தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
விஜய் நடிப்பில் லோகேஷ் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘லியோ’ திரைப்படம் அக்டோபர் 19ஆம் தேதி திரைக்கு வர உள்ளது.
தமிழகத்தில் லியோ அதிகாலை காட்சிகள் ரத்து செய்யப்பட்ட நிலையில் 9:00 மணிக்கு முதல் காட்சி தொடங்கப்படும் என அறிவித்திருந்தது.
ஆனால் 7 மணி காட்சி வேண்டும் என தயாரிப்பு நிறுவனம் கேட்டிருந்த நிலையில் 7 மணி காட்சியை அனுமதிக்கலாமா வேண்டாமா என தமிழக அரசு முடிவு செய்யும் என உயர்நீதிமன்ற நீதிபதி அனிதா சுமந்த் சில மணி நேரங்களுக்கு முன்பு உத்தரவிட்டிருந்தார்.
ஆனால் கேரளா ஆந்திரா கர்நாடகா புதுச்சேரி உள்ளிட்ட மாநிலங்களில் அதிகாலை 4 மணி 7 மணி காட்சிகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் ஆந்திர மற்றும் தெலுங்கானாவில் லியோ-வின் தெலுங்கு பதிப்பு வெளியாவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
லியோ படத்தின் டைட்டில் விவகாரத்தால் இந்த பிரச்சனை எழுந்துள்ளதாக தகவல்கள் வந்துள்ளன. எனவே அக்டோபர் 20ஆம் தேதி வரை லியோ படம் வெளியாக கூடாது என மனுவில் கோரப்பட்டுள்ளது. ஆனால் இந்த பிரச்சனை விரைவில் தீர்க்கப்படும் என செய்திகள் வந்துள்ளன.
‘லியோ’ படத்திற்கு தடை விதிக்கப்பட்ட விவகாரம் விஜய் ரசிகர்கள் மத்தியில் டென்ஷனை உருவாக்கியுள்ளது எனலாம்.
Leo movie will not be released Vijay fans Tension