அடுத்த ‘ஹிட் லிஸ்ட்’ ரெடி செய்த கே எஸ் ரவிக்குமார் – சரத்குமார் கூட்டணி

அடுத்த ‘ஹிட் லிஸ்ட்’ ரெடி செய்த கே எஸ் ரவிக்குமார் – சரத்குமார் கூட்டணி

திரையுலகில் ஹீரோ & டைரக்டர் கூட்டணி சரியாக அமைந்துவிட்டால் அந்த கூட்டணி பல படங்களில் தொடரும்.

ஒரு சில நடிகர்களுக்கு அதுபோல இயக்குனர்கள் அமைந்து விடுவார்கள்.

1980களில்…

ரஜினியை பொறுத்தவரை எஸ்.பி முத்துராமன் & சுரேஷ் கிருஷ்ணா ஆகியோரை சொல்லலாம்.

கமல்ஹாசனை பொருத்தவரை கே பாலச்சந்தரை சொல்லலாம்.

விஜயகாந்தை பொருத்தவரை எஸ்.ஏ. சந்திரசேகரை சொல்லலாம்

பிரபுவை பொறுத்தவரை பி வாசுவை சொல்லலாம். சத்யராஜை பொறுத்தவரை மணிவண்ணனை சொல்லலாம்.

கார்த்தியை பொறுத்தவரை ஆர்வி. உதயகுமாரை சொல்லலாம்.

அதுபோல சரத்குமார் பொருத்தவரை கேஎஸ் ரவிக்குமாரை சொல்லலாம்.

இவர்கள் இணைந்த சேரன் பாண்டியன், நாட்டாமை, நட்புக்காக, பாறை, சமுத்திரம், பாட்டாளி என பல படங்களை சொல்லலாம்.

அந்த வரிசையில் தற்போது நீண்ட நாட்களுக்குப் பிறகு இந்தக் கூட்டணி மீண்டும் இணைந்துள்ளது.

ஆனால் இந்த முறை கேஸ் ரவிக்குமார் ஒரு தயாரிப்பாளராக சரத்குமார் உடன் இணைந்துள்ளார்.

ஆர் கே செல்லுலாய்டு என்ற தன் கம்பெனி சார்பாக கேஸ் ரவிக்குமார் தயாரிக்கிறார்.

இந்தப் படத்தில் சரத்குமார் உடன் விஜய் கணிஷ்கா என்பவர் நடிக்கிறார்.

இந்த படத்தை சூரியக்கதிர் காக்கள்ளர் மற்றும் கார்த்திகேயன் இணைந்து இயக்குகின்றனர்.

இந்த படத்தில் ஷூட்டிங் நாளை முதல் தொடங்கப்பட உள்ளது.

இந்த நிலையில் இன்று விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு இந்த படத்திற்கு ‘ஹிட் லிஸ்ட்’ HIT LIST என தலைப்பிட்டு பர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்டுள்ளனர்.

இந்த போஸ்டரை நடிகர் தனுஷ் வெளியிட்டுள்ளார்.

[email protected] launches the #HitListFirstLook 🔥😎

Shoot Begins From Tomorrow!

#HitList

@ksravikumardir
@realsarathkumar
@kanvikraman
Directors duo
#Sooryakathirkaakkallar
#KKarthikeyan
@dineshashok_13
@RIAZtheboss https://t.co/aI7WGPrWCw

9 வருடங்களுக்கு பிறகு மோதும் விஜய் – அஜித்.; தியேட்டர்காரர்கள் மகிழ்ச்சி

9 வருடங்களுக்கு பிறகு மோதும் விஜய் – அஜித்.; தியேட்டர்காரர்கள் மகிழ்ச்சி

பண்டிகை தினம் என்றால் பெரிய நடிகர்களின் படங்கள் ஒரே நாளில் மோதுவது வழக்கமான ஒன்றுதான்.

ஆனால் சில பண்டிகை தினங்களில் இந்த மோதல்கள் இடம்பெறாது.

விஜய் மற்றும் அஜித் நடித்த பல படங்கள் தீபாவளி மற்றும் பொங்கல் பண்டிகைகளில் ஒரே நாளில் மோதலை சந்தி்த்துள்ளன.

இதில் விஜய்யின் ஒரு சில படங்கள் வெற்றியும் தோல்வியும் பெற்றுள்ளன. அதுபோல அஜித்தின் சில படங்கள் வெற்றியையும் தோல்வியையும் சந்தித்துள்ளன.

9 ஆண்டுகளுக்கு முன் விஜய் நடித்த ஜில்லா & அஜித் நடித்த வீரம் ஆகிய படங்கள் பொங்கல் தினத்தில் வெளியானது. இந்த இரண்டு படங்களுமே வெற்றி பெற்றன.

இந்த நிலையில் (2014ல்) ஒன்பது வருடங்களுக்குப் பிறகு தற்போது வாரிசு மற்றும் ஏ கே 61 படங்கள் 2023 பொங்கல் தினத்தில் ஒரே நாளில் மோத உள்ளன.

வம்சி இயக்கத்தில் தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் உருவாகி வரும் வாரிசு படத்தில் நடித்து வருகிறார் விஜய்.

இந்த படத்தை தில் ராஜு தயாரிக்க விஜய்க்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடிக்கிறார்.

இப்படம் வருகின்ற 2023 பொங்கலுக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டது.

வினோத் இயக்கத்தில் நடிகர் அஜித் தனது 61 வது படத்தில் நடித்து வருகிறார். இதில் நாயகியாக மஞ்சு வாரியார் நடிக்க போனி கபூர் தயாரித்து வருகிறார்

இதன் 70% படப்பிடிப்பு முடிவடைந்துள்ள நிலையில் தற்போது சண்டைக் காட்சிகள் படமாக்கப்பட்டு வருகிறது.

பண்டிகை தினங்களில் பெரிய நடிகர்கள் படங்கள் மோதினால் தியேட்டர்காரர்கள் வசூலை அள்ளலாம். எனவே அவர்களும் உற்சாகத்தில் உள்ளதாக கூறப்படுகிறது.

ஆனால் ஏகே 61 படத்தின் டைட்டிலும் ரிலீஸ் தேதியும் இதுவரை அறிவிக்கப்படவில்லை என்பது இங்கே கவனிக்கத்தக்கது.

 

அருண் விஜய் – அறிவழகன் இணையும் ‘பார்டர்’ படத்தின் ரிலீஸ் தேதி அப்டேட்

அருண் விஜய் – அறிவழகன் இணையும் ‘பார்டர்’ படத்தின் ரிலீஸ் தேதி அப்டேட்

நடிகர் அருண் விஜய் தொடர்ச்சியாக வெற்றிப்படைப்புகளை தந்து கவனம் ஈர்த்து வருகிறார். அவரது நடிப்பில் திரையரங்குகளில் வெளியான யானை திரைப்படம் ப்ளாக்பஸ்டர் ஹிட்டாக, ஓடிடியில் வெளியான தமிழ்ராக்கர்ஸ் தொடர் மிகப்பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

இரண்டு படைப்புகளும் ரசிகர்களிடத்திலும், விமர்சகர்களிடத்திலும் ஒருங்கே பாராட்டை குவித்துள்ளது.

தொடர் வெற்றிகளால் வர்த்தக வட்டாரங்களிடையே அருண் விஜய் படங்களுக்கு பெரிய மதிப்பு ஏற்பட்டுள்ளது.

All in Pictures T. விஜயராகவேந்திரா வழங்கும், இயக்குநர் அறிவழகன் இயக்கத்தில், நடிகர் அருண் விஜய் நடித்துள்ள “பார்டர்” படம் அறிவிக்கப்படதிலிருந்தே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

முன்பாக வெளியான இப்படத்தின் டிரெய்லர் அனைவரது ஆர்வத்தையும் தூண்டியுள்ளது.

இந்நிலையில் தயாரிப்பாளர்கள் அக்டோபர் 5, 2022 அன்று உலகம் முழுவதும் இப்படம் திரைக்கு வரும் என்று தயாரிப்பாளர்கள் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.

இப்படத்தின் அகில இந்திய திரையரங்க உரிமையைப் பெற்றுள்ள 11:11 Production Dr. பிரபு திலக் கூறுகையில்…

தமிழ் திரையுலகில் பெரிதும் எதிர்பார்க்கப்படும் படங்களில் ஒன்றான அருண் விஜய் சாரின்” பார்டர்” படத்தை 11:11 Productions சார்பில் வெளியிடுவதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

நாங்கள் 11:11 Productions ல் எப்பொழுதும் உள்ளடக்கத்தில் சிறந்த திரைப்படங்களை தயாரித்து வெளியிடவே விரும்புகிறோம், சிறந்த பொழுதுபோக்குடன் பார்வையாளர்களின் இதயம் கவரும் படங்களை வெளியிடுவதே எங்கள் நோக்கம். சந்தேகத்திற்கு இடமின்றி, பார்டர் படம் அனைத்து காரணிகளையும் ஒருங்கே கொண்டுள்ளது.

தனித்துவமான திரைக்கதைகள் மூலம் தமிழ் திரையுலகில் மதிப்பு மிக்கவராக போற்றப்படும் இயக்குநர் அறிவழகன், இப்படத்தில் உச்சம் தொட்டுள்ளார்.

இந்த திரைப்படத்தில் ஈடுபட்டுள்ள தொழில் நுட்ப திறமையாளர்களின் அருமையான உழைப்பு, அருண் விஜய் சாரின் அற்புதமான நடிப்பு படத்தினை மிகச்சிறந்ததாக மாற்றியுள்ளது. நாங்கள் இப்படத்தினை மிகப்பெரிய அளவில் வெளியிட திட்டமிட்டுள்ளோம்.

இயக்குநர் அறிவழகன் எழுதி இயக்கியுள்ள “பார்டர்” படத்தில் அருண் விஜய், ரெஜினா கசாண்ட்ரா மற்றும் ஸ்டெஃபி படேல் என ஒரு பெரும் நட்சத்திரப் பட்டாளம் நடித்துள்ளது.

T.விஜயராகவேந்திரா தயாரித்துள்ள இப்படத்தை 11:11 Production Dr. பிரபு திலக் வெளியிடுகிறார்.

மற்றும் தொழில் நுட்ப குழுவில் சாம் CS (இசை), B ராஜசேகர் (ஒளிப்பதிவு), சாபு ஜோசப் (எடிட்டிங்), ஷக்தி வெங்கட்ராஜ் M (கலை இயக்கம்), ஹீரா அறிவழகன் (ஆடை வடிவமைப்பாளர்), விவின் S.R. (நிர்வாகத் தயாரிப்பாளர்), உமேஷ் பிரணவ் (கிரியேட்டிவ் தயாரிப்பாளர்), & Sync Cinema (ஒலி வடிவமைப்பு) ஆகியோர் பணியாற்றியுள்ளனர்.

“பார்டர்” திரைப்படம் உலகமெங்கும் 2022 அக்டோபர் 5 வெளியாகிறது.

இளையராஜா எழுதி மெட்டமைத்த ‘இதயமே.. இதயமே..’ பாடலை பாடிய யுவன்

இளையராஜா எழுதி மெட்டமைத்த ‘இதயமே.. இதயமே..’ பாடலை பாடிய யுவன்

லேகா தியேட்டர்ஸ் பட நிறுவனம் சார்பில் ராயல் பாபு தயாரிக்க, ஆதிராஜன் கதை திரைக்கதை வசனம் எழுதி இயக்கி வரும் படம் “நினைவெல்லாம் நீயடா”.

இசைஞானி இளையராஜாவின் 1417 வது படமாக உருவாகி வரும் இதில் பிரஜன் நாயகனாக நடிக்க, நாயகியாக மனிஷா யாதவ் வித்தியாசமான வேடத்தில்‌ நடித்திருக்கிறார்.

மற்றொரு நாயகியாக சினாமிகா அறிமுகம் ஆகிறார். இளம் நாயகன் நாயகியாக ரோகித்-யுவலட்சுமி ஜோடி அறிமுகமாகிறது.

இவர்களுடன் முக்கிய இடத்தில் ரெட்டின் கிங்ஸ்லி காமெடியில் கலக்கியிருக்கிறார். மற்றும் மனோபாலா முத்துராமன் மதுமிதா ரஞ்சன் குமார் தயாரிப்பாளர் பி.எல்.தேனப்பன் தமிழ்செல்வி ஆகியோரும் நடித்திருக்கின்றனர்.

மனநல மருத்துவராக முக்கிய வேடத்தில் பிரபல இயக்குனர் ஆர்.வி.உதயகுமார் முத்திரை பதித்திருக்கிறார்.

ராஜா பட்டாசார்ஜி ஒளிப்பதிவை கையாள ஆசிஸ் ஜோசப் படத்தொகுப்பை கவனிக்கிறார். பிரதீப் தினேஷ் மாஸ்டர் சண்டை காட்சிகளை வடிவமைத்திருக்கிறார்.

கலையை முனிகிருஷ்ணா கவனிக்க பாடல்களை பழனி பாரதி, சினேகன் எழுதியிருக்கிறார்கள்.

“இதயமே… இதயமே” என்று தொடங்கும் ஒரு பாடலை இளையராஜா எழுதி கொடுத்திருக்கிறார். அந்தப் பாடலை யுவன் சங்கர் ராஜா பாடியிருக்கிறார்.

மாஸ்டர்கள் தினேஷ், தினா ஆகியோர் நடன காட்சிகளை ரசனையாக வடிவமைத்திருக்கின்றனர்‌‌. தயாரிப்பு நிர்வாகம்: இளங்கோ.

பள்ளிப் பருவத்தில் தோன்றும் முதல் காதலை மையமாக வைத்து உருவாக்கப்பட்டு வரும் இந்த படத்தை சென்னை கொடைக்கானல் திருப்போரூர் திருமழிசை உள்ளிட்ட பகுதிகளில் 41 நாட்களில் படமாக்கி முடித்திருக்கிறார் ‌இயக்குநர் ஆதிராஜன்.

இத‌ற்காக தயாரிப்பாளர் ராயல் பாபு இயக்குநருக்கு பாராட்டு தெரிவித்தார்.

இறுதி நாள் படப்பிடிப்பு சென்னையை அடுத்த ஈவிபி ஸ்டுடியோவில் நடைபெற்றது.

கொட்டும் மழையில் பிரஜன், சினாமிகா, யுவலட்சுமி மற்றும் மாணவியர் நடித்த காட்சிகள் படமாக்கப்பட்டன.

மாலையில் வெற்றிகரமாக படப்பிடிப்பை முடித்து பூசணிக்காய் உடைக்கப்பட்டது. இந்த மகிழ்ச்சியை படக்குழுவினர் கேக் வெட்டிக் கொண்டாடினர்.

தற்போது படத்தின் டப்பிங் நடந்து வருகிறது. படத்தை நவம்பர் மாதம் ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளனர்.

ரசிகர்களை சீட்டிங் செய்ய ‘திருட்டுப் பயலே’ ஜீவன் & ‘சதுரங்க வேட்டை’ நட்டி கூட்டணி

ரசிகர்களை சீட்டிங் செய்ய ‘திருட்டுப் பயலே’ ஜீவன் & ‘சதுரங்க வேட்டை’ நட்டி கூட்டணி

“யாயா” படத்தை தொடர்ந்து நல்ல விமர்சனங்களை கொடுத்த படம் “பக்ரீத்”.

இப் படத்தை “M10 PRODUCTIONS” சார்பில்
தயாரித்த M.S.முருகராஜ் தயாரிக்கும் மூன்றாவது பிரமாண்ட படத்திற்கு “சிக்னேச்சர்” என்று பெயரிட்டுள்ளார்.

நாம் வைக்கிற ஒவ்வொரு கை நாட்டும் எவ்வளவு முக்கியமானது. அந்த கை நாட்டை பயன்படுத்தி, அவங்க தலையெழுத்துல தாளம் போடுறது தான் இந்த “சிக்னேச்சர்”.

சாமானிய மக்களோடு பழகி அவங்க ரகசிய டேட்டா வை திருடும் கேரக்டரில் “திருட்டுப்பயலே” ஜீவன் நடிக்கிறார்.

அதே டேட்டா வை பயன்படுத்தி மக்களை வேட்டையாடு பவராக, “சதுரங்கவேட்டை” நட்டி நடிக்கிறார்.

இவர்கள் இணைந்து செய்யும் ‘சீட்டிங்’ தான் படத்தின் திரைக்கதை சுவாரசியம்.

இவர்களுடன் இளவரசு, ஹரிஷ் பெராடி, மன்சூர் அலிகான், ஜார்ஜ், மாறன் மற்றும் பலர் நடிக்கின்றனர். கதா நாயகி தேர்வு நடை பெற்று வருகிறது.

இதில் மேலும் ஒரு சிறப்பு அம்சமாக முன்னணி நடிகர் ஒருவர் நடிக்க இருக்கிறார்.

இத்திரைப்படத்தை “பக்ரீத்” படத்தை இயக்கிய ஜெகதீசன் சுபு இயக்குகிறார்.

ஒளிப்பதிவு- சீனிவாசன் தயாநிதி,
சண்டைப்பயிற்சி- திலீப் சுப்பராயன்,
நடனம்- கல்யாண், தினேஷ்,
படத்தொகுப்பு- கலை,
திரைக்கதை- பொன் பார்த்திபன்,
கலை இயக்குநர்- மைக்கேல்,
ஆகியோர் பணிபுரிகிறார்கள்.

விநாயகர் சதுர்த்தி இன்று பூஜையுடன் படபிடிப்பு ஆரம்பமானது. முதல் நாள் படபிடிப்பில் நாயகர்கள் ஜீவன், நட்டி கலந்து கொண்டார்கள்.

தொடர்ந்து ஒரே கட்ட படபிடிப்பாக சென்னை, மும்பை மற்றும் துபாய் போன்ற பல இடங்களில் நடைபெறுகிறது. பூஜையில் டைரக்டர் ஹரி, நடிகர் ஹரிஷ் பேரடி கலந்து கொண்டார்கள்.

அடுத்த தகவல் விரைவில்..

signature

ரசிகர்களுக்கு ‘கிக்’ கொடுக்க விளம்பர மோதலில் சந்தானம் – தான்யா ஹோப்

ரசிகர்களுக்கு ‘கிக்’ கொடுக்க விளம்பர மோதலில் சந்தானம் – தான்யா ஹோப்

சந்தானம் கதாநாயகனாக நடிக்கும் புதிய படத்திற்கு #கிக் என்று பெயரிட்டுள்ளார்கள்.

இதன் படபிடிப்பு கடந்த சில மாதங்களுக்கு முன் பெங்களூரில் ஆரம்பமானது.

தொடர்ந்து ஒரே கட்டமாக சென்னையில் நடந்து இதன் படபிடிப்பு பாங்காங்கில் 15 நாட்கள் நடந்து படபிடிப்பு முடிவடைந்தது.

இப்படத்தை பார்டியூன் பிலிம்ஸ் ( FORTUNE FILMS ) பட நிறுவனம் சார்பில் நவீன்ராஜ் பிரமாண்டமாக தயாரித்துள்ளார்.

இப்படமூலம், கன்னட பிரபல டைரக்டர் பிரசாந்த்ராஜ் தமிழில் இயக்குனராக அறிமுகமாகிறார். இவர் கன்னடத்தில் ஹிட்டான லவ்குரு, கானா பஜானா , விசில், ஆரஞ்ச் போன்ற பல படங்களை இயக்கி ஸ்டார் டைரக்டராக உள்ளார்.

இதில், சந்தானம் ஜோடியாக தடம் மற்றும், ‘தாராள பிரபு’ ஆகிய சூப்பர் ஹிட் படங்களில் நடித்த தான்யா ஹோப் ( tanya hope) நடிக்கிறார்.

மேலும், தம்பி ராமையா, பிரமானந்தம், செந்தில், கோவை சரளா, மன்சூர் அலிகான், மனோபாலா, Y.G.மகேந்திரன், மொட்டை ராஜேந்திரன், வையாபுரி, முத்துகாளை, ராகிணி திவேதி, ஷகிலா, கிரேன் மனோகர், கிங்காங், கூல் சுரேஷ், சேது, அந்தோணி மற்றும் பலர் நடிக்கிறார்கள்.

வாழ்க்கையில் ஒவ்வொரு நிமிடமும் கிக் தான். விளம்பர நிறுவனத்தில் வேலை செய்யும் கதாநாயகனின் ஒவ்வொரு செயலிலும் கிக்க்காக செய்ய நினைப்பவன்.

வேறு விளம்பர நிறுவனத்தில் வேலை செய்யும் நாயகியுடன் தொழில் முறை போட்டியில் கிக்-காக எலியும் பூனையுமாக மோதிக் கொள்கிறார்கள்.

இவர்களுக்குள் நடக்கும் யுத்தத்தை முழு நீள நகைச்சுவையுடன் ‘சந்தானம்’ பாணியில் டைரக்டர் உருவாக்கி இருக்கிறார்.

இரண்டு பாடல்களுக்காக 12 வித விதமான செட் அமைத்து அதிக பொருட்செலவில் பிரமாண்டமாக படமாக்கி உள்ளார்கள்.

இது ஒரு சந்தானம் அக்மார்க் திரைப்படம். குடும்பத்துடன் ஜாலியாக கொண்டாடும் விதத்தில் கதை அமைந்துள்ளது.

தயாரிப்பு: நவீன் ராஜ் ( Naveen Raj )

இசை: அர்ஜூன் ஜன்யா ( Arjun Janya )

ஒளிப்பதிவு: சுதாகர் ராஜ் ( Sudhakar Raj )

கலை: மோகன் பி.கேர் ( ( Mohan B.Kere )

எடிட்டிங்: நாகூரா ராமசந்த்ரா ( ‘DON’ fame Nagoorah Ramachandrah )

ஸ்டண்ட்: Dr.ரவி வர்மா ( Dr.Ravi Varma ),
டேவிட் காஸ்டில்லோ ( David Castillo )

நடனம்: குலபுஷா, சந்தோஷ் சேகர் ( Kulabhushah, santhosh Shekar )

Pro: ஜான்சன் ( Johnson )

தயாரிப்பு: நவீன் ராஜ் ( Naveen Raj )

More Articles
Follows