எல்லாரும் இந்நாட்டு மன்னர்களே… தமிழ் தலைவா(ஸ்) கமல் பேச்சு

எல்லாரும் இந்நாட்டு மன்னர்களே… தமிழ் தலைவா(ஸ்) கமல் பேச்சு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

sachin kamal ramcharan Tamil Thalaivaas5வது புரோ கபடி லீக் போட்டியில் பங்கேற்கவுள்ள தமிழ் தலைவாஸ் அணியின் உடை அறிமுக விழா சென்னை கிண்டி அருகே உள்ள நட்சத்திர ஹோட்டலில் நடைபெற்றது.

இதில் தமிழ் தலைவாஸ் அணியின் உரிமையாளர்களில் ஒருவரான சச்சின் டெண்டுல்கர் கலந்துக் கொண்டார்.

மேலும் அல்லு அரவிந்த், அல்லு அர்ஜீன், ராம்சரண் தேஜா உள்ளிட்டோரும், இந்த அணியின் பிராண்ட் அம்பாஸ்டர் கமல்ஹாசனும் கலந்துக் கொண்டார்.

நிகழ்ச்சியில் கமல்ஹாசன் பேசுகையில்…

“கபடி, தமிழகத்தில் தோன்றிய விளையாட்டு என்கிற கூற்றும் உண்டு. நம் நாட்டில் பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளாக விளையாடிய விளையாட்டு இது.

நான் சிறுவயதிலேயே சினிமாவுக்கு வந்துவிட்டேன். எனவே பரமக்குடியில் கபடி விளையாடவில்லை.

இளைஞன் ஆகியும் விளையாட முடியாமல் போய்விட்டது. ஒருமுறை என் முகத்தில் அடிப்பட்டதால், இயக்குனர் கபடி ஆட கூடாது என தடைப் போட்டார்.

இந்த கபடி அணிக்கு தமிழ் தலைவா என்று பெயரிடாமல் தலைவாஸ் என்று பன்மையில் பெயரிட்டுள்ளனர்.

தலைவன் என்றால் அது ஒருவரை மட்டுமே குறிக்கும்.

எல்லாரும் இந்நாட்டு மன்னர்கள் என்பதால் தலைவாஸ் பொருத்தமாக இருக்கிறது.

இந்த அணி வெற்றி பெற்று, இறுதி ஆட்டம் விளையாட இங்கு வரவேண்டும்” என்று பேசினார்.

அண்மையில் கமல்ஹாசனை அமைச்சர் ஒருவர் ஒருமையில் பேசியிருந்தார். எனவே கமல் இப்படி பன்மையில் பேசியது குறிப்பிடத்தக்கது.

Kamalhassan speech at Tamil Thalaivaas Jersey launch

மீண்டும் நிவின்பாலியுடன் இணையும் அமலாபால்

மீண்டும் நிவின்பாலியுடன் இணையும் அமலாபால்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Nivin Pauly romance with Amala Paul for Kayamkulam Kochunniபிரேமம் படத்தை தொடர்ந்து மலையாளத்தில் நிவின்பாலியின் மார்கெட் சூடுபிடித்துள்ளது.

தென்னிந்தியாவின் பிரபல நாயகிகளான த்ரிஷா மற்றும் நயன்தாராவுடன் நடித்து வருகிறார்.

இந்நிலையில் அடுத்த படத்தில் அமலாபாலுடன் இணைகிறார்.

இவர்கள் இருவரும் இதற்கு முன்பு மிலி என்ற படத்தில் இணைந்து நடித்திருந்தனர்.

இந்த புதிய படத்திற்கு காயகுளம் கொச்சுன்னி என்று பெயரிட்டுள்ளனர்.

இப்படத்தை ரோஷன் ஆண்ட்ரூ இயக்கவுள்ளார். இவர்தான் ஜோதிகா நடித்த 36வயதினிலே என்ற படத்தை இயக்கியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Nivin Pauly romance with Amala Paul for Kayamkulam Kochunni

ஹிந்தியை எதிர்த்த கமல் ஏன் ஹிந்தி படத்தில் நடித்தார்..? – ஜெயக்குமார்

ஹிந்தியை எதிர்த்த கமல் ஏன் ஹிந்தி படத்தில் நடித்தார்..? – ஜெயக்குமார்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Kamal haasan and Minister jayakumarஇந்தி மொழியை தமிழகத்தில் திணித்தபோதே எதிர்ப்பு தெரிவித்து, நான் அன்றே அரசியலில் பங்கு பெற்றேன் என கமல் தெரிவித்து இருந்தார்.

இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில், அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்து இருந்ததாவது…

இந்தி மொழியை எதிர்த்தேன் என்று கூறும் கமல், ஏக் துஜே கேலியே என்ற இந்திப் படத்தில் நடித்து ஏன் இந்தியை பரப்பினார்.

இலங்கை தமிழர் பிரச்சினை, தமிழக மீனவர் பிரச்சினை, கர்நாடக தண்ணீர் பிரச்சினை என குரல் கொடுக்காதவர் கமல்.

முக. ஸ்டாலின் மற்றும் ஓ.பன்னீர் செல்வத்துடன் கமல் கூட்டணி வைத்துள்ளார்.” என்று தெரிவித்தார்.

திமுக விழாவில் பங்கேற்க ரஜினி-கமலை அழைத்த ஸ்டாலின்

திமுக விழாவில் பங்கேற்க ரஜினி-கமலை அழைத்த ஸ்டாலின்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

MK Stalinவருகிற ஆகஸ்ட் 10ஆம்தேதி திராவிட முன்னேற்ற கழகம் சார்பில் முரசொலி நாளிதழின் பவளவிழா நடைபெறவுள்ளது.

இதில் பல அரசியல் பிரமுகர்கள் கலந்துக் கொள்ளவிருக்கிறார்கள்.

இந்நிலையில் இதில் கலந்துக் கொள்ள ரஜினிகாந்த் மற்றும் கமல்ஹாசன் ஆகியோருக்கு முக.ஸ்டாலின் தொலைபேசியில் அழைப்பு விடுத்துள்ளார்.

இருவரும் கலந்துக் கொள்வார்கள் என்றே சொல்லப்படுகிறது.

தமிழகத்தில் அரசியல் சிஸ்டம் சரியில்லை என்று ரஜினியும், தமிழக அரசியலில் ஊழல் பெருத்துவிட்டது என கமலும் கூறி பல சர்ச்சைகளை ஏற்படுத்தியுள்ளனர்.

இந்நிலையில் அதிமுகவின் எதிரிக்கட்சியான திமுக விழாவில் இவர்கள் கலந்துக் கொள்ள இருப்பதால், இவ்விழா பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தும் எனத் தெரிகிறது

நிஜத்திலும் துப்பறிவாளன் ஆகி திருடனை கண்டுபிடித்த விஷால்

நிஜத்திலும் துப்பறிவாளன் ஆகி திருடனை கண்டுபிடித்த விஷால்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

vishal stills in thupparivalanவிஷால் நடிப்பில் தற்போது உருவாகி இருக்கும் படம் ‘துப்பறிவாளன்’. இதில் விஷாலுடன் பிரசன்னா, சிம்ரன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளார்கள்.

மிஷ்கின் இப்படத்தை இயக்கியுள்ளார். இப்படத்தின் டீசர் வெளியிட்டு விழா சென்னையில் நடைபெற்றது.

இதில் விஷால் பேசும்போது, ‘பாண்டிய நாடு’ படம் ஒரு சிறந்த தயாரிப்பாளராக எனக்கு பெயர் பெற்று கொடுத்தது.

அதைவிட சிறந்த பெயரை ‘துப்பறிவாளன்’ எனக்கு பெற்று தரும். 8 வருஷமா நானும் மிஷ்கினும் படம் பண்ண வேண்டும் என்று திட்டம் போட்டுக் கொண்டே இருந்தோம்.

ஆனால், சில காரணங்களால் நடக்கவில்லை. தற்போதுதான் அது நடந்திருக்கிறது. 2 சைக்கோவும் சேர்ந்து எப்படி பண்ண போகிறார்கள் என்று நிறைய பேர் பேசிக்கொண்டார்கள்.

துப்பறிவாளன் படத்தில் சண்டைக் காட்சி சிறப்பாக வந்திருக்கிறது. இந்த படத்தில் என்னை அழகாக காண்பித்திருக்கிறார்கள் என்றால், அது ஒளிப்பதிவாளரைத்தான் பாராட்ட வேண்டும்.

நான் பார்த்த வியந்த நடிகை சிம்ரன். அவருடன் இப்படத்தில் நடித்தது மறக்க முடியாத நாள். அதற்கு மிஷ்கினுக்கு தான் நன்றி சொல்ல வேண்டும்.

இணைய தளத்தில் திருட்டுத்தனமாக படங்களை வெளியிடும் தமிழ் ராக்கர்ஸ் என்பவரை துப்பறிந்து விட்டேன். அவன் யார் என்று எனக்கு தெரியும். இன்னும் 2 வாரங்களில் மக்கள் மத்தியில் சொல்லிவிடுவேன்.

என்னை காமராஜ் என்று அழைக்கிறார்கள். ஆனால், அவரை மாதிரி நேர்மையாக இருப்பேன். அவரைப்போல் கல்யாணம் பண்ணாமல் இருக்க முடியாது. லட்சுமிகரமானவர் என்னிடம் சண்டைக்கு வருவார்’ என்றார்.

யார் அந்த லட்சுமியோ..?

தமிழ் தலைவாஸ் அணியின் தூதரானார் கமல்ஹாசன்

தமிழ் தலைவாஸ் அணியின் தூதரானார் கமல்ஹாசன்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

kamal haasan at tamil thalaivas eventவிவோ புரோ கபடி லீக் 5-வது சீசன் போட்டிகள் வரும் 28-ம் தேதி தொடங்குகிறது.

11 மாநிலங்களில் இருந்து 12 அணிகள் கலந்துகொள்ளும் இந்த தொடரில் 130 ஆட்டங்கள் சுமார் 13 வார காலம் நடைபெற உள்ளன.

இந்த சீசனில் பாட்னா, மும்பை, ஜெய்ப்பூர், தெலுகு டைட்டன், பெங்களூரு, பெங்கால் வாரியர், புனே, டெல்லி ஆகிய அணிகளுடன் உத்தரபிரதேசம், தமிழ்நாடு, குஜராத், ஹரியாணா ஆகிய 4 புதிய அணிகளும் கலந்து கொள்கின்றன.

சச்சின் டெண்டுல்கர் இணை உரிமையாளராக உள்ள தமிழ்நாடு அணி ‘தமிழ் தலைவாஸ்’ என்ற பெயரில் களமிறங்குகிறது.

இந்த அணியின் பயிற்சியாளராக பாஸ்கரனும், கேப்டனாக அஜய் தாகூரும் உள்ளனர். இந்த தொடரின் பரிசுத் தொகை ரூ.8 கோடியாக உயர்த்தப்பட்டுள்ளது.

சாம்பியன் பட்டம் வெல்லும் அணிக்கு கோப்பையுடன் ரூ.3 கோடி பரிசாக வழங்கப்பட உள்ளது. இந்த தொடரின் தொடக்க ஆட்டம் வரும் 28-ம் தேதி ஹைதராபாத்தில் நடைபெறுகிறது.

இதில் தெலுங்கு டைட்டன்ஸ், தமிழ் தலைவாஸ் அணிகள் மோதுகின்றன. இந்நிலையில் தமிழ் தலைவாஸ் அணியின் தூதராக நடிகர் கமல்ஹாசன் நியமிக்கப்பட்டுள்ளார்.

இதுகுறித்து அவர் கூறும்போது, “கபடி விளையாட்டுடன் இணைவதில் பெருமிதம் கொள்கிறேன். முன்னோர்களின் வழிவந்த விளையாட்டில் எனக்கும் ஒரு பங்கு இருப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்.

தமிழ் தலைவாஸ் அணியின் விளம்பர தூதராக தேர்ந்தெடுக்கப்பட்டதில் பெருமை கொள்கிறேன். என் அருமை தலைவாஸ், உங்கள் மனதில் பெருமை பொங்க, கோட்டை தாண்டி புகழை சூடிடுங்கள்” என்றார்.

இதற்கிடையே தமிழ் தலைவாஸ் அணியின் ஜெர்சி அறிமுக விழா இன்று பிற்பகலில் சென்னையில் நடைபெறுகிறது.

கமல்ஹாசன் ஜெர்சியை அறிமுகம் செய்து வைத்து உரையாற்ற உள்ளார். இந்த நிகழ்ச்சியில் சச்சின் டெண்டுல்கர், நடிகர்கள் சிரஞ்சீவி, ராம்சரண் தேஜா உள்ளிட்ட பிரமுகர்கள் கலந்து கொள்கின்றனர்.

More Articles
Follows