பிரபுதேவா இயக்கத்தில் விஷால்-கார்த்தி இணைந்த படம் நிறுத்தம்?

பிரபுதேவா இயக்கத்தில் விஷால்-கார்த்தி இணைந்த படம் நிறுத்தம்?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Vishal Karthi Starring Karuppu Raja Vellai Raja movie stoppedமுதன்முறையாக கார்த்தி மற்றும் விஷால் இணைந்து நடித்து வரும் படம் கருப்பு ராஜா வெள்ளை ராஜா.

பிரபுதேவா இயக்கும் இப்படத்தில் நாயகியாக வனமகன் புகழ் சாயிஷா நடித்து வருகிறார்.

இப்படத்தை ஐசரி கணேஷ் தயாரித்து வருகிறார்.

இந்நிலையில் இப்படத்தின் சூட்டிங் திடீரென நிறுத்தப்பட்டுள்ளதாக தகவல்கள் வந்துள்ளன.

எனவே விஷால் தான் அடுத்து நடிக்கவுள்ள சண்டக்கோழி 2 படத்தில் நடிக்கவுள்ளதாகவும் கூறப்படுகிறது.

ஆனால் படம் பாதி முடிவடைந்த நிலையில் உள்ளதால், பேச்சுவார்த்தை தொடங்கி மீண்டும் பட வேலைகள் தொடங்கும் எனவும் செய்திகள் வருகின்றன.

இப்படத்திற்காக நான்கு பாடல்களை ஹாரிஸ் ஜெயராஜ் உருவாக்கி வைத்துள்ளாராம்.

சூட்டிங் நிறுத்தம் ஏன்? என்பதற்காக காரணங்கள் இனி தெரியவரும் என எதிர்பார்க்கலாம்.

Vishal Karthi Starring Karuppu Raja Vellai Raja movie stopped

கின்னஸ் சாதனை படைத்த டைரக்டர் சிராஜ் மரணம்

கின்னஸ் சாதனை படைத்த டைரக்டர் சிராஜ் மரணம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Director Siraj passed awayதிரைப்பட இயக்குனர் சிராஜ் மாரடைப்பு காரணமாக நேற்றிரவு காலமானார். அவருக்கு வயரு 65.

சேத்துபட்டிலுள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

தேனி மாவட்டம் கம்பத்தை சேர்ந்த சிராஜ், இயக்குனர் பாக்யராஜிடம் உதவி இயக்குனராக தன் திரையுலக வாழ்க்கையை தொடங்கியவர்.

ராமராஜன் நடிப்பில் உருவான ‘என்ன பெத்த ராசா’ அவர் இயக்கிய முதல்படமாகும்.

‘ஊரெல்லாம் உன்பாட்டு’, ‘என் ராஜாங்கம்’ போன்ற திரைப்படங்களையும் சிராஜ் இயக்கியுள்ளார்.

தமிழ் திரையுலகின் கின்னஸ் சாதனை படமான சுயம்வரம் படத்தை இவர் இயக்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

அவருக்கு ஆயிஷா என்ற மனைவியும் 3 பெண் மகள்களும் உள்ளனர்.

Director Siraj passed away

ஆயிரத்தில் ஒருவன் சிவகார்த்திகேயன்; பாராட்டும் கூட்டத்தில் ஒருத்தன்

ஆயிரத்தில் ஒருவன் சிவகார்த்திகேயன்; பாராட்டும் கூட்டத்தில் ஒருத்தன்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Kootathil-Oruthan-Posterஅசோக் செல்வன், பிரியா ஆனந்த், சமுத்திரக்கனி இணைந்து நடித்துள்ள படம் கூட்டத்தில் ஒருத்தன்.

ஞானவேல் தயாரித்துள்ள இப்படத்திற்கு நிவாஸ் பிரசன்னா இசையமைத்துள்ளார்.

தேசிய விருது பெற்ற ஜோக்கர் படத்தை தயாரித்த எஸ்ஆர். பிரபு இப்படத்தை தயாரித்துள்ளார்.

இப்படம் வருகிற ஜீலை 28ஆம் தேதி வெளியாகவுள்ள நிலையில், இதன் புரமோசன் நிகழ்ச்சிக்காக ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளனர்.

அதில் கூட்டத்தில் ஒருத்தனாக இருந்த சிவகார்த்திகயேன் இன்று ஆயிரத்தில் ஒருவனாக உயர்ந்து நிற்கிறார் என கௌரவித்துள்ளனர்.

Kootathil Oruthan movie launched Tribute Video for Sivakarthikeyan

 

அந்த வீடியோ பதிவு இதோ…

Exclusive: மெர்சல் சூட்டிங் அப்டேட்; விஜய்யை அவசரப்படுத்தும் அட்லி

Exclusive: மெர்சல் சூட்டிங் அப்டேட்; விஜய்யை அவசரப்படுத்தும் அட்லி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

vijay real life imageவிஜய் நடிப்பில் உருவாகும் மெர்சல் படத்தை அட்லி இயக்கி வருகிறார்.

ஏஆர். ரஹ்மான் இசையமைத்து வரும் இப்படத்தின் பாடல்கள் ஆகஸ்ட் 20ஆம் தேதி வெளியாகவுள்ளது.

இப்படத்தை இந்தாண்டு 2017 தீபாவளிக்கு வெளியிட திட்டமிட்டுள்ளதால், சூட்டிங்கை விறுவிறுப்பாக நடத்தி வருகிறாராம் அட்லி.

சென்னையின் இரண்டு பகுதிகளில் இதன் சூட்டிங்கை நடத்தி வருகின்றனர்.

ஒரு இடத்தில் சண்டைக் காட்சியையும் மற்றொரு காட்சியை கோட்டூர்புரத்திலும் மேற்கொண்டு வருகின்றனர்.

கோட்டூர்புர காட்சியில் ஒரு பெண் விபத்தில் அடிப்பட்டு கிடப்பது போலவும், அவரின் சிகிச்சை செலவுக்கு லட்சக்கணக்கில் தேவைப்படுவது போலவும் காட்சிகளை படமாக்கி வருகின்றனர்.

இந்த பெண்ணின் சிகிக்சையை டாக்டராக நடிக்கும் மாறன் கேரக்டர் விஜய் இலவசமாக செய்யலாம் என எதிர்பார்க்கலாம்.

Vijay Atlee combo Mersal movie shooting updates

போதை பொருள் வழக்கில் காஜல் அகர்வால் மேனேஜர் கைது

போதை பொருள் வழக்கில் காஜல் அகர்வால் மேனேஜர் கைது

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Drug Scandal Kajal Agarwals Manager Arrestedதென்னிந்திய சினிமாவின் முன்னணி நாயகிகளில் ஒருவராக திகழ்பவர் காஜல் அகர்வால்.

இவர் மெர்சல் படத்தில் விஜய்யுடனும் விவேகம் படத்தில் அஜித்துடனும் தற்போது நடித்திருக்கிறார்.

இந்நிலையில் இவரின் மேனேஜர் ஜானி ஜோசப், அவரது வீட்டிற்குள் காஞ்சா பாக்கெட்டுகள் வைத்திருந்ததால் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைதுசெய்யப்பட்டுள்ள ஜானி காஜலுக்கு மட்டுமில்லாமல், பலருக்கும் மேனேஜராக பணியாற்றி இருக்கிறார்.
இந்த விவகாரத்தால் காஜல் அகர்வாலுக்கும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது.

மேலும் போதை பொருள் கடத்தல் கும்பலுடன் தொடர்பு இருப்பதாக, தெலுங்கு சினிமா நட்சத்திரங்கள் நவ்தீப், சார்மி, முமைத்கான். இயக்குனர் பூரி ஜெகந்நாத் உள்பட திரையுலகை சேர்ந்த 12 பேருக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ள போதை பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் அவர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Drug Scandal Kajal Agarwals Manager Arrested

வரியை நீக்க முடியாது… விஷாலிடம் ‘ஸாரி’ சொன்ன தமிழக அரசு

வரியை நீக்க முடியாது… விஷாலிடம் ‘ஸாரி’ சொன்ன தமிழக அரசு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

actor vishalமத்திய அரசு கடந்த ஜுலை 1-ந் தேதி முதல் ஜி.எஸ்.டி என்ற பெயரில் நாடு முழுவதும ஒரே மாதிரியான வரியை அமல்படுத்தியுள்ளது.

ஜி.எஸ்.டி-யில் சினிமா டிக்கெட்டுகளுக்கு 18 முதல் 28 சதவீத வரி விதிக்கப்பட்டுள்ளது. இதுதவிர உள்ளாட்சி அமைப்புகள் மூலமாகவும் கூடுதலாக 30 சதவீதம் கேளிக்கை வரியை தமிழக அரசு விதித்துள்ளது.

சினிமா டிக்கெட்டுக்கு மத்திய அரசின் ஜி.எஸ்.டி. வரியுடன் மாநில அரசின் கேளிக்கை வரியும் வசூலிப்பதால் கட்டணத்தை உயர்த்த வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

இரட்டை வரி செலுத்தினால் திரையுலகம் பெரிய அளவில் பாதிக்கப்படும் என்றும், கேளிக்கை வரியை ரத்து செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தி கடந்த ஜூலை 3ம் தேதி முதல் 4 நாட்கள் தமிழகத்தில் திரையரங்குகள் மூடப்பட்டன.

இதனை அடுத்து தயாரிப்பாளர்கள் சங்கம், தமிழ்த் திரைப்பட வர்த்தக சபை உள்ளிட்ட திரைத் துறை அமைப்பினர் ஜூலை 2ம் தேதி அமைச்சர்கள் ஜெயக்குமார், எஸ்.பி.வேலுமணி உள்ளிட்டோரை சந்தித்து கோரிக்கை விடுத்தனர்.

அதில் எந்த முடிவும் எட்டப்படாததையடுத்து ஜூலை 3 ஆம் தேதி முதல் தியேட்டர்கள் மூடப்பட்டன.

ஆனால் அதற்கு மக்கள் ஆதரவு பெரியதாக கிடைக்கவில்லை. திரைத்துறையிலும் ஒற்றை கருத்து இல்லாத்தால் அந்த செயல் தோல்வி அடைந்தது.

இந்நிலையில், சென்னை தலைமை செயலகத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, நிதியமைச்சர் டி.ஜெயக்குமார், உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி ஆகியோரை திரைத்துறையினர் ஜூலை 3ம் தேதியும் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினர்.

இதில் தயாரிப்பாளர் சங்கத் தலைவர் விஷால், நடிகர் சங்கத் தலைவர் நாசர், திரைப்பட வர்த்தக சபைத் தலைவர் அபிராமி ராமநாதன், பெப்சி தலைவர் ஆர்.கே.செல்வமணி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

2ம் கட்ட பேச்சுவார்த்தையிலும் எந்த உடன்பாடும் எட்டப்படவில்லை. எனினும் இது அரசுக்கு எதிரான போராட்டமல்ல என்று அறிவித்த தியேட்டர் உரிமையாளர்கள், ஜூலை 7ம் தேதி முதல் தியேட்டர்களை தாங்களாகவே இயக்கத் தொடங்கினர்.

இந்நிலையில் இன்று 3ம் கட்ட இறுதிப் பேச்சுவார்த்தை தலைமைச் செயலகத்தில் இன்று நடைபெற்றது.

தொழிற்துறை செயலாளர் அதுல்ய மிஸ்ரா, நிதித்துறை செயலாளர் சண்முகம் மற்றும் திரைத்துறையினர் சார்பில் தயாரிப்பாளர் மற்றும் நடிகர் சங்கத்தைச் சேர்ந்த விஷால், அபிராமி ராமநாதன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

இந்தப் பேச்சுவார்த்தையிலும் உடன்பாடு எட்டப்படாததால் பேச்சுவார்த்தை தோல்வியடைந்ததாக திரைத்துறையினர் கூறியுள்ளனர்.

நடந்த பேச்சுவார்த்தை என்ன என்பதையும் முழுமையாக யாரும் தெரியப்படுத்தவில்லை.

More Articles
Follows