‘மாநாடு’ பர்ஸ்ட் & செகன்ட் லுக்…. மாஷா அல்லாஹ்… மாஸான லுக்கில் சிம்பு.!

‘ஈஸ்வரன்’ பட சூட்டிங்கை 40 நாட்களில் நடித்து முடித்து கொடுத்தார் சிம்பு.

இதனையடுத்து வெங்கட் பிரபு இயக்கி வரும் ‘மாநாடு’ படத்தில் கவனம் செலுத்தி வருகிறார்.

புதுச்சேரியில் ‘மாநாடு’ படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இது கிறிஸ்மஸ் வரை நடைபெறவுள்ளது.

இந்த நிலையில் இன்று (நவம்பர் 21) காலை 10:44 மணிக்கு ‘மாநாடு’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாஆனது.

மாலையில் செகன்ட் லுக் ரிலீசானது.

இதில் அப்துல் காலிக் என்ற இஸ்லாமிய இளைஞராக நடிக்கிறார் சிம்பு.

அரசியல் படமாக உருவாகும் இதில் சிம்பு உடன் பாரதிராஜா, எஸ்.ஏ.சந்திரசேகர், எஸ்.ஜே.சூர்யா, கல்யாணி ப்ரியதர்ஷன், மனோஜ், கருணாகரன், பிரேம்ஜி உள்ளிட்ட பலர் நடித்து வருகின்றனர்.

ரிச்சர்ட் எம்.நாதன் ஒளிப்பதிவு செய்ய இசையமைப்பாளராக யுவன் ஆகியோர் பணிபுரிந்து வருகின்றனர்.

சுரேஷ் காமாட்சி பெரும் பொருட்செலவில் இப்படத்தைத் தயாரித்து வருகிறார்.

Maanaadu first and second look released

Overall Rating : Not available

Latest Post