மீண்டும் மலையாள சினிமா.: மம்மூட்டிக்கு ஜோடியாகும் ஜோதிகா.; சூர்யா வாழ்த்து.!

மீண்டும் மலையாள சினிமா.: மம்மூட்டிக்கு ஜோடியாகும் ஜோதிகா.; சூர்யா வாழ்த்து.!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தென்னிந்திய சினிமாவில் பிரபலமான நடிகை ஜோதிகா. இவர் சூர்யாவை காதலித்து திருமணம் செய்து கொண்ட பின்னர் சினிமாவில் நடிப்பதை நிறுத்திக் கொண்டார்.

தற்போது மீண்டும் சினிமாவில் நடித்து வருகிறார். கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள கேரக்டரில் மட்டும் நடித்து வருகிறார்.

இந்த நிலையில் கிட்டத்தட்ட 12 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் மலையாள சினிமாவில் நடிக்க உள்ளார் ஜோதிகா.

இந்த படத்தை மலையாள சூப்பர் ஸ்டார் மம்மூட்டியே தயாரித்து ஹீரோவாக நடிக்கவுள்ளார்.

இந்த நிலையில், ஜோதிகாவின் பிறந்தநாளை முன்னிட்டு ‘காதல் – த கோர்’ என்ற பட ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டது.

மம்முட்டி கம்பெனி இந்தப் படத்தை தயாரிக்க, ஜோ பேபி இப்படத்தை இயக்குகிறார்.

12 ஆண்டுகளுக்கு முன்பு இரண்டு மலையாளப் படங்களில் ஜோதிகா நடித்திருக்கிறார்.

இந்த பட ஃபர்ஸ்ட் லுக் குறித்து சூர்யா தனது ட்விட்டர் பக்கத்தில்…

“இந்த பட அனைத்து நிகழ்வுகளையும் இயக்குநர் ஜோ பேபி மற்றும் குழுவினர் முதல் நாள் முதலே சிறப்பாகச் செய்து வருகிறார்கள்.

மம்முக்கா, ஜோதிகா ஆகியோருக்கு எனது வாழ்த்துகள், இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் ஜோ” என பதிவிட்டுள்ளார் சூர்யா.

காதல் - த கோர்

Mammootty and Jyothika starring Kathaal the Core Actor Suriya wishes

ஸ்டாலின் மகனை அடுத்து விக்ரம் மகனை இயக்கும் மாரி செல்வராஜ்

ஸ்டாலின் மகனை அடுத்து விக்ரம் மகனை இயக்கும் மாரி செல்வராஜ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கதிர் நடித்த ‘பரியேறும் பெருமாள்’, தனுஷ் நடித்த ‘கர்ணன்’ ஆகிய 2 வெற்றிப் படங்களை இயக்கியவர் மாரி செல்வராஜ்.

தற்போது உதயநிதி் ஸ்டாலின், கீர்த்தி சுரேஷ், பகத்பாசில், வடிவேலு நடித்து வரும் ‘மாமன்னன்’ என்ற படத்தை இயக்கி வருகிறார்.

இந்த படத்திற்கு ஏஆர். ரஹ்மான் இசையமைத்து வருகிறார். இதன் இறுதிக்கட்ட பணிகள் தற்போது நடைபெற்று வருகிறது.

இதனையடுத்து துருவ் விக்ரம் நடிக்கும் படத்தை இயக்கப் போகிறார் மாரி.

இந்த படம் கபடி விளையாட்டை மையப்படுத்தி எடுக்கப்பட உள்ளதாம்.

இந்த படத்தின் படப்பிடிப்பு அடுத்த ஆண்டு தொடங்குகிறது.

இந்த படம் ‘மாமன்னன்’ படத்திற்கு முன்பே முடிவானது என்பது குறிப்பிடத்தக்கது.

Mari Selvaraj next with Dhruv Vikram

பிரபலங்களுக்காக ஹைதராபாத்தில் பிரத்யேகமாக திரையிடப்பட்ட ‘அம்மு’

பிரபலங்களுக்காக ஹைதராபாத்தில் பிரத்யேகமாக திரையிடப்பட்ட ‘அம்மு’

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ப்ரைம் வீடியோவின் முதல் தெலுங்கு ஒரிஜினல் படைப்பான ‘அம்மு’ திரைப்படத்தின் முன்னோட்டம் வெளியிடப்பட்டதிலிருந்து, இப்படத்தை பார்ப்பதற்காக சந்தாதாரர்கள் ஆவலுடன் காத்திருந்தனர். இந்த திரைப்படம் அக்டோபர் 19ஆம் தேதி பிரைம் வீடியோவில் திரையிட திட்டமிடப்பட்ட நிலையில், படத்தின் தயாரிப்பாளர்கள் ஹைதராபாத்தில் பிரத்யேக திரையிடலுக்கு ஏற்பாடு செய்திருந்தனர்.

இந்த பிரிமியர் காட்சிக்கு ‘அம்மு’ படத்தில் பணியாற்றிய நடிகர்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் கலந்து கொண்டனர்.

ஹைதராபாத்தில் உள்ள கச்சிபௌலியில் அமைந்திருக்கும் ஏ எம் பி சினிமாஸ் எனும் திரையரங்க வளாகத்திற்குள் ப்ரைம் வீடியோ, பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட அமேசான் பிரைம் வீடியோவின் ஒரிஜினல் திரைப்படமான ‘அம்மு’ திரையிடப்பட்டது.

இந்த நிகழ்வில் நடிகை நிஹாரிகா கொனிடேலா, தேவ கட்டா, சரத் மாரார், ராஜ் கந்துகுரி, சுவாதி ஆகியோருடன் பட குழுவினைச் சேர்ந்த நடிகர் நவீன் சந்திரா, இயக்குநரும், தயாரிப்பாளருமான கார்த்திக் சுப்புராஜ் ஆகியோரும் கலந்து கொண்டனர்.

சாம்பலில் இருந்து பீனிக்ஸ் பறவை போல் எழும் ஒரு பெண்ணின் கதையை மையமாகக் கொண்ட ‘அம்மு’ படத்தில் ஐஸ்வர்யா லட்சுமி கதையின் நாயகியாக நடித்திருக்கிறார்.

இவரது போலீஸ் கணவன் ரவி என்ற கதாபாத்திரத்தில் நவீன் சந்திரா நடித்திருக்கிறார்.

இந்த தம்பதியின் வாழ்வில் முதன்முறையாக ரவி, அம்முவை தாக்கிய போது, அவர் எதிர்பாராமல் நடைபெற்ற சம்பவம் என நினைத்தார். அதே தருணத்தில் திருமணம் பற்றிய தன்னுடைய கனவு தவிடு பொடியானதையும் உணர்ந்தார்.

அதன் பிறகு ரவி அடிப்பதும், தாக்குவதும் தொடர்கதை ஆனதால், இது துஷ்பிரயோகத்தின் முடிவில்லாத சுழற்சி என உணர்ந்து கொண்டார். அவரிடமிருந்து தப்ப வேண்டும் என்பதற்காக, இவளுக்கு நேர் எதிர் குணம் கொண்ட சிம்ஹா என்ற கூட்டாளியுடன் இணைந்து விடுதலை பெறுகிறார்.

சாருகேஷ் சேகர் எழுதி இயக்கியிருக்கும் இந்த திரைப்படத்தை ஸ்டோன் பெஞ்ச் பிலிம்ஸ் சார்பில் கார்த்திக் சுப்புராஜ் தயாரித்திருக்கிறார்.

இதில் ஐஸ்வர்யா லக்ஷ்மி, நவீன் சந்திரா, சிம்ஹா ஆகியோர் நடித்துள்ளனர். அம்மு திரைப்படம் தெலுங்கு, தமிழ், மலையாளம், கன்னடம் மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் அக்டோபர் 19ஆம் தேதி முதல் அமேசான் பிரைம் வீடியோவில் வெளியாகியிருக்கிறது.

அம்மு

Multi language movie Ammu special show

‘வாரிசு’ படத்தின் முதல் சிங்கிள் ரிலீஸ் தேதியை அறிவித்தார் தமன்

‘வாரிசு’ படத்தின் முதல் சிங்கிள் ரிலீஸ் தேதியை அறிவித்தார் தமன்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

வம்சி இயக்கத்தில் உருவாகும் ‘வாரிசு’ படத்தில் நடித்து வருகிறார் விஜய். இந்தப் படத்தை தில் ராஜூ தயாரிக்க தமன் இசையமைத்து வருகிறார்.

விஜய்யுடன், ரஷ்மிகா மந்தனா, பிரகாஷ் ராஜ், சரத்குமார், பிரபு, குஷ்பு, சங்கீதா, ஷாம் மற்றும் சம்யுக்தா உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

‘வாரிசு’ படம் காதல், நகைச்சுவை, ஆக்‌ஷன் மற்றும் செண்டிமெண்ட்கள் நிறைந்த ஒரு உணர்ச்சிகரமான குடும்பமாக இருப்பதாகவும், படம் 2023 பொங்கலின் போது பெரிய திரைகளில் வெளியாகும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தநிலையில், நேற்று ஹைதராபாத்தில் நடந்த ‘பிரின்ஸ்’ படத்திற்காக நிகழ்ச்சியில், இசையமைப்பாளர் தமன் ‘வாரிசு’ படத்தின் முதல் சிங்கிள் தீபாவளி அன்று வெளியாகும் என அறிவித்தார்.

Varisu’s first single will release on Diwali

மீண்டும் மீண்டும் இணையும் விக்ரம், பசுபதி கூட்டணி..

மீண்டும் மீண்டும் இணையும் விக்ரம், பசுபதி கூட்டணி..

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

நடிகர் விக்ரம் மற்றும் பா ரஞ்சித் முதன்முறையாக இணையும் படம் ‘சியான் 61’.

படத்தின் படப்பிடிப்பு சில வாரங்களுக்கு முன்பு பூஜையுடன் தொடங்கியது.

பா.ரஞ்சித் இயக்கிய ‘ சார்பட்டா பரம்பரை’ படத்தில் சிறப்பாக நடித்ததற்காக சிறந்த துணை நடிகருக்கான பிலிம்பேர் விருதை வென்ற பசுபதி, இயக்குனரின் அடுத்த படத்திலும் இணைந்துள்ளார்.

மேலும், சியான் விக்ரமுடன் பசுபதி ‘தூள்’, ‘அருள்’, ‘மஜா’ மற்றும் ’10 எண்றதுக்குள்ள’ படங்களில் இணைந்து நடித்துள்ளனர்.ஐந்தாவது முறையாக இந்த கூட்டணி இணைந்துள்ளது.

‘சியான் 61’ திரைப்படம் கோலார் தங்கச் சுரங்கத்தின் பின்னணியில் அமைக்கப்பட்டிருப்பதாகவும், சுதந்திரத்திற்கு முந்தைய காலகட்டத்தை பின்னணியாகக் கொண்ட ஆக்ஷன் நாடகம் என்றும் கூறப்படுகிறது.

Pasupathy reunites with Vikram for Chiyaan61

சஞ்சய் ராமசாமி தெரியும்; ராம் ராமசாமி தெரியுமா? ‘பிக் பாஸ்’ முதல் சினிமா ஹீரோ வரை ஒரு பார்வை

சஞ்சய் ராமசாமி தெரியும்; ராம் ராமசாமி தெரியுமா? ‘பிக் பாஸ்’ முதல் சினிமா ஹீரோ வரை ஒரு பார்வை

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

சஞ்சய் ராமசாமி நமக்கு தெரியும்.. அது கஜினி படத்தில் சூர்யாவோட கேரக்டர் பெயர். இப்ப நாம பார்க்கப் போறது ராம் ராமசாமி. யாருப்பா இவரு அப்படின்னு கேட்டீங்கன்னா…

பிக் பாஸில் என்னதான் 20 பேர் இருந்தாலும் சில பேர் மட்டுமே செம ஹேண்ட்ஸ்ம்மா ஸ்மார்ட்டா யூத்தா இருப்பாங்க.

அந்த மாதிரி ஒரு ஆளு தான் ராம் ராமசாமி.

இவரு பிக் பாஸ் சீசன் 6ல கலந்துகிட்டு ரசிகர்களை ரொம்பவே கவர்ந்து வந்து கொண்டிருக்கிறார்.

இவரோட பூர்வீகம் சேலம்.. சினிமாவுல நானும் சாதிக்கணும் அப்படிங்கறதுக்காக மாடலிங் செஞ்சுட்டு இப்ப சென்னையில இருக்காரு..

அது மட்டும் இல்லாம அஜினோமோட்டோ அப்படிங்கற படத்துல ஹீரோ கேரக்டர் பண்ணிட்டு இருக்காரு..

நிறைய மாடலிங் செஞ்சுக்கிட்டு இருக்காரு.. நிறைய விளம்பர படங்களில் நடிச்சிருக்காரு. அதன் மூலமா தான் இவருக்கு பிக் பாஸ் வாய்ப்பு கிடைச்சிருக்கு.

இவருக்கு பாட்டு பாடறது ரொம்ப பிடிக்குமாம். அதுக்காகவே வீட்டுல ஸ்டூடியோ செட்டப்ல மைக் எல்லாம் வச்சுக்கிட்டு அடிக்கடி பாட்டு பாடி போஸ்ட் பண்ணிட்டு இருக்காரு.

இவருக்கு ஒரே ஒரு பிரதர் இருக்காரு. அவருக்கு மேரேஜ் ஆச்சு. இவருக்கு 27 வயசாகிறது.. இன்னும் மேரேஜ் ஆகல. பையன் சிங்கிள் சொல்றாங்க.

சேலத்துல முடிஞ்ச வரைக்கும் தன்னுடைய சொந்த நிலத்தில் விவசாயமும் பண்ணிட்டு இருக்காரு.

இவரோட பாட்டி கூட சேர்ந்து இன்ஸ்டாகிராமில் நிறைய ரிலீஸ் போஸ்ட் பண்ணி இருக்காரு.

இவருக்கு சின்ன வயசுல ஹார்ட்ல ஒரு பிரச்சனை இருந்திருக்கு. அப்ப டாக்டரால கண்டுபிடிக்க முடியாத பிரச்சனையை இவர் தாத்தா தான் கண்டுபிடிச்சு சொன்னாராம்.
அதனால தாத்தா மேல ரொம்ப பிரியம் இவருக்கு.

இப்ப வயசான காலத்துல தாத்தாவ ரொம்ப கேர் பண்ணி பார்த்துக்கிறாராம். ஸ்போர்ட்ஸ்ல இவருக்கு ரொம்ப புடிச்சது கிரிக்கெட். அதனால எப்போ டைம் கிடைச்சாலும் கிரிக்கெட் விளையாடுவாராம்.

இப்போ இவரு பிக் பாஸில் கலந்துக்கிட்டு இருக்காரு.. பிக் பாஸ் முடிஞ்சு சிங்கிளா தான் வருகிறாரா? அப்படின்னு பார்ப்போம்..

ராம் ராமசாமி

Who is Ram Ramasamy in Bigg Boss Season 6

More Articles
Follows