தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
விஜய் நடிப்பில் உருவாகி வரும் ‘லியோ’ படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கி வருகிறார்
இந்தப் படத்திற்கு அனிருத் இசையமைக்க லலித் குமார் தயாரித்து வருகிறார்.
லோகேஷின் முந்தைய படத்தை போன்று இதிலும் எல்சியு இருக்கும் என கூறப்படுகிறது.
இந்த படம் வருகிற அக்டோபர் மாதம் 19ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டது.
இன்று ஜூன் 22ம் தேதி நடிகர் விஜய்யின் பிறந்த நாளை முன்னிட்டு முதல் பாடலை வெளியிடுவதாக அறிவித்துள்ளனர்.
நா ரெடி…’ என எனத் தொடங்கும் பாடலின் ப்ரோமோவை வெளியிட்டிருந்தனர்.
நா ரெடி தான் வரவா..
அண்ணா இறங்கி வரவா… என்று இந்த பாடல் தொடங்குகிறது.
இந்தப் பாடலை பாடியவர் உங்கள் #விஜய் எனவும் வாசகம் இடம் பெற்று இருந்தது.
Leo #NaaReady Promo is here!
https://t.co/THQz04oVyU
#Leo l #filmistreet
இந்த நிலையில் இன்று ஜூன் 22 ஆம் தேதி விஜய்யின் பிறந்த நாளை முன்னிட்டு மிக சரியாக 12 மணிக்கு ‘லியோ’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழுவினர் மற்றும் லோகேஷ் வெளியிட்டுள்ளனர்.
இந்த போஸ்டரில் ரத்தம் தெறிக்க தெறிக்க கையில் சுத்தியலை வைத்துக்கொண்டு விஜய் சுழற்றுகிறார்.
இது முழுக்க முழுக்க ஆக்சன் படமாக இருக்கும் என நம்பலாம்.
இந்த போஸ்டரை விஜய் ரசிகர்கள் சமூக வலகத்தளங்களில் வெறித்தனமாக பகிர்ந்து வருகின்றனர்.
Lokesh Kanagaraj launched Leo first look on Vijays Birthday