‘லிப்ட்’ படத்தை முடித்துவிட்டு ‘ஆகாசவாணி’யில் கவனம் செலுத்தும் கவின்

‘லிப்ட்’ படத்தை முடித்துவிட்டு ‘ஆகாசவாணி’யில் கவனம் செலுத்தும் கவின்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

சின்னத்திரை நிகழ்ச்சி தொடர்களில் நடித்தவர் கவின். அப்போதே இவருக்கு ரசிகர்கள் உருவாகினர்.

இதன்பின்னர் ‘பிக்பாஸ்’ நிகழ்ச்சி மூலம் தமிழகம் முழுவதும் பிரபலமானவர் கவின்.

தற்போது #லிப்ட் என்ற படத்தில் ஹீரோவாக நடித்துள்ளார்.

இந்த ‘லிப்ட்’ படத்தில் பிகில் படத்தில் நடித்த அமிர்தா ஐயர் நாயகியாக நடித்து வருகிறார்.

இந்த படத்தை வரப்பிரசாத் என்பவர் இயக்கி வருகிறார்.

விரைவில் ரிலீசாகவுள்ள இந்த படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் தற்போது இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது.

இந்த நிலையில் கவின் தற்போது ‘ஆகாசவாணி’ என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ள வெப் சீரிஸ் ஒன்றில் நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார்.

Latest announcement on Kavin’s next flick

என் பெயரில் வரும் கருத்துக்களுக்கு நான் பொறுப்பல்ல..; குஷ்பூ இப்படி சொல்ல என்ன காரணம்..?

என் பெயரில் வரும் கருத்துக்களுக்கு நான் பொறுப்பல்ல..; குஷ்பூ இப்படி சொல்ல என்ன காரணம்..?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

khushboo-2தேசிய கட்சியான பாஜக-வின் பிரமுகரும் பிரபல நடிகையுமான குஷ்பு தன் ட்விட்டரில் ஆக்டிவ்வாக இருப்பார்.

இதனால் பலரும் அவரை வம்புக்கு இழுக்க பதிலடி கொடுத்துக் கொண்டே இருப்பார்.

அவரை ட்விட்டரில் 13 லட்சம் பேர் ஃபாலோ செய்கிறார்கள்.

இந்த நிலையில் குஷ்புவின் ட்விட்டர் கணக்கு கடந்த ஆண்டை போல இந்தாண்டும் மர்ம நபர்களால் ஹேக் செய்யப்பட்டுள்ளது.

அதோடு அவரது ட்விட்டர் பதிவுகளும் அதிலிருந்து நீக்கப்பட்டுள்ளது.

இதனை தொடர்ந்து தன் ட்விட்டர் கணக்கு ஹேக் செய்யப்பட்டுள்ளதாகவும் விரைவில் மீட்க இருப்பதாகவும் அறிவித்துள்ளார்.

மேலும் ட்விட்டர் கணக்கை மீட்கும் வரை் அதில் பதிவிடப்படும் கருத்துக்களுக்கு யாரும் பதிலளிக்க வேண்டாம் என குஷ்பூ தெரிவித்துள்ளார்.

Khushboo Sundar’s Twitter account hacked

‘தல 61’ அப்டேட் ; மீண்டும் ‘வலிமை’ கூட்டணி..; அஜித் ரசிகர்கள் ஹாஃப் ஹாஃப்பி

‘தல 61’ அப்டேட் ; மீண்டும் ‘வலிமை’ கூட்டணி..; அஜித் ரசிகர்கள் ஹாஃப் ஹாஃப்பி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

‘பிங்க்’ படத்தின் ரீமேக்கான ‘நேர்கொண்ட பார்வை’ படத்தின் வெற்றியை தொடர்ந்து அஜித் போனிகபூர் மற்றும் வினோத் ஆகியோரது கூட்டணி மீண்டும் வலிமை-க்காக இணைந்துள்ளது.

இவர்கள் 2வது முறையாக ‘வலிமை’ படத்திற்காக இணைந்துள்ளனர்.

வலிமை படம் இந்தாண்டு 04-11-2021 தீபாவளிக்கு வெளியாகும்.

அதாவது ரஜினியின் ‘அண்ணாத்த’ படத்துடன் மோதும் என தெரிகிறது.

இந்த நிலையில் தல அஜித்தின் 61 வது படம் குறித்த தகவல்கள் வந்தவண்ணம் உள்ளன.

இந்த படத்தையும் போனிகபூர் தயாரிக்க வினோத் இயக்க உள்ளதாகவும் சொல்லப்படிகிறது.

இம்முறை வந்த தகவல்கள் உறுதியாகியுள்ளது.

அதிரடி ஆக்ஷன் படமாக உருவாகவுள்ள இந்த படத்தின் படப்பிடிப்பை 7 மாதங்களில் முடித்துவிட திட்டமிட்டுள்ளனர்.

இவ்வருடத்தில் சூட்டிங் தொடங்கி 2022ல் ரிலீஸ் செய்யவுள்ளதாக சொல்லப்படுகிறது.

இப்படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளிவரும் என எதிர்பார்க்கலாம்.

வலிமை அப்டேட் சரியாக கொடுக்கவே இல்ல. கேட்டு கேட்டு டயர்டு ஆச்சே..

இதுல மறுபடியும் போனி கபூர் கூட்டணியா? என அஜித் ரசிகர்கள் பாதி மகிழ்ச்சியில் மட்டுமே உள்ளனர்.

Thala Ajith to collabrate with H Vinoth again ?

நான் இறந்துட்டேனா..?? சித்தார்த் கேள்விக்கு ஷாக்கான பதில் கொடுத்த யூடியூப் நிறுவனம்

நான் இறந்துட்டேனா..?? சித்தார்த் கேள்விக்கு ஷாக்கான பதில் கொடுத்த யூடியூப் நிறுவனம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ட்விட்டர் உள்ளிட்ட சோசியல் மீடியாக்களில் ஆக்டிவாக இருப்பவர் நடிகர் சித்தார்த்.

இவர் பிரதமர் மோடி மற்றும் பாஜக அரசு குறித்து கடுமையான விமர்சனங்களை பதிவிடுவார்.

இதனால் பலரின் எதிர்ப்புகளையும் மிரட்டல்களையும் எதிர்கொண்டு வருகிறார்.

இந்த நிலையில் ..” இளம் வயதில் உயிரிழந்த நட்சத்திரங்களின் பட்டியலில் சித்தார்த்தின் புகைப்படத்துடன் கூடிய வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளது யூட்யூப் சேனல் ஒன்று.

இதை கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார் சித்தார்த்.

எனவே இந்த வீடியோ குறித்து யூடியூபிடம் புகாரளித்துள்ளார்.

ஆனால் வீடியோவில் எந்த பிரச்னையும் இல்லை என யூடியூப் நிறுவனம் அவருக்கு பதிலளித்துள்ளது.

இதற்கு சித்தார்த், “அட பாவி” என குறிப்பிட்டு அந்த வீடியோவை ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

ஒரு சில யூடியூப் சேனல்கள் தங்களது வீடியோக்களை அதிக பார்வையாளர்கள் பார்க்க வேண்டும் என்ற நோக்கத்துடன் இது போன்ற வீடியோக்களை THUMBNAIL பதிவிட்டு வருகின்றனர்.

I reported to youtube about this video claiming I’m dead. Many years ago.

They replied “Sorry there seems to be no problem with this video”.

Me : ada paavi

Wait what…
Ee thumbnails enti asal
@Actor_Siddharth
#dharunum #arachakam
Link for this video :https://t.co/6Pcs8f48NQ
Views kosam emanna chesthara https://t.co/GgEq5MRbgr

Tamil hero Siddharth is dead, claims YouTube video. Actor reveals full story

‘பல்லுபடாம பாத்துக்கோ’ படத்தை தொடர்ந்து விஜய்யின் ‘குத்துக்கு பத்து’

‘பல்லுபடாம பாத்துக்கோ’ படத்தை தொடர்ந்து விஜய்யின் ‘குத்துக்கு பத்து’

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

YouTubeல் பிரபலமான Temple Monkey சேனல், முன்னணி OTT தளத்துடன் இணைந்து ஒரு இணைய தொடரை உருவாக்குகிறது.

‘குத்துக்கு பத்து’ எனும் இத்தொடரை விஜய் வரதராஜ் இயக்குகிறார்.

Temple Monkey மூலம் புகழ் பெற்ற விஜய் வரதராஜ், ‘பல்லுபடாம பாத்துக்கோ’ படத்தை இயக்கியதன் மூலம் திரைத்துறையில் இயக்குநராக அறிமுகமானார்.

இப்படம் ரிலீஸுக்கு தயாராகி வரும் நிலையில், அடுத்ததாக ‘குத்துக்கு பத்து’ என்ற இணையதொடரை உருவாக்க உள்ளார்.

இந்த இணைய தொடரை D Company சார்பில் AKV துரை தயாரிக்கிறார்.

இந்தத் தொடரில் ஆடுகளம் நரேன், போஸ் வெங்கட், விஜய் வரதராஜ், சாரா, அப்துல், அகஸ்டின், திலீபன், பத்ரி, செங்கி வேலு, திவாகர், ஜானி, பிக் பாஸ் சம்யுக்தா மற்றும் பலர் நடிக்கின்றனர்.

8 அத்தியாயங்கள் கொண்ட தொடராக இத்தொடர் உருவாகவுள்ளது.

இப்படத்தின் படப்பிடிப்பை இயக்குநர் சுசீந்திரன் அவர்கள் கிளாப் அடித்து துவக்கி வைத்தார்.

இயக்குநர் விஜய் வரதராஜ் தொடர் குறித்து கூறியதாவது…

இன்றைய இளைய தலைமுறையினரை ஈர்க்கும் வகையில், அனைத்து அம்சங்களும் நிறைந்த நகைச்சுவை தொடர் தான் இது.

அரசு வழிகாட்டியுள்ள அனைத்து உடல்நலம் மற்றும் சுகாதார நெறிமுறைகளுடன், “குத்துக்கு பத்து” தொடரின் படப்பிடிப்பை தொடங்கியுள்ளோம்.

இத்தொடரின் ஒவ்வொரு குழு உறுப்பினரும் தடுப்பூசிகளின் முழுமையான அளவை எடுத்து முடித்துள்ளனர். இது பாதுகாப்பான படப்பிடிப்பிற்கு முழு உத்தரவாதத்தை அளித்துள்ளது.

இதனை முழுமையாக செயல்படுத்தியதற்காக தயாரிப்பாளர் AKV துரை அவர்களுக்கு நன்றி கூறிக்கொள்கிறேன்.

அவருடன் இணைந்து இத்தொடரை உருவாக்குவது மகிழ்ச்சி. இத்தொடரில் மிகத் திறமை வாய்ந்த நடிகர்கள் குழு பங்கேற்கிறது.

எந்த ஒரு பாத்திரத்திலும் தனித்து தெரியும் திறன் பெற்ற ஆடுகளம் நரேன் சார், போஸ் வெங்கட் சார் போன்ற பெரும் ஆளுமைகளுடன் இணைந்து பணியாற்றுவது பேரின்பம் தரும் அனுபவம். இத்தொடரில் அவர்களது கதாப்பாத்திரம் அனைவரும் ரசிக்கும்படி இருக்கும் என்றார்.

D Company சார்பில் AKV துரை கூறியதாவது…

Temple Monkey மூலம் புகழ் பெற்ற விஜய் வரதராஜ், கதை சொல்லலில் தனது புதுமையான அணுகுமுறையால், அனைத்து தரப்பினரையும் மகிழ்விப்பதில் தனது திறமையை ஏற்கனவே நிரூபித்துள்ளார்.

அவர் குத்துக்கு பத்து தொடரின் திரைக்கதையை விவரித்தபோது, நிகழ்ச்சி முழுவதும் 100% பொழுதுபோக்கு தன்மையுடனும், அனைவரும் சிரித்து, மகிழ்ந்து கொண்டாடும் வகையிலும், இருப்பதை உணர்ந்தேன்.

குறிப்பாக, இது இளம் பார்வையாளர்களுக்கு பெரிய கொண்டாட்டமாக இருக்கும் என்றார்.

8 அத்தியாயங்கள் கொண்ட இத்தொடரை விஜய் வரதராஜ் எழுதி இயக்குகிறார்.

ஜகதீஷ் ரவிச்சந்திரன் ஒளிப்பதிவு செய்ய, பாலமுரளி பாலா இசையமைக்கிறார்.

சாந்தோஷ் செந்தில் (Shifty) படத்தொகுப்பு செய்ய, மதன் குமார் கலைஇயக்கம் செய்கிறார்.

டேஞ்சர் மணி சண்டைப்பயிற்சிகளை செய்ய, முகமது சுபையர் ஆடை வடிவமைப்புகளை செய்கிறார்.

வினோத் சுகுமாரன் மேக்கப்பை கவனிக்க, சேது ராமலிங்கம், சரத் நிவாஷ், மற்றும் KV மோத்தி ஆகியோர் நிர்வாக தயாரிப்பாளர்களாக பணியாற்றுகின்றனர்.

D Company சார்பில் AKV துரை இத்தொடரை தயாரிக்கிறார்.

YouTube fame Temple Monkey collaborating with a leading OTT platform for a web series directed by Vijay Varatharaj titled KUTHUKKU PATHTHU

IMG-20210719-WA0035

கேரள அரசைப் போல தமிழக அரசும் செய்யனும்.. தேர்தல் வாக்குறுதி என்னாச்சு.?; கமல்ஹாசன் கேள்வி

கேரள அரசைப் போல தமிழக அரசும் செய்யனும்.. தேர்தல் வாக்குறுதி என்னாச்சு.?; கமல்ஹாசன் கேள்வி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தமிழக சட்டமன்ற நிகழ்வுகளை முழுமையாக நேரடி ஒளிபரப்பு செய்ய தமிழக அரசு ஆவன செய்யவேண்டும் என மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் அறிக்கை வெளியிட்டுள்ள்ளார்.

அதில்

“வெளிப்படையான அரசு நிர்வாகம், பங்கேற்பு ஜனநாயகம் ஆகியவை மக்கள் நீதி மய்யம் தொடங்கிய நாளில் இருந்தே நாங்கள் வலியுறுத்தி வரும் அம்சங்கள்.

சட்டமன்றத்தின் நிகழ்ச்சிகளை நேரடி ஒளிபரப்பு செய்வது மக்கள் பிரதிநிதிகள் பொதுப் பிரச்னைகள் மீது நிகழ்த்தும் விவாதங்களைச் சாமான்யனும் அறிந்துகொள்ள உதவக்கூடியது.

சட்டமன்ற நிகழ்வுகளை நேரடியாக ஒளிபரப்ப வேண்டுமென கோரி 2012ல் சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடுக்கப்பட்ட பொது நல வழக்கை அதிமுக அரசு சாக்குப்போக்கு சொல்லி நிலுவையில் போட்டுவிட்டது.

நாங்கள் ஆட்சிக்கு வந்தால் சட்டமன்ற நிகழ்வுகளை நேரடி ஒளிபரப்பு செய்வோம் என தன் தேர்தல் வாக்குறுதியில் (வாக்குறுதி எண்:375) திமுக அறிவித்திருந்தது.

ஆனாலும், முதல் சட்டமன்ற கூட்டத் தொடரின் கவர்னர் உரையின் முழு நிகழ்வையும் நேரடி ஒளிபரப்பு செய்யவில்லை.

இந்தியப் பாராளுமன்றத்தின் நிகழ்ச்சிகள் கடந்த 2006-ஆம் ஆண்டு முதல் நேரடியாக ஒளிபரப்பாகின்றன.

கேரள சட்டமன்ற நிகழ்வுகள் இணைய வழியில் வெப் ஸ்ட்ரீம் செய்யப்படுகிறது. இதற்கென்றே தனியாக ஒரு யூடியூப் சானலும் உள்ளது.

நடைபெற இருக்கும் பட்ஜெட் கூட்டத்தொடரில் துறைவாரியான மானியக்கோரிக்கை விவாதங்கள் முழுவதையும் நேரடி ஒளிபரப்பு செய்ய தமிழக அரசு ஆவன செய்யவேண்டும்.

தங்களைப் பாதிக்கும் பிரச்னைகளில் மாமன்ற உறுப்பினர்களின் கருத்து என்னவாக இருக்கிறதென்பதைப் பொதுமக்கள் அறிந்து கொள்ள உதவியாக இருப்பதுடன், பத்திரிகை ஊடக நண்பர்களுக்கும் இது பயனுள்ளதாக இருக்கக் கூடும்.

கொரோனா பெருந்தொற்றுக் காலத்தில் அதிகளவில் ஊடகவியலாளர்கள் சட்டமன்ற வளாகத்தில் கூடுவதை இந்த நேரடி ஒளிபரப்பு குறைக்கக் கூடும்.

தகவல் தொழில்நுட்பத்தில் சிறந்து விளங்கும் தமிழகத்திற்கு இணைய வழி நேரடி ஒளிபரப்பு செய்வது ஒரு சவாலான விஷயமாக இருக்காது.

தங்கள் தேர்தல் வாக்குறுதியில் உறுதியளித்திருந்த நேரடி ஒளிபரப்பை இந்த பட்ஜெட் தொடரிலேயே உறுதி செய்ய ஆவன செய்ய வேண்டுமென தமிழக அரசை கேட்டுக்கொள்கிறேன்.

கமல் ஹாசன்
தலைவர் – மக்கள் நீதி மய்யம்.

MNM leader Kamal requests TN government

More Articles
Follows