லீ பிக்சர்ஸ் தயாரிப்பில் அம்பு எய்ம் பண்றான் ஜஸ்ட் மிஸ்

லீ பிக்சர்ஸ் தயாரிப்பில் அம்பு எய்ம் பண்றான் ஜஸ்ட் மிஸ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

New Project (2)லீ பிக்சர்ஸ் சார்பில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் படம் “அம்பு எய்ம் பண்றான் ஜஸ்ட்மிஸ்” இந்த படத்தை இயக்குவதன் மூலம் இயக்குனராக அறிமுகமாகிறார் ஆர் விக்னேஷ் . இவர் சில வருடங்களுக்கு முன்பு பசுபதி நடிப்பில் வெளியான TN 07 4777 என்கிற படத்தில் உதவி இயக்குனராக பணியாற்றியவர்.

இந்த படத்தில் கதாநாயகனாக வருண் நடிக்க, ஜெய்ஸ்ரீ கதாநாயகியாக நடிக்கிறார் மற்றும் ஸ்ரீநாத், ராகுல் தாத்தா, லொள்ளுசபா மனோகர், மொட்ட ராஜேந்திரன்,பப்லு (அறிமுகம்) ஆகிய முன்னணி நட்சத்திரங்கள் பலர் நடிக்கும் இந்தப்படம் ஒரு கலகலப்பான கமர்சியல் படமாக உருவாகி வருகிறது.

ஐந்து பாடல்கள் இடம்பெறும் இந்த படத்திற்கு ஜெய்கிரிஷ் இசை அமைக்கிறார். இதில் இரண்டு பாடல்களை வித்தியாசமாக படமாக்கியுள்ளதாக இயக்குனர் கூறியுள்ளார். மேலும் ஒரு பாடல் பாங்காங்கில் படமாக்கப்பட்டுள்ளது படத்திற்கு ஒளிப்பதிவு செய்கிறார் .விஜயமோகன்

காமெடி கலந்த காதல் கதையாக ஒரே நாளில் ஒரு பார்க்கில் நடக்கிற காதல் கூத்துக்கள் என இப்படத்தில் புதுமையான முயற்சியை மேற்கொண்டுள்ளார் இயக்குனர் ஆர்.விக்னேஷ். படத்தின் க்ளைமாக்ஸ் காட்சி பெங்களூர் லால்பார்க், செம்மொழிப் பூங்கா மற்றும் சென்னை அதன் சுற்றுப்புறங்களில் படப்பிடிப்பு நடைபெற்றுள்ளது. இந்த படத்தில் 50% படப்பிடிப்பு முடிவடைந்துள்ளது.. வரும் ஆகஸ்ட் மாதம் இந்த படம் திரைக்கு வர இருக்கிறது.

தொழில்நுட்ப கலைஞர்கள் விபரம்:

எழுத்து – இயக்கம் : ஆர்.விக்னேஷ்

ஒளிப்பதிவு ; விஜய மோகன்

இசை ; ஜெய்கிரிஷ்

படத்தொகுப்பு ; ரமேஷ் பாபு

நடனம் ; தினேஷ், சதீஷ்

பாடல்கள் ; மணி அமுதன், பா .விஜய்

சண்டைப்பயிற்சி ; ஃபயர் கார்த்திக்

தயாரிப்பு நிர்வாகம் ; தி. பாக்கியசாமி

மக்கள் தொடர்பு ; செல்வரகு

புதிய சிகரத்தை நோக்கி ஸ்ருதிஹாசன்

புதிய சிகரத்தை நோக்கி ஸ்ருதிஹாசன்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

New Project (1)யூ எஸ் ஏ என்னும் பிரபல நெட்வொர்க்கால் ஒப்பந்தம் செய்யப்பட்ட முதல் தென்னிந்திய சூப்பர் ஸ்டார் என்ற பெருமையை அவர் பெற்றுள்ளார். அவர் டிரெட்ஸ்டோன் என்னும் தொலைக்காட்சி தொடரில் ஒரு முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.

இத்தொடர் அமெரிக்காவின் புலனாய்வு நிறுவனமான CIA வின் ஒரு முக்கிய பகுதியாக கருதப்படும் பிளாக் ஆப்ஸ் புரோக்ராம் ஆன டிரெட்ஸ்டோனை மையப்படுத்தி எடுக்கப் படுகிறது. டிரெட் ஸ்டோன்னில் பணி புரியும் அதிகாரிகளுக்கு அசாத்திய ஆற்றல் பெறுவதற்கான பயிற்சி அளிக்கப்பட்டு அவர்கள் அசாத்திய கொலையாளிகளாக , திறமை பெற்றவர்களாக மாற்றப்படுவர்.

இந்த தொலைக்காட்சி தொடரில் ஸ்ருதி நீரா படெல் என்கிற கதாபாத்திரத்தை ஏற்று நடிக்கிறார்.
இக்கதாப்பாத்திரம் டெல்லியில் ஒரு ஹோட்டல் பணியாளராக வேலை பார்த்து கொண்டே மறைமுகமாக கொலையாளியாகவும் உலவும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது .

இந்தத் தொடர் ஹெரோஸ்ஸை உருவாக்கிய டிம் கிரிங் என்பவரால் எழுதப்பட்டதாகும். இத்தொடரில் ஜெரிமி ஐர்வின்‌, பிரயன் ஸிமித் ஒமார் மெட்வாலி மற்றும் டிரேஸி இபிஈயகார்ரும் நடிக்கின்றனர்.

ஸ்ருதிஹாசன் நடிப்பு மட்டும் இல்லாமல் உலக அளவில் இசையிலும் தனது அழுத்தமான பதிவை பதிவு செய்யும் அசாத்திய கலைஞராக இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

UKவில் இசைக்குப் பெயர் பெற்ற பல மேடைகளிலும், சபைகளிலும் அவர் பாடியுள்ளார். தற்போது அவருடைய முதல் இசை ஆல்பத்தை வெளியிடுவதில் மும்முரம் காட்டி வருகிறார். மேலும் படங்களைப் பொறுத்த வரையில் ஸ்ருதிஹாசன் தற்போது லாபம் படத்தில் நடிகர் விஜய்சேதுபதிக்கு ஜோடியாக நடித்து வருகிறார்.

வட்டகரா படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமாகும் இயக்குனர் K பாரதி கண்ணன்

வட்டகரா படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமாகும் இயக்குனர் K பாரதி கண்ணன்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

New Project (4)“வட்டகரா” படத்தின் இயக்குனர் K.பாரதி கண்ணன பேசும் போது
சினிமாவில் சாதிக்கத் துடிக்கும் பலரில், தற்பொழுது சிலரை அறிமுகப்படுத்துவதில் பெருமையாக உள்ளது. அந்தமானில் பல குரும்படங்களை இயக்கி பல விருதுகளை பெற்றுள்ளார். இப்போது தயாரிப்பாளர் சதீஸ் மற்றும் கார்த்திக்ராஜ் அவர்கள் மூலம் வெள்ளித்திரை சினிமாவில் அறிமுகமாகி உள்ளார்.
இக்கதையை பற்றி சதீஸ் அவர்களிடம் சொன்னபொழுது, அவருக்கு கதையின் மேல் கொண்ட ஈர்ப்பால் படப்பிடிப்பிற்கான அடுத்தக்கட்ட வேலைகளை பார்க்க ஆரம்பித்ததுடன், நான்கு நாயகர்களில் தானும் ஒரு நாயகராக நடிக்க சம்மதம் தெரிவித்தார். இது என் மீது அவர்கொண்ட நம்பிக்கையை அதிகப்படுத்தி விட்டது என்று சொல்லலாம்.
First look POSTER வெளியீடு தொடர்பாக எண்ணிய தருணத்தில் இயக்குனர் திரு.கார்த்திக் சுப்பராஜ் அவர்களிடம் அனுகினோம், இந்த படத்தின் வித்தியாசமான தலைப்பும் அதற்கான போஸ்டரும் என்னை வெகுவாக கவர்ந்தது மட்டுமல்லாமல் இந்த படத்தினை திரையில் காண்பதற்கான ஆவலும் கொண்டுள்ளதாக POSTER வெளியீட்டின் போது கூறியதும், பாராட்டியதும் எங்களுக்கு மேலும் ஊக்கத்தைக் கொடுத்தது.
வித்தியாசமான படங்கள் கொடுப்பவரின் மனதில், எங்கள் படம் வித்தியாசமான ஒன்றாக இருக்கும் என்ற தாக்கத்தை ஏற்படுத்தியது. இது எங்களின் வெற்றிக்கு மேலும் வலு சேர்க்கும் விதமாக அமைந்தது.

சினிமாவில் புதியதொரு பயணத்தை தொடங்கிய எங்களுக்கு, இத்துறையில் அனுபவம் வாய்ந்த பல தொழில்நுட்ப வல்லுனர்கள் எங்களை வழிநடத்துவது பெருமையாக கருதுகிறோம். குறிப்பாக இசையமைப்பாளர் தாஜ்நூர் அவர்களுக்கு நன்றி சொல்ல கடமைப் பெற்றிருக்கிறோம். அவரின் இசை படத்திற்கு மேலும் வலுசேர்த்துடன் வெற்றியையும் நிர்ணயித்துள்ளது.

ஜேசன் வில்லியம்ஸின் ஒளிப்பதிவு கொரியன் படம் அளவிற்கு காட்சிகளும், அதற்கான வண்ணங்களும் பிரம்மாண்டமாக கொடுத்துள்ளார்.

படத்தொகுப்பாளர் அமர்நாத் திரைக்கதைக்கு ஏற்ப கதையினை ஹாலியுட் அளவிற்க்கு கனகட்சிதமாக தொகுத்து வழங்கியுள்ளார்.
பல வெற்றிப்படங்களுக்கு ஒளிவடிவமைப்பாளராக பணியாற்றியுள்ள SFX M.J.ராஜீ அவர்களுடன் கைக்கோர்த்தும் படத்தினை பற்றி அவர் பாராட்டியதையும் நினைக்கும் போது மகிழ்ச்சியாக இருக்கிறது. இவர்கள் அனைவரும் தொழில்நுட்ப ரீதியில் ஒரு புதிய முயற்சியில் ஈடுப்பட்டுள்ளார்கள்.
படத்திற்கான பாடல் வரிகளை கபிலன், சினேகன், இளையகம்பன், நிமேஸ் போன்றோர் எழுதியுள்ளனர். கபிலன் அவர்களின் பாடல் வரிகள் இன்றைய சூழ்நிலை குறித்த தத்துவப் பாடலாகவும், சினேகன் தனது அப்பாவை மனதில் கொண்டு மிகவும் உணர்வுப்பூர்வமான பாடல் எழுதியுள்ளார். அப்பாவிற்கான இந்த பாடல் சூப்பர் ஹிட் ஆகும் என நாங்கள் நம்புகிறோம். மற்றொரு காதல் வரிகளை இளையகம்பன் அவர்கள் எழுதியுள்ளார், இதுவரை இல்லாத நிலையில் வித்தியாசமான பேச்சில் தன் அரும்புக்காதலை வெளிப்படுத்தும் பாடல் ஒன்றை நிமேஸ் கொடுத்துள்ளார்.
படத்தின் நாயகர்களாகிய அங்காடித்தெரு மகேஷ், சதீஷ், சரனேஷ் குமார், மற்றும் கண்ணன் மாதவன் ஆகியோர் நடித்துள்ளார்கள்… இதன் கதை நான்கு நபர்களை நோக்கி நகர்வதால் அனைவாரும் தங்களுக்கான நடிப்புத்திறனை அருமையாக வெளிப்படுத்தியுள்ளனர்.
படத்திற்கான அடுத்தகட்ட வேளைகள் நடந்து கொண்டிருக்கிறது.

ஒரு வித்தியாசமான கதைக்களத்துடன் விரைவில் உங்கள் அனைவரையும் திரையில் சந்திக்கின்றோம். என்கிறார் இயக்குனர் K.பாரதி கண்ணன்

சிபிராஜ் நடிக்கும் ‘வால்டர்’ படத்தின் தலைப்பு சிக்கல் தீர்ந்தது

சிபிராஜ் நடிக்கும் ‘வால்டர்’ படத்தின் தலைப்பு சிக்கல் தீர்ந்தது

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

New Project (3)சிபிராஜ் நடிக்கும் “வால்டர்” படப்பிடிப்பு துவங்கியுள்ள நிலையில், அதன் தலைப்பு முக்கியத்துவம் காரணமாக ஒரு உற்சாகமான சூழ்நிலையை உருவாக்கியிருக்கிறது. நிச்சயமாக, சிபிராஜின் தந்தை சத்யராஜ் அவரது திரை வாழ்வில் மறக்க முடியாத ‘வால்டர் வெற்றிவேல்’ கதாபாத்திரத்தின் மூலம் அற்புதமான நடிப்பை வெளிப்படுத்தி இருந்தார். இருப்பினும், தலைப்பு தொடர்பாக எதிர்பாராத சர்ச்சையில் இந்த படமும் சிக்கியது. தற்போது அத்தகைய பிரச்சினைகள் நீங்கி, இந்த படத்திற்கு ‘வால்டர்’ என்ற தலைப்பு கிடைத்திருப்பதால் ஒட்டுமொத்த குழுவும் மிகுந்த மகிழ்ச்சியில் இருக்கிறது.

இது குறித்து தயாரிப்பாளர் பிரபு திலக் கூறும்போது, “சிபிராஜ் அவர்களின் தந்தை சத்யராஜ் சாரின் பிளாக்பஸ்டர் திரைப்படத்தின் முக்கியத்துவம் காரணமாக இந்த படத்துக்கு ‘வால்டர்’ என்று பெயரிட விரும்பினோம். துரதிர்ஷ்டவசமாக, தலைப்பு தொடர்பான சில சிக்கல்களை நாங்கள் எதிர்கொள்ள வேண்டியிருந்தது. இறுதியில் எல்லாம் முடிந்து தலைப்பு எங்கள் வசமானது என்பதை அறிவிப்பதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம். தற்போது, ‘வால்டர்’ படத்தின் படப்பிடிப்பு தமிழ்நாட்டின் கோவில் நகரமான கும்பகோணத்தில் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. இந்த கிரைம் திரில்லர் திரைப்படத்தை சுவாரஸ்யமான கூறுகள் மூலம் தொகுத்துள்ளார் இயக்குனர் அன்பு. ஸ்கிரிப்ட்டை கேட்கும்போதே ஒரு பார்வையாளனாக என்னை ஆச்சரியப்படுத்தியது. கும்பகோணத்தில் ஒரு க்ரைம் த்ரில்லரை படமாக்குவது குறித்த அவரது அடிப்படை யோசனையே எனது கவனத்தை ஈர்த்தது. ஏனெனில் கும்பகோணம் என்றாலே பெரும்பாலும் குடும்ப பொழுதுபோக்கு படங்கள் மற்றும் காதல் படங்களை தான் படமாக்குவார்கள். இந்த படத்தின் இறுதி வடிவத்தை திரையில் பார்க்கும் நாளை எண்ணி உற்சாகமாக காத்திருக்கிறேன். குறிப்பாக சமுத்திரகனி சார் போன்ற மிகச்சிறந்த நடிகர்கள் இந்த படத்தில் இருப்பதால் அந்த ஆவல் மேலும் அதிகமாகி இருக்கிறது” என்றார்.

11:11 ப்ரொடக்‌ஷன்ஸ் சார்பில் டாக்டர் பிரபு திலக் மற்றும் ஸ்ருதி திலக் இந்த படத்தை தயாரிக்கிறார்கள். இந்த படத்தில் சிபிராஜுக்கு ஜோடியாக “நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா” படத்தில் நடித்து இளம் ரசிகர்களின் மனதை கவர்ந்த ஷிரின் காஞ்ச்வாலா நடிக்கிறார். திடுக்கிடும் திருப்பங்களுடன் அமைந்த ஒரு அற்புதமான கதை என்பதை தவிர, ராட்சசன் புகழ் விக்கி வடிவமைத்த அதிரடி காட்சிகள் இந்த படத்தின் மற்றொரு சிறப்பம்சமாக இருக்கும் என்று உறுதிப்படுத்துகிறார் தயாரிப்பாளர் பிரபு திலக். தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனர் ஒருவரை வில்லன் கதாபாத்திரத்தில் நடிக்க வைக்க பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. அது பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும்.

17 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் இணைந்த காலத்தால் மறக்க முடியாத ஜோடி

17 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் இணைந்த காலத்தால் மறக்க முடியாத ஜோடி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

New Project (2)பல ஆண்டுகளாகவே, ஒரு சில தலைப்புகள் சினிமாவில் பதிலளிக்கப்படாமல் இருக்கின்றன, ஆனால் அவை வியப்புக்குரியவை. அவற்றில் ஒன்று வெள்ளித்திரையில் தோன்றும் ஜோடிக்கு இடையே உள்ள கெமிஸ்ட்ரி. அது ஒரு குறிப்பிட்ட காலம் மட்டுமல்லாமல், திரைப்படம் வெளியாகி பல ஆண்டுகளுக்கு பின்னரும், அவர்களின் திரைப்படங்களை நாம் பார்க்கும் போது நம்மை அறியாமல் வியக்க வைக்கிறது. வெளிப்படையாக, எப்போதும் இளமையான மாதவன் மற்றும் காலம் கடந்தாலும் அதே அழகு மற்றும் இளமையுடன் இருக்கும் சிம்ரன் போன்ற ஒரு கவர்ச்சியான ஜோடி நம்மை ‘பார்த்தாலே பரவசம்’ (2001) மற்றும் ‘கன்னத்தில் முத்தமிட்டால்’ (2002) ஆகிய படங்களில் அவர்களை ரசிக்க வைத்தார்கள். உண்மையில், இந்த படங்கள் அவர்களை வெறும் ஜாலியான காதல் ஜோடிகளாகக் காட்டவில்லை, மாறாக சிக்கலான சூழ்நிலைகளை எதிர்கொள்பவர்களாக இருந்தனர். நிச்சயமாக, அதுதான் அழகு அல்லவா? சோதனைகள் மற்றும் இன்னல்கள் கடினமான இருந்தால் தான் உறவுகள் வலுவானவையாக இருக்கும். இந்த முறை இன்னொரு ‘சிக்கல்’, ஆனால் அது மாதவன் மற்றும் சிம்ரன் குடும்ப உறவுகளுக்குள் அல்ல, வெளிப்புறத்தில். ஆம், 17 ஆண்டுகள் நீண்ட இடைவெளிக்கு பிறகு, பன்மொழி திரைப்படமான ‘ராக்கெட்ரி’ படத்தில் தான் இவை இடம் பெறுகிறது.

ராக்கெட்ரி மிகவும் தீவிரமான கதையை கையாள்கிறது. இது நிஜ வாழ்க்கை சம்பவங்களை அடிப்படையாக கொண்டது என்பது அனைவருக்கும் தெரியும். அது கதாநாயகனின் தனிப்பட்ட வாழ்க்கையையும் கொண்டிருக்கும். ஒரு அற்புதமான நடிகையாக இருப்பதால், ஈடு இணையற்ற நடிப்பை வெளிப்படுத்தும் பழக்கத்தை சிம்ரன் எப்போதும் வைத்திருக்கிறார். இது இந்த படத்திலும் கூட அப்படியே தொடர்கிறது. திரு மற்றும் திருமதி நம்பியாக மாதவன் மற்றும் சிம்ரன் ஜோடியாக இருக்கும் புகைப்படம் சமூக வலைத்தளங்களிலும், ஆன்லைன் மற்றும் அனைத்து ஊடக தளங்களிலும் மிகப்பெரிய அளவில் பரவி, நல்ல வரவேற்பு கிடைத்திருப்பதால் ‘ராக்கெட்ரி’ படக்குழுவினர் மிகவும் மகிழ்ச்சியில் உள்ளனர்.

‘ராக்கெட்ரி – நம்பி எஃபெக்ட்’ படத்தை பற்றிய அறிவிப்பு வெளியான காலத்திலிருந்தே பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும் படப்பிடிப்பு நடக்க நடக்க படிப்படியாக அதிக கவனத்தை ஈர்த்தது. குறிப்பிடத்தக்க விதத்தில், மாதவன் சால்ட் அண்ட் பெப்பர் நிற முடியை கொண்ட நம்பியாக மாறியது, அவர் இயக்குனராக அறிமுகமாகும் திரைப்படம் என்பதும், இந்த புதிய புகைப்படமும் நம் கண்களை இமைக்க விடாமல் செய்திருக்கின்றன. 1990களில் நம் நாட்டில் நிகழ்ந்த அதிர்ச்சியூட்டும் சம்பவங்களின் அடிப்படையில் இந்த திரைப்படம் உருவாகிறது. ISRO விஞ்ஞானி எஸ்.நம்பி நாராயணன் ஒரு கிரையோஜெனிக் நிபுணர், அவரை ஒரு உளவாளி என கைது செய்து, பல ஆண்டுகள் சிறை தண்டனையில் இருந்தார். பின்னர் குற்றமற்றவர் என நிரூபிக்கப்பட்டது. அதை அடிப்படையாக கொண்டு இந்த படம் உருவாகி வருகிறது.

சூப்பர் ஹீரோ ஜீவனாக மாறிய ஜெய்

சூப்பர் ஹீரோ ஜீவனாக மாறிய ஜெய்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

New Project (1)‘பிரேக்கிங் நியூஸ்’ என்ற சொல் திரையில் பளிச்சிடும்போதே, என்ன செய்தி என்பதை பார்க்க எல்லோரும் ஒரு நிமிடம் நின்று கவனித்து விட்டு தான் செல்கிறார்கள் என்பது வெளிப்படையானது. இதற்கு எந்த பகுதி, மொழி என்றெல்லாம் பொருட்படுத்தாமல் அனைவரையும் ஈர்க்கும் சக்தி உள்ளது. அதன்படி, ஜெய் நடிப்பில் அடுத்து வரவிருக்கும் படமும் இந்த சூழலுக்கு உட்பட்டது. அந்த படம் சம்பந்தப்பட்ட எந்த ஒரு விஷயமுமே தலைப்பு செய்தியாக மாறி விடுகிறது.

ஜெய், பானு ஸ்ரீ, தேவ் கில் மற்றும் ராகுல் தேவ் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்து வரும் “பிரேக்கிங் நியூஸ்” படப்பிடிப்பு அதிக வேகத்தில் நடைபெற்று வருகிறது. இந்த படத்தின் ஹைலைட்டான ‘சூப்பர் ஹீரோ ஃபேண்டஸி’ படம் என்பதை படக்குழு உறுதிப்படுத்தினாலும், படத்தின் கதை என்னவென்று தெரிந்துகொள்ள அனைவரும் ஆர்வமாக இருக்கிறார்கள்.

படத்தின் இயக்குனர் ஆண்ட்ரூ பாண்டியன் இது குறித்து கூறும்போது, “இந்த படம் ஜீவன் என்ற ஒரு நடுத்தர குடும்பத்தைச் சேர்ந்த, சாப்ட்வேர் நிறுவனத்தில் பணிபுரியும் ஒரு இளைஞனை பற்றிய கதை. தொழில் மற்றும் குடும்பத்தினருடனான தனிப்பட்ட வாழ்க்கை மிகச்சரியாக போய்க் கொண்டிருக்கும் நேரத்தில், அநீதிக்கு எதிராகத் தூண்டப்படும் அவரது நன்மை செய்யும் குணம் அவரை பிரச்சினையில் ஆழ்த்துகிறது. அவரை மிகவும் நேசிக்கும் அவரது மனைவி ஹரிபிரியா (பானு ஸ்ரீ) அவரை தன்னால் முடிந்த அளவுக்கு மாற்றுகிறார். ஆனால் அவரது மாறாத தன்மையால் அவரிடமிருந்து விலகுகிறார். அவரது சகாக்கள் மற்றும் நண்பர்கள் அவரது அன்னிய இயல்புக்காக அவரை கைவிடும்போது அவர் மேலும் தனிமையாகிறார். தனிமையால் சிதைந்துபோன அவர், “கடவுள்” தனக்கு வேறு சில திட்டங்களை வைத்திருப்பதை அறியாமல் எந்தவித நோக்கமுமின்றி அலைந்து திரிகிறார். விண்வெளியிலஇருந்து ஒரு விண்கல் பூமியை தாக்கும் போது, ஒரு சிறு துகள் அவரது உடலில் துளைக்கும்போது எல்லாம் மாறி விடுகிறது. அவரது உயிரணுக்களில் விவரிக்க முடியாத வேதியியல் எதிர்வினைகள் நடந்து, அவரது திசுக்கள் பிறழ்ந்து, மூளையில் நியூட்ரான்கள் வினைபுரிவதால், அவர் ஒரு வெல்ல முடியாத சூப்பர் ஹீரோவாக மாறுகிறார். இப்போது தென்னிந்தியாவை பேரழிவிற்கு உட்படுத்த ஒரு மோசமான திட்டத்தை கொண்டு வருவதன் மூலம், வளமான நிலங்களை அழித்து, அதன் மூலம் மக்களையும், வாழ்வாதாரங்களையும் அழிக்க திட்டமிடும் மிகவும் ஆபத்தான வில்லன்களான பூரி மற்றும் உராஜ் ஆகியோர் நுழைகிறார்கள். இந்த இரட்டையர்களை அரசாங்கத்தால் கூட தடுத்து நிறுத்த முடியாது, அவர்களை விட சக்தி வாய்ந்தவர்களாக இருக்கிறார்கள். சாதாரண மனிதனாக இருந்து சூப்பர் ஹீரோவாக மாறிய ஜீவன், அவர்களின் திட்டங்களை முறியடிக்கும் பொறுப்பை ஏற்றுக் கொள்கிறார் என்பதாக கதை பயணிக்கிறது” என்றார்.

ஒரு திரைப்படம் படப்பிடிப்பில் இருக்கும்போதே அதன் கதையை ஒரு இயக்குனர் வெளியே சொல்கிறார் என்று வியப்பாக இருக்கிறதா? அவரிடம் இது பற்றி கேட்டால், “இங்கு மறைக்க எதுவும் இல்லை, சூப்பர் ஹீரோ கதைகள் உருவான காலத்தில் இருந்தே இந்த வடிவத்தை அடிப்படையாக கொண்டவை தான். நாங்கள் படத்தை தொழில்நுட்ப ரீதியிலும், கதை சொல்லலிலும் சுவாரஸ்யாக சொல்ல திட்டமிட்டிருக்கிறோம். நாங்கள் நினைத்தபடியே உருவாகி வருகிறது. ஆரம்பத்தில் இருந்து எங்களுக்கு முழு ஆதரவுடன் செயல்படும் தயாரிப்பாளர் திருக்கடல் உதயம் சாரையே எல்லா பாராட்டுக்களும் சேரும்” என்றார்.

முன்பே சொன்னபடி, பிரேக்கிங் நியூஸ் படத்தை ஒரு விசுவல் ட்ரீட்டாக கொடுக்கும் நோக்கத்தில் மொத்த படக்குழுவும் கடினமாக உழைத்து வருகிறது. வி.தினேஷ் குமார் மேற்பார்வையில் 450 சிஜி கலைஞர்கள் இரவு பகல் பாராமல் உழைத்து வருகின்றனர். ஜானி லால் ஒளிப்பதிவில், ஆண்டனி படத்தொகுப்பில் உருவாகும் இந்த படத்தை நாகர்கோவில் திருக்கடல் உதயம் மிக பிரமாண்டமாக தயாரிக்கிறார்.

More Articles
Follows