தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள
Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
விஜய் நடிப்பில் உருவாகும் ‘லியோ’ படத்தை தன்னுடைய வழக்கமான LCU பாணியில் உருவாக்கி வருகிறார் இயக்குனர் லோகேஷ் கனகராஜ்.
நேற்று ஜூன் 22 ஆம் தேதி நடிகர் விஜய்யின் பிறந்த நாளை முன்னிட்டு நான் ரெடி என்ற முதல் சிங்கள் வெளியானது.
மேலும் ‘லியோ’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது.
இதில் ரத்தம் தெறிக்க தெறிக்க சுத்தியலை சுழற்றி அடிப்பதாக விஜய் போஸ் கொடுத்திருந்தார்.
இந்த போஸ்டரை விஜய் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.
இந்த நிலையில் ‘லியோ’ பட போஸ்டர் ஹாலிவுட் படத்தின் காப்பி என நெட்டிசன்கள் தெரிவித்து ஒரு படத்தையும் பகிர்ந்துள்ளனர்.
‘Game of Thrones’ வெப் தொடரில் வரும் ஜான் ஸ்னோவ் போஸ்டர் லுக் போன்று இருப்பதாக நெட்டிசன்கள் கலாய்த்து வருகின்றனர்.

Leo poster is copycat of Game of Thrones









