தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
சுரேஷ் கிருஷ்ணா இயக்கத்தில் கமல் இரு வேடங்களில் மிரட்டிய திரைப்படம் ஆளவந்தான்.
இப்படத்தை கலைப்புலி தாணு தயாரித்து மிகப்பிரம்மாண்டமாக ரிலீஸ் செய்தார்.
மனீஷா கொய்ராலா மற்றும் ரவீணா தாண்டன் நாயகிகளாக நடித்த இப்படம் கடந்த 2001ஆம் ஆண்டு வெளியானது.
இப்படம் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை என்றாலும், இதில் கமலின் அர்ப்பணிப்பும் தொழில்நுட்பமும் அதிகளவில் பேசப்பட்டது.
தற்போது இப்படம் டிஜிட்டல் மயமாக்கப்பட உள்ளது. இதற்கான பணிகள் இன்று தொடங்கவுள்ளதாக போஸ்டர்கள் வெளியாகியுள்ளன.
மேலும், அந்த போஸ்டர்களில் இன்றைய மதிப்பில் அன்றைய தினத்தில் ரூ. 400 கோடியில் உருவாக்கப்பட்ட திரைப்படம் என குறிப்பிட்டுள்ளனர்.
Kamals Aalavandhan digital version will be released soon