‘கலைஞரின் வசனங்களை பேசுபவனே முழுமையான நடிகன்’ – கமல்

‘கலைஞரின் வசனங்களை பேசுபவனே முழுமையான நடிகன்’ – கமல்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Karunanidhi Kamalhassanதிமுக தலைவரும் முன்னாள் முதல்வருமான மு. கருணாநிதி அவர்கள் 60 ஆண்டு கால சட்டமன்ற உறுப்பினராக இருந்து தற்போது வைரவிழாவை கொண்டாடவிருக்கிறார்.

மேலும் 5 முறை தமிழத்தில் முதல்வராக அவர் இருந்துள்ளார்.

அவரின் 94வது பிறந்தநாள் (ஜீன் 3) இந்த விழா கொண்டாடப்பட உள்ளது.

இது குறித்து பல பிரபலங்களும் தங்கள் கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர்.

இந்நிலையில் கலைஞானி கமல்ஹாசன், கலைஞரை பற்றி தனது வாழ்த்து செய்தியை ஒரு வீடியோ பதிவாக வெளியிட்டுள்ளார். அதில் கூறியுள்ளதாவது…

உனக்கு நீச்சல் தெரியுமா? என் கேட்டால் நீந்தி காட்டலாம். அதுபோல் உனக்கு நடிக்கத் தெரியுமா என கேட்டால், கருணாநிதியின் வசனங்களை தெளிவாக பேசி நடித்துக் காட்டி, தகுதியை நிரூபிக்கலாம்.

நான் நல்ல படங்கள் எடுத்த போதெல்லாம் அவரிடம் காண்பிப்பேன். அப்போது எங்கள் இருவரிடையே உறவு வலுத்தது.

அவரது கையால் கிள்ளுப்பட்ட கன்னம் எனது கன்னம். அவர் ஒரு அரசியல் தலைவர் மட்டுமல்ல, தமிழறிஞர், சிறந்த வசனகர்த்தா.

எனக்கு தமிழ் கற்றுத் தந்த மூவரில் கருணாநிதியும் ஒருவர். எனது தமிழ் ஆசான்.

எங்களுடைய தொடர்பு அரசியல் தாண்டியது. என் உலகிற்குத் தேவையானது.

அவரை வாழ்த்த வயது தேவையில்லை, மனமிருந்தால்போதும். கலைஞர் வாழ்க.” இவ்வாறு கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.

Kamalhassan wishes DMK Leader Karunanidhi

மாயமோகினி படத்தில் ஜீவசமாதி அடைந்த பெண் துறவியாக கேஆர். விஜயா

மாயமோகினி படத்தில் ஜீவசமாதி அடைந்த பெண் துறவியாக கேஆர். விஜயா

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

mayamohini heroineகே.தங்கவேலு என்பவர் தயாரிப்பில், ராசா விக்ரம் இயக்கத்தில் உருவாகி உள்ள படம் மாய மோகினி. இதில் குஷ்புவின் தம்பி அப்துல்லா, சாரிகா, ஜோதிஷா உள்பட பலர் நடித்துள்ளனர்.

எம்.ஜெயராஜ் இசை அமைத்துள்ளார். இந்தப் படத்தில் கே.ஆர்.விஜயாக பெண் சாமியாராக நடித்துள்ளார்.

இந்த படத்தின் பாடல் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது.

அவ்விழாவில் கலந்து கொண்ட பழம்பெரும் நடிகை கே.ஆர். விஜயா பேசியதாவது…

“நான் இந்தப் படத்தில் நடிக்க வேண்டும் என்று தயாரிப்பாளரும், இயக்குனரும் கேட்டு வந்தார்கள்.

சின்ன கேரக்டர்களில் நடிக்க விருப்பம் இல்லை என்று சொல்லிவிட்டேன். இது நிஜத்தில் வாழ்ந்து ஜீவசமாதி அடைந்த ஒரு பெண் துறவி கேரக்டர் என்றார்கள்.

அப்படியானால் அதுபற்றி நான் தெரிந்து கொள்ள வேண்டும் என்று சொன்னேன். அவர்கள், என்னை அந்த துறவியின் சம்பந்தப்பட்ட இடங்களுக்கு அழைத்துக் சென்று காட்டினார்கள்.

கோவிலுக்கும் கூட்டிச் சென்றார்கள். அவற்றை பார்த்து நம்பிக்கை வந்த பிறகுதான் ஒரு புனிதமான பெண்ணின் கேரக்டரில் நடிக்கிறோம் என்ற நம்பிக்கை வந்தது, நடிக்க ஒப்புக் கொண்டேன்.” என்றார்.

KR Vijaya joins with Khusboos brother Abdhulla in Maya Mohini movie

Mayamohini khushboo brother abdhulla

சச்சின் பட முதல்நாள் வசூலும்; ரஜினி-அஜித் ரசிகர்களின் வாழ்த்தும்..!

சச்சின் பட முதல்நாள் வசூலும்; ரஜினி-அஜித் ரசிகர்களின் வாழ்த்தும்..!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Sachin A Billion Dreams dreams First day Box office collectionஇந்திய கிரிக்கெட்டின் பெருமையை உலகளவில் கொண்டு சென்றவர்களில் முக்கியமானவர் சச்சின் டெண்டுல்கர்.

இவரது வாழ்க்கை வரலாறை சச்சின் பல கோடி கனவுகள் என்ற பெயரில் படமாக எடுத்துள்ளனர்.

இப்படம் நேற்று வெளியானது.

எனவே இப்படத்தை வரவேற்கும் வகையில் ரஜினி மற்றும் அஜித் ரசிகர்கள் பேனர் அடித்து வாழ்த்து தெரிவித்துள்ளனர். (படம் கீழே)

நேற்று முதல் நாள் இந்தியாவில் மட்டும் ரூ 9.2 கோடி வரை வசூல் செய்துள்ளதாம்.

சில மாதங்களுக்கு முன் வெளியான தோனியின் வாழ்க்கை வரலாறு படமானது முதல்நாளில் மட்டும் ரூ 19.8 கோடி வரை வசூலித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.

Sachin A Billion Dreams dreams First day Box office collection

kaala vivegam

25 வருடங்களுக்கு பிறகு மீண்டும் இணைந்த விஜய்-ஏஆர். ரஹ்மான்

25 வருடங்களுக்கு பிறகு மீண்டும் இணைந்த விஜய்-ஏஆர். ரஹ்மான்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Vijay AR Rahmanஅட்லி இயக்கிவரும் விஜய் 61 படத்திற்கு ஏஆர். ரஹ்மான் இசையமைத்து வருகிறார்.

இதற்கு முன்பு விஜய் நடித்த உதயா, அழகிய தமிழ் மகன் ஆகிய இரண்டு படங்களுக்கும் ஏஆர் ரஹ்மானே இசையமைத்திருந்தார்.

இவை தவிர்த்து விஜய் மற்றும் ரஹ்மான் ஆகிய இருவரின் சினிமா கேரியரில் வேறொரு ஒற்றுமை உள்ளதாம்.

அதாவது, தமிழ் சினிமாவில் 1992-ம் ஆண்டுதான் இருவருமே காலடி எடுத்து வைத்துள்ளனர்.

விஜய் ஹீரோவாக நடித்த நாளைய தீர்ப்பு படமும், ரஹ்மான் இசையமைத்த ரோஜா திரைப்படமும் இதே ஆண்டில்தான் வெளியானது.

தற்போது தங்களது 25வது ஆண்டில் இருவரும் இணைந்துள்ளது அவரது ரசிகர்களிடையே மிகுந்த உற்சாகத்தை கொடுத்துள்ளதாம்.

Vijay and AR Rahman has 25 years of unity in Cinema Entry

‘என் வேலைய செய்யவிடுங்கள்..’ மும்பை பறக்கும் முன் ரஜினி பேட்டி

‘என் வேலைய செய்யவிடுங்கள்..’ மும்பை பறக்கும் முன் ரஜினி பேட்டி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Rajini kaala posterநாளை முதல் மும்பையில் நடைபெறவுள்ள காலா படப்பிடிப்பில் கலந்து கொள்ளவுள்ளார் ரஜினிகாந்த்.

இதற்காக சற்றுமுன் மும்பை செல்ல புறப்பட்டார்.

அப்போது அவரை செய்தியாளர்கள் சந்தித்தனர்.

அப்போது ரஜினிகாந்த் கூறியதாவது…

காலா படப்பிடிப்பில் பங்கேற்பதற்காக மும்பை செல்கிறேன்.

நடிப்பது என் தொழில் என்பதால் அதை செய்து கொண்டிருக்கிறேன்.

உங்க வேலையை நீங்கள் செய்து கொண்டிருக்கிறீர்கள் (செய்தியாளர்களை நோக்கி).

எனது வேலையை செய்ய விடுங்கள் என்று அவர் கூறி அங்கிருந்து சென்றார்.

மேலும், அரசியலுக்கு வருவது தொடர்பாக நேரம் வரும்போது தெரிவிப்பேன்.” என்றார்.

Acting is my Profession Allow me to do my job Says Rajinikanth

ரம்ஜான் மோதலில் சிம்பு-ஜெயம் ரவி-எஸ்.ஜே.சூர்யா

ரம்ஜான் மோதலில் சிம்பு-ஜெயம் ரவி-எஸ்.ஜே.சூர்யா

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Simbu Jayam Ravi SJ Suriya movies clash in Ramzanரம்ஜான் பண்டிகை விடுமுறையை முன்னிட்டு ஜூன் 23ஆம் தேதி பல படங்கள் ரிலீசுக்கு தயாராகி வருகின்றன.

விஜய் இயக்கத்தில் ஜெயம் ரவி நடித்துள்ள ‘வனமகன்’ வெளியாகவுள்ளது.

இதே நாளில் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் சிம்பு நடித்துள்ள ‘அன்பானவன் அசராதவன் அடங்காதவன்’ படமும் வெளியாகிறது.

இந்நிலையில் பல மாதங்களாக காத்திருந்த ‘நெஞ்சம் மறப்பதில்லை’ படமும் அதே நாளில் வெளியாகிறதாம்.

செல்வராகவன் இயக்கத்தில் எஸ்.ஜே.சூர்யா, நந்திதா, ரெஜினா கெஸன்ட்ரா ஆகியோர் இப்படத்தில் நடிக்க, யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.

இப்படத்தை ஒன்றாக என்டர்டெயின்மென்ட் மற்றும் க்ளோ ஸ்டுடியோஸ் நிறுவனங்கள் இணைந்து தயாரிக்க படத்தின் வெளியீட்டு உரிமையை எஸ்கேப் ஆர்ட்டிஸ்ட்ஸ் மோஷன் பிக்சர்ஸ் நிறுவனம் கைப்பற்றியுள்ளது.

Simbu Jayam Ravi SJ Suriya movies clash in Ramzan

More Articles
Follows