தமிழக ரசிகர்களை மெர்சலாக்கும் கேரளா தளபதி ரசிகர்கள்

தமிழக ரசிகர்களை மெர்சலாக்கும் கேரளா தளபதி ரசிகர்கள்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

actor vijayதமிழகத்தை தவிர கேரளாவிலும் விஜய்க்கு மாஸ் பெருகி வருகிறது.

இவர்கள் தமிழக ரசிகர்களே வியக்கும் அளவுக்கு ஏதாவது ஒன்றை செய்து வருகின்றனர்.

சில மாதங்களுக்கு முன் விஜய்க்கு சிலை வைத்து கொண்டாடினர்.

தற்போது ஒரு படி மேலே சென்று விஜய்க்காக ஒரு இணையதளம் ஒன்றை உருவாக்கவிருக்கிறார்களாம்.

கேரளாவை சேர்ந்த கில்லி பாய்ஸ் கேரளா விஜய் ரசிகர்கள் விஜய் பற்றிய செய்திகளை மட்டும் அறிய ஒரு சமூக பக்கம் தொடங்கவுள்ளனர்.

விரைவில் அந்த பக்கத்திற்காக அறிவிப்பு வெளியாகும் எனவும் அவர்கள் தெரிவித்துள்ளதாக சொல்லப்படுகிறது.

எனக்கு ஏற்பட்ட சம்பவம் இந்திய சரித்திரத்திலேயே இருக்காது.. : விஷால்

எனக்கு ஏற்பட்ட சம்பவம் இந்திய சரித்திரத்திலேயே இருக்காது.. : விஷால்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Vishalஇந்தியா டுடே Conclave நிகழ்வில் R.K. நகர் தேர்தல் பற்றியும் , தனது அரசியல் நிலைப்பாடு பற்றியும் விஷால் வெளிப்படையாக பேசியது மிகப்பெரிய வரவேற்பை பெற்றது.

அவர் பேசியதாவது…

எனக்கு அரசியல் தொழில் அல்ல, அரசியலில் நான் சம்பாதிக்கவும் வரவில்லை. நான் ஓரு நடிகன்.

நான் எம்.எல்.ஏ-க்களை விட அதிகம் புகழ் பெற்றவன். அவர்களை விட அதிகமாக சம்பாதிப்பவன். நான் அரசியலை தொழிலாக செய்ய வேண்டிய தேவையில்லை. R.K. நகர் தேர்தல் நடக்கும் போது என்னால் வீட்டில் அமர்ந்து கொண்டு தொலைக்காட்சியில் தேர்தல் களத்தில் நடப்பதை பார்த்துக்கொண்டு , இப்படி தான் என்னுடைய சமூதாயம் இருக்க போகிறது என்ற சொல்ல தோன்றவில்லை.

நான் வீட்டிலிருந்து வெளியே வந்து தேர்தலில் போட்டியிட வேண்டும் என்று முடிவு செய்தேன். வேட்புமனு தாக்கல் செய்ய வேண்டும் என்று முடிவெடுத்தேன். வேட்பு மனுக்கு கையெழுத்துக்கள் தேவைப்பட்டது. அவற்றை சரியான நபர்களிடம் வாங்கி தான் தாக்கல் செய்தேன். ஆனால் நான் வேட்புமனு தாக்கல் செய்தது பலருக்கு பயத்தை ஏற்படுத்தும் என்று நான் எதிர்பார்க்கவில்லை. எனக்கு R.K. நகரில் நிறைய ரசிகர் மன்றங்கள் உள்ளன.

தேர்தல் ஆணையத்தை என்னுடைய வேட்பு மனுவை நிராகரிக்க வைத்ததின் மூலம் நான் தான் வெற்றி பெற்றிருப்பேன் என்பதை எனக்கு எதிராக செயல்பட்டவர்கள் தீர்மானித்துவிட்டார்கள் என்பது தான் உண்மை.

நான் தேர்தலில் வெற்றி பெற்றிருப்பேனா இல்லையா என்பது அடுத்த விஷயம் தான். குடியரசு வரலாற்றில் ஏற்றுக்கொள்ளப்பட்ட மனு இதுவரை நிராகரிக்கப்பட்டதில்லை.

என்னுடைய வேட்புமனு நிராகரிக்கப்பட்ட பிறகு நான் அரசியலுக்கு வரவேண்டும் என்று உறுதியாக முடிவு செய்துவிட்டேன். அவர்களால் தான் நான் அரசியலுக்கு வரவேண்டும் என்று முடிவுசெய்துள்ளேன். அவர்களுக்கு நன்றி என்றார் விஷால்.

சூர்யா-கார்த்தி இணையும் பட ஸ்டில்ஸ்லை வெளியிட்ட சூரி

சூர்யா-கார்த்தி இணையும் பட ஸ்டில்ஸ்லை வெளியிட்ட சூரி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Soori revealed still from Kadai kutty singam movieசூர்யா கார்த்தி இருவரும் அண்ணன் தம்பிகளாக இருந்தாலும் இதுவரை ஒரு படத்தில் கூட இணையவில்லை.

ஆனால் தற்போது பாண்டிராஜ் இயக்கத்தில் கார்த்தி நடித்து வரும் கடைக்குட்டிசிங்கம் படத்தை சூர்யா தயாரித்து வருகிறார்.

சூர்யாவின் 2டி என்டர்டெயின்மென்ட் தயாரித்து வரும் இப்படத்தில் நாயகியாக சாயிஷா நடிக்க, முக்கிய வேடத்தில் பிரியா பவானிசங்கர் நடிக்கிறார் என்பதை பார்த்தோம்.

இவர்களுடன் சத்யராஜ், சூரி, ஸ்ரீமன், பானுபிரியா, மவுனிகா உள்ளிட்ட பலர் நடிக்க, இமான் இசையமைக்கிறார்.

விவசாயத்திற்கு முக்கியத்துவம் கொடுத்து கிராமத்து பின்னணியில் இப்படத்தை இயக்கி வருகிறார் பாண்டிராஜ்.

இந்நிலையில் இப்பட சூட்டிங்கின் போது தான் எடுத்த போட்டோ ஒன்றை ட்விட்டரில் பகிர்ந்துள்ளார் சூரி.

அதில் ‘இந்த வெள்ளந்தி சிரிப்பும் விளையாடுற தண்டட்டியும் தமிழ் மண்ணுக்கே உரிய அடையாளம். செல்ல அப்பத்தாக்களோடு ஒரு செல்பி…(கடைக்குட்டிசிங்கம் சூட்டிங் ஸ்பாட்)’ என்று பதிவு செய்துள்ளார்.

Soori revealed still from Kadai kutty singam movie

soori with paatis

விஜய்-அட்லி கூட்டணி அடித்த மெர்சல் செஞ்சுரி

விஜய்-அட்லி கூட்டணி அடித்த மெர்சல் செஞ்சுரி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

mersalதெறி படம் வெற்றிப் பெற்றதையடுத்து தன் மெர்சல் படத்தை இயக்கும் வாய்ப்பையும் அட்லிக்கே கொடுத்தார் விஜய்.

இப்படத்திற்கு ஏற்கெனவே எதிர்பார்ப்பு இருந்த நிலையில் படத்தில் இடம்பெற்ற ஜி.எஸ்.டி. வசனங்கள், மருத்துவ துறை முறைகேடு உள்ளிட்ட பல வசனங்களால் பாஜக சார்பில் எதிர்ப்பு கிளம்பியது.

இதுவே படத்திற்கு விளம்பரமாகிவிட படத்தின் வசூல் ரூ.200 கோடியை தாண்டியது.

இதனையடுத்து சில தினங்களில் தெலுங்கில் ‘அதிரிந்தி’ என்ற பெயரிலும் வெளியானது. அங்கும் நல்ல வசூல் கிடைத்துள்ளதாம்.

இந்நிலையில், தற்போது இப்படம் 100 நாட்களை கடந்துள்ளதால் இதனை விஜய் ரசிகர்கள் கோலாகலமாக கொண்டாடி வருகின்றனர்.

ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்திருந்த இந்த படத்தை ஸ்ரீ தேனாண்டாள் பிலிம்ஸ் தன் 100வது படைப்பாக தயாரித்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

ஸ்கெட்ச் க்ளைமாக்ஸ் செம; சூப்பர் மேக்கிங் என சூப்பர் ஸ்டார் பாராட்டு

ஸ்கெட்ச் க்ளைமாக்ஸ் செம; சூப்பர் மேக்கிங் என சூப்பர் ஸ்டார் பாராட்டு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

sketch stillsவிஜய் சந்தர் இயக்கத்தில் விக்ரம், தமன்னா நடித்து பொங்கலுக்கு வெளியான படம் ஸ்கெட்ச்

தமன் இசையமைத்திருந்த இப்படத்தை கலைப்புலி எஸ் தாணு தயாரித்து வெளியிட்டு இருந்தார்.

அனைத்து தரப்பு ரசிகர்களையும் வெகுவாக கவர்ந்த இப்படம் இன்றுவரை வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது.

இந்நிலையில் இப்படத்தை பார்க்க ரஜினிக்கு தனி ஏற்பாடு செய்து கொடுத்திருந்தார் தயாரிப்பாளர் தாணு.

படத்தை பார்த்த ரஜினிகாந்த் படக்குழுவினர் அனைவரையும் வெகுவாக பாராட்டினாராம்.

மேலும், படத்தின் கடைசி 30 நிமிட காட்சிகள் மிகவும் அருமை எனவும். க்ளைமாக்ஸ் காட்சிகள் எவரும் எதிர்பார்க்காத ஒன்று, சூப்பர் மேக்கிங்.’ என பாராட்டினாராம்.

இத்தகவலை பட இயக்குனர் விஜய்சந்தர் தெரிவித்துள்ளார்.

காலா தலைப்புக்கு எதிர்ப்பு; ரஜினி-தனுஷ்-ரஞ்சித் ஆகியோருக்கு நோட்டீஸ்

காலா தலைப்புக்கு எதிர்ப்பு; ரஜினி-தனுஷ்-ரஞ்சித் ஆகியோருக்கு நோட்டீஸ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Kaala stillsசென்னையைச் சேர்ந்த ராஜசேகரன் என்பவர் 1996-ம் ஆண்டு தான் உருவாக்கிய கதைக்கு ‘கரிகாலன்’ என தலைப்பிட்டு அதை தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபையில் பதிவு செய்திருந்தாராம்.

அதனையடுத்து 10 வருடங்களுக்கு 2006 வரை அந்த தலைப்பை புதுப்பித்து வந்துள்ளார்.

ஆனால் அதன்பிறகு தென்னிந்திய வர்த்தக சபை கரிகாலன் என்ற தலைப்பை புதுப்பிக்க மறுத்துவிட்டதாம்.

தற்போது, ரஞ்சித் இயக்கத்தில் தனுஷ் தயாரிக்கும் ரஜினிகாந்தின் ‘காலா’ படத்தை ‘காலா என்கிற கரிகாலன்’ என்ற தலைப்பில் பதிவு செய்துள்ளனர்.

தனது தலைப்பை தனது அனுமதி இல்லாமல் பயன்படுத்துவதால், ‘கரிகாலன்’ என்ற அடைமொழியுடன் ‘காலா’ படம் தயாரிக்கவும், விளம்பரப்படுத்தவும், வெளியிடவும் கோரி சென்னை மாவட்ட உரிமையியல் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கு, காப்புரிமை சம்பந்தப்பட்ட விவகாரம் என்பதால் உயர் நீதிமன்றத்தை அணுக வேண்டுமென ரஜினி தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட விளக்கத்தை ஏற்று, உயர் நீதிமன்றத்தினை அணுக அறிவுறுத்தி வழக்கு முடித்து வைக்கப்பட்டது.

அதன்படி ராஜசேகரன் சென்னை உயர் நீதிமன்றத்தில் ‘காலா’ படத்திற்கு தடை விதிக்கக் கோரி மனு தாக்கல் செய்திருந்தார்.

இந்த மனு நீதிபதி சுந்தர் முன்பு விசாரணைக்கு வந்தபோது, வழக்கு தொடர்பாக நடிகர் ரஜினிகாந்த், இயக்குனர் ரஞ்சித், பட நிறுவனம், தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபை ஆகியோர் பிப்ரவரி 12-ம் தேதிக்குள் பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கை ஒத்திவைத்துள்ளார்.

More Articles
Follows