அதிமுக கூட்டணியில் இருந்து விலகிய கருணாஸ் கட்சி திமுக-வுக்கு திடீர் ஆதரவு..!

அடுத்த மாதம் ஏப்ரல் 6-ம் தேதி தமிழக சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது.

தேமுதல் முடிவுகள் மே 2-ம் தேதி வெளியாகவுள்ளது.

இதனால் தமிழக அரசியல் களம் உச்சபட்ச பரபரப்பில் உள்ளது.

இதனிடையில் நடிகரும் திருவாடானை தொகுதி எம்.எல்.ஏவுமான கருணாஸ் அதிமுக கூட்டணியில் இருந்து தனது கட்சி விலகுவதாக கடந்த 2 தினங்களுக்கு முன்னர் தெரிவித்தார்.

அவர் கூறியதாவது:-

“முக்குலத்தோர் புலிப்படை கோரிக்கைகளை நிறைவேற்றவில்லை என்பதால் அதிமுக கூட்டணியில் இருந்து விலகுகிறோம் என்றும் முக்குலத்தோர் புலிப்படை தமிழகத்தில் 84 தொகுதிகளில் தனித்து போட்டியிடும் என்றார்.

இந்த நிலையில், “சட்டசபை தேர்தலில் திமுகவுக்கு முக்குலத்தோர் புலிப்படைகட்சி ஆதரவு அளிப்பதாக கடிதம் ஒன்றை அளித்துள்ளது.

இந்த கடிதத்தை முக்குலத்தோர் புலிப்படை இளைஞரணி செயலாளர் அஜய், திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதியிடம் அளித்திருக்கிறாராம்.

Karunas supports DMK in assembly election 2021

Overall Rating : Not available

Latest Post