தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள
Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
‘சில்லு கருப்பட்டி’, ‘ஏலே’, மற்றும் அமேசான் பிரைம் வீடியோவின் ‘ஆந்தாலஜி’ தொகுப்பின் ஒரு பகுதியான ‘புத்தம் புது காலை விடியாதா’ என்ற ‘லோனர்ஸ்’ உள்ளிட்ட படங்களை இயக்கியவர் ஹலிதா ஷமீம்.
இவர் இயக்கத்தில் தயாரான ‘மின்மினி’ திரைப்படம் 2015-ல் தொடங்கப்பட்டது.
இப்படம் குழந்தைகளாக இருந்து, இளம் வயதினராக மாறுபவர்களின் கதையாக உருவானது.
2014-ம் ஆண்டு குழந்தைப்பருவத்தில் இருந்த கதாபாத்திரங்களை இப்படத்தின் முதல் பகுதியான குழந்தை பருவ பகுதிகளை அவர் 2015-ஆம் ஆண்டில் படமாக்கினார் மற்றும் அவர்கள் வளர்ந்த தோற்றத்தைக் காண 7 வருட இடைவெளியை இப்படத்திற்காக எடுத்துக்கொண்டார்.
இதையடுத்து அந்த கதாபாத்திரங்கள் முதிர்ச்சியடைந்த தோற்றத்தை தத்ரூபமாக திரையில் கொண்டுவரும் வகையில் கடந்த ஆண்டு ‘மின்மினி’ படப்பிடிப்பு மீண்டும் தொடங்கப்பட்டது.
இந்நிலையில், ‘மின்மினி’ படத்தின் மூலம் ஏ.ஆர்.ரகுமானின் மகள் கதீஜா ரகுமான் இசையமைப்பாளராக அறிமுகம் ஆகிறார்.
ஷங்கர் இயக்கத்தில் 2010ஆம் ஆண்டு வெளியான ‘எந்திரன்’ படத்தில் இடம்பெற்ற ‘புதிய மனிதா’ என்ற பாடலில் ஒரு சிறிய பகுதியை கதீஜா பாடியிருந்தார்.
சமீபத்தில் வெளியான ‘பொன்னியின் செல்வன் 2’ படத்தில் இடம்பெற்ற ‘சின்னஞ்சிறு நிலவே’ பாடலையும் கதீஜா பாடியுள்ளார்.
ஏற்கனவே, ‘ஒகே கண்மணி’ திரைப்படத்தில் ஒரு பாடலுக்கு ஏ.ஆர்.ரகுமான் மற்றும் அவரது மகன் ஏ.ஆர்.அமீன் இணைந்து இசையமைத்துள்ளனர்.
இதன் மூலம், ஏ.ஆர்.ரகுமான் , ஏ.ஆர்.ரகுமானின் மகன், ஏ.ஆர்.ரகுமானின் மகள் என ஏ.ஆர்.ரகுமானின் குடும்பத்தில் இசையமைப்பாளராக இசையில் மூழ்கிய உள்ளனர்.
khadija rahman will debut as a music director in minmini movie






