மக்கள் பிரச்சினைகளுக்காக கமல் அறிமுகப்படுத்திய மையம் விசில் ஆப்

மக்கள் பிரச்சினைகளுக்காக கமல் அறிமுகப்படுத்திய மையம் விசில் ஆப்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Kamalhassan introduced Maiam Whistle app for the peoplesஇன்று தன் பிறந்தநாளை முன்னிட்டு மக்கள் பிரச்சினைகளை அறிய சென்னையில் உள்ள ஆவடி சுற்றியுள்ள பகுதிகளில் பயணம் செய்தார் கமல்.

இதனையடுத்து பத்திரிகையாளர்களை சந்தித்து பேசினார்.

அப்போது மக்கள் பிரச்னைகளைப் பேச ’MAIAMWHISTLE’ என்ற பெயரில் புதிய ஆப் குறித்து அறிவித்த கமல், #theditheerpomvaa, #virtuouscycles, #maiamwhistle என்ற பெயரில் ஹேஷ்டேக்குகளையும் அறிமுகம்செய்தார்.

’மக்கள் தங்கள் பிரச்னைகளைப் பற்றி இந்த ஹேஷ்டேக்கின் கீழ் பேசலாம்’ என்று தெரிவித்துள்ளார்.

நான் வெளியிட இருப்பது வெறும் செயலி மட்டும் அல்ல, அது ஒரு பொது அரங்கம்’ என்றார்.

அதன்பின்னர் அவர் பேசியதாவது…

இதற்கு மேலும் நான் அரசியலுக்கு வந்துவிட்டேனா? என யாரும் கேட்க முடியாது.

அரசியலில் முழுமையாக ஈடுபடுவதற்காக முன்னேற்பாடுகளை தீவிரமாகச் செய்துகொண்டிருக்கிறேன்.

விரைவில் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு, அனைத்துத் தரப்பு மக்களையும் சந்திக்கவிருக்கிறேன்.

அதில் என்னை பற்றி தெரிந்துக் கொள்ள முடியும். மக்களின் பிரச்சினைகளையும் அறிந்துக் கொள்ள முடியும்.

அரசியல் கட்சியின் அடிப்படை தேவைகளை செய்துக் கொண்டிருக்கிறேன். என அதுகுறித்த அறிவிப்பு வர தாமதம் ஆகும்.

அன்று ஊடக உந்தல் காரணமாக கட்சியை அறிவிக்க மாட்டேன் என்று கூறியதாக செய்திகள் வந்தன.

அதற்கு காரணம் அறிவிப்பு தாமதம் ஆகும் என்பதால் அன்று அப்படி தெரிவித்தேன்.

ஜனவரி மாதத்துக்குப் பின் அனைத்து அறிவிப்புகளும் ஒன்றன் பின் ஒன்றாக வரும்.

எனது அரசியல் அஸ்திவாரம் பலமாக இருக்க வேண்டும். எனவே, அரசியல் சம்பந்தமான அறிஞர்களுடன் அதுகுறித்து ஆலோசித்து வருகிறேன்.

ஒரு சினிமா எடுக்கவே ஆறு மாதம் தேவைப்படுகிறது. அரசியல் என்பது பெரிய பணி.

எனவே, அரசியலில் கால் பதிக்க தயார் செய்துகொண்டு இருக்கிறேன்.

இன்று முக்கியமான நாள். நான் பிறந்த தினம் என்பதால் அல்ல. நான் பிறந்ததுக்கான காரணத்தை நிரூபிக்கும் காலம் வந்துவிட்டது.” என்று பேசினார்.

Kamalhassan introduced Maiam Whistle app for the peoples

kamal bday dress

கரண்ட் பெட்டிக்குள் கை வைக்கிறார் கமல்… எஸ்வி. சேகர்

கரண்ட் பெட்டிக்குள் கை வைக்கிறார் கமல்… எஸ்வி. சேகர்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

kamal haasan and sve sekarநம் நாட்டில் இந்து தீவிரவாதம் உள்ளது என கமல்ஹாசன் ஒரு பேட்டியில் தெரிவித்திருந்தார்.

இதற்காக பல்வேறு இந்துக்கள் அமைப்பினர் எதிர்ப்பு குரல் கொடுத்து வருகின்றனர்.

இதுகுறித்து நடிகரும் அரசியல் பிரமுகருமான எஸ்வி சேகர் கூறியதாவது…

இந்து தீவிரவாதம் என்பது கமல்ஹாசன் கற்பனைதான். அது தவிர. வேறொன்றுமில்லை.

ஹாஸன் என்ற வடமொழி சொல்லை பெயர் வைத்திருப்பதாலோ என்னவோ அவருக்கு இந்துக்களுக்கு எதிரான மனப்பான்மை வந்துவிட்டது போலிருக்கிறது.

எதற்கெடுத்தாலும் கேரளாவுடன் தமிழகத்தை ஒப்பிட்டுப் பேசும் அளவுக்கு எல்லாம் தமிழகம் தாழ்ந்துபோய்விடவில்லை.

அப்படி கமலுக்கு தமிழகத்தை விட கேரளாவைத்தான் பிடிக்கும் என்றால் அவர் அங்கே போய் வாழட்டும். சிலருக்கு சில விஷயங்கள் சிறு வயதிலிருந்து பிடிக்காமல் இருக்கலாம். அதற்காக அவை தவறு என்று ஆகிவிடுமா என்ன?

நம் இந்து மதத்தில் ஒழுக்கமான நெறிமுறைகள் உள்ளது. நான் எப்படி வேண்டுமானாலும் இருப்பேன் என்பவர்களுக்கு இந்த இந்து மதம் பிடிக்காதுதான்.

தொடர்ந்து இந்துமதம் குறித்து விமர்சிப்பதன் மூலம் கரண்ட் பெட்டிக்குள் கை வைக்கிறார் கமல்ஹாஸன். அதன் விளைவு விபரீதமாக இருக்கும். கமல் தேவையில்லாத விஷயங்களில் தலையிடுவதைத் தவிர்க்க வேண்டும்,” என்று தெரிவித்துள்ளார் எஸ்வி. சேகர்.

அரசியல் ஆசை கொண்ட நடிகர்களை கலாய்க்கும் ஆர்.கே.நகர் டீசர்

அரசியல் ஆசை கொண்ட நடிகர்களை கலாய்க்கும் ஆர்.கே.நகர் டீசர்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

RK nagar teaserஇயக்குனர் வெங்கட் பிரபு தயாரித்துள்ள படம் ஆர்.கே. நகர்.

இப்படத்தில் வைபவ் நாயகனாக நடித்துள்ளார். இவருடன் சம்பத், இனிகோ, உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர்.

இப்படத்தின் டீசர் நவம்பர் 7 இன்று நள்ளிரவு தொடங்கும் சமயத்தில் வெளியானது.

இன்று வெங்கட்பிரபுவின் பிறந்தநாள் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த டீசர் தொடங்கும்போதே அனைத்தும் கற்பனையே என்று டைட்டில் கார்டு போடுகிறார்கள்.

ஆனாலும் டீசரில் உள்ள கடைசி காட்சியில் அரசியலுக்கு வரும் நடிகர்கள் எம்ஜிஆரைப்போல் ஜெயிப்பது இல்லை என்கின்றனர்.

இது அரசியல் வர நினைக்கின்ற மற்ற நடிகர்களை கலாய்க்கும் வகையில் உள்ளது.

பிரபுதேவா உடன் இணையும் நிக்கி கல்ராணி-தான்யா

பிரபுதேவா உடன் இணையும் நிக்கி கல்ராணி-தான்யா

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

charlie chaplinபிரபு, பிரபுதேவா, அபிராமி, காயத்ரி ரகுராம், லிவிங்ஸ்டன் உள்ளிட்டோர் நடிப்பில் கடந்த கடந்த 2002-ம் ஆண்டில் வெளியான படம் ‘சார்லி சாப்ளின்’.

ஷக்தி சிதம்பரம் இப்படத்தை இயக்கியிருந்தார்.

தற்போது அதன் 2-ம் பாகம் தொடங்கப்பட உள்ளது.

இதையும் ஷக்தி சிதம்பரம் இயக்க, பிரபுதேவா நாயகனாக நடிக்கவுள்ளார்.

நிக்கி கல்ரானி, தான்யா ஆகியோர் நாயகிகளாக ஒப்பந்தம் செய்யப்பட்டு இருக்கிறார்கள்.

மொட்ட சிவா கெட்ட சிவா புகழ் அம்ரிஷ் இசையமைக்கிறார்.

அம்மா கிரியேஷன்ஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ள இப்படத்தின் படப்பிடிப்பு நாளை மறுநாள் நவம்பர் 9-ம் தேதி கோவாவில் துவங்கவுள்ளது.

நாங்க புரோமோட் செய்தாலும் இப்படை வெல்லும் படம் ஓடாது: எச்.ராஜா

நாங்க புரோமோட் செய்தாலும் இப்படை வெல்லும் படம் ஓடாது: எச்.ராஜா

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ipadai vellum h raja commentநாளை மறுநாள் நவம்பர் 9-ம் தேதி உதயநிதி ஸ்டாலின், மஞ்சிமா மோகன், ராதிகா, சூரி, ஆர்கே. சுரேஷ் நடித்துள்ள ‘இப்படை வெல்லும்’ திரைப்படம் ரிலீஸ் ஆகிறது.

கௌரவ் இயக்கியுள்ள இப்படத்திற்கு இமான் இசையமைத்துள்ளார்.

இப்பட புரோமோசன் நிகழ்ச்சி ஒன்றில் உதயநிதி பேசும்போது…

விஜய் நடித்த ‘மெர்சல்’ படத்திற்கு பாஜக.வின் எதிர்ப்பே முழு விளம்பரம் ஆனது.

அதேபோல் இப்படை வெல்லும் படத்திற்கும் ஹெச்.ராஜா, தமிழிசையை பேச வைக்கலாம்னு நினைக்கிறேன்” என்று கிண்டலாக தெரிவித்து இருந்தார்.

இச்செய்தி சமூகவலைத்தளத்தில் வைரல் ஆனது.

இதனைக் குறிப்பிட்டு பாஜக தேசிய செயலாளர்களில் ஒருவரான ஹெச்.ராஜா தனது ட்விட்டர் பக்கத்தில், “ஒன்னும் ப்ரயோஜனம் இல்லை. நாங்க உதவினாலும் படம் ஓடாதாம்” என பதிலடி கொடுத்துள்ளார்.

நட்புனா என்னானு தெரியுமா பட இசை விழாவுக்கு வந்து பரிசை அள்ளுங்க

நட்புனா என்னானு தெரியுமா பட இசை விழாவுக்கு வந்து பரிசை அள்ளுங்க

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Natpuna Ennanu Theriyuma stills‘நட்புனா என்னானு தெரியுமா’ வீடியோ சிங்கிள் ட்ராக் வெளியீட்டு விழாவிற்கு வாங்க.. பரிசுகளோடு போங்க!

லிப்ரா புரொடக்சன்ஸ் ரவீந்திரன் சந்திரசேகரன் மற்றும் வனிதா பிக்சர்ஸ் இணைந்து தயாரித்துள்ள படம் ‘நட்புனா என்னானு தெரியுமா’..

விஜய் டிவி புகழ் ‘கவின்’ நாயகனாக நடிக்க, ரம்யா நம்பீசன் நாயகியாக நடித்துள்ளார். சிவா அரவிந்த் இயக்கியுள்ள இந்தப்படத்திற்கு தரண் இசையமைத்துள்ளார்.

இந்தப்படத்தின் வீடியோ சிங்கிள் ட்ராக் வெளியீட்டு விழா வரும் நவ-12ஆம் தேதி சென்னை வடபழனியில் உள்ள விஜயா போரம் மாலில் மாலை 5மணி அளவில் நடைபெற இருக்கிறது. இந்த விழாவில் என்ன ஸ்பெஷல் என்றால் ரசிகர்களும் இந்த நிகழ்வில் திரளாக கலந்து கொள்ளலாம்.

‘நட்புனா என்னானு தெரியுமா’ படக்குழுவினருடன் சேர்ந்து அங்கு நடைபெறும் விளையாட்டு போட்டிகளில் கலந்துகொண்டு வெற்றிபெற்று பல அற்புதமான பரிசுகளையும் அள்ளிச்செல்லலாம்..

பரிசுப்பொருட்கள் விபரம்

• 32 கிராம் தங்க காசுகள்
• 6 நாட்கள் சிங்கப்பூர், மலேசியா சுற்றுப்பயணம் (விமானம், சாப்பாடு வசதி உட்பட) – 2 நபர்களுக்கு
• சாம்சங் s8 போன்
• சோனி ஹோம் தியேட்டர் 4100
• சோனி டிவி 4k (50 இன்ச்)
• பிளேஸ்டேஷன் – 4 (4 ஜாய்ஸ்டிக்குகளுடன்)
• டெல் i5 மாடல் 7567 (8gb ram 1 TB hard disk, etc..)

உங்கள் நண்பர்களையும் குடும்பத்தினரையும் அழைத்து வாருங்கள். நிகழ்ச்சியில் கலந்துகொண்டு எஞ்சாய் பண்ணுங்கள்.

More Articles
Follows