ஜெயலலிதா படத்தை இயக்கும் லிங்குசாமி; சசிகலா உறவினர் தயாரிப்பு..?

jayalalitha and lingu samyஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்று படத்தை இயக்க பலரும் முன் வந்துள்ளனர்.

`தி அயர்ன் லேடி’ என்ற பெயரில் உருவாகும் படத்தை மிஷ்கின் உதவியாளர் பிரியதர்ஷினி இயக்குவதாக அறிவித்து போஸ்டரை வெளியிட்டார்.

இதுபோல் இயக்குனர் விஜய் மற்றும் பாரதிராஜாவும் தலா ஒரு படங்களை இயக்குவதாக தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் ஜெயலலிதாவின் வாழ்க்கை படத்தை பிரபல இயக்குனர் லிங்குசாமி இயக்குவார் என சசிகலாவின் சகோதரரான திவாகரனின் மகன் ஜெயானந்த் தெரிவித்துள்ளார்.

அவரது ஃபேஸ்புக் பதிவில்.. `அம்மாவின் வாழ்க்கை வரலாறு தனித்துவம் கொண்ட இயக்குநர் எனது நண்பர் லிங்குசாமியால் படமாக்கப்படும்.

இதில் நடராஜன் மற்றும் சின்னம்மாவின் கதாபாத்திரம் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கும். தமிழக அரசியல் தலைவர்களுடன் இயக்குநர் பல செய்திகளின் உண்மைத் தன்மை அறிந்து தகுந்த ஆதாரங்களுடன் இப்படம் எடுக்கப்படும்..#natarajan_76_birthday’ இவ்வாறு பதிவிட்டுள்ளார்.

Overall Rating : Not available

Related News

Latest Post