தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
கடந்த சில தினங்களாகவே கோலிவுட்டில் பரபரப்பாக பேசப்பட்டு வரும் திரைப்படமாக ‘லியோ’ உருவெத்துள்ளது.
இதற்கு காரணம் ‘லியோ’ படத்தின் இசை வெளியீட்டு விழா ரத்தானது. அதன் பிறகு லியோ படத்தின் முன்னோட்ட நிகழ்ச்சி நடைபெறும் எனக் கூறப்பட்டது. அதுவும் இதுவரை நடைபெறவில்லை.
விஜய் நடித்துள்ள ‘லியோ’ படம் 19ஆம் தேதி வெளியாகவுள்ள நிலையில் இந்தப் படத்திற்கு சிறப்பு அதிகாலை 4 மணி காட்சிகளுக்கு அனுமதிக்க வேண்டும் என தயாரிப்பு நிறுவனம் தரப்பில் கோரப்பட்டு இருந்தது.
இந்த கடிதம் இணையதளங்களில் வைரலான நிலையில் விஜய் ரசிகர்களும் சில பொய் மீடியாக்களும் தவறான செய்திகளை பரப்பியது. அதன்படி காலை 4 மணிக்கு காட்சி ஒளிபரப்பாகும் என பொய் செய்திகளை வெளியிட்டிருந்தனர்.
ஆனால் நம் FILMISTREET தளத்தில் அப்படி ஒரு எந்த செய்தியும் வெளியாகவில்லை. நமக்கும் இது தொடர்பான பல அழைப்புகள் வந்தன. நாம் எவ்வளவு எடுத்துக் கூறியும் பல முன்னணி மீடியாக்கள் செய்தி வெளியிட்டு இருந்தன என சிலர் கருத்து தெரிவித்தனர்.
முன்னணி நிறுவனமாக இருந்தாலும் பொய் சொன்னால் அது உண்மையாகாது என்பதை நிரூபிக்கும் வகையில் தற்போது புதிய அரசாணையை வெளியிட்டுள்ளது தமிழக அரசு.
அதன்படி காலை 9 மணிக்கு தான் முதல் காட்சி தொடங்கப்பட வேண்டும் எனவும் இரவு 1.30க்குள் 5 காட்சிகளையும் முடித்து விட வேண்டும் எனவும் கூறப்பட்டுள்ளது.
மேலும் நேற்று வெளியான தமிழக அரசு ஆணையில் தளபதி விஜய் குறிப்பிடப்பட்டிருந்தது. ஆனால் தற்போது லியோ என படத்தின் பெயரை குறிப்பிட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
நேற்று சில ஊடகங்களும் ரசிகர்களும் அந்த அரசாணையை தவறாக படித்த நிலையில் காலை 4 மணிக்கு காட்சிகள் தொடங்கும் என போய் செய்திகளை பரப்பியதால் சில விஜய் ரசிகர்கள் மகிழ்ச்சியில் இருந்தனர்.
ஆனால் தற்போது வந்துள்ள புதிய அறிவிப்பு அவர்களை அப்செட் ஆக்கியிருக்கும் என நம்பலாம். ஆகஸ்ட் 10ஆம் தேதி வெளியான ரஜினியின் ‘ஜெய்லர்’ படத்திற்கு சிறப்பு அதிகாலை காட்சிகள் வழங்கப்படவில்லை.
அப்படி இருக்கையில் ‘லியோ’ படத்திற்கு மட்டும் எப்படி வழங்கலாம் ? ரஜினி – அஜித் ரசிகர்கள் நினைத்திருந்த வேளையில் தற்போது வந்துள்ள புதிய அரசாணை அவர்களை மகிழ்ச்சி வெள்ளத்தில் ஆழ்த்தியுள்ளது எனலாம்.
Leo FDFS timing Government Order is here