தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
வருகிற பிப்ரவரி 21ஆம் தேதி அரசியல் கட்சியை ஆரம்பித்து அன்றைய தினமே மதுரையில் மிகப்பெரிய பொதுக்கூட்டம் ஒன்றை நடத்தவுள்ளார் கமல்ஹாசன்.
இதனையொட்டி ரஜினியை சந்தித்து அந்த மாநாட்டு அழைப்பு விடுத்தார் கமல்.
இதன்பின்னர் ரஜினி செய்தியாளர்களிடம் பேசியதாவது…
அரசியல் பயணம் தொடங்கும் கமல்ஹாசனுக்கு வாழ்த்து தெரிவித்தேன்.
ஆண்டவனின் ஆசிர்வாதம் கமலுக்கு கிடைக்க வேண்டுகிறேன்.
சினிமாவில் கமல் பாணி வேறு. என் பாணி வேறு. அதுபோல் அரசியலிலும் எங்கள் பாணி வேறாக இருக்கும்.
பணத்துக்காகவோ, புகழுக்காகவோ கமல் அரசியலுக்கு வரவில்லை என்பது அனைவருக்கும் தெரியும் மக்களுக்கு நல்லது செய்வது என்பதுதான் முக்கியம்.” இவ்வாறு ரஜினிகாந்த் பேசினார்.
Like Cinema in Politics also we follow separate style says Rajini about Kamal