தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
பிரபல பாடலாசிரியர் பா.விஜய், அண்மைகாலமாக படங்களில் நாயகனாக நடித்து வருகிறார்.

‘ஞாபகங்கள்’, ‘இளைஞன்’, ‘ஸ்ட்ராபெரி’ ‘நைய்யப்புடை’ முதலான படங்களில் நடித்திருந்தார்.
தற்போது அவர் எழுதி இயக்கி கதாநாயகனாக நடிக்கும் படத்திற்கு ‘ஆருத்ரா’ என்று பெயர் சூட்டியுள்ளார்.
இதன் ஃப்ர்ஸ்ட் லுக் போஸ்டர் நேற்று வெளியானது.
‘ஸ்ரீதேனாண்டாள் ஃபிலிம்ஸ்’ நிறுவனமும், ‘VIL MAKERS PRODUCTIONS’ நிறுவனமும் இணைந்து தயாரிக்கும் இந்த படத்திற்கு இசை வித்யாசாகர்.
பி.எல்.சஞ்சய் ஒளிப்பதி செய்கிறார். ஷான் லோகேஷ் படத்தொகுப்பு செய்கிறார்.
விரைவில் மற்ற கலைஞர்கள் பற்றிய தகவல்கள் வெளியாகவுள்ளன.