ஜெயம் ரவியை மிரட்டும் சென்னை தொழிலதிபர்

ஜெயம் ரவியை மிரட்டும் சென்னை தொழிலதிபர்

actor jayam raviபிரபுதேவா தயாரித்து நடித்த ‘தேவி’ படத்தை தொடர்ந்து புதிய படத்தை இயக்க தயாராகிவிட்டார் இயக்குனர் விஜய்.

ஜெயம் ரவி நடிக்கவுள்ள இப்படத்திற்கு ‘குமரி கண்டம்’ என்று பெயரிடப்பட உள்ளதாக செய்திகள் கூறப்படுகிறது.

இதில் சாயிஷா சேகல், வருண், தம்பிராமையா உள்ளிட்டோரும் நடிக்கின்றனர்.

ஹாரீஸ் ஜெயராஜ் இசையமைக்க, திரு ஒளிப்பதிவு செய்கிறார்.

இயக்குனர் விஜய்யின் தந்தை ஏ.எல்.அழகப்பன் தயாரிக்கிறார்.

இந்நிலையில் இதில் வில்லனாக சென்னையை சேர்ந்த தொழிலதிபர் சாம் பால் (Sam Paul) நடிக்கவிருக்கிறாராம்.

இவர் சென்னையில் பல தொழில்களை வெற்றிகரமாக நடத்தி வருபவர் என்பது குறிப்பிடத்தக்கது.

காந்தி இடத்தில் சிவகார்த்திகேயன்… ரசிகர்களை கண்டிப்பாரா?

காந்தி இடத்தில் சிவகார்த்திகேயன்… ரசிகர்களை கண்டிப்பாரா?

sivakarthikeyanரஜினி-கமல், விஜய்-அஜித் உள்ளிட்டவர்களின் படங்கள் வசூல் மழையை பொழிந்து அவர்களை முன்னணி நடிகர்களின் வரிசைக்கு கொண்டு வந்தது.

எனவே ஒரு பக்கம் இவர்களுக்கு ரசிகர்கள் திரள… மறுபக்கம் ரசிகர்களிடையே மோதலும் வலுத்து வந்தது.

இதனால் தங்கள் பலத்தை காட்ட நடிகர்களை தெய்வமாக சித்தரித்து படங்களை வரையத் தொடங்கினர்.

இதுதொடர்பாக அவ்வப்போது சர்ச்சைகளும் எழும்.

இவர்களைத் தொடர்ந்து வளர்ந்து வரும் நாயகன் சிவகார்த்திகேயனுக்கும் ரசிகர்களின் ஆதரவு பெருகி வருகிறது.

இந்நிலையில் இவரின் ரசிகர் ஒருவர் 100 ரூபாய் நோட்டில் மஹாத்மா காந்தி இருந்த இடத்தில் சிவகார்த்திகேயன் போட்டோவை வைத்து டிசைன் செய்துள்ளனர்.

இதனை ஆரம்பத்திலேயே சிவகார்த்திகேயன் கண்டித்தால், இனிவரும் காலங்களில் இதுபோன்ற காரியங்களில் ரசிகர்கள் ஈடுபடமாட்டார்கள்.

தற்போது வெளியாகியுள்ள 2000 ரூபாய் புதுநோட்டில் மஹாத்மா காந்தி படம் இல்லை. இனி என்ன என்ன செய்யபோகிறார்களோ ரசிகர்கள்?

rs note sivakarthikeyan

ரஜினிக்கு பிறகு விஜய் படத்தை தயாரிக்கும் தனுஷ்.?

ரஜினிக்கு பிறகு விஜய் படத்தை தயாரிக்கும் தனுஷ்.?

vijay dhanushதனுஷ் நடிப்பில் தீபாவளிக்கு வெளியான கொடி வசூலில் உயரத்தில் பறந்து வருகிறது.

இதனிடையில் சில நாட்களுக்கு முன்பு, விரைவில் புதிய அறிவிப்பை வெளியிட உள்ளதாக தன் ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டார் தனுஷ்.

#mass announcement soon. Guess what.

அதை என்னவென்று கண்டுபிடியுங்கள் எனவும் தெரிவித்து இருந்தார்.

இதனால் பலரும் பலவாறு கூறி வந்தனர்.

சிலர் வடசென்னை பற்றிய தகவலாக இருக்கும் என்றனர்.

சிலர் என்னை நோக்கி பாயும் தோட்டா என்ற தகவலாக இருக்கும் என்றனர்.

இன்னும் சிலரோ ரஞ்சித் இயக்கும் ரஜினி பட நாயகியாக இருக்குமோ என்றும் தெரிவித்தனர்.

மேலும் சிலர் விஜய் நடிக்கும் படத்தை செல்வராகவன் இயக்க, அப்படத்தை தனுஷ் தயாரிக்கலாம் என்றும் தெரிவித்து வருகின்றனர்.

இதனைக் கண்ட தனுஷ் என்ன நினைத்தாரோ தற்போது மற்றொரு ட்வீட்டை பதிவிட்டுள்ளார். அதில்…

பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. நவம்பர் 9ஆம் தேதி புதன்கிழமை அறிவிப்பை வெளியிடுவேன். பொறுமைக்கு நன்றி என பதிவிட்டுள்ளார்.

இந்த நாட்களில் என்ன என்ன செய்திகள் புதிதாக வரப்போகிறதோ? எனத் தெரியவில்லை.

ரஜினியின் மூன்று முகத்தை மாற்றும் லாரன்ஸ்

ரஜினியின் மூன்று முகத்தை மாற்றும் லாரன்ஸ்

rajini lawrenceசூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், 3 வேடங்களில் நடித்து மாபெரும் வெற்றிப் பெற்ற படம் மூன்றுமுகம்.

தற்போது இதன் ரீமேக்கை தயாரித்து 3 வேடங்களில் நடிக்கவிருக்கிறார் ராகவா லாரன்ஸ்.

விரைவில் இதன் படப்பிடிப்பு துவங்கப்பட உள்ளது.

இந்நிலையில், இதில் ஒரு கேரக்டரில் கொஞ்சம் மாற்றம் செய்ய உள்ளதாக கூறப்படுகிறது.

அதாவது அந்த கேரக்டருக்கு பேய் முகம் கொடுக்கவிருக்கிறாராம்.

ஒருவேளை, தந்தை அலெக்ஸ் பாண்டியனை கொன்ற வில்லன்களை பழிவாங்க இந்த வேஷத்தில் வருவாரோ?

பேய் படங்களை மக்கள் ரசிக்கும்படியாக கொடுப்பதில் வல்லவரான லாரன்ஸ் செய்தால் அது சரியாகதான் இருக்கும் என நம்புவோம்.

சூர்யா படத்தை இலவசமாக பார்க்க அழைக்கும் தியேட்டர்

சூர்யா படத்தை இலவசமாக பார்க்க அழைக்கும் தியேட்டர்

singam suriyaஹரி இயக்கியுள்ள எஸ்-3 படத்தில் நடித்து முடித்துள்ளார் சூர்யா.

இவருடன் அனுஷ்கா, ஸ்ருதிஹாசன், ராதாரவி, நாசர்,  விவேக், ரோபா சங்கர் உள்ளிட்டவர்கள் நடித்துள்ளனர்.

ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்துள்ள இப்படத்தை ஞானவேல்ராஜா தயாரித்துள்ளார்.

இந்நிலையில் இப்படத்தின் டீசர் இன்று 5 மணியளவில் வெளியாகவுள்ளது.

இதனை தியேட்டரில் இலவசமாக பார்க்க, திருநெல்வேலியில் உள்ள ராம் சினிமாஸ் தியேட்டர் நிர்வாகம் அழைத்துள்ளது.

Ram Muthuram Cinemas ‏@RamCinemas
#S3 Teaser Release Function Today At 5PM Entry is free for all !! @StudioGreen2

சிம்புவை இயக்கும் ‘பிரேமம்’ அல்போன்ஸ் புத்திரன்

சிம்புவை இயக்கும் ‘பிரேமம்’ அல்போன்ஸ் புத்திரன்

Alphonse Puthren simbuசிம்பு நடிப்பில் உருவாகியுள்ள அச்சம் என்பது மடமையடா படம் வருகிற நவம்பர் 11ஆம் தேதி வெளியாகவுள்ளது.

இதனையடுத்து அன்பானவன் அடங்காதவன் அசராதவன் என்ற படத்தை அடுத்த வருடம் 2017 காதலர் தினத்தில் வெளியிடவிருக்கிறார்.

இந்நிலையில் நேரம், பிரேமம் உள்ளிட்ட படங்களை இயக்கிய அல்போன்ஸ் புத்திரன் இயக்கத்தில் சிம்பு நடிக்கவுள்ளதாக செய்திகள் வந்துள்ளன.

இது பிரேமம் படத்தின் ரீமேக் ஆக இருக்குமோ என்றும் கோலிவுட்டில் கிசுகிசுக்கப்படுகிறது.

இப்படத்தை தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் இந்தி ஆகிய நான்கு மொழிகளிலும் உருவாக்க திட்டமிட்டு இருக்கிறாராம் அல்போன்ஸ் புத்திரன்

இப்படத்தின் தயாரிப்பாளர் மற்றும் இதர தொழில்நுட்ப கலைஞர்கள் விவரம் வெளியாக்க்கூடும்.

More Articles
Follows