தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
அறிமுக இயக்குனர் வினித் இயக்கியுள்ள படம் ‘லிப்ட்’. இந்த படத்தில் கவின் ஜோடியாக பிகில் படத்தில் நடித்த அமிர்தா ஐயர் நடித்துள்ளார்.
இந்த படத்தில் ஒரு பாடலை சிவகார்த்திகேயன் பாடியிருந்தார்.
EKAA எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் இந்த படத்தை தயாரித்துள்ளது.
இப்படத்தின் வெளியீட்டு உரிமையை லிப்ரா புரொடக்ஷன்ஸ் நிறுவனம் கைப்பற்றியுள்ளது.
இந்தப் படம் ரிலீசுக்குத் தயாராகி வந்த சமயத்தில் கொரோனா 2-வது அலை காரணமாக லாக்டவுன் போடப்பட்டதால் வெளியீட்டில் தாமதம் ஏற்பட்டது.
விரைவில் ‘லிப்ட்’ படம் ரிலீசாகும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் EKAA எண்டர்டெயின்மெண்ட் ஓர் அறிக்கை வெளியிட்டுள்ளது.
அதில்.. ‘லிப்ட்’ பட வெளியீட்டு உரிமையை பெற்ற லிப்ரா புரொடக்ஷன்ஸ் ரவீந்திரன் சந்திரசேகர் ஒப்பந்தத்தில் சொன்னது போல நடந்து கொள்ளவில்லை.
எனவே அவருக்கும் இந்த படத்திற்கும் இனி சம்பந்தம் இல்லை என தெரிவித்துள்ளனர்.
இந்த அறிக்கை வந்த சில நிமிடங்களில் லிப்ரா புரொடக்ஷன்ஸ் சார்பாக ரவீந்திரன் சந்திரசேகர் ஒர் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
அதில்…
லிப்ட் படத்திற்கான 50% பணத்தை கொடுத்து விட்டோம். மீதி பணத்தை ரிலீஸ் சமயத்தில் கொடுப்பதாக சொன்னோம்.
கொரோனா ஊரடங்கால் ரிலீஸ் லேட்டானது. அக்டோபரில் வெளியிட உள்ளோம்.
அவர் ஒப்பந்தம் முறிந்துவிட்டதாக வேடிக்கையான அறிக்கை வெளியாகியுள்ளது.
லிப்ட் பட வெளியீட்டு உரிமை எங்களிடம் தான் உள்ளது” என்று ரவீந்திரன் சந்திரசேகர் தெரிவித்துள்ளார்.
இதனால் ‘லிப்ட்’ பாதியில் நிற்கிறது..
Press statements from EkaaEntertainm1 and LIBRA regarding #Kavin’s upcoming movie #Lift