கௌதம் மேனனின் 3 படங்கள்; விக்ரம்-தனுஷ்-வருண் பட அப்டேட்ஸ்

கௌதம் மேனனின் 3 படங்கள்; விக்ரம்-தனுஷ்-வருண் பட அப்டேட்ஸ்

Vikram Dhanush Varun movies Gautham Menons 3 movies release updates கௌதம் மேனன் இயக்கத்தில் தனுஷ், மேகா ஆகாஷ் நடித்துள்ள ‘எனை நோக்கி பாயும் தோட்டா’ படம் ரெடியாகி 3 வருடங்களுக்கு மேலாகிவிட்டது.

பல வெளியீட்டுத் தேதிகளை அறிவித்து தற்போது நவம்பர் 29ம் தேதி வெளியாகும் என அறிவித்துள்ளனர்.

இப்படத்தை வேல்ஸ் பிலிம் இன்டர்நேஷனல் வெளியிட உள்ளதாக அறிவித்துள்ளனர்.

விக்ரம், ரித்துவர்மா நடித்துள்ள ‘துருவ நட்சத்திரம்’ படத்தின் இறுதிக் கட்டப் பணிகளை ஆரம்பித்து விட்டதாகவும், அடுத்த 60 நாட்களில் படம் வெளியாகும் எனம் கௌதம்மேனன் தெரிவித்துள்ளார்.

இந்த 2 படங்களின் வெளியீட்டிற்காக வேல்ஸ் பிலிம் ஐசரி கணேஷ், கௌதம் மேனனுக்கு மிகப் பெரும் உதவிகளைச் செய்துள்ளதாக சொல்லப்படுகிறது.

அதற்குப் பிரதிபலனாக ஐசரி கணேஷின் தங்கை மகன் வருண் நடிக்கும் ‘ஜோஷ்வா’ படத்தை இயக்கி வருகிறார் கௌதம் மேனன்.

இப்படம் 2020 காதலர் தினத்தன்று வெளியாக உள்ளது.

இந்த படத்திற்கும் விஜய் நடிக்காமல் நின்று போன ‘யோஹன்’ படத்திற்கும் சம்பந்தமல்ல என்று கௌதம் மேனன் தெரிவித்துள்ளார்.

Vikram Dhanush Varun movies Gautham Menons 3 movies release updates

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *