‘சிறந்த நண்பர்கள்தான் இணைய முடியும்..’ விஷால் பற்றி கார்த்தி

‘சிறந்த நண்பர்கள்தான் இணைய முடியும்..’ விஷால் பற்றி கார்த்தி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Karthi and Vishal starring in Karuppu Raja Vellai Rajaபிரபுதேவா தயாரித்து இயக்கவுள்ள படம் கருப்பு ராஜா வெள்ளை ராஜா.

இதில் முதன்முறையாக விஷால் மற்றும் கார்த்தி இணைந்து நடிக்கின்றனர்.

ஹாரிஸ்ஜெயராஜ் இசையமைக்க, சமீர் ரெட்டி ஒளிப்பதிவு செய்கிறார்.

நாயகியாக சாயிஷா நடிக்கிறார். இவர் தற்போது விஜய் இயக்கியுள்ள வனமகன் படத்தில் ஜெயம் ரவியுடன் நடித்துள்ளார்.

தற்போது இப்படத்தின் பத்திரிகையாளர்கள் சந்திப்பு நடைபெற்று வருகிறது.

இதில் கார்த்தி பேசும்போது, இரட்டை நாயகர்கள் கதையில் சிறந்த நண்பர்களால்தான் இணைந்து நடிக்க முடியும்.

அதான் இப்படத்தில் விஷால் உடன் இணைந்து நடிக்கிறேன் என தெரிவித்தார்.

Karthi and Vishal starring in Karuppu Raja Vellai Raja

krvr

சினிமா விமர்சனம் செய்பவர்களுக்கு விஷால் விடுத்த வேண்டுகோள்

சினிமா விமர்சனம் செய்பவர்களுக்கு விஷால் விடுத்த வேண்டுகோள்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Vishal speech at neruppuda audio launch about movie reviewersவிக்ரம் பிரபு முதன்முறையாக தயாரித்து நடித்துள்ள ‘நெருப்புடா’ படத்தின் பாடல் வெளியீட்டு விழா சற்று முன்னர் சென்னையில் நடைபெற்றது.

நிக்கிகல்ராணி நாயகியாக நடித்துள்ள இப்படத்திற்கு ஷான் ரோல்டான் இசையமைத்துள்ளார்.

இவ்விழாவில் ரஜினிகாந்த், பிரபு, சத்யராஜ், சிவகுமார், விஷால், கார்த்தி, தனுஷ், சிவகார்த்திகேயன் உள்ளிட்ட பிரபலங்கள் கலந்து கொண்டனர்.

இவ்விழாவில் விஷால் பேசும்போது…

‘ஒரு படம் ரிலீஸ் ஆகிவிட்டால், அதற்கு 3 நாட்கள் கழித்து விமர்சனம் செய்யுங்கள்.

இப்பொழுது எல்லாம் படங்கள் 3 நாட்கள் ஓடுவதே பெரிய விஷயமாக மாறிவிட்டது.

ஒருசில விமர்சகர்கள் தங்களுடைய சொந்த கருத்தை தமிழ்நாட்டு மக்களின் ஒட்டுமொத்த கருத்தை போல் தெரிவிக்கின்றனர்.

படம் வந்த அன்றே விமர்சனம் வந்துவிடுவதால், படத்தின் வசூல் முழுமையாக பாதிக்கிறது.

இதை நான் ஒரு தயாரிப்பாளர் சங்க தலைவராக, ஒரு நடிகர் சங்கத்தின் பொதுச்செயலாளராக, ஒரு நடிகராக, ஒரு மனிதராக உங்கள் முன் கேட்டுக்கொள்கிறேன்’ என்று பேசினார் விஷால்.

Vishal speech at neruppuda audio launch about movie reviewers

விஜய்யை இயக்க ராஜமௌலியிடம் தாணு வேண்டுகோள்

விஜய்யை இயக்க ராஜமௌலியிடம் தாணு வேண்டுகோள்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ss rajamouliஇந்திய சினிமாவையே தன் பாகுபலி படத்தால் திரும்பி பார்க்க வைத்தவர் இயக்குனர் ராஜமௌலி.

தற்போது இப்படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்கியுள்ளார்.

வருகிற ஏப்ரல் 28ஆம் தேதி இப்படம் வெளியாகவுள்ள நிலையில், இதன் இசை வெளியிட்டு விழா இன்று சென்னையில் நடைபெற்றது.

இவ்விழாவில் கலந்துக் கொண்ட தெறி பட தயாரிப்பாளர் தாணு பேசும்போது…

சில வருடங்களுக்கு முன், நான் ஹைதராபாத் சென்றபோது, ராஜமவுலியை சந்தித்தேன்.

அப்போது விஜய்யை வைத்து ஒரு படத்தை இயக்க அவரிடம் கேட்டுக் கொண்டேன்.

ஆனால் சில காரணங்களால் அந்த நிறைவேறாமல் போய்விட்டது” என்று பேசினார்.

Producer Thanu requested to Rajamouli to direct Vijay

தொண்டன் படத்தின் கதை என்ன..? சமுத்திரக்கனி விளக்கம்

தொண்டன் படத்தின் கதை என்ன..? சமுத்திரக்கனி விளக்கம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

thondan 2சமுத்திரக்கனி தயாரித்து இயக்கி, நடித்துள்ள படம் தொண்டன்.

இதில் விக்ராந்த், சுனைனா, அர்த்தனா உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

ஜஸ்டின் பிரபாரகரன் இசையமைத்துள்ள இப்படத்தின் பாடல்களை இன்று சென்னையில் வெளியிட்டனர்.

அதன்பின் பத்திரிகையாளர்கள் சந்தித்து பேசினார் சமுத்திரக்கனி. அவர் பேசியதாவது…

பெண்கள் விடுதியில் ஒருவன் புகுந்து ஒரு பெண்ணை பாலியல் தொந்தரவு செய்தான் என்கிற உண்மை சம்பவத்தை பற்றிய கதைதான் இது.

ஆனால் அந்த காமுகனை பெண்கள் அனைவரும் ஒன்றுசேர்த்து அடித்தால் என்னவாகி இருப்பான் என்று பெண்களுக்கு விழிப்புணர்வு ஊட்டும் வகையில் இப்படத்தை இயக்கியிருக்கிறேன்.

மேலும் இதில் உயிர்காக்கும் 108 ஆம்புலன்ஸ் பற்றிய சம்பவங்களை சொல்லியிருக்கிறோம்.

ஒருவர் ஆம்புலன்ஸில் உயிர்க்கு போராடுபவர்களை பற்றிதான் நினைக்கிறோம்.

ஆனால் அந்த வாகனத்தை ஓட்டிச் செல்லபவர்களுக்கும், அதில் முதலுதவி செய்பவர்களின் மனவலியை பற்றி இப்படம் சொல்லும்.

மேலும் இதில் பாதிக்கப்பட்ட விவசாயிகள் தற்கொலை பற்றிய அனைத்தையும் அலசியுள்ளேன்.

இந்த தொண்டனுக்கும் அரசியலுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை.” என்று பேசினார்.

Samuthirakani revelaed the story of his Thondan movie

thondan 1

 

அரசியல் நெருக்கடி வந்தால் ரஜினியை போல சமாளிப்பாரா இளையராஜா.?

அரசியல் நெருக்கடி வந்தால் ரஜினியை போல சமாளிப்பாரா இளையராஜா.?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Ilayarajaசில தினங்களுக்கு முன் தமிழக அரசியல்வாதிகளின் நெருக்கடியால் தனது இலங்கை பயணத்தை ரத்து செய்தார் ரஜினிகாந்த்.

இந்நிலையில் முன்னாள் இலங்கை அதிபர் ராஜபக்சேவின் நெருங்கிய உறவினர்கள் சிலரால் ஒரு இசை கச்சேரி ஒன்று இலங்கையில் ஜீன் மாதம் நடைபெற உள்ளதாம்.

அந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள இசைஞானி இளையராஜா கூறப்படுகிறது.

எனவே ரஜினியைப் போல இளையராஜாவுக்கும் தமிழக அரசியல்வாதிகளிடம் இருந்து எதிர்ப்பு கிளம்பும் என சொல்லப்படுகிறது.

ஒருவேளை எதிர்ப்பை மீறி இலங்கை செல்வாரா? அல்லது ரஜினியை போல பின்வாங்குவாரா? என்பதை சில நாட்கள் பொறுத்திருந்து பார்ப்போம்.

Will Ilayaraja cancel his Sri Lanka visit like Rajinikanth

‘8 தோட்டாக்கள்’ ஸ்ரீகணேஷுக்கு தங்க சங்கிலி பரிசளித்த எம்.எஸ்.பாஸ்கர்

‘8 தோட்டாக்கள்’ ஸ்ரீகணேஷுக்கு தங்க சங்கிலி பரிசளித்த எம்.எஸ்.பாஸ்கர்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Actor MS Baskar presented Gold Chain to 8 Thotakkal director Sri Ganeshசமீபத்தில் வெளியான ‘8 தோட்டாக்கள்’ படத்தை இயக்கியவர் இயக்குநர் ஸ்ரீகணேஷ். இந்தப் படம் விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

இதில் நடித்திருந்த நடிகர் எம்.எஸ்.பாஸ்கரின் கதாப்பத்திரம் ரசிகர்கள் அனைவரையும் கவர்ந்துள்ளது.

திரைப்பட நடிகர்கள், இயக்குனராகள், பத்திரிகையாளர்கள், ரசிகர்கள் என பலர் எம்.எஸ்.பாஸ்கர் அவர்களை நேரிலும், தொலைபேசி வாயிலாக தொடர்பு கொண்டும் பாராட்டி வருகின்றனர்.

இதனால், உற்சாகம் அடைந்த நடிகர் எம்.எஸ்.பாஸ்கர், தன்னுடைய கதாப்பாத்திரத்தின் நடிப்பை வெளிக் கொண்டுவர காரணமாக இருந்த இயக்குநர் ஸ்ரீகணேஷ் அவர்களை பாராட்ட முடிவு செய்து, தனது வீட்டுக்கு அழைத்தார்.

பட விமர்சனங்களை பற்றி பகிர்ந்து கொள்ள எம்.எஸ்.பாஸ்கர் அழைத்திருக்கிறார் என்று நினைத்து வந்த இயக்குனர் ஸ்ரீகணேஷ், திடீர் என அவர் தங்க சங்கிலி பரிசளித்து பாராட்டியதில் நெகிழ்ந்து போனார்.

Actor MS Baskar presented Gold Chain to 8 Thotakkal director Sri Ganesh

Actor MS Baskar presented Gold Chain to 8 Thotakkal director Sri Ganesh

More Articles
Follows