தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்படும் சொகுசு கார்களுக்கு நுழைவு வரி விதிக்கப்படுவது வழக்கம்.
தான் இங்கிலாந்திலிருந்து இறக்குமதி செய்த காருக்கு விதிக்கப்பட்ட நுழைவு வரியை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார் நடிகர் விஜய்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி எஸ். எம். சுப்பிரமணியம் அந்த வழக்கை தள்ளுபடி செய்தார்.
அத்துடன் நடிகர் விஜய்க்கு ரூ.1 லட்சம் அபராதமும் விதித்தார். மேலும் விஜய்யை தனிப்பட்ட முறையில் கடுமையாக விமர்சித்து இருந்தார்.
இதனையடுத்து நடிகர் விஜய் மேல்முறையீடு செய்தார். அத்துடன் தன் மீது வைக்கப்பட்ட விமர்சனங்களை நீக்குமாறு கோரியிருந்தார்.
அதில் தனக்கு விதிக்கப்பட்ட 1 லட்சம் அபராதத்திற்கு தடை உத்தரவும் பெற்றார்.
இந்த நிலையில், கடந்த 2015-ம் ஆண்டு வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட சொகுசு காருக்கு விதிக்கப்பட்ட ரூ.60.66 லட்சம் நுழைவு வரியை எதிர்த்து நடிகர் தனுஷ் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார்.
கடந்த 2016ல் இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம் நுழைவு வரியில் 50% செலுத்தும்படி தனுஷுக்கு உத்தரவிட்டது.
50% வரியை செலுத்தும் பட்சத்தில் காரை பதிவு செய்ய வட்டார போக்குவரத்து அலுவலகத்துக்கு உயர் நீதிமன்றம், உத்தரவிட்டது.
ஆனால், அதற்கு எந்தவித பதிலும் தனுஷ் தரப்பில் இருந்து தெரிவிக்கப்படவில்லை.
இந்த நிலையில் இந்த வழக்கு நீதிபதி எஸ்.எம். சுப்பிரமணியம் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது.
அப்போது தனுஷ் தரப்பிலும் அரசு தரப்பிலும் வக்கீல்கள் ஆஜராகவில்லை.
இதையடுத்து இந்த வழக்கின் தீர்ப்பை இன்று ஆகஸ்ட் 5க்கு ஒத்திவைப்பதாக நீதிபதி அறிவித்தார்.
அதன்படி இன்றைய விசாரணையில்…
சொகுசு காருக்கு நுழைவு வரி விலக்கு கோரி வழக்கு தொடர்ந்த நடிகர் தனுஷ்க்கு ஐகோர்ட் நீதிபதி கண்டனம் தெரிவித்தார்.
நடிகர் தனுஷுக்கு உயர்நீதிமன்ற நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம் சரமாரி கேள்விகளை எழுப்பியுள்ளார்.
மக்கள் வரிப்பணத்தில் போடும் சாலையை பயன்படுத்தும் போது வரியை செலுத்த வேண்டியதுதானே என நீதி கேட்டுள்ளார்.
என்ன தொழில் செய்கிறார் என மனுவில் தெரிவிக்காதது ஏன்?
சோப்பு, பெட்ரோல் வாங்கும் சாமான்ய மனிதர்கள் வரி செலுத்துகின்றனர், கார் வாங்கும் நீங்கள் ஏன் வரி செலுத்த மறுக்கிறீர்கள்?
இந்தியாவில் சாமானிய மனிதர்களுக்கு ஒரு சட்டம், நடிகர் தனுஷுக்கு ஒரு சட்டம் என்று இல்லை.
ரூ.50-க்கு பெட்ரோல் போடும் பால்காரர் கூட பெட்ரோலில் ஜிஎஸ்டி வரியை கட்டுகிறார்கள்.
நடிகர் தனுஷ் செலுத்த வேண்டிய நுழைவு வரி விவரங்களை இன்று பிற்பகல் வணிகவரித்துறை தாக்கல் செய்ய உயர்நீதிமன்றம் உத்தரவு” என நீதிபதி சுப்பிரமணியம் கூறியுள்ளார்.
நுழைவு வரி விலக்கு கேட்டு தாக்கல் செய்த மனுவை திரும்ப பெறுவதாக நடிகர் தனுஷ் தரப்பு கூறியதை ஏற்கவும் நீதிபதி எஸ்.எம்.சுப்ரமணியம் மறுப்பு.
Madras High Court ordered Dhanush to pay the entry tax in luxury car case.