மா.கா.பா.ஆனந்த்-சூஷா நடித்துள்ள ‘மாணிக்’ படத் தகவல்கள்

மா.கா.பா.ஆனந்த்-சூஷா நடித்துள்ள ‘மாணிக்’ படத் தகவல்கள்

maanik movie stillsமோகிதா சினி டாக்கீஸ் நிறுவனம் சார்பில் எம். சுப்ரமணியன் தயாரித்திருக்கும் படம் ‘மாணிக்’.

மா.கா.பா.ஆனந்த் ஹீரோவாக நடிக்கும் இப்படத்தில் ஹீரோயினாக சூஷா குமார் நடித்துள்ளார்.

இரண்டாவது ஹீரோவாக வத்ஸன் நடிக்க, அருள்தாஸ், ஏர்டெல் சூப்பர் சிங்கர் போட்டியில் கலந்துக்கொண்ட அணு, புஜ்ஜி பாபு, கோலிசோடா சீதா, ஜாங்கிரி மதுமிதா, சிவசங்கர், மனோபாலா உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்கள் நடித்துள்ளனர்.

‘நாளைய இயக்குநர்’ சீசன் 5- ன் வெற்றியாளர் மார்டின் இயக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு முழுவதும் முடிவடைந்த நிலையில், தற்போது பின்னணி வேலைகள் விறுவிறுப்பாக நடைப்பெற்று வருகிறது.

படம் குறித்து இயக்குநர் மார்டின் கூறுகையில்…

“ஆசிரமத்தில் வளர்ந்த ஹீரோ மா.கா.பா.ஆனந்த் மற்றும் இரண்டாவது ஹீரோ வத்சன் இருவரும் ஒரு விஷயத்தில் பெரிய அளவில் சாதிக்க ஆசிரமத்தில் இருந்து கிளம்புகிறார்கள்.

அப்படி அவர்கள் சாதிக்க நினைத்தது என்ன, அந்த சாதனை முயற்சியில் அவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள், இறுதியில் நினைத்ததை சாதித்தார்களா இல்லையா என்பதை பேண்டசியாக சொல்லியிருக்கிறோம். அவர்களின் சாதனை பயணம் எந்த விஷயத்திற்காக என்பது சஸ்பன்ஸ்.” என்றார்.

தரன்குமார் இசையமைப்பில் இடம்பெற்றுள்ள மூன்று பாடல்களும் வித்தியாசமான வார்த்தைகளால் உருவாக்கப்பட்டுள்ளது. “உச்சா…பசங்க…”, ” மாமா மர்கையா…”, “அட பாவி…” என்று தொடங்கும் இந்த மூன்று பாடல்களையும் இளைஞர்கள் முனு முனுக்கும் வகையில் மிர்ச்சி விஜய் எழுதியுள்ளார்.

எம்.ஆர்.பழனிகுமார் ஒளிப்பதிவு செய்யும் இப்படத்திற்கு கே.எம்.ரியாஸ் படத்தொகுப்பு செய்கிறார். கலையை வினோத் நிர்மாணிக்க, ஆடை வடிவமைப்பை செந்தில்குமார் கவனிக்கிறார். ரஞ்சித், கே.ஆர்.பழனியப்பன், ஜெகன் நாதன் ஆகியோர் தயாரிப்பு நிர்வாகத்தை கவனிக்க, பி.ஆர்.ஒ பணியை சுரேஷ்சுகு கவனிக்கிறார்.

காமெடி கலந்த பேண்டசி படமாக உருவாகும் ‘மாணிக்’ படத்தின் பஸ்ட் லுக் டீசர் இன்னும் சில தினங்களில் வெளியாக உள்ளது.

அதை தொடர்ந்து பாடல்கள் வெளியீட்டு விழாவை பிரம்மாண்டமான முறையில் நடத்த திட்டமிட்டுள்ள தயாரிப்பு தரப்பு, படத்தை செப்டம்பர் மாதம் இறுதியில் அல்லது அக்டோபர் தொடக்கத்தில் வெளியிட முடிவு செய்துள்ளது.

MaKaPa Anand Suza starring Maanik movie updates

maanikk makapa anand

விவேகம் 3D மோஷன் டீசர்; அஜித் ரசிகர்கள் சாதனை

விவேகம் 3D மோஷன் டீசர்; அஜித் ரசிகர்கள் சாதனை

Ajith fans made Virtual Reality 3D Motion teaser for Vivegamவிவேகம் படத்தின் பர்ஸ்ட் லுக்கை தொடர்ந்து, அப்பட டீசரும் வெளியானது.

இவையிரண்டும் ரசிகர்களிடையே மிகுந்த வரவேற்பை பெற்றது.

இந்நிலையில். விர்சுவல் ரியாலிட்டி (Virtual Reality) என்று கூறப்படும் VR டெக்னலஜியில் ‘விவேகம்’ டீசர் ரிலீஸ் ஆகியுள்ளது.

இந்த டெக்னாலஜியில் வெளிவரும் முதல் தமிழ்ப்பட 3D மோஷன் டீசர் இதுதான் என்பது குறிப்பிடதக்கது.

360டிகிரி கோணத்தில் 4K தரத்தில் அமைந்துள்ள இந்த வீடியோ அஜித் ரசிகர்கள் வடிவமைத்துள்ளனர்.

Ajith fans made Virtual Reality 3D Motion teaser for Vivegam

இதோ அந்த வீடியோ…

கமலுடன் இணைந்த 15 பிரபலங்கள்; அதிகாரப்பூர்வ அறிவிப்பு

கமலுடன் இணைந்த 15 பிரபலங்கள்; அதிகாரப்பூர்வ அறிவிப்பு

big boss show kamalவிஜய் டிவியில் இன்று முதல் பிக் பாஸ் என்ற நிகழ்ச்சி ஒளிப்பரப்பாகிறது.

இதை முதன்முறையாக கமல்ஹாசன் தொகுத்து வழங்குகிறார்.

இந்நிகழ்ச்சியில் 14 பிரபலங்கள் கலந்து கொள்கிறார்கள்.

அவர்களின் பெயர் பட்டியலை கமல் அறிவித்து அனைவரையும் அறிமுகம் செய்து வைத்தார்.

முக்கியமாக இந்த வீட்டில் உள்ளே தமிழில்தான் பேச வேண்டும் என்பது விதிமுறையாம்.

அந்த பிரபலங்கள் இவர்கள்தான்…

 1. மாநகரம் பட நடிகர் ஸ்ரீ என்ற ஸ்ரீராம்
 2. நடிகை அனுயா (சிவா மனசுல சக்தி)
 3. காமெடி நடிகர் வையாபுரி
 4. நடன இயக்குனர், நடிகை, அரசியல்வாதியுமான காயத்ரி ரகுராம்
 5. நாடோடிகள் நடிகர் பரணி
 6. இந்திய அழகி போட்டியில் கலந்து கொள்ளவிருப்பவர் மாடல் ரைஷா
 7. எழுத்தாளர், கவிஞர், நடிகர் சினேகன்
 8. நடிகை ஓவியா
 9. நடிகை ஆர்த்தி
 10. நடிகர் ஆரவ்
 11. நடிகர் கஞ்சா கருப்பு
 12. ஜல்லிக்கட்டு போராட்டத்தில் கலந்துக் கொண்ட பெண் நர்ஸ் ஜுலி
 13. நடிகர் கணேஷ் வெங்கட்ராம்
 14. இயக்குனர் பி. வாசுவின் மகன் சக்திவேல் வாசு
 15. நடிகை நமீதா

இனி 100 நாட்கள் தொடர்ந்து இந்த நிகழ்ச்சியை பார்த்தால் இதில் யார் வெல்வார்கள் என்பது தெரியும்.?

Official list of 14 celebrities participate with Kamal in Big Boss TV show

namitha big boss

கமலுக்காக சொந்த பட ரிலீஸை தள்ளி வைத்த காயத்ரி ரகுராம்

கமலுக்காக சொந்த பட ரிலீஸை தள்ளி வைத்த காயத்ரி ரகுராம்

kamal gayathiri raghuramநடன இயக்குனரும், நடிகையுமான காயத்ரி ரகுராம் முதன்முறையாக தயாரித்து நடித்து இயக்கியுள்ள படம் யாதுமாகி நின்றாய்.

இப்படத்தின் பாடல்கள் வெளியாகி பல மாதங்கள் ஆகிவிட்ட நிலையிலும், இது ரிலீஸ் ஆகவில்லை.

இவர் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துக் கொண்டுள்ளார்.

அந்த நிகழ்ச்சியில் கலந்துக் கொண்டால் 100 நாட்கள் ஒரே வீட்டில் எந்தவித வெளியுலக தொடர்பும் இல்லாமல் தங்க வேண்டும்.

எனவே படத்தை எப்போது ரிலீஸ் செய்வீர்கள் என்று கேட்டதற்கு… இந்த 100 நாட்கள் கழித்துதான் படத்தை ரிலீஸ் செய்ய வேண்டும் என்றார்.

Gaayathri Raguram postponed her Yaadhumaagi Nindraai because of Big Boss Kamal

தீபாவளி ரேஸில் விஜய்யுடன் மோதும் முதல் நடிகர் விமல்

தீபாவளி ரேஸில் விஜய்யுடன் மோதும் முதல் நடிகர் விமல்

Mersal and Mannar Vagaiyara movie clash on Diwali 2017அட்லி இயக்கத்தில் விஜய் நடித்து வரும் மெர்சல் படம் தீபாவளிக்கு வெளியாகவுள்ளது.

இப்படத்திற்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

இந்நிலையில் தீபாவளியன்று வெளியாகவுள்ள மற்ற படத்தின் அறிவிப்பு வந்துள்ளது.

பூபதி பாண்டியன் இயக்கத்தில் விமல், ஆனந்தி நடித்துள்ள மன்னர் வகையறா என்ற படத்தின் போஸ்டர் வெளியிட்டு அறிவித்துள்ளனர்.

பிஜி முத்தையா ஒளிப்பதிவு செய்துள்ள இப்படத்திற்கு ஜாக்ஸ் பிஜாய் இசையமைத்துள்ளார்.

A3V சினிமாஸ் நிறுவனம் சார்பில் என். விமல் இப்படத்தை தயாரித்துள்ளார்.

Mersal and Mannar Vagaiyara movie clash on Diwali 2017

Mannar Vagaiyara

சாய் பல்லவிக்கு லவ் லெட்டர் எழுதிய சுஜா வருணி

சாய் பல்லவிக்கு லவ் லெட்டர் எழுதிய சுஜா வருணி

sai pallavi suja varuneeமலையாள மொழியில் வெளியாகி தமிழ் சினிமா ரசிகர்களையும் கவர்ந்த படம் பிரேமம்.

இப்படத்தில் மலர் டீச்சர் கேரக்டரில் நடித்து நம் மனதை அள்ளியவர் நடிகை சாய் பல்லவி.

இதுவரை இவர் எந்த நேரடி தமிழ் படத்திலும் நடிக்கவில்லை.

ஆனால் தெலுங்கில் ஃபிதா என்ற படத்தில் நடித்து வருகிறார்.

இதுபற்றி மற்றொரு நடிகையான சுஜா வருணி தன் ட்விட்டர் பக்கத்தில் கூறியுள்ளதாவது…

இளவரசியான சாய்பல்லவி நான் பாராட்டுகிறேன். அவர் தேர்ந்தெடுக்கும் கதைகளும் சிறப்பானவை.

சாய்பல்லவியின் கேரக்டரை நான் பெரிதும் மதிக்கிறேன். சினிமாவிலும் நிஜத்திலும் அவர் உடுத்தும் ஆடைகள் பெரிதும் கவர்ந்துள்ளது.

ஒரு வார்த்தை கூட தெலுங்கில் தெரியாவிட்டாலும் தான் நடிக்கும் தெலுங்கு படத்திற்கு டப்பிங் பேசியுள்ளார். இது அவரின் அர்ப்பணிப்பை காட்டுகிறது.

நான் அவரை ரசிக்கிறேன். காதலிக்கிறேன்” என ஒரு கடிதமாக பதிவிட்டுள்ளார்.

குற்றம் 23, கிடாரி, வைகை எக்ஸ்பிரஸ், முன்னோடி உள்ளிட்ட 40 படங்களில் நடித்துள்ளவர் சுஜா வருணி என்பது குறிப்பிடத்தக்கது.

இதோ அந்த கடிதம்…

Suja Varunee‏Verified account @sujavarunee 2m2 minutes ago
words to the girl whom I admire a lot! @Sai_Pallavi92

Suja Varunee wrote Love Letter to Malar teacher fame Sai Pallavi

sai pallavi

More Articles
Follows