தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
படங்களில் நடிப்பதோடு மட்டுமில்லாமல் தான் நடிக்கும் படங்களையும் தயாரித்து வருகிறார் விஷால்.
மேலும் தென்னிந்திய நடிகர் சங்கத்தின் முக்கிய பதவியில் இருக்கிறார்.
இதனிடையில் சில மாதங்களுக்கு முன்பு தயாரிப்பாளர் சங்கத்தில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டார் விஷால்.
இதுதொடர்பாக கோர்ட்டில் விஷால் வழக்கு தொடர, அதன்படி விஷாலை தயாரிப்பாளர்கள் சங்கத்தில் சேர்க்க உத்தரவிட்டது நீதிமன்றம்.
இந்நிலையில் மார்ச் 5ஆம் தேதியன்று நடைபெறவுள்ள தயாரிப்பாளர் சங்க தேர்தலில் விஷால் போட்டியிட உள்ளார்.
விஷாலை ஆதரித்தும், வேட்பு மனுவில் முன்மொழிந்தும் கமல்ஹாசன் கையெழுத்திட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
விஷால் அணி உறுப்பினர்கள் விரைவில் அறிவிக்கப்படுவார்கள் எனத் தெரிகிறது.
Kamalhassan support Vishal for Producer Council election