JUST IN நான் நம்பும் அரசியலைப் பேசி இருக்கிறது ‘மாமன்னன்’.. – கமல்ஹாசன்

JUST IN நான் நம்பும் அரசியலைப் பேசி இருக்கிறது ‘மாமன்னன்’.. – கமல்ஹாசன்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

உதயநிதி தயாரித்து நடித்துள்ள ‘மாமன்னன்’ படத்தின் இசை வெளியீட்டு விழாவில் கமல்ஹாசன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.

இறுதியாக மேடை ஏறி கமல்ஹாசன் பேசும்போது…

“நான் மாமன்னன் படத்தை பார்த்து விட்டேன். இது ஒரு முக்கியமான அரசியலை பேசி இருக்கிறது. நான் நம்பும் அரசியலை பேசியிருக்கிறது.

சென்டிமெண்ட் காட்சிகளில் ரகுமானின் பின்னணி இசை சிறப்பாக அமைந்துள்ளது. தன் சினிமா வாழ்க்கையில் சிறந்த நடிப்பை கொடுத்துள்ளார் வடிவேலு.

மாமன்னன் படத்தின் டிரைலர் இன்று வெளியிடப்படவில்லை. மாறாக இரண்டு வாரங்கள் கழித்து வெளியிடப்படும் என தெரிகிறது.

ஜூன் 29ஆம் தேதி ‘மாமன்னன்’ திரைப்படத்தை திரைக்கு கொண்டு வர உதயநிதி திட்டமிட்டுள்ளார்.

Kamalhassan speech at Maamannan Audio launch

JUST IN வடிவேலு ஓகே சொல்லலேன்னா ‘மாமன்னன்’ வேண்டாம் – உதயநிதி

JUST IN வடிவேலு ஓகே சொல்லலேன்னா ‘மாமன்னன்’ வேண்டாம் – உதயநிதி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

உதயநிதி நடிப்பில் மாரி செல்வராஜ் இயக்கத்தில் உருவான ‘மாமன்னன்’ படத்தின் இசை வெளியீட்டு விழா ஜூன் 1ம் தேதி சென்னையில் நடைபெற்றது.

இந்த விழாவில் கோலிவுட்டில் உள்ள பல முன்னணி நட்சத்திரங்கள் இயக்குனர்கள் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு விழாவினை சிறப்பித்தனர்.

இந்த விழாவில் மேடை ஏறி உதயநிதி பேசும் போது..

” வடிவேலு இந்த படத்திற்கு ஒப்புக்கொள்ளவில்லை என்றால் இந்த படம் தொடங்க வேண்டாம் என நான் மாரி செல்வராஜிடம் கூறிவிட்டேன்.

வடிவேல் ஒப்புக்கொண்ட பிறகு நான் தான் பகத் பாசில், கீர்த்தி சுரேஷ், ரகுமான் ஆகியோரிடம் பேசி இது என் கடைசி படம் என்று கூறி இந்த மாமன்னன் படத்திற்கு ஒப்புக்கொள்ள வைத்தேன்.

நான் காட்சியில் இல்லாத போது வடிவேலு காட்சிகளை படமாக்கினார் மாரி செல்வராஜ். அதன் பின்னர் அந்த 10/நிமிட காட்சிகளை பார்த்தபோது என்னால் நம்ப முடியவில்லை.

நான் வடிவேலுவை கட்டிப்பிடித்து பாராட்டினேன்” இவ்வாறு மேடையில் பேசினார் உதயநிதி.

Udhayanidhi hugged Vadivelu for his performance in Maamannan

JUST IN உதயநிதி பற்றி : விஜய் பட பிரச்சனையை தீர்த்தார் – முருகதாஸ்; சினிமாவுக்கு வராதீங்க – விஜய் ஆண்டனி; சைக்கோ மாதிரி பண்ணாதீங்க – மிஷ்கின்

JUST IN உதயநிதி பற்றி : விஜய் பட பிரச்சனையை தீர்த்தார் – முருகதாஸ்; சினிமாவுக்கு வராதீங்க – விஜய் ஆண்டனி; சைக்கோ மாதிரி பண்ணாதீங்க – மிஷ்கின்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

உதயநிதி, பகத் பாசில், வடிவேலு, கீர்த்தி சுரேஷ் உள்ளிட்டோர் நடித்துள்ள திரைப்படம் ‘மாமன்னன்’. இந்த படத்தின் இசை விழா தற்போது சென்னையில் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.

இந்த விழாவில் கமல் மிஷ்கின் வெற்றிமாறன் எஸ் ஜே சூர்யா சிவகார்த்திகேயன் விஜய் ஆண்டனி உள்ளிட்ட பல திரை பிரபலங்கள் கலந்து கொண்டனர்.

உதயநிதி பற்றி பேசிய பிரபலங்கள்…

“உண்மையாகவே உதயநிதி `மாமன்னன்’ தான். உங்கள் இடம் அதுதான். அங்கேயே இருங்கள், சினிமாவுக்கு வரவேண்டாம்.” என விஜய் ஆண்டனி பேசினார்.

உதய், நீங்க நல்லா வேலை பாருங்க. 40 நாள் ஷூட்டிங் போற மாதிரி ஒரு படம் பண்ணுங்க, `மாமன்னன்’ மாதிரி படம் பண்ணுங்க `சைக்கோ’ மாதிரி பண்ணாதீங்க! என மிஷ்கின் பேசினார்.

அரசியல் ரீதியான படங்களை வைத்து வணிக ரீதியான லாபத்தை ஈட்டுவது என்பது தமிழ்நாட்டில் மட்டும் தான் நடக்கிறது” என வெற்றிமாறன் பேசினார்.

விஜய்யின் ‘துப்பாக்கி’ படம் வெளியான இரண்டு நாட்களில் அதிகளவில் பிரச்னைகள் வந்தன. அவற்றையெல்லாம் உதயநிதி ஸ்டாலின்தான் தீர்த்து வைத்தார். அவருக்கு நான் கடமைப்பட்டிருக்கிறேன். என ஏ.ஆர்.முருகதாஸ் பேசினார்.

Celebrities talks about Udhayanidhi at Maamannan audio launch

JUST IN அம்பேத்கரை காட்டினால் மதுரை எரியும்.; மாமன்னன் காட்சியை மாற்ற சொன்னேன் – ரஞ்சித்

JUST IN அம்பேத்கரை காட்டினால் மதுரை எரியும்.; மாமன்னன் காட்சியை மாற்ற சொன்னேன் – ரஞ்சித்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ஜூன் 1ம் தேதி நடைபெற்ற ‘மாமன்னன்’ இசை வெளியீட்டு விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார் இயக்குனர் பார ரஞ்சித்.

அப்போது அவர் பேசும்போது..

“பரியேறும் பெருமாள்’ படம் செய்யும்போது ஒரு தயக்கம் இருந்தது ஒரு பயம் இருந்தது. அது ஏன் என்று தெரியவில்லை. ஆனால் மாரி செல்வராஜின் கலையை மக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும் என எண்ணினேன்.

அதில் அம்பேத்கர் படத்தை காட்டினால் மதுரை எரியும் என்றார்கள். ஆனால் மக்கள் ஏற்றுக் கொண்டார்கள். எங்களின் விருப்பம் சரியாக நிறைவேறியது.

பரியேறும் பெருமாள் படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது. அந்த வெற்றி தான் இன்று ‘மாமன்னன்’ மேடையை மாரிக்கு அமைத்துக் கொடுத்துள்ளது.

நான் வடிவேலுவின் தீவிர ரசிகன். ஆனால் மாமன்னன் படத்தின் சில காட்சிகளை பார்த்தேன். மிகவும் சீரியஸ் ஆக இருந்தது.

கொஞ்சம் காட்சிகளை காமெடியாக மாற்ற சொன்னேன். ஆனால் முடியாது. இது சீரியஸ் படம் என மறுத்து விட்டார் மாரி செல்வராஜ்.

மாரிக்கு இந்த மேடை அமைத்துக் கொடுத்த உதயநிதிக்கு நன்றி. இந்த படம் ஒரு முக்கியமான அரசியலை பேசி இருக்கிறது”

இவ்வாறு மனம் திறந்து பேசினார் ரஞ்சித்.

Ranjith appreciates Mari Selvaraj growth at Maamannan audio launch

JUST IN கமல் சார் இருக்கும்போது அத பேசலாமா.? மாற்று சினிமாவுக்கு விதை போட்டவர் அவர் – சிவகார்த்திகேயன்

JUST IN கமல் சார் இருக்கும்போது அத பேசலாமா.? மாற்று சினிமாவுக்கு விதை போட்டவர் அவர் – சிவகார்த்திகேயன்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

உதயநிதி தயாரித்து நாயகனாக நடித்துள்ள ‘மாமன்னன்’ படத்தின் இசை வெளியீட்டு விழா தற்போது சென்னை நேரு ஸ்டேடியத்தில் நடைபெற்று வருகிறது.

இதில் திரளான கோலிவுட் பிரபலங்கள் கலந்து கொண்டனர்.

கமல்ஹாசன், வெற்றிமாறன், விஜய் ஆண்டனி, ரஞ்சித், சிவகார்த்திகேயன், கவின், முருகதாஸ், எஸ்ஜே. சூர்யா, சூரி, பிரதீப் ரங்கநாதன், விக்னேஷ் சிவன் உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் பங்கேற்று உதயநிதியை வாழ்த்தி வருகின்றனர்.

இந்த மேடையில் சிவகார்த்திகேயன் பேசும் போது..

“நான் கெட்டப் மாறிவிட்டதாக பேசிக்கிறாங்க.. கமல் சார் இருக்கும்போது கெட்டப் பத்தி பேசலாமா.?

கமல் சார் தயாரிப்பில் நான் நடிப்பது நான் செய்த பாக்கியம்..

மாற்று சினிமாவிற்கு விதை போட்டது கமல் சார். உங்க கம்பெனில படம் பண்றது என்னோட பாக்கியம்.

ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனத்தில் படம் பண்ணும் போது இதுபோல வித்தியாசமா படங்களை இனிமே தேர்ந்தெடுக்கணும் முடிவு பண்ணிருக்கேன்.” என்றார் சிவகார்த்திகேயன்.

I learned lot of Kamal production house says Sivakarthikeyan

JUST IN எல்லாரும் 1- 2 – 3ன்னு போட்டி போடும் போது அவரு மேல போய் உட்கார்ந்துட்டாரு – சூர்யா

JUST IN எல்லாரும் 1- 2 – 3ன்னு போட்டி போடும் போது அவரு மேல போய் உட்கார்ந்துட்டாரு – சூர்யா

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

உதயநிதி தயாரித்து நாயகனாக நடித்துள்ள ‘மாமன்னன்’ படத்தின் இசை வெளியீட்டு விழா தற்போது சென்னை நேரு ஸ்டேடியத்தில் நடைபெற்று வருகிறது.

இதில் திரளான கோலிவுட் பிரபலங்கள் கலந்து கொண்டனர்.

கமல்ஹாசன், வெற்றிமாறன், விஜய் ஆண்டனி, ரஞ்சித், சிவகார்த்திகேயன், கவின், முருகதாஸ், எஸ்ஜே. சூர்யா, சூரி, பிரதீப் ரங்கநாதன், விக்னேஷ் சிவன் உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் பங்கேற்று உதயநிதியை வாழ்த்தி வருகின்றனர்.

இந்த மேடையில் மிஷ்கின் பேசும்போது..

நான் கமல் அவர்களைப் பற்றி பேசாத நாளே இருக்காது. அவருக்கு நாம் எல்லாரும் எழுந்து நின்று மரியாதை கொடுக்க வேண்டும் என்றார். அதன்படி அரங்கமே எழுந்து நின்று கமல்ஹாசன் அவர்களுக்கு மரியாதை கொடுத்தது.

எஸ் ஜே சூர்யா மேடையில் பேசும்போது…

உலகநாயகனை நேர்ல பாக்கற பாக்கியம் கிடைச்சுது மறக்க முடியாத தருணம். அத பற்றி இன்னொரு நாள் சொல்றேன்

எல்லாரும் 1,2,3 னு போட்டி போட்டுட்டு இருக்கும் போது நீங்க போய் ஆல்ரெடி மேல போய் பர்ஸ்ட்ல உக்கார்ந்து இருக்கீங்க” என்றார்.

உங்களைப் பற்றி பேச இந்த மேடை எல்லாம் பத்தாது.. பேசிக் கொண்டே இருக்கலாம் என்று மேடையில் பேசும்போது கமல் அவர்களைப் பற்றி குறிப்பிட்டார் பிரதீப் ரங்கநாதன்.

நான் எல்லாருக்கும் பாட்டு எழுதிருக்கேன் உலகநாயகனை தவிர அவர் ஆல்ரெடி உச்சத்துல நம்பர் ஒன்ல இருக்காரு..

நான் பாட்டு எழுதினா இன்னும் பல நூறு கோடி பண்ணுவீங்க என கவிஞர் யுகபாரதி பேசினார்.

sj suryah funny speech at maamannan audio launch

More Articles
Follows