தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
மணிரத்னம் மற்றும் லைக்கா நிறுவனம் இணைந்து தயாரித்த படம் ‘பொன்னியின் செல்வன் 2’.
இப்படத்தின் இறுதிக்கட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன. படத்தின் ப்ரோமோஷனை தயாரிப்பாளர்கள் ஏற்கனவே தொடங்கிவிட்டனர்.
‘பொன்னியின் செல்வன் 2′ ஏப்ரல் 28ஆம் தேதி வெளியாகும் என்று படக்குழு ஏற்கனவே அறிவித்துள்ளனர்.
இப்படத்தின் இசை வெளியீட்டு விழாவை ஏப்ரல் முதல் வாரத்தில் நடத்தத் திட்டமிட்டுள்ளது.
இந்த நிலையில், தற்போது, ’பொன்னியின் செல்வன் 2’ ஆடியோ வெளியீட்டு விழாவிற்கு தளபதி விஜய் அழைக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இயக்குனர் மணிரத்னம் 2011 இல் படத்தை எடுக்க முடிவு செய்த போது தளபதி விஜய் ‘பொன்னியின் செல்வன்’ படத்தில் வந்தியத்தேவனாக நடிக்க ஆரம்ப தேர்வாக இருந்தார்.
ஆனால் சில வருடங்களுக்குப் பிறகு படம் கிக்ஸ்டார்ட் ஆனபோது விஜய் அந்த வாய்ப்பை இழந்தார்.
எனவே தற்போது ’பொன்னியின் செல்வன் 2′ ஆடியோ வெளியீட்டு விழாவிற்கு விஜய்யை சிறப்பு விருந்தினராக அழைக்க ‘பொன்னியின் செல்வன்’ தயாரிப்பாளர்கள் திட்டமிட்டுள்ளனர்.
மேலும், விஜய் தற்போது காஷ்மீரில் ‘லியோ’ படத்தின் படப்பிடிப்பில் ஈடுபட்டு வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
Lyca have planned to invite Vijay for ps2 audio launch