மா.கா.பா. ஆனந்த் ‘கடலை’ போட சிவகார்த்திகேயன் சப்போர்ட்

மா.கா.பா. ஆனந்த் ‘கடலை’ போட சிவகார்த்திகேயன் சப்போர்ட்

ma ka pa anand aishwarya rajeshசிவகார்த்திகேயனை தொடர்ந்து, மா.கா.பா. ஆனந்தும் தற்போது சினிமாவில் நடித்து வருகிறார்.

ஆனால் இதுவரை மா.கா.பா ஆனந்த் நடித்த படங்கள் பெரும் வெற்றியை பெறவில்லை.

எனவே தற்போது அவர் நடித்து, விரைவில் வெளியாகவுள்ள கடலை படத்திற்கு சிவகார்த்திகேயன் ஆதரவு கொடுத்துள்ளார்.

அதாவது, கடலை படத்தின் ட்ரைலரை சிவகார்த்திகேயன் நாளை வெளியிடவிருக்கிறார்.

சகாய சுரேஷ் இயக்கியுள்ள இப்படத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ், யோகிபாபு, ஜான்விஜய், பொன்வண்ணன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

மெல்லிசை படத்திற்கு இசையமைத்த சாம் CS இப்படத்திற்கும் இசையமைத்துள்ளார்.

உதயம் எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரித்துள்ள இப்படம் தீபாவளிக்கு ரிலீஸ் ஆகிறது.

‘ரெமோ’வுக்கு ரஜினி பாராட்டு; உற்சாகத்தின் உச்சத்தில் ஆர்.டி.ராஜா

‘ரெமோ’வுக்கு ரஜினி பாராட்டு; உற்சாகத்தின் உச்சத்தில் ஆர்.டி.ராஜா

remo team rajinikanthசிவகார்த்திகேயன் நடித்த ரெமோ படம், பெரும் எதிர்பார்ப்புடன் வெளியானது.

சில எதிர்மறை விமர்சனங்கள் இப்படம் குறித்து வந்தாலும், ரசிகர்களின் அமோக ஆதரவுடன் வசூலை வாரி குவித்து வருகிறது.

இந்நிலையில் இப்படத்தை ரஜினிகாந்த் பார்த்துள்ளார்.

எனவே, சிவகார்த்திகேயன் மற்றும் தயாரிப்பாளர் ஆர்.டி.ராஜாவை தொடர்பு கொண்டு பேசியுள்ளார்.

இத்தகவலை சற்றுமுன் தன் ட்விட்டர் பக்கத்தில் பதிவு செய்துள்ளார் ஆர்.டி.ராஜா.

அதில் அவர் கூறியுள்ளதாவது…

“ரெமோ படம் ரஜினி சாருக்கு மிகவும் பிடித்துள்ளது. படத்தை பற்றி பாராட்டினார்.

ஒரு தீவிர ரஜினி ரசிகனான எனக்கு, அவரிடம் இருந்து கிடைத்த பாராட்டு என்னுடைய வாழ்நாளில் நான் உழைத்து உழைப்புக்கு கிடைத்த வெற்றியாக பார்க்கிறேன்”எனத் தெரிவித்துள்ளார்.

விஷால்-கார்த்தி நடிக்கும் படத்திற்கு யாருப்பா இப்படி பேரு வச்சது?

விஷால்-கார்த்தி நடிக்கும் படத்திற்கு யாருப்பா இப்படி பேரு வச்சது?

karthi vishal joins with prabhu deva for new movieநடிகர் சங்க விவகாரங்களில் ஒருமித்த கருத்துடன் செயல்பட்டு வெற்றி வாகை சூடியவர்கள் விஷால்-கார்த்தி.

அப்போது முதலே, இவர்கள் எப்போது இணைந்து நடிப்பார்கள் என பேசப்பட்டு வந்தது.

தற்போது அதற்கு விடை கிடைத்துள்ளது.

இவர்கள் இணையும் படத்திற்கு கருப்பு ராஜா வெள்ளை ராஜா என்று பெயரிட்டுள்ளனர்.

இப்படி பெயரிட என்ன காரணம் எனத் தெரியவில்லை.

இப்படத்தை நடிகரும் பிரபல இயக்குனருமான பிரபுதேவா இயக்கவிருக்கிறார்.

விஜய்க்கு போக்கிரி, வில்லு ஆகிய ஹிட் படங்களை கொடுத்தவர் பிரபுதேவா என்பது குறிப்பிடத்தக்கது.

இதன் சூட்டிங் அடுத்த ஆண்டு தொடங்கவுள்ளது. இப்படத்தை ஐசரி கணேஷ் தயாரிக்கவிருக்கிறாராம்.

2017 பொங்கல்… விஜய் ரசிகர்களுக்கு டபுள் தமாக்கா

2017 பொங்கல்… விஜய் ரசிகர்களுக்கு டபுள் தமாக்கா

vijay bairavaaவிஜய்யின் பைரவா படம் அடுத்த வருடம் பொங்கலுக்கு வெளியாகும் என சொல்லப்படுகிறது.

இதனால் போக்கிரி, ஜில்லா படங்களை தொடர்ந்து, பைரவா பொங்கலை கொண்டாட விஜய் ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.

இந்நிலையில், விஜய் 61 படத்தின் அறிவிப்பையும் அந்த நாளில் வெளியிட இருக்கிறார்களாம்.

மேலும் ஜனவரியில் படத்தின் சூட்டிங் தொடங்கவுள்ளதாக தெரிய வந்துள்ளது.

இந்த டபுள் தமாக்கா செய்தி நிச்சயம் இளைய தளபதி ரசிகர்களுக்கு சர்க்கரை பொங்கல் விருந்துதான்.

மீண்டும் நடிக்கவரும் கீர்த்தி சுரேஷின் அம்மா மேனகா

மீண்டும் நடிக்கவரும் கீர்த்தி சுரேஷின் அம்மா மேனகா

keerthy suresh menakaதனுஷ், சிவகார்த்திகேயன் உள்ளிட்டோருடன் நடித்த கீர்த்தி சுரேஷ், தற்போது விஜய்யுடன் நடித்து வருகிறார்.

விரைவில் சூர்யாவுடன நடிக்கவுள்ளார்.

இவரைப்போன்று இவரது அம்மாவும் முன்னாள் நடிகையுமான மேனகா, சிவாஜி கணேசன், ரஜினிகாந்த், விஜயகாந்த், மோகன்லால் ஆகிய முன்னணி நடிகர்களுடன்

தற்போது நீண்ட இடைவெளிக்கு பின்னர் மீண்டும் நடிக்கிறார்.

நடிகர் பிரதாப் போத்தனுடன் இமா (IMA) என்ற குறும்படத்தில் நடிக்கிறார்.

இப்படத்தை லிஜீ கிருஷ்ணா இயக்கியுள்ளார்.

 

keerthysuresh mom _menaga short film IMA

 

ஜி.வி.பிரகாஷே போதும்…; அட்லி எடுக்கும் அதிரடி முடிவு

ஜி.வி.பிரகாஷே போதும்…; அட்லி எடுக்கும் அதிரடி முடிவு

gv prakash atleeபரதன் இயக்கும் பைரவா படத்தை முடித்துவிட்டு, அட்லி இயக்கவுள்ள படத்தில் விஜய் நடிக்கவுள்ளதாக உறுதியான தகவல்கள் தெரிவிக்கின்றன.

விஜய்யின் 61வது படமான இப்படத்தை ஸ்ரீதேனாண்டாள் பிலிம்ஸ் தயாரிக்கிறது.

இப்படத்திற்கு ஏ.ஆர். ரஹ்மான் இசையமைக்கக்கூடும் என செய்திகள் வந்தன.

ஆனால், தற்போது இசையமைப்பாளராக ஜி.வி. பிரகாஷே ஒப்பந்தம் செய்யப்பட உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

விஜய்-அட்லி-ஜிவி.பி. கூட்டணியின் ‘தெறி’ மிகப்பெரிய வெற்றியை பெற்றது.

எனவே இப்படத்திற்கும் அதுபோன்ற வெற்றியை எதிர்பார்க்கலாம்.

More Articles
Follows