நடக்கும் இடம் அப்படிப்பட்ட மலைப்பகுதி என்பதால். இதற்கு முன்பாக பிதாமகன், நான் கடவுள் ஆகிய படங்களில் பணியாற்றியபோது அந்த ஹீரோக்களின் கடின உழைப்பை நேரில் பார்த்தவன் நான். அதனால் தான் அவர்கள் இன்று அந்த உயரத்தில் இருக்கிறார்கள். அதேபோன்ற ஒரு அர்ப்பணிப்பு உணர்வை தர்ஷனிடமும் பார்த்தேன்.. நிச்சயமாக அவருக்கு தமிழ் சினிமாவில் நல்ல உயரம் இருக்கு..

இந்தப்படத்தின் டப்பிங்கின்போது வசனம் பேசும் இடைவேளையில், சில வரிகள் பாடுவதை வழக்கமாக வைத்திருந்தேன்.. இதை கேட்டுவிட்டு இசையமைப்பாளர் எனக்கு ஒரு பாடல் பாட வாய்ப்பு தருவார் என நினைத்தேன். கடைசியாக இந்த படத்தில் இரண்டு வரிகள் பாட இயக்குனர் வாய்ப்பு தந்தார்” என்று கூறினார்.

More Articles
Follows