தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
இயக்குனர் அபிலாஷ் ஜோஷி இயக்கத்தில் துல்கர் சல்மான் நடித்திருக்கும் திரைப்படம் ‘கிங் ஆஃப் கோதா’.
துல்கர் சல்மானின் 11 ஆண்டுகால திரையுலக வாழ்க்கையைச் சிறப்பிக்கும் வகையில் ‘கிங் ஆஃப் கோதா’ திரைப்படம் இருக்கும் என கூறப்படுகிறது.
ஜீ ஸ்டுடியோஸ் மற்றும் வேஃபேரர் ஃபிலிம்ஸ் இணைந்து இப்படத்தை தயாரிக்கிறது.
ஜேக்ஸ் பிஜாய் மற்றும் ஷான் ரஹ்மான் இணைந்து இசையமைக்கும் இப்படத்திற்கு நிமிஷ் ரவி ஒளிப்பதிவு செய்கிறார்.
‘கிங் ஆஃப் கோதா’ படம் இந்த ஆண்டு ஓணம் அன்று திரையரங்குகளில் வெளியாகும் என படக்குழு போஸ்டர் ஒன்றை வெளியிட்டு அறிவித்தது.
சமீபத்தில், ‘கிங் ஆஃப் கோதா’ திரைப்படத்தின் கதாபாத்திரங்களை வீடியோ ஒன்றை வெளியிட்டு படக்குழு அறிமுகப்படுத்தியது.
இந்நிலையில், ‘கிங் ஆஃப் கோதா’ திரைப்படத்தின் டீசர் ஜூன் 28ம் தேதி மாலை 6 மணிக்கு தெலுங்கு டீசரை நடிகர் மகேஷ் பாபு வெளியிடவுள்ளதாக போஸ்டர் வெளியிட்டு அறிவித்துள்ளனர்.
Mahesh Babu releases Telugu teaser of Dulquer Salmaan’s ‘King of Kotha’ film