தலைமை செயலகத்தில் ‘லியோ’ வழக்கறிஞர்கள் வந்த கார் விபத்து

தலைமை செயலகத்தில் ‘லியோ’ வழக்கறிஞர்கள் வந்த கார் விபத்து

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

விஜய் நடிப்பில் உருவாகியுள்ள ‘லியோ’ படம் அக்டோபர் 19ஆம் தேதி வெளியாக உள்ளது.

இந்த படத்திற்கு அதிகாலை 9:00 மணிக்கு தான் காட்சிகள் திரையிடப்பட வேண்டும் என அரசு அறிவித்து இருந்தது. ஆனால் அதிகாலை 4 மணி காட்சி 7 மணி காட்சிகள் திரையிட அனுமதி அளிக்க வேண்டும் என வழக்கு தொடுத்து இருந்தது தயாரிப்பு நிறுவனம்.

அதிகாலை 4:00 மணி காட்சிக்கு அனுமதி அளிக்க முடியாது.. 7 மணி காட்சிக்கு அனுமதி வேண்டும் என்றால் தமிழக அரசை தயாரிப்பு நிறுவனம் நாடலாம் என நீதிபதி அனிதா சுமந்த் உத்தரவிட்டிருந்தார்.

இந்த நிலையில் சென்னை தலைமைச் செயலகத்திற்கு லியோ படத்தயாரிப்பு நிறுவன வழக்கறிஞர்கள் குழுவினர் வந்த இருந்தனர்.

அவர்கள் உள்துறை செயலாளரை சந்தித்துவிட்டு திரும்பிய பிறகு, ஓட்டுநரை காரை எடுத்து வரச் சொல்லி இருந்தனர்.

அப்போது அந்த கார் இருசக்கர வாகனத்தில் வந்த பெண் மீது மோதியது. தலைமைச் செயலக வளாகத்தில் நடந்த இந்த விபத்தால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

லியோ

Leo movie advocates car met with accident

இனி தியேட்டர்களில் ட்ரைலர்கள் வெளியிடுவது இல்லை – திருப்பூர் சுப்ரமணியம்

இனி தியேட்டர்களில் ட்ரைலர்கள் வெளியிடுவது இல்லை – திருப்பூர் சுப்ரமணியம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திரங்கள் படங்கள் ரிலீஸ் ஆவதற்கு முன்பு ட்ரெய்லர்கள் வெளியிடுவது வழக்கம்.

இந்த ட்ரெய்லர் வெளியிடப்படும்போது ரசிகர்களை அனுமதிப்பது ஒரு சில திரையரங்குகள் செய்து வருகின்றன.

சமீபத்தில் விஜய் நடித்த ‘லியோ’ படத்தின் டிரைலர் சென்னையில் உள்ள ரோகினி திரையரங்கில் இலவசமாக ஐந்து நிமிடங்களுக்கு திரையிடப்பட்டது. அந்த ஐந்து நிமிடங்கள் கழித்த பிறகு தான் தியேட்டர் நாசமானது நிர்வாகத்திற்கு தெரிய வந்தது.

தியேட்டரில் உள்ள அனைத்து சீட்டுகளையும் அடித்து நொறுக்கி இருந்தனர் விஜய் ரசிகர்கள். இதற்கு விஜய் தரப்பில் இருந்து ஒரு கண்டன அறிக்கை கூட வெளியிடப்படவில்லை.்தயாரிப்பு நிறுவனமும் இதை கண்டு கொள்ளவில்லை.

இந்த நிலையில் திரையரங்கு உரிமையாளர்கள் சங்கத் தலைவர் திருப்பூர் சுப்ரமணியம் ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார்.

அதில்…

ஒரு சில திரையரங்குகளில் ட்ரெய்லர்கள் ரிலீஸ் செய்வதால் சட்டம் ஒழுங்கு பிரச்னை ஏற்படுவதோடு, திரையரங்கிலும் பாதிப்பு ஏற்படுகிறது.

எனவே, இனி திரையரங்குகளில் ட்ரெய்லர்கள் வெளியிடுவது இல்லை என முடிவு செய்துள்ளோம்” என திருப்பூர் சுப்ரமணியம் தெரிவித்துள்ளார்.

Movie trailers will not be released in theatres

சிவகார்த்திகேயன் செய்த துரோகம்.? இமானின் முதல் மனைவி ஓபன் டாக்

சிவகார்த்திகேயன் செய்த துரோகம்.? இமானின் முதல் மனைவி ஓபன் டாக்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

நிறைய விளம்பரப் படங்களில் இசை அமைத்த பிறகு தான் சினிமாவில் இசையமைக்கும் வாய்ப்பை பெற்றார் இமான். இன்று வரை சென்னை சில்க்ஸ் விளம்பரத்தில் ஒலிப்பது இவரது இசை தான்.

விஜய் நடித்த ‘தமிழன்’ படத்தின் மூலமாக சினிமாவில் இசையமைப்பாளராக அறிமுகமானார் இமான். 100 படங்களை கடந்த பின்பு தான் ரஜினியின் அண்ணாத்த படத்திற்கு இசையமைத்தார் இமான்.

தமிழ் சினிமாவின் மெலோடி கிங் என ரசிகர்களால் அழைக்கப்படுபவர் இமான். சிவகார்த்திகேயனின் பல படங்களுக்கு இசையமைத்துள்ளார்.

எனவே இவர்களுக்கு ஒரு நல்ல நட்பு இருந்து வந்த நிலையில் திடீரென சமீப காலமாக இருவரின் நட்புக்கு இடையே பிரிவு உண்டானது.

“சிவகார்த்திகேயன் ஒரு துரோகி.. இனி என் வாழ்வில் அவரது படங்களுக்கு இசையமைக்க மாட்டேன். என்னுடைய பர்சனல் விஷயங்களை வெளியில் சொல்ல முடியாது என சமீபத்தில் பேட்டியில் தெரிவித்திருந்தார் இமான்.

இந்த நிலையில் இமானின் முதல் மனைவி மோனிகா ஒரு ஊடகத்திற்கு தன் மனம் திறந்த பேட்டி அளித்துள்ளார். அந்த பேட்டியில் அவர் கூறியுள்ளதாவது..

“இமானுக்கும் சிவகார்த்திகேயனுக்கும் நல்ல நட்பு இருந்தது. என்னை இமான் விவகாரத்தை செய்ய நினைத்தபோது சிவகார்த்திகேயன் எங்களை சமாதானம் செய்ய முயற்சித்தார்.

ஒரு நல்ல நண்பன் என்பது குடும்பத்திற்குள் நுழைந்து சமாதானம் செய்ய முயற்சி செய்தது தவறா? ஆனால் அவரை துரோகி என்று சொல்லி இருக்கிறார் இமான்.

ஏற்கனவே ஒரு பெண்ணை பார்த்து விட்டு தான் என்னை விவகாரத்து செய்ய முன்வந்துள்ளார் இமான். ஒரு கட்டத்தில் எங்கள் குடும்பத்தை மிரட்டி விவகாரத்து பெறச் செய்தார். ஒன்றை மாதங்களில் விவகாரத்தும் பெற்றோம்.” என தெரிவித்துள்ளார் டி இமானின் முதல் மனைவி மோனிகா.

மோனிகா

What happen between Sivakarthikeyan and D Imman says Monica

தினமும் 1000 பேருக்கு அன்னதானம்.; கார்த்தி ப்ளானை ஆரம்பித்த ‘ஜப்பான்’ படக்குழு

தினமும் 1000 பேருக்கு அன்னதானம்.; கார்த்தி ப்ளானை ஆரம்பித்த ‘ஜப்பான்’ படக்குழு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கார்த்தி நடிப்பில் 25 ஆவது படமாக தயாராகி இருக்கும் ‘ஜப்பான்’ திரைப்படத்தை கொண்டாடும் வகையில் அவருடைய ரசிகர்கள் இன்று முதல் தொடர்ந்து 25 நாட்களுக்கு, தினசரி ஆயிரம் பேர் வீதம், 25 ஆயிரம் மக்களுக்கு அன்னதானத்தை வழங்குகிறார்கள்.

கார்த்தி மக்கள் நல மன்றம் சார்பில் தொடங்கப்பட்டிருக்கும் இந்த தினசரி அன்னதானத் திட்டத்தை ‘ஜப்பான்’ படத்தின் தயாரிப்பாளரான எஸ் ஆர் பிரபுவும், அப்படத்தின் இயக்குநரான ராஜுமுருகனும் இணைந்து தொடங்கி வைத்தனர்.

ஜப்பான்

இதன்போது கார்த்தி மக்கள் நல மன்றத்தின் அகில இந்திய செயலாளர் உள்ளிட்ட மாநில நிர்வாகிகளும், மாவட்ட தலைவர்களும் உடனிருந்தனர்.

நடிகர் கார்த்தி நடிப்பில் தயாராகி வரும் 25 வது திரைப்படம் ‘ஜப்பான்’.

இதனை முன்னிட்டு 25 ஆயிரம் மக்களுக்கு உணவு வழங்க வேண்டும் என நடிகர் கார்த்தி விருப்பம் தெரிவித்தார்.

அவருடைய விருப்பத்தை நிறைவேற்றும் வகையில் கார்த்தி மக்கள் நல மன்றம் மற்றும் உழவன் அறக்கட்டளை சார்பில் ஒரே நாளில் 25 ஆயிரம் பேருக்கு உணவு வழங்குவதை விட, இன்று முதல் தொடர்ந்து 25 நாட்களுக்கு நாள்தோறும் ஆயிரம் பேருக்கு உணவு வழங்க திட்டமிட்டனர்.

ஜப்பான்

அக்டோபர் 17ஆம் தேதியான இன்று தொடங்கி, ‘ஜப்பான்’ திரைப்படம் வெளியாகும் நவம்பர் 10ஆம் தேதி வரை இந்த உணவு வழங்குவது தொடரும் என்று கார்த்தி ரசிகர் மன்றத்தினர் தெரிவித்திருக்கிறார்கள்.

இதன் போது சென்னையில் உள்ள பல்வேறு பகுதிகளுக்கு நாள்தோறும் ஆயிரம் மக்களுக்கான சுவையான உணவினை பரிமாறவிருக்கிறார்கள்.

பசித்த வயிறுக்கு உணவிட வேண்டும் என்ற உன்னத நோக்கத்துடன் தொடங்கப்பட்டிருக்கும் இந்த திட்டத்தை கண்டு.. யாரேனும் ஒருவர் பசித்த ஒருவருக்கு உணவு வழங்கினாலும் கார்த்தியின் நோக்கம் வெற்றி பெறும் என கார்த்தி மக்கள் நல மன்ற நிர்வாகிகள் தெரிவித்தனர்.

ஜப்பான்

அக்டோபர் 17ஆம் தேதியான இன்று சென்னையில் உள்ள தி. நகர் பகுதியில் கார்த்தி மக்கள் நல மன்றத்தின் அகில இந்திய செயலாளர் வீரமணி, மாநில நிர்வாகிகள், சென்னை மண்டல ஒருங்கிணைப்பாளர் மாவட்ட தலைவர்கள் ஆகியோர் உடனிருக்க.. ‘ஜப்பான்’ படத்தின் தயாரிப்பாளர் எஸ். ஆர். பிரபு மற்றும் இயக்குநர் ராஜுமுருகன் ஆகியோர் ஆயிரம் பேருக்கு சுவையான வழங்கும் திட்டத்தை கொடி அசைத்து தொடங்கி வைத்தனர்.

தமிழ் திரையுலகின் முன்னணி நட்சத்திர நடிகரான கார்த்தி நடிக்கும் 25 வது படமான ‘ஜப்பான்’ படத்தின் வெற்றிக்காக.. 25 நாட்கள் 25 ஆயிரம் பேருக்கு உணவு வழங்கும் உன்னத திட்டத்தை முன்னெடுத்ததற்காக திரையுலகினரும், ரசிகர்களும் கார்த்தி மற்றும் அவருடைய மக்கள் நல மன்றத்தினருக்கு வாழ்த்துகளை தெரிவித்திருக்கிறார்கள்.

ஜப்பான்

Karthi decided to donate food for 1000 peoples

BREAKING ‘லியோ’ படத்திற்கு தடை.; ரிலீசில் சிக்கல்.. டென்ஷனில் விஜய் ரசிகர்கள்

BREAKING ‘லியோ’ படத்திற்கு தடை.; ரிலீசில் சிக்கல்.. டென்ஷனில் விஜய் ரசிகர்கள்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

விஜய் நடிப்பில் லோகேஷ் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘லியோ’ திரைப்படம் அக்டோபர் 19ஆம் தேதி திரைக்கு வர உள்ளது.

தமிழகத்தில் லியோ அதிகாலை காட்சிகள் ரத்து செய்யப்பட்ட நிலையில் 9:00 மணிக்கு முதல் காட்சி தொடங்கப்படும் என அறிவித்திருந்தது.

ஆனால் 7 மணி காட்சி வேண்டும் என தயாரிப்பு நிறுவனம் கேட்டிருந்த நிலையில் 7 மணி காட்சியை அனுமதிக்கலாமா வேண்டாமா என தமிழக அரசு முடிவு செய்யும் என உயர்நீதிமன்ற நீதிபதி அனிதா சுமந்த் சில மணி நேரங்களுக்கு முன்பு உத்தரவிட்டிருந்தார்.

ஆனால் கேரளா ஆந்திரா கர்நாடகா புதுச்சேரி உள்ளிட்ட மாநிலங்களில் அதிகாலை 4 மணி 7 மணி காட்சிகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் ஆந்திர மற்றும் தெலுங்கானாவில் லியோ-வின் தெலுங்கு பதிப்பு வெளியாவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

லியோ படத்தின் டைட்டில் விவகாரத்தால் இந்த பிரச்சனை எழுந்துள்ளதாக தகவல்கள் வந்துள்ளன. எனவே அக்டோபர் 20ஆம் தேதி வரை லியோ படம் வெளியாக கூடாது என மனுவில் கோரப்பட்டுள்ளது. ஆனால் இந்த பிரச்சனை விரைவில் தீர்க்கப்படும் என செய்திகள் வந்துள்ளன.

‘லியோ’ படத்திற்கு தடை விதிக்கப்பட்ட விவகாரம் விஜய் ரசிகர்கள் மத்தியில் டென்ஷனை உருவாக்கியுள்ளது எனலாம்.

லியோ

Leo movie will not be released Vijay fans Tension

Breaking 7AM SHOW கூட தேவையில்ல.. சொன்னது யார் தெரியும்ல.?.; பாவம்ய்யா விஜய் ரசிகர்கள்

Breaking 7AM SHOW கூட தேவையில்ல.. சொன்னது யார் தெரியும்ல.?.; பாவம்ய்யா விஜய் ரசிகர்கள்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

விஜய் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘லியோ’ திரைப்படம் நாளை மறுநாள் அக்டோபர் 19ஆம் தேதி ரிலீஸ் ஆகிறது.

இந்த படத்திற்கு பெரும் எதிர்ப்பார்ப்பு எழுந்த நிலையில் அதிகாலை காட்சிகள் வேண்டுமென ரசிகர்களும் தயாரிப்பு நிறுவனமும் அடம்பிடிக்கின்றது.

ஆந்திரா கேரளா கர்நாடகா தெலுங்கானா உள்ளிட்ட மாநிலங்களில் அதிகாலை 4am / 5am மணி காட்சிக்கு புதுச்சேரியில் 7am மணி காட்சிக்கு ‘லியோ’ படத்திற்கு அந்தந்த மாநில அரசுகள் அனுமதி அளித்துள்ளன.

‘லியோ’ திரைப்படத்திற்கு அதிகாலை 4 மணிக்கு சிறப்பு காட்சி வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றத்தில் தயாரிப்பு நிறுவனம் மனு தாக்கல் செய்திருந்தது,

இதை விசாரித்த நீதிபதி அனிதா சுமந்த் 4 மணி காட்சிக்கு மறுப்பு தெரிவித்ததோடு 7 மணி காட்சி வேண்டுமானால் தமிழக அரசிடம் பேசி பெற்றுக் கொள்ளுங்கள் என அறிவுறுத்தி இருந்தார்.

அத்தோடு இந்த விவகாரத்தில் திரையரங்கு உரிமையாளர்களின் நிலைப்பாடு என்ன என்பதை மாலை 4 மணிக்குள் தெரிவிக்கவும் சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்திருந்தது.

இது தொடர்பாக மனு தாக்கல் செய்துள்ள திரையரங்கு உரிமையாளர் சங்கத்தினர் அரசு வழங்கி உள்ள ஐந்து காட்சிகள் போதுமானது என தெரிவித்துள்ளன.

மேலும் காலை 9 மணி முதல் நள்ளிரவு ஒரு மணிக்குள் ஐந்து காட்சிகள் திரையிட போதுமான நேரம் உள்ளதாகவும் தெரிவித்துள்ளது.

மேலும் அதிகாலை காட்சிகள், 7மணி காட்சிகள் தேவையற்றது. இதனால் திரையரங்கின் பாதுகாப்பு கேள்விக்குறியாக உள்ளதாகவும், தமிழக அரசின் உத்தரவை பின்பற்றுவதே சரியாக இருக்கும் என பதில் மனுவில் தெரிவித்துள்ளனர்.

தியேட்டர் உரிமையாளர்களின் இந்த பதில் நிச்சயமாக விஜய் ரசிகர்களை வருத்தம் அடையச் செய்யும். அதிகாலையில் தளபதி விஜய்யை காண வேண்டும் என ரசிகர்கள் காத்துக் கிடக்கின்றனர்.

என்ன மூன்று மணி நேரம் தாமதமாக விஜய் திரையில் பார்த்துக் கொள்ளலாம் என அவர்கள் நினைத்தால் மட்டுமே அவர்களுக்கு ஆறுதல் கிடைக்கும் என நம்பலாம்.

No need of 7am shows for Leo Theatre owners reaction

More Articles
Follows